ஆன்மீகம் பற்றிய பதிவுகள் தமிழ் வலைப்பதிவுகளில் ஏராளம் எனக்கு தெரிந்து பிடித்த சில பதிவுகள் மட்டும் உங்களின் பார்வைக்கு பக்தியுடன்....
திருநீறு பற்றிய SPVR சுப்பையா அய்யாவின் பதிவிலிருந்து
குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார் கள்.என்நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன.ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள். ஆகவே நீ ஒரு நாளும் உன்நெற்றிக்கு வெள்ளை அடிக்காதே.....!
உன் ஆன்மாவிற்கும், அறிவுற்கும் உகந்தது எதுவோ அதை மட்டும் செய்! மனதை நெறிப்படுத்து இந்த உடம்பு சாம்பல் ஆகப் போகிறது என்பதை நினைவிற் கொள்ள தினமும் இரண்டு முறையாவது இந்த சாம்பலிலான திருநீற்றைப்பூசிக்கொள்!
۞۞۞۞۞
சிங்கை கிருஷ்ணனின் திருமந்திரம் பற்றிய பதிவில் திருமுறைகள் சொல்லும் சேதி திருமந்திரத்தில்கூறப்பட்டிருக்கும் அடிப்படை சித்தாந்தம் பற்றிய சில செய்திக்ள்!
சைவ சித்தாந்தத்தில் இதற்கு முக்கியத்துவம் உண்டு. அதாவது சரியை. கிரியை, யோகம், ஞானம் ஆகியவைதான் மூலக்கூறுகள்.சரியை என்ற ஒழுக்கத்தாலும் கிரியை என்ற அர்ப்பணத்தாலும் யோகம் என்பது பொருந்தி இருந்தாலும் ஞானம் என்ற அருளால்
இறைவுணர்தலுக்கு சைவ சித்தாந்தம் வழி கோலுகிறது.
மேலும் உருத்திராக்கம் பற்றிய இவரின் பதிவில் பல செய்திகள் உருத்திராக்கம் பற்றி தெரிந்துக்கொள்ளமுடியும்
۞۞۞۞۞
புத்திமான் காணும் பொருள் எவையும் ஆன்மாவிற்
புத்தியால் ஒன்றல் புரிவித்தே - சுத்தமாம்
விண்ணென வொன்றாய் விளங்கிடு மான்மாவை
யெண்ணுக வெப்போது மே.
தான் காணும் பொருள் யாவற்றிலும், தன் அறிவினைக் கொண்டு ஆன்மாவில் இணைதலைச் செய்து காட்டுவர் உயர் ஞானம் பெற்றார்.
நான் யாருக்கு உதவி செய்தாலும் நான் செய்யும் அந்த உதவிக்கு எப்படி உதவலாம் என்று என்னை சந்தோஷப்படுத்த யோசித்து செயல்படும் அவர்களின் அந்த நல்ல மனம் தான்!
ஆத்ம்போதம் அழகாய் விளக்கமாய் இவரின் பதிவில் எப்பொழுது நேரம் கிடைத்தாலும் கண்டிப்பாக சென்று படித்து பாருங்கள்!
۞۞۞۞۞
ஆன்மீகம் சம்பந்தமாக சொல்லவேண்டுமென்றால் நிறைய விஷயங்கள் உண்டு உதாரணத்திற்கு நீங்க இங்கு செல்லுங்களேன்!
எத்தனை செய்திகள் எதையும் குறிப்பிட்ட சொல்லவே முடியாத அளவு அனைத்துமே கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!
நன்றி கீதாம்மா! தொடருங்கள் ஆன்மீக பயணத்தினை....!
۞۞۞۞۞
இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...
தினம் தினம் கடந்துபோகும் வாழ்க்கையில் மனதில் இன்பங்களும் துன்பங்களும் வந்து செல்லும் மனத்தில் கொஞ்சம் ஆன்மீகத்திற்கும் இடம் அளித்து வாழும் வாழ்க்கையில் நிம்மதியாக்கிகொள்வோம்
விஎஸ்கே ஐயாவின் ஆத்திகம் சுட்டி இல்லாமல் ஆன்மீகமா!?
ReplyDelete
ReplyDeleteமுருகனருள்,
கற்பூரநாயகியே கனகவல்லி குழும பதிவுகளிலும் இவரின் பங்களிப்பு உண்டு
மாதவிப் பந்தலை காணோமே?
ReplyDeleteகொஞ்சம் சிந்தியுங்கள் சார்! சும்மா அவர்கள் சொன்னார்கள். இவர்கள் சொன்னார்கள் என்றால் என்ன?
ReplyDeleteஎடுத்துக்காட்டு:
ஒருவர் சொல்கிறார். தினம் தினம் சாம்பரை நெற்றியில் பூசிக்கொள்ளும்போது 'நீயும் ஒருநாள் சாம்பராகப்போகிறாய்' என்று தன்னைத்தான் நினைவுபடுத்திக் கொள்கிறோமா?
ஏன் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்? வளர்ந்த மனிதன் அவ்வளவும் முட்டாளா? அவனுக்குத் தெரியாதா இவ்வாழ்க்கை ஒரு நாள் முடியப்போகிறதென்று?
சாவு வரும். ஆனால், நாம் நம்மை தினமும் நினவு படுத்திக்கொண்டு, கவலையில் மூழ்கி கன்னத்தில் கைவைத்துக் கொள்ள வேண்டுமாம்.
வாழப்பிறந்தோம். வாழும்போது மகிழ்ச்சியாய், தனக்கும், பிறருக்கு மகிழ்ச்சியைத் தரும்படி, வாழ்ந்து விட்டு சாவு வரும்போது நிம்மதியா செத்து மடி. என்பதுதான் இறைவன் நமக்குக் கொடுத்த கடமை.
இதில் எங்கே, இந்த சாம்பர் வந்தது? ஏன் வரவேண்டும்?
இப்படியாக ஒவ்வொரு ஆன்மிகவாதியின் வலைபதிவுகளை வாசிக்கும்பொழுது, பலபல கேள்விகள் எழுந்தால், எங்கே ஓட்டை, எங்கே ஏமாத்து என்றெலாம் தெரிஅ வரும்.