என்னுடைய புத்தாண்டு சபதம் பற்றிய பதிவுக்கு வந்த திரு சூரி அவர்கள் கீழ்க்கண்ட பின்னூட்டத்தைக் கொடுத்திருந்தார்.
//sury said...
leave your comment
என்று பார்த்தவுடன் ஞாபகம் வந்தது.
எங்கள் ஸ்ரீ ராமச்சந்திர மிஷன் ஆசிரமத்தின் வாயிலில் ஒரு அறிவிப்பு .
Leave your shoes and ego here.
இங்கும் அதுவே பொருந்துமோ ?
அல்லது வருவோருக்கு மட்டும் பொருந்துமோ ?
நானறியேன் பராபரமே.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.//
என்னோட இந்தப் பதிவில் திரு சூரி அவர்களின் பின்னூட்டம் மேலே கண்டபடி இருந்தது. அவரை அதற்கு முன்னர் சில பதிவுகளில் பின்னூட்டங்களில் பார்த்திருந்தாலும், என் பதிவுக்கு வந்தது இந்தக் குறிப்பிட்ட பதிவில் தான். அதில் இருந்து அவ்வப்போது என் பதிவுகளில் வந்து பின்னூட்டங்கள் கொடுத்து வருகின்றார். இவருடைய இந்தப் பதிவில் இவரும் ராமாயணம் எழுதி இருக்கின்றார் என்றாலும் எனக்கு அதிகம் பிடித்தது, இவரின் விருதுகள் பற்றிய இந்தப் பதிவுகளே. இதோ இங்கே பார்க்கவும்!
திரு சூரி அவர்கள் தம்முடைய இந்தப் பதிவில் பலருக்கும் தங்கக் கிரீடம் கொடுத்துக் கெளரவிக்கின்றார். அவருடைய ரசனையும் பெரியது, கொடுக்கும் பரிசும் பெரியதாகவே உள்ளது. இம்முறை மட்டும் அட்சய திரிதியைக்காகத் தனக்கே கொடுக்கும்படிக் கேட்டிருக்கின்றார். சில பதிவுகள் பற்றி அவர் சொல்வதை அவர் வாயாலேயே கேட்போமா?
இது பாசமலரின் பதிவில் இருந்துனு நினைக்கிறேன்.
//பஸ் ஸ்டான்ட் வந்தபோது பயம் வந்து விட்டதாம். தன் பய உணர்வினை
"அம்மாவிடம் சொன்னபோது அம்மா சிரித்தார்கள்.
"பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்குற நீயே பயப்பட்டா எப்படி.." என்றார்களாம். இவர் என்ன சொல்கிறார்:
http://pettagam.blogspot.com///
அடுத்ததாக, அவர் காட்டும் வலைப்பதிவு இதோ
அவர் மொழியிலேயே பார்க்கலாம், கீழே!
//நான் குறிப்பிடவேண்டிய ஒரு வலைப்பதிவு. அன்பு என்றாலே எல்லோரும் தாயன்பு, தாம் நேசிக்கும் தோழியிடம் அன்பு, டீச்சரிடம் அன்பு, தனக்குரியவரிடத்தில் அன்பு (காதல் என்றாலும் சரி), இயற்கை மேல் தான் கொண்டுள்ள அன்பு, தெய்வத்திடம் கொண்ட அன்பு பற்றிதான் சொல்கிறார்களே தவிர, உலகத்தில்
"அப்பா என்றொரு அற்புத ஜீவன்" என்று இருப்பதையே மறந்துவிடுகிறார்கள். என்னமா தன் அப்பாவைப்
பற்றி இவர் எழுதுகிறார் பாருங்கள்://
//தினமும் வீட்டிற்கு வரும் போதும்
குழந்தைகளிருக்கும் வீடுகளுக்கு
போக நேரும்போதும்
வெறுங்கையோடு
செல்லத் துணியாதவர்//
அப்பாவுக்காகக் கவிதை எழுதிய பெண்ணைப் பாராட்டியவர் அடுத்துக் கீழே சொல்வது காதலைப் பற்றி! இதோ! அவை!
//இந்த வலைதனில் பதிவாளர் எழுதிய ஒரு வாக்கியம் பொன்னான வாக்கியம். தன் காதலுக்காக ஒரு அன்னையின் மகிழ்ச்சியில் ஒரு புள்ளி வைத்திட வேண்டாம் என்கிறார். காதலி தன் காதலனிடம் சொல்கிறாளாம்.//
//உன் வாழ்க்கையில்
இப்போ உதித்த
எனக்காக,
உலகில் உன்னை
உதிக்க வைச்ச
தாயை தள்ளிடாதே!!பொறுமையுடன் புரிய வைப்போம்,"//
பதிவு எதுவெனத் தெரியவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் இவர் அடுத்துச் சொல்வது, சிவிஆர், இம்சையுடன் குழுவாக வைத்திருக்கும் பதிவு! இதோ அது!
நட்பைப் பாராட்டும் அந்த உள்ளங்களை வாழ்த்திக் கடைசியில் தங்கக் கிரீடத்தை இவர்களுக்கே சூட்டுகின்றார் திரு சூரி அவர்கள் இதோ!
//ஆகவே, நட்பினை ஓங்கி உயர்த்திச் சொன்ன சிவிஆர் அவர்களை
பாராட்டுவோம்.
ஐந்து கண்டங்களுக்கும் ஆழிகட்கும் நடுவே நட்புப்பாலம்
அமைத்திட்ட திரு . சி.வி. ஆர். அவர்களுக்கு
இந்த வாரம் தங்க க்ரீடம் சூட்டி மகிழ்வோம்.
இந்தப் பதிவினைத் துவங்கியது இம்சை அரசி எனும் நண்பர் என
சற்று நேரம் முன் திரு சி.வி.ஆர். அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
அவருக்கு என் நன்றி.
ஆக, இந்த பாராட்டுதல்களும் க்ரீடமும் திரு.சிவிஆர்,மதிப்புற்குரிய இம்சை அரசி மற்றும் இப்பதிவினை வழிநடத்தும் குழுவினருக்கும் உரித்தாக்குவதில் பெருமகிழ்வு
அடைகிறேன்.
இம்சை அரசிக்கும் அவரது குழுவினரையும் மனமுவந்து பாராட்டுவோம்.
வாழ்க வளமுடன் //
நம் பதிவுலக "மாதா மகி" ஆன துளசிக்கும் ஒரு பதிவில் கிரீடம் சூட்டி இருக்கின்றார். சென்று களியுங்கள். அடுத்து நாம் காணப் போவது வடுவூர் குமாரின் வலைப்பதிவு.
இரண்டு பதிவுகள் வைத்திருக்கின்றார் வடுவூர் குமார். ஒன்று மடவிளாகம், என்ற பெயரில் கட்டுமானத் துறை என்றும், மற்றது லினக்ஸ் பற்றிய தகவல்களும். லினக்ஸ் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டு அரசு ஊழியர்களில் பலரும் அது தான் உபயோகிப்பதாயும் கேள்விப் பட்டிருந்தாலும், மைக்ரோசாப்ட் எக்ஸ்பியை விட அது ரொம்பக் கஷ்டம் என்று சொல்வார்கள். என்றாலும் எப்படினு போய்ப் பார்த்தேன், நிஜமாவே தலை சுத்தல் தான். பொறுமை வேண்டும் ரொம்ப. அநேகமாய்க்கோபம் என்பதே போய் விடும் என நினைக்கிறேன். உலக அமைதி காக்க சிபாரிசு செய்யலாமோ என்ற எண்ணமும் ஏற்படுகின்றது. ஆங்கிலத்தில் இருந்தால் இன்னும் கொஞ்சம் புரியும் என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. முக்கியமாய் இந்த "உபுண்டு" என்ற வார்த்தையே பயமுறுத்துகிறது. பார்க்கலாம், நடைமுறையில் பயன்பாட்டில் ஓரளவு புரியும் என்றே தோன்றுகிறது. லினக்ஸ் பற்றிய கட்டுரையில் இருந்து சில வரிகள். புரியலைனால் நேரே குமாரிடம் போய்க் கேட்கவும்.
உபுண்டு - ஸ்கைபி:
லினக்ஸில் பல வருடங்களாக இருந்த முக்கியமான தடை நேற்று எனக்கு தீர்ந்தது ஆதாவது வீடியோ/ஆடியோ Chat.
கீழே இருக்கும் படத்தை பார்த்து பயந்திடாதீங்க.. எதுக்கு 2 கேமிரா? ஒன்று வின்டோசுக்கு மற்றொன்று லினக்ஸுக்கு.இட பக்க கேமிரா வின்டோஸில் நல்ல ஒளி தரத்துடன் வீடியோ சேட் செய்ய முடியும் அதனால் அதைவிட மனதில்லை ஆனால் லினக்ஸில் வேலை செய்யவில்லை.Logitech கேமிராக்கள் பல லினக்ஸில் நன்றாக வேலை செய்கிறது.//
சொல்றார், படமும் தெரியுதுனு, போட்டும் காட்டி இருக்கார். இருந்தாலும் நம்ம நேரம் எப்படினும் யோசிச்சுக்கணும். அடுத்துப் பாருங்க!
//கம்பியில்லா தொடர்பு:
கீழே சொல்லப்பட்டு இருக்கின்ற விபரங்கள் லினக்ஸில் வேலை செய்பவர்களுக்கு அதுவும் install shield மூலம் தரப்படுகிற நிறுவு கோப்புகளை உடைக்க உதவும்.
என்ன தலையை சுத்துகிறதா? எனக்கும் அப்படி சுத்தி தான் இப்போது தான் தெளிவடைந்தேன்.நான் தெளிவடைந்தால் போதுமா? நீங்கள் குழம்பவேண்டாமா?
தொடருவோம்.
இந்த லினக்ஸில் ஒரு வன்பொருளை வேலைசெய்வதற்குள் சில சமயம் தாவு தீர்ந்துவிடும்.ஊரோடு ஒத்துப்போய் பலர் உபயோகப்படுத்தும் வன் பொருளை உபயோகித்தால் பிழைத்தீர்கள் அப்படியில்லாவிட்டால் தேடித்தேடியே களைத்துவிடுவோம்.அதனால் என்னவோ பலரும் லினக்ஸ் பக்கம் தலைவைத்துக்கூட படுப்பதில்லை.நான் அப்படியில்லை,வேலை செய்யும் வரை விடமாட்டேன் இல்லாவிட்டால் இதற்கு மேல் முடியாது என்றபட்சத்தில்
வேறு வேலை பார்க்க கிளம்பிவிடுவேன்.
இப்போதைக்கு எனக்கு தண்ணிகாட்டிக் கொண்டு இருக்கும் வன்பொருள் “கம்பியில்லா” அடாப்டர்.//
நல்ல வெயில், தண்ணி காட்டினால் நல்லது தானேனு தோணுதா? இன்னும் பாருங்களேன்!
//உபுண்டு 7.04------->7.10
சில நாட்களுக்கு முன்பு தான் வந்த இந்த மேம்பட்ட பகுதி 7.10 ஐ நிறுவலாம் என்று நினைத்து அந்த பேக்கேஜ் மேம்பாட்டை துவங்கினேன்.
முதல் அதிர்ச்சியே "இப்போது சுமார் 650 MB " அளவுக்கு தறவிரக்கம் செய்ய போகிறேன் என்றது. என்னடா இது புது வெர்சன் அவர்கள் வலையில் இருந்து இறக்கினாலே அந்த அளவு தானே இருக்கும்,நாமோ மேம்படுத்த தானே செய்கிறோம் எதற்கு இந்த அளவு தறவிரக்கம் செய்ய வேண்டும் என்ற நினைப்புடன் "சரி" என்று சொன்னேன்.
சுமார் 1.30 மணித்துளிகள் ஆகும் என்றது.மானிடரை மட்டும் மூடிவிட்டு வேறு பணிகளை செய்ய ஆரம்பித்தேன்.
அகலப்பட்டை இல்லாதவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுக்காதீர்கள். நொந்து நூலாகிவிடுவீர்கள்.//
அவருக்கு முதல் அதிர்ச்சினு மட்டும் சொல்லிட்டு இருக்கார். நமக்கு நிரந்தர அதிர்ச்சியா இருக்குமோ என்னமோ? பையன் கிட்டே சொன்னேன், லினக்ஸ் உபயோகிக்கலாமானு யோசிக்கிறேன் அப்படினு! பையன் சிரிக்கிறான். "அம்மா, நீ ப்ரோகிராம் எழுதக் கத்துக்கிட்டதே சொல்லவே இல்லையே?" அப்படினு கேட்கிறான். நேரம்! :P
அடுத்துப் பாருங்க மடவிளாகம் பதிவுகளில் இருந்து தற்சமயம் கட்டிக் கொண்டிருக்கும் கத்திப்பாரா பாலத்தைப் பற்றிய ஒரு வர்ணனை! சம்மந்தப் பட்டவர்கள் இப்போதே கவனித்து ஆவன செய்வார்களா தெரியவில்லை! என்றாலும் இந்தப் பாலத்தில் தான் நாம் போகப் போகின்றோம்! :((((((
//சரி,இப்போது நம் கத்திப்பாரா மேம்பாலத்துக்கு வருவோம்.என்னதான் இரவில் பயணிக்கும் போது பார்த்தாலும் நான் பார்த்தது சரியா இல்லையா என்பதை காலை வேளையில் பார்த்து முடிவு செய்து இதை பதிவிடலாம் என்று நினைத்து முந்தா நாள் அந்த பக்கமாக போனேன்.
அப்போது எடுத்த சில படங்கள் கீழே....
//பாருங்கள் அந்த "தோள்" பகுதியே இல்லாமல் ஒரு மேம்பாலம்!!
ஏதோ ஒரு சமயத்தில் விபத்தோ அல்லது வாகன நெரிசலோ ஏற்பட்டால அவசரகால உதவிக்கு தேவையான ஆட்பலமோ அல்லது வாகனங்களோ செல்ல எந்த வழியும் என் கண்ணுக்கு தெரியவில்லை.இல்லை இதை பராமரிப்பவர்கள் வேறு ஏதாவது வழிவைத்துள்ளார்களா என்பதும் தெரியவில்லை.
பொது மக்கள் அப்படியே பாலத்தின் மீதிருந்து கீழே குதிக்க ஏதுவாக ஏதாவது செய்வார்களோ என்னவோ??!!!அடுத்த குத்தகைக்கு தயாராக இருக்கவும்.
இது வடபழநியில் இருந்து விமானநிலையத்துக்கு நுழையும் இடம்.//
இனி அனைவரும் எதிர்பார்க்கும் நகைச்சுவைப் பதிவுகள் நாளை. போட்டியில் இருப்பவர்கள், டுபுக்கு, அபி அப்பா, அம்பி மற்றும் பலர்.
அப்படியோவ்!!
ReplyDeleteநமக்கே பாதி பக்கம் ஒதுக்கிடீங்களே...
மிக்க நன்றி.
ஊர் பக்கம் இருப்பதால் பல பதிவுகளை படிக்க முடிவதில்லை. :-(
நல்ல பதிவர்கள் மற்றும் பதிவுகளை பற்றிய நல்ல தொகுப்பு. நான் திரு சூரியின் பதிவுகளையும் குமாரின் கட்டுமானத்துறையை தொடர்ந்து வாசித்து வருபவன்.
ReplyDeleteஉபுண்டு தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றாலும் உபுண்டு7.04 குறுந்தகடு வீடு தேடிவரும். உபுண்டு டாட் காம்-ல் மின்னஞ்சல் பதிவு செய்தால் போதும். நான் அப்படி பெற்றுக்கொண்டேன் எனினும் பயன்படுத்த இயலாமல் வைத்திருக்கிறேன்.
இது சூரி அவர்களுக்கு.
ReplyDelete//எங்கள் ஸ்ரீ ராமச்சந்திர மிஷன் ஆசிரமத்தின் வாயிலில் ஒரு அறிவிப்பு .
Leave your shoes and ego here.//
இது முகலிவாக்கம் போகும் வழியில் இருக்கா?
லினக்ஸ் இல் வேலை செய்ய ப்ரோக்கிராம் எழுத சொன்ன உங்க பையர் ரொம்பவே பழைய ஞாபகத்துல இருக்கார்.
ReplyDeleteஇதெல்லாம் எப்பவோ தாண்டியாச்சு.
யாரான நிறுவி கொடுத்தா பிறகு எதில வேலை செய்யறோம் என்றே தெரியாத அளவு வந்தாச்சு!
ம்ம்ம்ம்.... உங்களை மாதிரி நபர்களூக்காக நேத்துதான் ரிலீஸ் ஆன உபுண்டுவை இன்னொரு விண்டோஸ் ப்ரோகிராமா இன்ஸ்டால் பண்ணலாம், வேலை செய்யலாம். தைரியம் இருக்கா? :-))