Tuesday, May 13, 2008

தெரிந்து கொள்ளுங்களேன் - நட்சத்திரப்பதிவர்

வலைப்பூக்களில் எல்லாரும் அறிந்த பதிவர் வாத்தியார் சுப்பையா அவர்கள். அவரை அறியாதவர்களே இல்லை. அவரது வலைப்பூக்களைப் படிக்காதவர்களே இருக்க முடியாது. இருந்தும், வலைச்சர விதிமுறைகளுக்கு உட்படாமல், அவரைப் பற்றி எழுத வேண்டும் என்ற அவாவினால் விளைந்ததே இப்பதிவு.



தமிழ் மணத்திற்கு வாழ்த்து என்ற அவருடைய பாடலில் பதிவரின் தமிழ் மணக்கிறது. அதில் கவிதை வாழ்கிறது. பதிவர்கள் அனைவரும் வாழ்த்தப் படுகின்றனர். பாடலால் வாழ்த்திய பாமுறை அருமை அருமை. ஏறத்தாழ அதில் 60 சக பதிவர்களை அறிமுகப் படுத்தி வாழ்த்தி உள்ளார்.



தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவராக ஒளி வீசிய ஒரு வாரத்தில் ஏறத்தாழ 30 பதிவுகளில் தமிழ்த் தலைவர்களையும், நாட்டின் தலைவர்களின் பண்புகளையும் கவிதை யாக்கி உள்ளார். கவிஞர் வாலி பற்றி ஒரு பதிவு . கற்கண்டுச் சோற்றிற்கு காட்டுத் தேன் சுவையூட்டுவது போல் வால் இல்லாத வாலி என்று ஒரு குறிப்பும் கூறி உள்ளார்.



மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா?

மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா?

உனக்காக ஒன்று எனக்காக ஒன்று

ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை!



இந்த வாலியின் சமுதாய சிந்தனை இசையில் எனக்கு மிகவும் பிடித்தது. அதைப் பதிவரும் சுட்டி இருக்கிறார்.



கர்ம வீரர் காமராஜரைப் பற்றி கவியரசு கண்ண தாசன் பாவமைத்துக் காட்டி இருப்பதையும், பகுத்தறிவுப் பகலவன் பெரியார், அலகாபாத் அரண்மனைத் தோட்டத்து ராஜா நேரு உள்ளிட்ட தலைவர்கள், கல்விக்கண் திறந்த காமராஜரைப் போற்றி இருப்பதையும் கவிதை யாக்கி உள்ளார்.


அடுக்கு மொழி ஆற்றலர் அறிஞர் அண்ணா, தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்ட தமிழன் - தன் கருத்துகளால் தமிழை வாழ வைத்த குமுத மலர் தந்த புதுமைச் சிந்தனையாளன் எஸ்.ஏ.பி, பொன்னியின் செல்வன் தந்த பேராசிரியர் கல்கி, வரலாறு வாழ்கின்ற செட்டிநாட்டு வீடுகள், கவிதையில் வாழ்ந்த காவியத் தலைவன் கவியரசு கண்ணதாசன், அறிவியலும் வரலாறும் காலத்தின் நாகரிகமும் கதைகளில் பளிச்சிட்ட மொழி நடை மாற்றத்தால் தமிழுலகைக் கவர்ந்த சுஜாதா, கணீர் என்ற குரல் வளத்தால், புன்னகைக்கும் பூமலர் பேசுவது போல் தெய்வத்தின் குரலை மக்களுக்கு உணர்த்திய வாரியார், பட்ட பின் ஞானி என்ற நடைமுறைத் தத்துவத்தால் சுட்டபின்னும் வாழுகின்ற சுடர்மொழியை பாடலில் படைத்திட்ட பட்டினத்தார், கன்னல் தமிழே நீ ஒரு பூக்காடு - அதில் நானொரு தும்பி என்ற கலைஞர் மு.க , தமிழால் தமிழைத் தமிழாக்கி தனித்து நடை பயிலும் வடுகப்பட்டி கவிஞன், வார்த்தை நெருப்பால் சுடர் வீசும் செஞ்சொல் வைரமுத்து போன்ற கவிஞர்களை, தலைவர்களைத் தன் தமிழ் மண நட்சத்திரப் பதிவுகளில் சுடர் வீசச் செய்த இவரின் பதிவுகள் இன்னும் ஒரு முறை அனைவரும் படிக்க வேண்டியது. தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுங்கள் - முடிந்தால் முத்து மாலை சூட்டுங்கள். புன்னகைக்கும் தமிழ் !!

செல்வி ஷங்கர்
--------------------

21 comments:

  1. பதிவர்களே = படியுங்கள் = மறு மொழி இடுங்கள் - நன்றி

    ReplyDelete
  2. பதிவர்களே = படியுங்கள் = மறு மொழி இடுங்கள் - நன்றி

    பார்முலா தப்பா இருக்கே :-) மைனஸ் நன்றியா?

    ReplyDelete
  3. பதிவு மிக அருமை. பொறுமையாக சுட்டிகளை எல்லாம் படிக்கிறேன்.

    அன்புடன்

    மங்களூர் சிவா

    ReplyDelete
  4. இப்போதைக்கு வாத்தியாரோட வாழ்த்து பதிவு மட்டுமே படித்திருக்கிறேன். மற்றவை பிறகு படிக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  5. மேடம்,

    நல்ல தொகுப்பு. பதிவுகள் சிலவற்றை வாத்தியாரின் நட்சத்திர வாரத்தில் படித்திருக்கிறேன். விடுபட்ட பதிவுகளையும் படிச்சிருவோம் :))

    ReplyDelete
  6. //கற்கண்டுச் சோற்றிற்கு காட்டுத் தேன் சுவையூட்டுவது போல் வால் இல்லாத வாலி என்று ஒரு குறிப்பும் கூறி உள்ளார். //

    தமிழ் ஆசிரியை என்பதை நிரூபித்த அருமையான உவமை. சுப்பையா அவர்களின் பதிவுகள் நீங்கள் சுட்டியுள்ளவை அனைத்தும் ஏற்கெனவே படித்திருக்கிறேன். உண்மையிலேயே அருமையான சுட்டிகளைச் சுட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. முற்றிலும் உண்மை. சிலது விட்டு போச்சு. இதோ வாத்தியார் வீட்ல போய் குதிக்கறேன். நன்றி.

    ReplyDelete
  8. வாத்தியார் ஐயாவின் வலைப்பூவில் 'ஆர்கைவ்ஸ்'-ல் இருந்து தேடி, சில பதிவுகளை நான் படித்திருக்கின்றேன்.:))

    ஆனால் பல பதிவுகளை, நான் விட்டுவிட்டேன் என்று தெரிகிறது.:(.

    இனிய நடையில் எல்லாம் ஒரு சேரத் தந்தமைக்கு வாழ்த்துகள் அம்மா.:)

    ReplyDelete
  9. வாத்தியார் இடுகைகளின் ஆழமான ஆராய்ச்சி... நல்ல இடுகை.

    ReplyDelete
  10. பினாத்தலாரே !!

    வருகைக்கும் அரிய கண்டு பிடிப்புக்கும் நன்றி !!!

    ReplyDelete
  11. பினாத்தலாரே !!

    வருகைக்கும் அரிய கண்டு பிடிப்புக்கும் நன்றி !!!

    ReplyDelete
  12. சிவா,

    ஆழ்ந்து படித்தால் பொறுமை வரும் - வாழ்த்துகள்

    ReplyDelete
  13. பாரதி,

    அனைத்துச் சுட்டிகளையும் படிக்க வேண்டும் - தெரியுமா

    வாழ்த்துகள்

    ReplyDelete
  14. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதங்கா

    ReplyDelete
  15. கவிஞனின் கவிதை காலத்தால் இனித்துக் கொண்டிருக்கும் தானே !!
    கரும்புச்சாறும் கனிச்சாறும் கூட தமிழ்ச் சாறாகுமே !!

    நன்றி கீதா சாம்பசிவம்

    ReplyDelete
  16. அம்பி - வாத்யார் வீட்லே குதிச்சாத் தான் வால்தனம் அடங்கும்

    நன்றி அம்பி

    ReplyDelete
  17. புது வண்டே

    வாத்தியார் கவிதைகள் அத்தனையும் கவிஞர்களின் வாழ்க்கைச் சான்றோடு நிழற்படங்களையும் இட்டு மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். அவற்றைப் படித்தால் நமக்கு கவிதை நயம் ஆழமாய்த் தெரிகிறது.

    வாழ்த்துகள்

    ReplyDelete
  18. தமிழ்பிரியன்

    கருத்துகள் பொதிந்த கவிதையும் கவிநடையும் கவிஞர்களின் ஆராய்ச்சிக்குக் கை கொடுப்பவை. ஆய்ந்தெடுத்தால் கவி முத்துக்கள் கிடைக்கும்

    நன்றி

    ReplyDelete
  19. வாத்தியாரை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் அக்கா. படிச்சிப் பாத்துருவோம்:)

    ReplyDelete
  20. ஸ்ரீதர்,

    படித்ட்துப் பார்த்து பயன் பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  21. எனது பழைய பதிவுகளை மீண்டும் படிக்கத் தூண்டியமைக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete