நான் பதிவுலகிற்கு வந்தபின் செய்தி வாசிப்பது குறைந்துவிட்டது என்பதைவிட, முதலில் பதிவுகளில் வாசித்தப் பின்தான் செய்திகளையே வாசிக்கிறேன். காரணம் பதிவுகள் செய்தியை முந்தித் தருவது மட்டுமல்ல, அவற்றை பல கோணங்களில் நின்று ஆய்வு செய்தும் உணர்ச்சிகளின் உடனடி எதிர்வினைகளைக் கொண்டும் வெளிப்படுவதால் அச்செய்தியை பல கோணங்களில் புரிந்து கொள்ளமுடிகிறது. செய்திகள் என்பது உண்மைகளையோ, நிகழ்வுகளையோ அப்படியே நமக்குத் தருவதில்லை. அவையும் எழுதுபவனின் புனைவாகவும் வாசிப்பவனின் நினவாகவும் மாறிவிடுவதால்.. செய்திகள் என்பது ஊடகங்களின் உண்மை போன்று சொல்லப்படும் ஒருவகை புனைவுகள்தான். இதற்கு பதிவுகளில் பல பதிவுகள் குறிப்பாக பதிவர்களை சுட்டிக் காட்டலாம். அத்தகைய பதிவர்களின் தொகுப்புதான் இது. இப்பதிவர்கள் செய்திகளுடன் சில வரலாற்றுத் தகவல்களை அலசக் கூடிய மற்றும் பொதுபுத்தியில் பதிவுறத்தப்பட்ட உண்மைகளுக்கு எதிரான ஒரு கருத்தாடலை முன்வைப்பவர்கள்.
பைத்தியக்காரனின் இப்பதிவு காதல் புனிதமானதா? என்று காதல் குறித்து வரும் கற்பனைகளை உடைக்கிறது. காதல் என்பது குறித்து பொதுவான புனிதங்களை உடைக்கும் இப்பதிவின் விவாதம் சுவராஸ்யமானது. அத்துடன் பௌத்தம் குறித்த இவர் எழுப்பிய கேள்விகள் முக்கியமானவை, அதை ஒட்டிய விவாதமும்கூட. அமேரிக்க ஆவணங்களை அம்பலப்படுத்தும் இப்பதிவும் இவரது விரிவான வாசிப்பை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. பரவலான வாசிப்பும் கூர்மையான பார்வையும் கொண்ட இவரது பதிவுகள் பின்நவீனததுவ சிந்தனையின் வீச்சுடன் எழுதப்படுபவை.
ஃபர்சானின் இப்பதிவு மதிப்பீடுகள் பற்றிய கோட்பாட்டுரீதியான கேள்விகளை முன்வைப்பவை. சுழிநிலையிலான மதிப்பீடுகள் சாத்தியமா? அவற்றின் அரசியல் என்ன? மதிப்பீடுகளால் கட்டமைக்கப்பட்ட இன்றைய உலகம் எத்தகையது? என்கிற கேள்விகளை எழுப்பும் பதிவு இது.
சுகுணாவின் பதிவுகளை அறிமுகப்படுத்த வேண்டியதே இல்லை. பார்ப்பனியம் பெரியாரியம் மார்கசியம் என பல தளங்களிலான அதிர்ச்சியூட்டக் கூடிய எழுத்துக்களைக் கொண்டவை. பெரியாரியப் பதிவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் வரவனையான் (இவரது பதவிற்கான சுட்டி protect செய்யப்பட்டிருப்பதால் தர இயலவில்லை.). இவரது பாசிசம் பற்றிய கட்டுரை குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும். இவரது கவிதைகளும் எழுத்தும் பெரியாரிய நோக்கில் எழுதப்பட்டு வருபவை. பதிவுகளில் பெரியாரியம் பற்றியும் பொதுவாகவும் எழுதும் முத்துக்குமரன், சமீபத்தில் துபாயில் இவரது கவிதைநூல் கவிஞர் இன்குலாப்பால் வெளியிடப்பட்டது. இவரது வைக்கம் வீரர் பெரியார் எனகிற கட்டுரை பெரியார் பற்றிய வைக்கம் பிரச்சனைகளை அலசும் ஒரு ஆவணமாகும். பெரியாரிய பதிவர்களில் நையாண்டிக்கு பெயர் பெற்ற நகைச்சுவைகளை தரும் பதிவர் லக்கிலுக், வலையுலக முன்னொடிகளில் ஒருவர் என்பதுடன், காத்திரமான விடயங்களைக்கூட கூர்மையான தனது நையாண்டியின் மூலம் எளிமையாக உடைத்துப் போடும் எழுத்தாற்றல் உள்ளவர். மேலோட்டமாக இவரது நையாண்டி எளிமையாக இருந்தாலும் அதற்குள் ஒரு சமூக விமர்சனமும் ஆழந்த கோபமும் இருப்பதைக் காணமுடியும்.
எந்த ஒரு பத்திரிக்கை செய்தியையும் வேறு ஒரு கோணத்தில் அலசக்கூடிய கோவி. கண்ணன் தனது வரலாறு மற்றும் ஆன்மீக வாசிப்புகளின் மூலம் பல குறிப்பிடத்தக்கப் பதிவுகளை தந்துள்ளார். சாதிய அரசியலை நுட்பமாக பிடிக்கும் பார்வையைக் கொண்டவை இவரது பதிவுகள். தமிழ் மொழி குறித்தும் இந்தி திணிப்பு குறித்தும் காத்திரமான பதிவுகளைத் தருபவர். பொதுப்புத்திக்கு எதிரான பல கருத்துக்களை தனது பதிவுகளில் பதிவித்துள்ளவர்.
ஆரிய, திராவிட பிரிவினைப் பற்றி பல கருத்துக்கள் நிலவி வந்தாலும் தனது பதிவுகளில் இந்த முரணை அதிகமாகக் கையாளும் ஒரு குறிப்பிடத்தக்க பதிவர் டிபிசிடி என்கிற Tamil Born Confused Dravidian. ஆரியர்களால் எழுதப்பட்ட சிந்துவெளியில் வாழ்ந்தது ஆரியர்களும்தான் என்கிற வேர்தேடி வரலாற்றை தொகுக்து தந்துள்ள பதிவு குறிப்பிடத்தக்கது. ஆரிய மேண்மை என்கிற கருத்தாக்கத்தை உடைப்பதும் மற்றும் தமிழ் மொழிக்காகவும் தனது பதிவெழுத்தை அர்ப்பணித்து எழுதிவருபவர். புரியல தயவுசெய்த விளக்கவும் (புதசெவி) என பலரை குழப்பிவிடும் பதிவர். :)
“செயல் அதுவே சிறந்த சொல்“ (நன்றி நிறப்பிரிகை) என்பதை முனைப்புடன் செயல்படுத்த முனையும் பாரி. அரசு பொதுப்புத்தி சார்ந்த பல கருத்தாகக்ங்களை எதிர்த்து இதுதான் சரியானது என சாதரண வாசகருக்கும் புரியும் வண்ணம் எழுதக் கூடியவர். இவரது மலேசியப் பற்றிய வரலாற்றுத் தொடர் முக்கியமான ஆவணமாகும். மரணம், பார்ப்பனிய-பணியா அரசியல் மற்றும் உடை கலாச்சாரம் என பலவற்றையும் பற்றிய பொதுப்புத்திக்கு எதிரான கருத்தக்களை முன்வைக்கும் இவர் ஜப்பான் மொழியை கற்று அதன் வரலாற்றை அறியும் ஆர்வம் கொண்டவர் என்பதுடன் இயற்கையை நேசிக்கும் ஒரு பதிவர்.
”தமிழ் எங்கள் உயிர் என்பதாலே - வெல்லுந் தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே” என்று தனது பதிவின் அறிமுகக் குறிப்பைத் தந்திருக்கும் உறையூர்க்காரன் பல காத்திரமான மத-எதிர்ப்பு பதிவுகளையும் மதப் பாசிசத்திற்கு எதிரான கருத்துக்களையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக மோடி என்கிற இந்திய பாசிசத்தின் முன்மாதிரி பற்றி ஊடகங்கள் உருவாக்கிய ”பொருளாதார வளம்” என்பதை பொருளியில் கண்ணோட்டத்தில் தோலுரிக்கும் பதிவு ஒன்று குறிப்பிடத்தக்கது. அரசின் சாதனை என்கிற சாகசங்கள் பற்றிய மற்றொரு பக்கத்தை முன்வைப்பவை இவரது பதிவுகள்.
சாதியன் கொடுமைகள் மற்றும் பெண்ணியம் சார்ந்த கருத்துக்களையும் ஒரு கிராமிய படைப்பு மனத்துடன் பதிவுகளை முன்வைக்கும் ஆழியுரான் தனது நடைவண்டியை பல திசைகளில் பயணப்பட வைக்கிறார். இவரது சாதிசூழ் உலகு துவங்கி அடையாள அரசியல் பற்றிய சமீபத்திய பதிவுகள்வரை சாதியத்தின் முகத்தை கிழிப்பன என்றால் மிகையாகாது. அறிவொளி இயக்கத்தில் பங்க பெற்ற பகுத்தறிவு மற்றும் சமூக உணர்வுள்ள பதிவர்.
அரசியலும் ஆழ்ந்த பார்வையும் பரவலான வாசிப்பும் கொண்டு, ஒரு பத்தி எழுத்தைக்கூட ஆழமான புரிதலுடன் முன்வைப்பவை ரத்ணேஷின் எழுத்துக்கள். இவரது பதிவுகளில் பழம் இலக்கியங்கள் துவங்கி செவ்வியல் இலக்கியங்கள், புராணங்கள், நாட்டார் கதைகள் என பலவற்றையும் பற்றிய பரவலான காத்திரமான அறிமுகத்தை எளிமையான மொழியல் தருவதுடன் அரசின் சாதனைக் கோமாளித் தனங்களை தோலூரிக்கும் பதிவு இவருடையது. அஸ்ஸாமிய பண்பாட்டையும் விளக்கும் இவரது பதிவு, பலபொருள் குறித்தும் பேசக்கூடியது.
பல நிறங்களைப் பேசும் செல்வநாயகியின் பதிவுகளில் மதம் தின்னும் மனிதன் என்கிற இப்பதிவு மதம் குறித்த கேள்விகளை எழுப்பும் ஒன்றாகும். படைப்புத் தன்மையுடன் எழுதப்படும் இவரது பதிவுகள் இலக்கியச் சுவையும் பிரச்சனைகளின் வலியையும் உணர்த்தக் கூடியவை. நகைச்சுவை உணர்வுடன் எழுதப்படும் ராமச்சந்திரன் உஷாவின் நுனிப்புல் சுவாராஸ்யமான பல கதைகளை சொல்லக்கூடியவை. தினவாழ்வின் அனுபவங்களை அதன் அபத்தங்களை கூறும் ஒரு மத்தியதர வர்க்கப் பார்வையில் அதன் போலிகளைச் சுட்டுபவை இவரது பதிவுகள். மெல்லிய நகைச்சுவைகளைக் கொண்டவை.
”தோன்றியவற்றைப் பதிய” என எழுதும் கையேடு விஞ்ஞானாரீதியான சிறந்த பதிவுகளை தருபவர். இவரது இறப்பு குறித்த ஒரு உரையாடல் மிக முக்கியமான ஒரு விஞ்ஞான ஆவணமாகும். நமக்கான அறிவியல் என்கிற மக்கள் அறிவியல் பற்றி சிந்திக்கவும் அதனை செயலுக்கு கொண்டுவரவும் முனையும் இப்பதிவர் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு தனித்தவமிக்கவர். இவரது இந்திய அனு ஒப்பந்தம் பற்றிய கட்டுரை தொழில்நுட்பத் தளத்தில் விவாதிக்கும் குறிப்பிடத்தக்க கட்டுரை ஆகும்.
இங்கு குறிப்பிட்ட பதிவர்கள் எல்லோரும் பல கோணங்களில் எழுதும் ஒரு கலவையான தொகுப்பாக இருப்பதை உணரலாம். இதில் சில பதிவுகள் குறிப்பிட்டு சொல்லும்படியான கட்டுரைகளைக் கொண்டுள்ளதை உணரலாம். சிலவற்றில் பதிவர் அறிமுகம் மட்டுமே உள்ளது. காரணம், அப்பதிவர்கள் எல்லோரது பதிவுகளிலும் பலவற்றையும் சுட்டிக் காட்டுவது சலிப்பு எற்படுத்தக் கூடும் என்பதால் சுருக்கமாக பதிவர்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். இவர்கள் பலதள வாசிப்பின் அனுபவத்தை தரக்கூடியவர்கள். எழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட கணத்தில் வெளிப்படும் ஒருவகை தெறிப்பு என்று கொண்டால் இப்பதிவர்களின் எழுத்தில் அத்தகைய தெறிப்புகளைக் காணலாம்.
நன்றி
அன்புடன்
ஜமாலன்
image curtsey: Henri Rousseau (le Douanier) 's (1897) - "The Sleeping Gypsy"
வலைப்பதிவுகளில் தினசரி எழுதாவிட்டாலும் தொடர்ந்து
ReplyDeleteஎழுதுபவர்கள் பலரை நீங்கள்
படிப்பதில்லை என நினைக்கிறேன்.
நீங்கள் குறிப்பிடும் பெரும்பாலோர்
பலவற்றில் ஒத்த கருத்துடையவர்கள்.
அது உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்
போவதால் நீங்கள் அவற்றை விரும்பிக்
படிக்கிறீர்கள் போலும்.ஆனால்
அடிக்கடி எழுதாத, எழுதினால்
உருப்படியாக எழுதும் பத்ரி,வெங்கட்,
சன்னாசி,செல்வராஜ் போன்றோர்
பதிவுகளை நீங்கள் படித்ததில்லை
போலும்.மேலும் சற்றே யோசித்தால்
உங்கள் தெரிவுகள் கருத்தியல் சார்ந்தே
இருப்பவது தெளிவாகிறது.ஆனால்
நாகார்ஜுன் எழுதுவதும் பிடிக்கும்,
டிபிசிடி/கோவி கண்ணன் எழுதுவதும்
பிடிக்கும் என்பது சற்றே முரணாக
உள்ளது.
பெரியாரை விமர்சிப்பவர் என்று கூறியபின் நீங்கள் இப்படித்தான் எழுதமுடியும். தவிரவும் வலைச்சரம் என்பது ஒரு அங்கீகாரம் தரும் மேடையல்ல. புதிய பதிவர்களுக்கான ஒரு அறிமுகம்.
ReplyDeleteநான் வாசிக்கும் எல்லாப் பதிவர்களையும் இங்கு அறிமுகமும் செய்யமுடியாது. அதற்கு மணிக்கணக்கில் உட்காரந்து எழதவேண்டும். இங்கு தொகுப்பது என்பது ஒரு அறிமுகத்திற்காகாத்தான். இதில் தொகுக்கப்படவில்லை என்பதால் நீங்கள் கூறிய பத்ரி,வெங்கட்,
சன்னாசி ஆகியோர்களையும் அவ்வப்போது நான் வாசிப்பவன்தான். செல்வராஜ் நான் வாசித்ததில்லை. இதில் ரவி.சீனிவாசை வேறு விட்டு விட்டீர்கள். தன்னடக்கமோ? தெரியவில்லை. அவர்களது தளம் வேறுவிதமானது. தொழி்ல்நுட்பம் மற்றும் ஆழ்ந்த இலக்கியம் மற்றும் அறிவியல் சார்ந்தது. அது சற்றே ஆழமாக அவதானிக்கத் தகுந்த அரசியல் வகை என்பதுடன் எனக்கும் புரியக்கூடியதாக இருக்க வேண்டும் அல்லவா? சன்னாசி, வெங்கட் போன்றோரின் எழுத்துக்களை புரிந்து கொள்வதற்கான வாசிப்பு எனக்குப் போறாது. இதுபோன்று அவர்கள் தேர்ந்தெடுப்புப் பற்றி நீங்கள் கேள்வி கேட்பீர்களா? எனத் தெரியவில்லை. அரசியல் மௌனம் என்பது ஒருவகையில் மௌனத்தின் அரசியல்தான்.
நாகார்ஜீனனின் எழுத்துக்கள் எனக்கு அனுக்கமானவை.தவிரவும் வலைச்சரம் என்பது எனது தோ்வின் அரசியல் சார்ந்தது என்பதை எனது அறிமுகக் குறிப்பில் தந்துள்ளேன். நீங்கள் வெவ்வேறாக எழுதப்பட்ட இரண்டு சரங்களை ஒன்றாக குழப்பாதீர்கள். நாகார்ஜீனன் பற்றிய எனது குறிப்பும் கோவி மற்றும் டீபிசீடி பற்றிய குறிப்பும் ஒன்றல்ல. பரட்டை மாதிரி பத்தவைக்கும் வேலையா? நண்பரே.
தங்களது கருத்துக்கு நன்றி.
அன்புடன்
ஜமாலன்.
ஜமாலன்,
ReplyDeleteஉங்கள் எழுத்துக்களைப் போலவே, உங்கள் வாசிப்பின் அளவும் அளவிட முடியாத அளவுக்கு இருக்கிறது. 'ஒரு பிரபல எழுத்தாளர் அடையாளம் காணப்படாமல் இருக்கிறார்' என்று ஒரு இடுகையில் சொல்லி இருந்தேன். ஆனந்த விகடனில் 'மொழியும் நிலமும்' குறித்து வந்திருப்பதாக ஒருவர் பின்னூட்டி இருந்தார்.
நீங்கள் எல்லைகளை உடைப்பது போலவே உங்கள் எல்லைகளின் அளவும் பெரு(க்)கிக் கொண்டே செல்கிறது.
வாழ்த்துகள் ஜமாலன், பதிவுலகில் என்போன்றவர்கள் எழுதவந்து உங்களைப் போன்றவர்களை அறிய முடிகிறதென்றால் அதைவிட பெரிய பயன் என்ன இருக்க முடியும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.
நன்றி கோவி.கண்ணன்
ReplyDeleteஉங்கள் ஒவ்வொரு பதிவு வாசித்தேன். சுட்டிகளை படிக்க நேரம் எடுத்த தான் படிக்கனும். அவ்வ்வ்வ்வ்வ் ரொம்ப நல்லவருங்க நீங்க..சம்பிரதாயமா 6 சுட்டி முடிஞ்சாலே மூச்சு விட்டுட்டு, அடுத்தப் பதிவு என்று ஓடுவோர் மத்தியில் வரிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட சுட்டியா.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDelete**********************
பெரியார் விமர்சகர், ஆரிய படையெடுப்பு பதிவில் சரியான பதில் சொல்லாமல் தப்பித்துப் போய் விட்டார். இப்போ இங்கே வந்து ஆற்றாமை, மற்றூம் இன்ன பிற ஆமைகளை தவழ விடுகிறார்...
விளக்கு இருந்தால் விட்டில் பூச்சிகள் வரத்தான் செய்யும்..நாம் நம் வேலையயைப் பார்க்கலாம்... :P
நன்றி டிபிசிடி ஐயா.
ReplyDeleteMr.jamalan,
ReplyDeleteYou have left out very important notable bloggers like Nesakumar - who is the real post-modernist writer, his brave letters expressing the state of terrerised minds, in spite death threats deserve commendable appreciation, and Ravi srinivas - for his indepth outlook on any issues, and cyril Alex - for his broadmindedness in accepting that pilosophies other than christianity, and few more
Params
params said...
ReplyDeleteசிறில் அலக்ஸ் கிறித்துவம் பற்றி ஜெயமோகனுக்கு எழுதிய மறுப்புரைக் கட்டுரை சிறப்பான கட்டுரை. அதேபோல் ரவி.சீனிவாஸின் கண்காணிப்பு அரசியல் பற்றிய கட்டுரைத் தொடர் சிறப்பான பேசப்படாத ஒன்றைப் பற்றிய கட்டுரை. நேச.குமார் நான் வாசித்ததில்லை.
ரவி.சீனவாஸை நான் ஈரோட்டில் அல்லது கோவையில் நடந்த ஒரு மக்கள் விஞ்ஞானம் பற்றிய மாநாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்துள்ளேன். அவர் எஸ்.வி.ஆர், கோவை ஞானி மற்றும் எஜ்.என்.என்.. ராஜ் கெளதமன் ஆகியொருடன் நள்ளிரவுவரை நீண்ட விவாதம் நடந்த கொண்டிருந்தது நினைவில் உள்ளது. நான் பொதியின் புத்தகக் கடைக்கு உதவியாளனாகவும் அந்த கூட்டத்திற்கும் சென்றேன். அதனால் ரவி.சீனிவாஸை எனக்கு பரிமானம் மற்றும் நிகழ் காலத்திலிருந்தே தெரியும். அவரை வாசித்து வருபவன் நான் என்பதை தன்னடக்கத்தடன் சொல்லிக் கொள்கிறேன்.
உங்கள் இணைப்பைத் தந்தால் வலைச்சர ஆசிரியராக இருக்க நான் உங்களை பரிந்துரை செய்கிறேன்.
திரும்பவும் ஒன்றுதான் எனது அறிமுகம் முடிந்த முடிபானது அல்ல. மன்னிக்கவும். நன்றி.
பேரன்பு ஜமாலன்!
ReplyDeleteதங்களைப் போன்ற ஜாம்பவான்களின் வாசிப்பில் என்னுடைய கிறுக்கல்களும் இருப்பது எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய கவுரவம்! நன்றி!!!
அன்பு ஜமாலன்.. உங்களின் வாசிப்பு மற்றும் அறிவுசார் தளங்களின் உச்சங்களைப் பார்த்து எப்போதுமே எனக்கு வியப்பு இருக்கிறது. எழுதும் பெரும்பாலானவற்றைப் படித்தாலும், ஒத்தக் கருத்து மற்றும் உரையாடுவதற்கு அதற்கு மேல் என்னிடம் விஷயம் இல்லாமைக் காரணமாக பின்னூட்டங்கள் இடாமல் ஒதுங்கிவந்திருக்கிறேன். அப்படியான நீங்கள் என்னை அழுத்தி அடையாளப்படுத்தி காட்டியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி.!
ReplyDeleteநான் பதிவுகளுக்கு அதிகம் பரிட்சயமில்லாதவள் , யாரும் சொன்னால் போய் பார்ப்பதுண்டு அந்தவகையில் உங்கள் சில பதிவுகளின் அறிமுகம் எனக்கு பிரயோசனமாக இருக்கும் நன்றி ஜமாலன்
ReplyDeleteநட்புடன் றஞ்சினி
This comment has been removed by the author.
ReplyDelete