Sunday, May 4, 2008

மங்களச்சரம்!






நான் நன்றி சொல்வேன் முத்துலட்சுமிக்கு
என்னைவலைச் சரம் எழுதவைத்தமைக்கு
நான் நன்றி சொல்வேன்பதிவர் பலருக்கும்
என்பதிவினில் பின்னூட்டம் இட்டதற்கு
வலைச் சரமிதில் வாரம்முழுவதும்
நானும் மகிழ்ந்ததென்ன
வலைசரமிதில் வாரம் முழுவதும்
நாமும் மகிழ்ந்ததென்ன?




(பாட்டு ஒலிவடிவில் கேட்டு மகிழ்க!!!)


மங்களச்சரம்

ஒருவாரம்! ஓட்டமாய் ஓடிவிட்டது! வலைப்பூக்கள் ஏராளம். இருந்தாலும் சிலபூக்களைமட்டுமே சரம் தொடுக்க முடிந்தது. முன்னமே அழகாய் பலர் தொடுத்த சரங்களின் முன் நானும் என் கைவரிசையைக் காட்ட இயன்ற அளவு முயன்றேன். என்னை ஊக்கப்படுத்த இங்குவந்து பின்னூட்டமிட்ட அனைத்துப்பதிவர்களுக்கும் மிக்க நன்றி ...


வாய்ப்பு தந்த அன்புச்சகோதரி முத்துலட்சுமிக்கு ஒரு ரிமிக்ஸ் பாட்டு பாடி படுத்தி இருக்கேன்
யாரும் எஸ்கேப் ஆகாம கேட்டுட்டு இங்கேருந்து போகணும் என்ன?:)

பிரிவோம்!மீண்டும் இதேபோல வலைஞர்கள்கூடும் இடத்தினில் சந்திப்போம்!
அடுத்து வரும் வலைச்சர ஆசிரியருக்கு வரவேற்புகூறி விடைபெறுகிறேன்! நன்றி !வணக்கம்!

27 comments:

  1. மீ தி பர்ஸ்ட்டு
    (காப்பி ரைட் மை ப்ரெண்ட் ஓவர் ரூல்ட்)

    டாட்டா பை சி யு அக்கா

    ReplyDelete
  2. ஒலி வடிவம் கேட்டேன் நன்றாக இருந்தது.

    ஒரு சுருதிப்பெட்டியை வைத்துக்கொண்டு பாடியிருக்கலாமே நீங்கள்?

    ReplyDelete
  3. மீ த செகண்ட்!

    காப்பி ரைட் எனக்கே!

    பை!! பை!! ஷைலு அக்கா!!!

    ReplyDelete
  4. வாழ்த்தி வழியனுப்புகிறோம்.

    ஷைலஜா அக்கா.. நன்றி கீதம் நல்லாயிருந்துச்சு...:)
    அப்டியே பேக்ரவுண்டு மியுஜிக்கும் இருந்தா அச்சு அசலா வந்திருக்கும்ல்ல:)

    ReplyDelete
  5. அடடா நான் செகண்ட் இல்லையா? அதுக்குள்ள ஐயா கமெண்ட் போட்டுட்டாங்க.

    ReplyDelete
  6. ஷைலஜாவா பாடினது. ஒரு குட்டிப் பெண் பாடுவது போல க் குரல் வெகு இனிமை. வாழ்த்துகள்மா.

    ReplyDelete
  7. அக்கா கடைசி ஹம்மிங் சூப்பர்ப்!

    ReplyDelete
  8. ///வல்லிசிம்ஹன் said...
    ஷைலஜாவா பாடினது. ஒரு குட்டிப் பெண் பாடுவது போல க் குரல் வெகு இனிமை. வாழ்த்துகள்மா.///



    இதுக்கு ஏகப்பட்ட ரிப்பீட் போடலாம்.

    ReplyDelete
  9. ///ஒருவாரம்! ஓட்டமாய் ஓடிவிட்டது! ///


    என்னது ஒரு வாரம் ஓடிடுச்சா?

    ReplyDelete
  10. //யாரும் எஸ்கேப் ஆகாம கேட்டுட்டு இங்கேருந்து போகணும் என்ன?:) //


    கேட்டாச்சு.

    ReplyDelete
  11. ///விடைபெறுகிறேன்! நன்றி !வணக்கம்!//


    சரிக்கா. நீங்க போய் அந்த மூலிகை ஆராய்ச்சியை கண்டினிவ் பண்ணுங்க. நான் அங்க வந்து பார்க்கிறேன்:)

    ReplyDelete
  12. அலோ
    இது என்ன மங்களச் சரமா?
    இல்லை மங்களூர் சரமா??
    பின்னூட்டம் ஃபுல்லா நீங்களே சீட் போட்டா, அப்பாவிச் சிறுவர்கள் நாங்க எங்க போவோம்?
    மங்களூர் சிவாவே பதில் சொல்லுங்க!:-)

    ReplyDelete
  13. ஷைலு அக்கா
    ரீ-மிக்ஸ் கலக்கல்!
    உங்க ஒலிப்பந்தல்-ன்னா சொல்லவும் வேணுமோ?
    ரீ-மீக்ஸ் ரீட்டா-ன்னு பட்டம் கொடுத்தறலாமா? :-))

    ReplyDelete
  14. இந்த வாரக் கவிதைச் சரம் என்னை மிகவும் கவர்ந்தது!
    நான் அறியாத பல அறிமுகங்கள்! நன்றிக்கோவ்!

    ReplyDelete
  15. ஓ...
    மங்களூரார் மீ த ப்ர்ஷ்ட்டு மட்டும் தானா?
    பின்னூட்டம் ஃபுல்லா துண்டு போட்டது நிஜமா நல்லவரா?

    அப்படின்னா இது மங்களூர் சரம் இல்ல!
    மங்களச் சரம் தான்! "நிஜமா நல்ல" மங்களச் சரம்! :-))

    ReplyDelete
  16. மங்களூர் சிவா said...
    மீ தி பர்ஸ்ட்டு
    (காப்பி ரைட் மை ப்ரெண்ட் ஓவர் ரூல்ட்)

    டாட்டா பை சி யு அக்கா

    >>>>மங்களசிவா!!! டாட்டா:) இனி வேறெங்காவது இப்படி நான் பதிவுகள் அளிக்கும்போதும் தப்பாதுவந்து ஆதரவு தருக நன்றி:)

    ReplyDelete
  17. SP.VR. SUBBIAH said...
    ஒலி வடிவம் கேட்டேன் நன்றாக இருந்தது.

    ஒரு சுருதிப்பெட்டியை வைத்துக்கொண்டு பாடியிருக்கலாமே நீங்கள்?

    >>>வாங்க சுப்பையாசார்! சுருதிப்பெட்டி தோழியின் கச்சேரிக்கு கடனாகப் போய்விட்டது!! அதனால் மானசீக சுருதி சேர்த்து சுமாரா பாடிவச்சேன் நன்றி கேட்டு எழுதினதுக்கு.

    ReplyDelete
  18. நிஜமா நல்லவன் said...
    மீ த செகண்ட்!

    காப்பி ரைட் எனக்கே!

    பை!! பை!! ஷைலு அக்கா!!!

    >>பைபை..நி.ந.

    ReplyDelete
  19. ரசிகன் said...
    வாழ்த்தி வழியனுப்புகிறோம்.

    ஷைலஜா அக்கா.. நன்றி கீதம் நல்லாயிருந்துச்சு...:)
    அப்டியே பேக்ரவுண்டு மியுஜிக்கும் இருந்தா அச்சு அசலா வந்திருக்கும்ல்ல:)

    >>தம்பிங்க மியூஜிக்பார்ட்டி ஏதும் அனுப்பி இருக்கலாம்ல?:)டாட்டா ரசிகன்.

    ReplyDelete
  20. வல்லிசிம்ஹன் said...
    ஷைலஜாவா பாடினது. ஒரு குட்டிப் பெண் பாடுவது போல க் குரல் வெகு இனிமை. வாழ்த்துகள்மா.

    >>>>>ஆமா வல்லிமா இந்த ஜிரா ரவிசங்கர் எல்லாரும் தங்கள குட்டிப்பசங்கன்னு சொல்லிகிறாங்க ஏதோ நான் பாடறப்போவாவது..:):) நன்றிமா.

    ReplyDelete
  21. நிஜமா நல்லவன் said...
    //யாரும் எஸ்கேப் ஆகாம கேட்டுட்டு இங்கேருந்து போகணும் என்ன?:) //


    கேட்டாச்சு.

    >>>>அலுப்பா கேட்டாச்சுன்னு சொல்றாப்ல இருக்கே தம்பி ஏன்மா?:)

    ReplyDelete
  22. நிஜமா நல்லவன் said...
    அக்கா கடைசி ஹம்மிங் சூப்பர்ப்!

    >>>அதாவது சஹிக்கபிளா? ஓகே நன்றி ப்ரதர்!!!

    ReplyDelete
  23. நிஜமா நல்லவன் said...

    //சரிக்கா. நீங்க போய் அந்த மூலிகை ஆராய்ச்சியை கண்டினிவ் பண்ணுங்க. நான் அங்க வந்து பார்க்கிறேன்:)//

    மூலிகைபக்கம் இனிமே போனா நெற்றிக்கண் திறக்க பெரிய படையே காத்திருக்கு எதுக்குப்பா வம்பு? அதனால ஹோமியோசதியோன்னு வீட்டோட இருக்கேன்:):)

    ReplyDelete
  24. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    அலோ
    இது என்ன மங்களச் சரமா?
    இல்லை மங்களூர் சரமா??
    பின்னூட்டம் ஃபுல்லா நீங்களே சீட் போட்டா, அப்பாவிச் சிறுவர்கள் நாங்க எங்க போவோம்?
    மங்களூர் சிவாவே பதில் சொல்லுங்க

    >>அட விடுங்க ரவி
    ஏதோ அக்காக்கு அந்ததம்பி பின்னூட்டக்கணக்கினை அதிகமாக்க உதவறார்!!! கண்டுக்காம போயிடுங்க என்ன?:)

    ReplyDelete
  25. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    ஷைலு அக்கா
    ரீ-மிக்ஸ் கலக்கல்!
    உங்க ஒலிப்பந்தல்-ன்னா சொல்லவும் வேணுமோ?
    ரீ-மீக்ஸ் ரீட்டா-ன்னு பட்டம் கொடுத்தறலாமா? :-))

    >>நன்றி நன்றி ரீமிக்ஸ் ரீடாக்கு!!

    ReplyDelete
  26. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    இந்த வாரக் கவிதைச் சரம் என்னை மிகவும் கவர்ந்தது!
    நான் அறியாத பல அறிமுகங்கள்! நன்றிக்கோவ்!

    >>>இன்னும் நிறைய அறிமுகப்படுத்தி இருக்கணும்....நன்றிக்கு நன்றி என் அன்புத்தம்பியே!

    ReplyDelete
  27. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    ஓ...
    மங்களூரார் மீ த ப்ர்ஷ்ட்டு மட்டும் தானா?
    பின்னூட்டம் ஃபுல்லா துண்டு போட்டது நிஜமா நல்லவரா?>>\ஆமா நிஜம்மா நல்லவரு அவரு!!(ஐஸ் அல்ல):)

    அப்படின்னா இது மங்களூர் சரம் இல்ல!
    மங்களச் சரம் தான்! "நிஜமா நல்ல" மங்களச் சரம்! :-))>>//


    நல்லவேளை மங்களூர் ரசம்னு சொல்லாம போனீங்க:) நன்றி ரவி பின்னூட்டங்கள் அனைத்துக்கும்! நீங்களும் நிஜம்மாஆ நல்லவரு வல்லவரு!!!

    ReplyDelete