மனிதனின் ஆர்வமும், தேடல்களும் நின்றுபோகும்போது,உயிர்மை என்பதும் நின்றுபோகிறது.உயிர்வாழ்தலின் நாடித்துடிப்பே,இந்த தேடல்கள் தான். மனிதன் மட்டுமின்றி எல்லா உயிர்களும் அவற்றின் உயிர்வாழ்தலுக்கேற்ப அறிந்துக்கொள்ள முயல்கின்றன என சொல்லலாம்.
கடவுளை நோக்கிய மனிதனின் பயணப்பாதைதான் அறிவியல்ன்னு தோனுது. என்றைக்கு,அண்டத்தின் எல்லா புதிர்களையும்/ இயற்க்கையின் எல்லா ரகசியங்களையும் மனிதன் அறிந்துக்கொள்கிறானோ? அன்று மனிதன் கடவுளாகிறான்.தான் இத்தனை நாள் தேடிவந்த கடவுள், ”தான்” தான் என்று உணர்வான்.
ஆனால் கடவுளுக்கும் மனிதனுக்குமான இடைவெளி எப்போதுமே மாறாமல் இருக்கிறது என தோன்றுகிறது.எப்போதும் மாறாத வட்டத்தின் சுற்றுப் பாதைக்கும், விட்டத்திற்க்கும் உள்ள விகிதமான ”பை” அளவு போல.
மனிதனின் அறிந்துக்கொள்ளும் ஆற்றல்,வேகம் அதிகரிக்கும் தோறும்,அதைவிட,அவனது அறியும் திறனுக்கு அப்பால், வேகமாய் புதிய புதிர்களும் சவால்களும் விந்தைகளும் தோன்றிக்கொண்டே/புலப்பட்டுகொண்டே இருக்கின்றன.
மிகப்பெரிய விஞ்ஞானிகளும் கூட,ஒரு இறுதிப் புள்ளியில், தமது ஆய்வு எல்லைக்கு அப்பாட்பட்ட சக்திகளை/புதிர்களை ”கடவுளின் எல்லை” என ஏற்றுக்கொள்கிறார்கள்ன்னு தான் தோனுது. நாளை ,ஒருவேளை அறிவின் தேடலில் அந்த எல்லைகள் கண்டறியபடலாம்.புதிய எல்லைகள் உருவாகலாம்.நேற்றுவரை கடவுளாய் இருந்து புவியின் செயல்களை நடத்திக்கொண்டிருந்த சக்திகளை அறிவியல் அறியச் செய்தபிறகு,கடவுளின் அதிகார எல்லைகள்,புதிய எல்லைகளுக்கு இடம் பெயர்ந்தன.
விஞ்ஞானம் ஆன்ம ஞானத்திற்க்கு எதிரானது அல்ல. இரண்டுமே ஒரே புள்ளியில் தோன்றி,ஒரே புள்ளியில் மறைபவை.இரண்டும் ஒரு முழுமையான வாழ்விற்க்கு அவசியம் எனலாம்.
எப்படி இருவேறு கருத்துக்கள் ஒரே வாழ்வில் ஒன்றாய் வைப்பது?என்கிறீர்களா? மிகவும் சுலபம். நமது மூளையில் கூட வலது மூளை உணர்வுப்பூர்வமான முடிவுகளை எடுக்க உதவுவது.இடது மூளை அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுக்கத் தூண்டுவது.இவை இரண்டும் சரியான விகிதத்தில் நம் வாழ்வியலுக்குத் தேவையான சரியான முடிவை எடுக்க வைப்பது போல. இரண்டும் வட்டத்தின் இருவேறு திசைகளில் பயணித்து,ஒன்று சேர்பவை.
கடவுள் என்றுமே மறைவதில்லை, புதிய புதிர்களுக்கு இடம் மாறுகிறார். நம்முடன் விளையாடுகிறார்.தொடுதல் விளையாட்டில், நாம் தொட நெருங்கும் போது விலகிப் போவதிப் போல. தரையில்,வானம் தொடும் அடிவானத்தை நோக்கி அடைய நடந்தால் அந்த மாயப் புள்ளி நம் வேகத்திற்கேற்ப நம்மை விட்டு விலகிச் செல்வது போல. இதில் ஒரு உண்மை நாமும் வானமும் நமது பூமியும் வெவ்வேறல்ல, அண்டத்தின் பகுதிகளாய் இருக்கிறோம் எனபதுதான்.நம்மை நாமே தேடுவது.
நேற்று வரை மனிதனின் யூகங்களுக்கு இடமளித்த சூரிய மண்டல விளிம்பு, இன்று பால்வெளி மண்டல விளிம்புக்கு மாற்றப்பட்டுள்ளது. நாளை கேலக்ஸிகளின் ஆரம்ப/இறுதி விளிம்புகளாக மாறும்.
அதுவரை எனது அறியும் எல்லைக்கு அப்பாட்பட்ட ஆர்வமூட்டும் புதிரை/சக்தியை/கடவுளை வணங்குகிறேன்:).
அவ்வ்வ்வ்.... pin நவீனத்துவம் ,குண்டூசி நவினத்துவம்பாங்களே பேசிக்கிட்டே, அதுக்கு கிட்ட வந்துட்டேனோ?
எல்லாரும் தூங்கிட்டிங்களா? குறட்டை சப்தமெல்லாம் கேக்குதே:P
சரி கொஞ்சம் மொக்கைக்கு வந்துருவோம்.
மனித மூளையில் தாய்மொழிக்கு(குழந்தையாய் இருக்கும் போது,மூளை செல்கள் வாயசைவுகளையும் ஒலிகளையும் உணர்ந்து வடிவமைக்கும் தருணத்தில் பழகும் மொழி) தனி இடமுங்க.,நீங்க கத்துக்கற மத்த மொழிகளுக்கு வேற இடம்.நாம வேற நாட்டுல வேற பாஷை பேசறவங்க கூட வேலைக்கு வந்தாலும்,நம்ம சிந்தனைகள் தாய் மொழில தான் தோன்றும்.அதை மொழிப்பெயர்த்துதான் வார்த்தைகளா வெளியிடுவோம்.அதேப் போல , வேற்று மொழில படிச்சாலும்,படிக்கும்போது,மூளையில் டிஸ்னரி, டிராஸ்சுலேஷன் செஞ்சு தாய் மொழியில் தான் புரிந்துக்கொள்ளப் படுகிறது.
நேரடியா தாய் மொழியில் படிக்கிற அனுபவமே தனி தான் போங்க..நேரடியான மூளை உணர்வுகள் ,படிக்கும் போதே ,இயல்பாய் சிந்தனையை தூண்டும். நீங்க எவ்வளவு ஆங்கில புலமை படைச்சவராயிருந்தாலும் ,ஒரே பொருள் தர்ர, ஆங்கில கவிதையையும் ,தமிழ்க் கவிதையையும் படிச்சுப்பாருங்க. வித்தியாசம் விளங்கும்.
பலர் அறிவியலை தமிழ்படுத்துகிறேன் பேர்வழின்னு இல்லாத வார்த்தைகளை கண்டுபிடித்து,நமக்கு அறிவியலையே அலர்ஜியாக்கும் வேலையைத்தான் செய்து வருகிறார்கள்.
நம்ம தமிழில் சமீபத்துல தான் தரமான,அறிவியல் புத்தகங்கள் அதிகமாகியிருக்கு. சமீபத்தில் மறைந்த ரங்கராஜன் என்கிற சுஜாதா(அவர் மனைவி பெயர்?) அவர்களின் “அறிவியலைத் தமிழ்படுத்தி பெருவாரியான பொது மக்களிடம் சேர்த்த” தொண்டு என்னைக் கவர்ந்தது.
என் சிறுவயதில்,ரஷ்ய விஞ்ஞான எழுதாளர் பெரல்மான் அவர்களின் அறிவியல் தமிழாக்கத்தை தந்த மீர் பதிப்பகம் இன்னமும் என் நினைவில் உள்ளது.
மெயின் மேட்டருக்கு வந்தாச்சுங்கோ..:P
விஞ்ஞானி ஜெயபாரதன் ஐயா அவர்கள்(சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா).கட்டுரைகளாய் பாதுகாக்க வேண்டிய விஞ்ஞான விளக்கங்களை அழகுத் தமிழில் இலவசமாய் எழுதி வலையேற்றியிருக்கிறார்.ஒவ்வொன்றும் மிகச்சாதாரணமானவர்களுக்கும் கூட புரியும் வகையில்,இயல்பான அறிவியல் சொற்களையும்,அழகான இணையான தமிழ்சொல்லையும் கோர்த்து ஆச்சர்யப் படுத்துகிறார்.அணு சக்தி நிர்வாகவியல்,விஞ்ஞானிகள் பற்றிய கட்டுரைகளும்,அண்டத்தை பற்றிய அறிவியலையும் பகிர்ந்துக்கொள்கிறார்.இவரது வயதில் ,இளைய சமுதாயத்திற்க்கு இந்த சேவை பாராட்டுக்குறியது.இடையிடையே கவிதைகளையும் எழுதுகிறார்.திண்ணை போன்றவற்றில் எழுத்து என தன்னை இடைவிடாமல் பிஸியாகவே வைத்துக்கொள்ளும் இவரது மனது நம்மை விட இளமைன்னு சொல்லத்தான் வேண்டுமோ?.
அண்டத்தின் பிரமாண்டத்தை ,பகுதி பகுதியாக தொடர் விஞ்ஞான கட்டுரைகளால் ,இவர் எளிமையாக விளக்குவதை படித்துப்பாருங்க,,
இது நீங்க பாதுக்காக வேண்டிய விஷயங்கள் உங்கள் எதிர்கால சந்ததிகளுக்கு விளக்க, அவர்கள் காலத்தில், ஐய்யோடா.. உங்களுக்கு இதுக்கூட தெரியாதா? பழைய ஜெனரேஷன்னு அவர்கள் கேலி செய்வதை தவிற்க வேண்டுமாயின்.(இனி வரும் சந்ததிகளுக்கு நிலாவில் பாட்டி வடை சுட்ட கதையோடு நிலவைப்பற்றி நமக்கே ஆச்சர்யமான விஷயங்களையும் சேர்த்தே சொல்லுங்க:P)
இவரின் பதிவில் எந்தக் கட்டுரையை குறிப்பிடுவதுன்னு புரியலை. எல்லாமே அருமை. ஒன்றுக்கொன்று தொடர்புடைய தொடர் கட்டுரைகள்.
நேரடியாக ஒரு கொள்கையை முக்கியத்துவமாய் சொல்லாமல், மற்ற விஞ்ஞானிகளின் மாற்றுக்கொள்கைகளையும் விளக்கி,அவற்றில் உள்ள நிறை குறைகளையும் அலசி,முடிவில் எந்த கொள்கை பெருமளவில் எற்றுக்கொள்ளப் பட்டதுன்னு பொருத்தமான படங்களுடன் இவர் சொல்லும் விதமே தனி.
அறிவியல் மட்டுமில்லாது,கதை கவிதை,கட்டுரைகள்ன்னு கலக்குகிறார். திண்ணை,அன்புடன்,நதியலை.பதிவுகள் என எல்லாவற்றிலும் பங்கேற்கிறார்.இவரது அறிவியல் சேவையை பற்றி பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.எந்த சுட்டியை கொடுப்பதுன்னு யோசிக்காததால் பொதுவா கண்ணில் பட்டதை சாம்பிளாய் கொடுத்திருக்கிறேன்.அறிவியல் ஆர்வம் உள்ளவங்க. அவரோட பதிவின் ஆரம்பத்துல உள்ள இடுகையிலருந்து துவங்கினா பொருத்தமா இருக்கும்.
பிரமாண்ட அகிலம்
ஐன்ஸ்டீனின் கொள்கை
அணுக்கழிவுகள் மேலாண்மை
புவியில் விழும் அகிலக் கற்கள்
அடுத்த தலைமுறை மனிதன் வாழ தேர்ந்தெடுக்க முயலும் செவ்வாய் கோள்
காஸ்மோஸ்
விஞ்ஞானி ஜெயபாரதன் ஐயா அவர்கள் தன்னுடைய எல்லா பதிவுகளையும் புத்தகமாக வெளியிட்டால், வலை வாய்ப்பு இல்லாத பலரும், படித்து பயனடைய ஏதுவாக அமையும் :).
கைகால்கள் முடமாய்,வாய் பேச இயலாமல் உடலலவில் எந்த செயலையும் செய்ய இயலாமல் யாராவது இருந்தால் அவரை நாம் என்னவென்று சொல்லுவோம்?. இதோ ஒருவர் அப்படி. ஆனால் உலகின் மாமனிதராய் அவர் உயர ,இந்த குறைகள் அவரை தடை செய்ய முடியவில்லை.
ஆம் ... டாட்வின்,ஜன்ஸ்டின் போன்ற விஞ்ஞான மாமேதைகளுடன் ஒப்பிட தக்க,நம் வாழும்காலத்திலேயே உள்ள அறிவியல் மாமேதை ஸ்டீவன் ஹங்கிஸ் அவர்களை பற்றி ஜெயபாரதன் ஐயா தனது தனி நடையில் , திண்ணைக்கு எழுதிய ஆவணம் இது.
பிரபஞ்ச விஞ்ஞான மேதை ஸ்டிவன் ஹங்கிஸ் . இதைப்போன்ற கட்டுரைகளை ,இந்திய அரசு மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொண்டால், வாழும் உதாரணமாய் மிளிரும் ஸ்டீவன் ஹங்கிஸ் அவர்களைப் பார்த்து, தன்னம்பிக்கையை மாணவர்கள் வளர்த்துகொள்ள பேருதவியாய் இருக்குமில்லையா? முயற்சி எடுக்குமா அரசு?
............
தான் படிக்கும் விஞ்ஞான செய்திக்குறிப்புக்களை ,தமிழில் வழங்கும் சேவையை செய்து வருகிறார் விஞ்ஞானக் குருவிகள்.ஃபேண்டசி சையன்ஸ்(அதாவது இன்னும் நிருபிக்கப்படாத ,ஆய்வு நிலையிலேயே உள்ள விஞ்ஞான கொள்கைகள்) பற்றிய செய்திகளும் இவரது பதிவில் காணலாம். ஃபேன்டசி சையன்ஸ்ன்னா சிரிக்கப்டாது:P மனிதன் வானத்துல பறக்க முடியும்ன்னு ரைட் சகோதரர்கள் சொன்னபோது கூட மத்தவங்களுக்கு சிரிப்பாத்தான் இருந்திருக்கும். கற்பனை எல்லைகளை தாண்டி,முடியாது என்பவைகளும் ஒரு சந்தர்ப்பத்தில் சாத்தியப்படக்கூடியவையே என வரலாறு நமக்கு கொடுத்திருக்கும் பாடம். அதனால ஜாலியா படியுங்க.,புதிய ஆய்வுகளும்,அவற்றின் தொடக்க வெற்றிகளையும்,எதிர்கால எதிர்பார்ப்புகளும் பற்றி நிறைய செய்திகளை பார்க்கலாம்.,
விஞ்ஞானக் குருவிகள்
இவர்கள் இருவரும் விஞ்ஞானத்துக்கென்றே பதிவுகளை தனியா வைச்சிருக்காங்க:) அதனால தான் நிரந்தர சுட்டியா தந்துட்டேன்:).உங்க அறிவுத்தேடலுல இவற்றையும் சேர்த்துக்கோங்க:)
என்றும் அன்புடன்
உங்கள் ரசிகன்
ரசிகன் நல்லா எழுதறிங்க நல்லா இருங்க...
ReplyDelete///அவ்வ்வ்வ்.... pin நவீனத்துவம் ,குண்டூசி நவினத்துவம்பாங்களே பேசிக்கிட்டே, அதுக்கு கிட்ட வந்துட்டேனோ?///
ReplyDeleteஎதுக்கிந்த வெறி...:))))))
7 வது படம்தான் டாப்பு...:))))))
ReplyDeleteஉருப்படியான பதிவு... ஜெயபாரதன் ஐயாவின் பல கட்டுரைகளை அன்புடன் குழுமத்தில் படித்திருக்கிறேன்... இவரை பள்ளி மற்றும் கல்லூரி பாடப் புத்தகங்களை எழுத அனுமதித்தால் ஏராளமான விஞ்ஞானிகள் உருவாவார்கள்.
ReplyDelete//தமிழன்... said...
ReplyDeleteரசிகன் நல்லா எழுதறிங்க நல்லா இருங்க..//
வாங்க தமிழன் :).. உங்க பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிகள்:)
//தமிழன்... said...
ReplyDelete///அவ்வ்வ்வ்.... pin நவீனத்துவம் ,குண்டூசி நவினத்துவம்பாங்களே பேசிக்கிட்டே, அதுக்கு கிட்ட வந்துட்டேனோ?///
எதுக்கிந்த வெறி...:))))))//
ஹிஹி...கொஞ்சம் சீரியஸ்ஸாகிருச்சோன்னு ஒரு ஃபீலிங்கு அதான்:P
//தமிழன்... said...
ReplyDelete7 வது படம்தான் டாப்பு...:))))))//
ஹா..ஹா.. விஞ்ஞான மேதை ஜன்ஸ்டீனுக்கு கூட நம்ம பிளாகு மொக்கை,லொள்ளுன்னு தெரிஞ்சிருக்குல்ல:P:))))))
நன்றிகள் :)
//SanJai said...
ReplyDeleteஉருப்படியான பதிவு...
ஜெயபாரதன் ஐயாவின் பல கட்டுரைகளை அன்புடன் குழுமத்தில் படித்திருக்கிறேன்... இவரை பள்ளி மற்றும் கல்லூரி பாடப் புத்தகங்களை எழுத அனுமதித்தால் ஏராளமான விஞ்ஞானிகள் உருவாவார்கள்.//
நல்வருகைகள் சஞ்ஜய்.பாராட்டுக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றி.
பலரும் அறிந்துக்கொள்ளும் வகையில் புத்தகங்களாக வர வேண்டும் என்பது சரியான ஆவலே. அதுவும் பாட புத்தகங்களாக வருவது இளைய சமுதாயம் தனது வலுவான அறிவியல் அடித்தளத்தை அமைத்துக்கொள்ள உதவும்:)
நன்றிகள்.
மாம்ஸ் சொன்னதெல்லாம் சரி பண்ணிடுங்க. பதிவு மிகவும் அருமை. சுட்டிகள் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
ReplyDelete// நிஜமா நல்லவன் said...
ReplyDeleteமாம்ஸ் சொன்னதெல்லாம் சரி பண்ணிடுங்க. பதிவு மிகவும் அருமை. சுட்டிகள் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.//
அவ்வ்வ்வ் மாம்ஸ் எப்டிதான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்ணுல படுதோ உங்களுக்கு? எங்க கீதா அக்கா தான் உங்க தமிழ் டீச்சரோ:P
சரிப்பண்ணிடலாம்:))
///ரசிகன் said...
ReplyDeleteஅவ்வ்வ்வ் மாம்ஸ் எப்டிதான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்ணுல படுதோ உங்களுக்கு? எங்க கீதா அக்கா தான் உங்க தமிழ் டீச்சரோ///
கீதா அக்கா யாரு ஸ்ரீ எனக்கு தெரியாதே?
மிக்க நன்றி ரசிகன்
ReplyDeleteஹாய் நிஜமா நல்லவன்,
ReplyDelete//கீதா அக்கா யாரு ஸ்ரீ எனக்கு தெரியாதே?///
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... இவங்களை தெரியாது என்று சொன்ன உங்களைஹாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்செய்வேன்..? இதற்கு சரியான தண்டனையாக நீங்கள் தினமும் குறைந்தது மூன்று பதிவுகளாவது போட வேண்டும்,அதுவும் பிழைகளோடு. அப்போது தெரிந்து கொள்வீர் இவர் யாரென்று.(இதில் ஸ்ரீக்கு நல்ல அனுபவம் உண்டு)
மேலும் அவர்கள் தான் இந்த பதிவு உலகத்தின் தனிப் பெரும் தலைவி(வலி)
என்றும் அழைக்கப் படுவார்கள்.
////Sumathi. said...
ReplyDeleteஇதற்கு சரியான தண்டனையாக நீங்கள் தினமும் குறைந்தது மூன்று பதிவுகளாவது போட வேண்டும்,அதுவும் பிழைகளோடு. அப்போது தெரிந்து கொள்வீர் இவர் யாரென்று.(இதில் ஸ்ரீக்கு நல்ல அனுபவம் உண்டு)
மேலும் அவர்கள் தான் இந்த பதிவு உலகத்தின் தனிப் பெரும் தலைவி(வலி)
என்றும் அழைக்கப் படுவார்கள்.////
ஏனிந்த கொலைவெறி:)
// நிஜமா நல்லவன் said...
ReplyDelete///ரசிகன் said...
அவ்வ்வ்வ் மாம்ஸ் எப்டிதான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்ணுல படுதோ உங்களுக்கு? எங்க கீதா அக்கா தான் உங்க தமிழ் டீச்சரோ///
கீதா அக்கா யாரு ஸ்ரீ எனக்கு தெரியாதே?//
நல்லவேளை,உலகமெங்கும் பரவியிருக்கும் எங்க கீதா அக்காவின் கோடிக்கணக்கான சிஷ்யக் கேடிகளுக்கு நீங்க இப்டி சொன்ன விஷயம் தெரியாது,:P
//வினையூக்கி said...
ReplyDeleteமிக்க நன்றி ரசிகன்//
உங்க வருகையும் ,பாராட்டும் மகிழ்ச்சியளிக்கிறது, நன்றிகள் நண்பரே:)
//Sumathi. said...
ReplyDeleteஹாய் நிஜமா நல்லவன்,
//கீதா அக்கா யாரு ஸ்ரீ எனக்கு தெரியாதே?///
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... இவங்களை தெரியாது என்று சொன்ன உங்களைஹாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்செய்வேன்..? இதற்கு சரியான தண்டனையாக நீங்கள் தினமும் குறைந்தது மூன்று பதிவுகளாவது போட வேண்டும்,அதுவும் பிழைகளோடு. அப்போது தெரிந்து கொள்வீர் இவர் யாரென்று.(இதில் ஸ்ரீக்கு நல்ல அனுபவம் உண்டு)
மேலும் அவர்கள் தான் இந்த பதிவு உலகத்தின் தனிப் பெரும் தலைவி(வலி)
என்றும் அழைக்கப் படுவார்கள்.//
இவங்க தான் தலைவிக்கு பீ.ஆர்.ஓ.(பப்ளிக் ரிலேஷன் ஆபிஸர்)
//நிஜமா நல்லவன் said...
ReplyDelete////Sumathi. said...
இதற்கு சரியான தண்டனையாக நீங்கள் தினமும் குறைந்தது மூன்று பதிவுகளாவது போட வேண்டும்,அதுவும் பிழைகளோடு. அப்போது தெரிந்து கொள்வீர் இவர் யாரென்று.(இதில் ஸ்ரீக்கு நல்ல அனுபவம் உண்டு)
மேலும் அவர்கள் தான் இந்த பதிவு உலகத்தின் தனிப் பெரும் தலைவி(வலி)
என்றும் அழைக்கப் படுவார்கள்.////
ஏனிந்த கொலைவெறி:)//
ஹா..ஹா..:))))