Monday, June 9, 2008

தமிழால் வாழ்கிறோம்!

பிறப்பு முதல் இறப்பு வரை நாம் நம் தேவைகளுக்காக சார்ந்திருக்கும் விஷயம் மொழி ஒன்றுதான். மொழி இல்லையேல் எந்தவொரு செயலுக்கும் உயிர் இருக்காது! உணர்வு இருக்காது! நாம் நடைமுறையில் பயன்படுத்தும் மொழி பற்றிய சிந்தனைகளை அள்ளி தெளித்து சென்றிருந்த பதிவுகள் என் பார்வையில்....

பொன்னம்பலத்திலிருந்து மின்னம்பலம் ஏறியவரின் எளிய நடையில் இனியதொரு நீண்ட பதிவில் விடுக்கும் கோரிக்கை!

தமிழ் கூறும் நல்லுலகு தென் திசையில் உள்ளது. தென் திசையில் வாழ்கின்ற தமிழரின் பெருமையும், தமிழ் மொழியின் பெருமையும் அனைத்துத் திசைகளுக்கும் பரவ வேண்டும். உலகம் விரைந்து வளர்ச்சி அடையத் தமிழர்கள் பங்களிக்க வேண்டும். தமிழ் மொழி வழக்கில் அயல் மொழிகளின் துறைகள் அனைத்தாலும் விரவி நிறைய வேண்டும். துறை தோறும் தமிழ் மொழி பயிலவேண்டும்.இசையில்,நடனத்தில்,அறிவியலில், தொழில்நுட்பத்தில், கலைகளில், நீதியில், ஆட்சியில், ஆவணத்தில், அரசியலில் அங்கிங்கெனாதபடி எங்கும் எதிலும் எல்லா இடத்திலும் தமிழ் நிலைபெறவேண்டும்!

۞۞۞۞۞

அ.ராமசாமியின் முதலில் இல்லை முழுமையில் இருக்கிறது பதிவின் பிரதிபலிக்கும் கருத்து ”ஒரு படைப்போ அல்லது இயக்கமோ அதை முழுமையாகப் புரிந்து கொண்டு, சாராம்சமாக என்ன இருக்கிறது எனப் பார்ப்பதுதான் முழுமையான மனிதனின் அடையாளம். அதை நோக்கித் தமிழர்களின் பொதுப்புத்தியைத் திருப்பும் வரிகளை எழுதும் படைப்பாளிகளே நிகழ்காலத்தின் படைப்பாளிகளாக இருக்கப் போகிறவர்கள்.”

۞۞۞۞۞

மொழி என்பது கருத்துப் பரிமாறிக் கொள்ள ஒரு வகையான ஊடகம், மிடையம் என்பதை நாம் எல்லோரும் ஒப்புக் கொள்ளுகிறோம். தமிழர்க்குப் பிறந்த ஒரு குழந்தையை அந்தக் குழந்தையின் பெற்றோர்களுடைய பண்பாட்டுத் தாக்கம் இல்லாத ஒரு குமுகாயத்தில், தமிழ் அறியாத ஒரு குமுகாயத்தில் வளர்த்தோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அது தமிழ்ப் பிள்ளையாக அல்லாமல் வேறு வகைப் பிள்ளையாகத்தான் வளரும்; ஆனால் தமிழ் என்பது வெறும் ஊடகமா? மீனுக்கு அதைச் சுற்றிலும் உள்ள நீர் வெறும் ஊடகமா? பின் புலமா? - என வளவில் எழும் பல கேள்விக்குறிகள் கண்டிப்பாக உங்களையும் கூட நிச்சயம் தமிழ் நோக்கி சிந்திக்கவைக்கும்

۞۞۞۞۞

தமிழ்சசியின் தன்னிகரில்லா தமிழில் ஆய்வுகட்டுரையாக அமைந்தபதிவிலிருந்தே,
அமைந்த தன்னிகரில்லா தமிழ் பற்றிய செய்திகளில் ஒரு மொழியின் வளர்ச்சி என்பது பலப் பரிமாணங்களைக் கொண்டது. கடவுளின் இடது பக்கத்தில் இருந்து ஒரு மொழியும், வலது பக்கத்தில் இருந்து மற்றொரு மொழியும் முளைத்து விடுவதில்லை. ஒரு மொழியின் பேச்சு வழக்கம் தொடங்கி அது எழுத்து வடிவமாக உருப்பெறுவது வரை பல நூறு ஆண்டு கால தொடர்ச்சியான வளர்ச்சி தேவைப்படுகிறது. தமிழ் மொழியும் இத்தகைய பல நூறு ஆண்டுகள் வளர்ச்சியைப் பெற்று தான் இன்று இணையம் வரை கிளைப் பரப்பி இருக்கிறது.

۞۞۞۞۞

கடைசியா ஒரே ஒரு வேண்டுக்கோள் அதுவும் சந்திரவதனா அக்காவின் பதிவிலிருந்தே..

பெரிய புரட்சி மண்ணாங்கட்டி எதுவும் செய்ய வேண்டாம். ஒரு 4-5 வரிகள் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது எழுதி பங்களிக்கக் கூடாதா?

۞۞۞۞۞

நிச்சயம் நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி தமிழ்!
தமிழை பேசிக்கொள்ளவும், தமிழை நேசித்துக்கொள்ளவும் நாம் !
உலகை இணைக்கும் இணையத்தை இன்னும் சில ஆண்டுகளிலேயே தமிழால் நிரப்புவோம் !

3 comments:

  1. தமிழ் சரம் நல்லா இருக்கு!

    ReplyDelete
  2. நன்றி சிவமுருகன் அண்ணா :))

    ReplyDelete
  3. நாங்களும் முடிஞ்சதை செய்கிறோம் ஆயில்யன்..

    ReplyDelete