Sunday, June 1, 2008

செல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருத்தல் !

அன்புள்ள பதிவர்களே !

ஒரு வார காலம், நமது நண்பர் அம்பி அவர்கள், பலவித தலைப்புகளில் அருமையான பதிவுகளை அடையாளம் கண்டு, அறிமுகப் படுத்தி, அமர்க்களப் படுத்தி விட்டார். சுய அறிமுகத்திற்குப் பிறகு, விளம்பரம் பற்றிய பதிவுகள், சமையல் பற்றிய பதிவுகள், இசை பற்றிய பதிவுகள், பல்வேறு கலைகளைப் பற்றிய பதிவுகள், பயணக் கட்டுரைகள் அடங்கிய பதிவுகள், நன்றி நவிலல் ஆகியவற்றை அருமையாகத் தொகுத்து வழங்கினார். ஆயுர்வேதம், களரி, வர்மக்கலை போன்றவற்றைப் பற்றி அதிகம் எழுத வில்லையே என்ற ஆதங்கத்துடன் விடை பெற்றார்.

அவருக்கு வலைச்சரம் சார்பினில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து, நல்வாழ்த்துகளுடன் விடை அளிக்கிறோம்.
----------------------------------------------------------

அடுத்து இவ்வாரத்திற்கு, 02.06.2008 முதல் 08.06.2008 வரை, அருமை நண்பர் சிவமுருகன் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். அவரது மொத்த வலைப்பூக்கள் பதினான்கு. மதுரையைச் சார்ந்தவர். பெங்களூரில் பணி புரிபவர். கணினித் துறையிலிருந்து மனித வள மேம்பாட்டுத் துறைக்கு மாறியவர். பல குழுப்பதிவுகளிலும் பதிவுகள் பதிந்து வருகிறார். பன்மொழி வித்தகர். திருக்குறளை பல்வேறு மொழிகளில் குறிப்பாக சௌராஷ்ட்ரத்தில் மொழி பெயர்ப்பவர். மதுரையைப் பற்றிய அரிய புகைப்படங்கள் ஆயிரம் இட்டவர்.

ஆன்மீகத்தில் ஈடுபாடுடையவர். திருப்பாவை திரும்பாவை, மகிஷாசுர மர்த்தனி ஸ்தோத்ரம், நடனகோபால நாயகி சுவாமிகளின் கீர்த்தனைகள், சித்தர் பாடல்கள் என பலப்பல பதிவுகள் இடுபவர். மற்றொரு ஆன்மீகப் பதிவரான குமரனுடன், குழுப் பதிவுகளில் இணைந்து இயங்குபவர்.

இத்தனை பெருமைகளைப் பெற்ற நண்பர் சிவமுருகனை வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

சீனா ... (Cheena)
பொறுப்பாசிரியர்.
01.06.2008
----------------

13 comments:

  1. மீ த ஃபர்ஸ்ட்டு :))

    ReplyDelete
  2. யப்பாடி.. எத்தனை நாளாச்சு.
    வலைச்சரத்துல மொதோ கமெண்டு போட்டு :))

    ReplyDelete
  3. வருக சிவ முருகன் வருக..
    உங்கள் தெள்ளிய தமிழமுதை பருக தருக

    ReplyDelete
  4. நானும்தான் :P

    ReplyDelete
  5. வருக வருக சிவமுருகன்.

    ReplyDelete
  6. ஆஹா..... சிவனும் முருகனும் சேர்ந்துதரும் சரமா?

    வாங்க சிவமுருகன்.

    தில்லி போய் பெண்களூரு வந்தது டும் டும் டும்:-))))

    கலக்குங்க. பார்த்துறலாம்:-)))

    ReplyDelete
  7. சிவமுருகனைப் பற்றிய சிறப்பான அறிமுகத்துக்கு நன்றி சீனா!

    இந்த வார வலைச் சரத்தை ஆவலுடன் எதிர் நோக்கி...
    அடியேன்!

    ReplyDelete
  8. முதலில் எல்லோருக்கும் வணக்கம்!

    என்னால முடிஞ்ச அளவுக்கு நிறைய எழுத வேண்டும் என்று எண்ணுபவன்! விரைவில் ஒரு சில தொடர்களை ஆரம்பிக்க எண்ணிய வேளையில் இந்த அழைப்புவந்தது! அதற்க்கு வலைச்சரம் குழுவினருக்கும், பொறுப்பாசிரியருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. //வருக சிவ முருகன் வருக..
    உங்கள் தெள்ளிய தமிழமுதை பருக தருக//

    சென்ஷி நல்லாருக்கீங்களா? வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. //நானும்தான் :P//

    நன்றி நிலா!

    ReplyDelete
  11. //வருக வருக சிவமுருகன்.//

    சதங்கா, உங்களோட ஒரு வாரம் நானும் படிச்சேன்! ஒரு சில பதிவுகள் நான் எழுத நினைச்சதை அப்பிடியே நீங்க போட்டுடீங்க. :-).

    அதுக்கு தான் வேறுவிதமா டைப்ப ஆரம்பிக்குறேன்!

    ReplyDelete
  12. அம்மா!
    //ஆஹா..... சிவனும் முருகனும் சேர்ந்துதரும் சரமா?//

    ஆமா!

    //வாங்க சிவமுருகன்.//
    வரவேற்ப்பிற்க்கு நன்றி!

    //தில்லி போய் பெண்களூரு வந்தது டும் டும் டும்:-))))//

    நானும் தில்லியில கொஞ்சநாள் இருந்தேனே அதச்சொல்றீங்களா? :-)

    //கலக்குங்க. பார்த்துறலாம்:-)))//
    கலக்குறேனா! காலாய்க்குறேனா நீங்க தான் சொல்லனும்!

    ReplyDelete
  13. //சிவமுருகனைப் பற்றிய சிறப்பான அறிமுகத்துக்கு நன்றி சீனா!

    இந்த வார வலைச் சரத்தை ஆவலுடன் எதிர் நோக்கி...
    அடியேன்!//

    அவசியமா உங்களோட ஆவல் நிறைவேறும்!

    நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete