Thursday, June 12, 2008

கண்ணீரும் வலியும் கலந்துமக்கு நான் தருவேன்!


எச்சரிக்கை - வயித்துல வலியும் பின்னே கண்ணுல தண்ணியையும் வர வைக்கும் பதிவுகள்!

வெளிநாட்டில் புதிதாய் வங்கிகணக்கு தொடங்க செல்லும் இவருக்கு ஏற்படும் அனுபவங்களோ இந்த பதிவில்,

"Hi, How are you doing today"?
ஏதோ இருக்கேன் டா மார்க்கு, நீ எப்படி கீர?
Good, How about you ?
Okaay.. Here we go. You are almost set. Some of the forms that
you need to signனு சொல்லி ஒரு 10 பேப்பர்ஸ தொர நீட்டி "this is for this, this lets us do this, this is for that.." அது இதுனு சொல்ல... நானும் "போட்டாச்சு போட்டாச்சு"ங்குற மாதிரி சைன் பண்ணிட்டு பாத்தா என்னோட பேர்ல ஒரு டைப்போ. அடப்பாவி 10 நிமிஷம் எழுத்துக்கூட்டி எழுத்துக்கூட்டி டைப் பண்ணியேடா இப்பிடி தப்பா அடிக்கத்தானா?

۞۞۞۞۞

போட்டோகிராபி மட்டுமில்லைங்க தல காமெடியிலும் கலக்குறாரு பாருங்களேன் இங்க

ஒரு வாலிபனின் வாழ்க்கை புத்தகத்தின் ஒரு பக்கத்தை தான் நாம இன்னிக்கு புரட்டி பார்க்கப்போறோம்!

காப் காப்!! ஓரம் கட்டு! சீக்கிரம் ஓரம் கட்டு" அப்படின்னு கத்த ஆரம்பிச்சிட்டாரு!!!
என்னது?? காப்பா??? ஆகா வெச்சிட்டாங்கையா ஆப்பு!!!அப்படின்னு வண்டியை ஓரம் கட்டுனேன். ஆகா!! நாம லைசென்ஸ் வாங்கின மொத ட்ரிப்புலையே மாட்டிகிட்டோமே அப்படின்னு நானும் குல தெய்வத்தை வேண்டலாம்னு பார்த்தா,அப்போன்னு பாத்து பயத்துல என்னுடைய குல தெய்வம் யாருங்கறதே எனக்கு மறந்து போச்சு. ரெண்டு நிமிஷத்துல வண்டியை எனக்கு பின்னாடி நிறுத்திட்டு நம்ம மாமா காரு கிட்ட வந்தாரு.

எவன்டா அவன் நான் நமீதா கூட டூயட் பாடிக்கிட்டு இருக்கும் போது எழுப்பறது"

“டேய் வெண்ணை!! மாமா வந்திருகாரு!! பெரியவங்கன்னு மரியாதை கூட இல்லாம அப்படி என்னடா தூக்கம்!! எந்திரிடா"

۞۞۞۞۞

ஒரு காலனியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சி அது சம்பந்தமான உரையாடல்களின் தொகுப்பு ரொம்ப எதார்த்தமாக...!

சவிதா...இது உன் கல்யாணப்புடவையா?ஏலக்கா பச்சைல அரக்கு பார்டர்.சரவணா ஸ்டோர் விளம்பரத்துல ஸ்நேகா இதையேதான் கட்டிக்கிறா! நீயும் அன்னிக்கு மணமேடைல கட்டிட்டுப் பாத்தது.. ஹ்ம்ம்.எட்டு வருஷத்துக்கப்றோம் இப்பதான் திரும்ப எடுத்துக்கட்டிக்கறேன்னு நினைக்கறேன் சரியா?"

இராம் (அட நம்ம ராயல் ராம்தாங்க்!) திகைப்புடன் சங்கடமாய் பார்க்க, சவிதா அவர் காதருகில் 'ஹிஹி குழந்தைக்கு 'க' வரலை.. மழலை போகலை.. குன்றத்திலே குமரனுக்குக்கொண்டாட்டம் பாட்டு பாட்றது.. புரியுதோ தலைவருக்கு?'எனகேட்க,
துன்றத்திலே துமரனுக்கு தொண்டாட்டம்..'

அதான் குழந்தைகள் என்கிறது..பவ்யமா உக்காந்துண்டு சமத்தா இருக்குகள் பாரேன்...அதிலும் என் பேரன் அபிஜித்து இப்படி அடங்கி ஒரு இடத்துல உக்காந்து நான்பார்த்ததே இல்ல.இந்தக்காணக் கிடைக்காத காட்சியைப்பார்க்கக் கொடுத்துவைக்காம அவன் தாத்தா நாலு வருஷம் முன்னே போய்ச்சேர்ந்துட்டாஆஆஆஆஆரேஏஏ"

۞۞۞۞۞

வலைப்பதிவுலகில் சமையலுக்கு இவங்க பதிவ விட்டா வேற கிடையாதுன்னு அடிச்சு (யாரையும் இல்ல சும்மா) சொல்லலாம் அவுங்க பதிவுல ஒரு வித்தியாசமான காமெடி

நான் இனிமே எப்படி இருக்கணும்னு எனக்கு நானே சொல்லிக்கறேன்; புலம்பிக்கறேன். வலைப்பதிவு ஆரம்பிச்சதிலேருந்து எனக்குள்ளயே பேசிகிட்டாலும் எல்லாம் ரெசிபி ஃபார்மட்ல தான் சொல்ல வருது..”

பொதுவில் வந்து “என்னங்க..” என்று அழைக்கும்போது நம் குரம் நமக்கே கொஞ்சம் கேவலமான toneல் பிசிறுகிற மாதிரி இருக்கலாம். ஆனால் அதைக் கேட்டும் கண்டுகொள்ளாத மாதிரி இருந்துவிட்டு சாவகாசமாக, “என்னையா கூப்ட?’ என்று முழிக்கும் கணவனை முதல் இரண்டு முறை மட்டுமே மன்னிக்கலாம். மூன்றாவது முறையாக அந்தச் சம்பவம் நடந்தால் அது நடிப்பு அல்லது கொழுப்பு. “Why all these..? Feel free.. ” என்று வழக்கம்போல் சொன்னாலும் ஏற்கவேண்டாம்.

சாப்பாட்டு மேசையாக டைனிங் டேபிளையே உபயோகித்து கம்ப்யூட்டர் டேபிளுக்கு ஓய்வளிக்க வேண்டும்!

- கோரிக்கை கண்டிப்பாக யோசிக்க வைக்க மட்டும்தான்! செயல்படுத்தணும்னா ரொம்ப சிரமம்!!! - சாப்பிட்டிங்க் + சாட்டிங்க மக்காஸ் நான் சொல்றது கரெக்ட்தானே...???


۞۞۞۞۞

எங்க ஊருக்காரரு பண்ணுன அலும்புகளையும் நேர்ல ஆளையும் பார்த்தா 100% நம்பவே மாட்டீங்க! அவரா இவுருன்னு!

K.R சார், கிராஃட் சார், டிராயிங் சார், N.V சார் இவங்கல்லாம் நாடகத்துக்கான வேலை எல்லாம் செய்ய நான் அசிஸ்டண்ட் டைரக்டரா சும்மா சுத்தி சுத்தி வேலை பார்த்தேன். டீ, வெத்தலை வாங்கி வருவது, கம் போட்டு அனுமன் வால் செய்வது மாதிரியான அசிஸ்டண்ட் டைரக்டர் வேலையை அமர்களமாக செய்தேன்.இதுல KR சாருக்கு புதுசு புதுசா ஐடியாவெல்லாம் பொங்குது. அனுமன் அந்தரத்துல பறந்து வந்து சீதை அருகே குந்தனும். அதுக்கு சூப்பர் ஐடியா பண்ணிட்டார். கிணத்துல தண்ணி எடுக்கும் சகடையை வச்சு.

நானும் என் பலம் முழுதும் கொண்டு இழுக்க ராதா மேலே பறக்க விசில் சத்தம் காது கிழிஞ்சுது. எனக்கு கை கிழிஞ்சுது. ஓரளவுக்கு மேல என்னால ராதா வெயிட் தாங்க முடியலை. அந்தரத்தில பறந்த ராதா என் கைங்கரியத்தால் சீதாதேவிக்கு பக்கத்திலே பொத்துன்னு விழ படார்ன்னு ஒரு சத்தம்.

வலைத்தளத்தின் பேருல ஏன் பாப்பா சேர்த்து வைச்சிருக்காருன்னு புரிபடாதவங்களுக்கு இந்த பிட்டு!

"நீங்க யாரு"ன்னு கேக்க அவன் "ராதா"ன்னு சொல்ல, பாப்பா எந்த ராதான்னு கேக்க இவன் "குரங்கு ராதா"ன்னு சொல்ல அதுக்கு அபிபாப்பா "பாட்டி, அப்பா கயித்தவிட்டு மூஞ்சிய உடைச்ச குரங்கு ராதா அங்குள் உங்களை பாக்கனுமாம்"ன்னு சொன்னாலாம்.

۞۞۞۞۞

முன்னமே பக்காவாக டிரெய்னிங்க் எடுத்துக்கொண்டு ஜோடிப்போட்டிகளில் கலந்து கொள்ளும் டீச்சரின் பதிவு

என்ன ஆச்சின்னு. நான் முறைக்க
கண்ணாடி போடாததால் சரியாப் புரியலைன்னார்.
நாந்தான் கண்ணாடியில்லன்னா கொஞ்சம்
யெங்காத் தெரியும்னு போட வேண்டாம்னேன்.

ஜெ:உங்களுக்குப் பிடித்த டிபன் என்ன?
ர:உப்புமா [உங்க மனைவி பூரிதான் உங்களுக்குப் பிடிக்கும்னு சொன்னாங்களே] [வாரத்தில் ஐந்து நாள் உப்புமாவே சாப்பிடுவதால் பிடிச்சிப் போயிடுச்சி.பூரி தங்கமணியோட உறவுக்காரங்க வந்தா மட்டும்தான் செய்வா]

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்....!எல்லா பதிவுக்கும் நீங்க ஃப்ரியா இருக்கறப்ப போய் படிச்சுட்டு வாங்க!

கண்ணீரும் வலியும் கலந்துமக்கு நான் தருவேன்!

சோகம் களை தங்க கனிமுகத்து மாமணிகளே!

நீங்கள் அவுங்களுக்கு இப்போதும் பின்னூட்டம் தாருங்கள்!

9 comments:

  1. வலைச்சரத்தை பின்னீட்டிங்க. அருமையான தொகுப்பு

    ReplyDelete
  2. நன்றி அம்மிணி :))

    ReplyDelete
  3. ஆயில்யா, இந்தா பின்னூட்டம். :)

    நல்ல தொகுப்பு. தலைப்பு உண்மையிலேயே ரொம்ப அசத்தலா இருக்கு. :)

    ReplyDelete
  4. அபி அப்பா, கண்மணி டீச்சர், ஷைலஜா அக்கா , சிவிஆர்னு ஏகப்பட்ட அரைச்ச மாவு ஆயில்யன்.

    ReplyDelete
  5. ///ambi said...
    ஆயில்யா, இந்தா பின்னூட்டம். :)

    நல்ல தொகுப்பு. தலைப்பு உண்மையிலேயே ரொம்ப அசத்தலா இருக்கு. :)
    //

    நன்றி அம்பி

    ReplyDelete
  6. //மங்களூர் சிவா said...
    அபி அப்பா, கண்மணி டீச்சர், ஷைலஜா அக்கா , சிவிஆர்னு ஏகப்பட்ட அரைச்ச மாவு ஆயில்யன்.
    ///
    நன்றி சிவா!

    ReplyDelete
  7. எல்லாமே சூப்பருங்க. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எல்லார் அனுபவமும் கலக்கல்(மனசு மற்றும் வயறு)

    ReplyDelete
  8. ஆயில்யன் நன்றி.ஆனா நீ சொன்னது போல 'பக்கா டிரெய்னிங் ஒன்னுமில்ல' அப்படி டிரெய்னிங் குடுத்தா மட்டும் ரங்கமணிங்க சமத்தா ஜெயிக்கவா போறாங்க..;(
    ம.சிவா சொன்னது போல் ஏன் அரைத்த மாவே அரைக்கிறீங்க.[ஆனாலும் நாங்க புளிக்க மாட்டோமே ;)]

    ReplyDelete
  9. அண்ணே.. எப்டிணே கடகத்துலயும் வலைசரத்துலயும் ஒரே சமயத்துல இப்படி கலக்கறிங்க. ரொம்ப நல்லா தொகுத்திருக்கிங்க.

    ReplyDelete