Friday, June 27, 2008

தோழிக்காக ஒரு கவிதை



நிலவு தாழ்வாயிருந்த அப்பூங்காவில்
குழந்தையின் கண்கள் ஏந்தி
நீ நட்சத்திரங்கள் பொறுக்கச்சென்றாய்

பூக்களுடன் கதைகள் கதைத்தபடியே
நட்சத்திரங்கள் சிதறிவிழும் கைக்கூடையுடன்
நீ திரும்பும் தருணம்தான் அது நிகழ்ந்தது

தூரமாய் தலைவிரித்தாடிக்கொண்டிருந்த
சில தீ நாக்குகள் கக்கிய வெம்மையில்
பிரசவித்த சில பாம்புக்குட்டிகள்
உன் கால்களை சுற்றின

ஆவென அலறி நீ நிலைகுலைந்த தருணம்
தாங்கிப்பிடிக்க எத்தனிப்பின்றி
முகம் திருப்பிக்கொண்டனர்
அங்கு சுயம் விற்றுக்கொண்டிருந்த சிலர்

வழியோரத்தின் சகபயணியாய்
நலம்கேட்டு நட்புக்கரம் நீட்டினேன்
என் தோட்டத்து பூக்களுக்காய்
வர்ணம் சேகரித்துக்கொண்டிருந்த நான்.

உன் சிணுங்கல்களின் சாபத்தில்
பாம்புகள் அனைத்தும் சாம்பலாகிப்போக
உன்மேல் பூக்களாய் கொட்டின
நீ பொறுக்கிய விண்மீன்கள்

உதடுகளின் புன்னகையுடனும்
கண்களின் குவிந்த கள்ளமற்ற நட்புடனும்
மீண்டும் முட்டியிட்டு
நட்சத்திரம் பொறுக்குகினோம் இருவரும்!

-----------------------------

நிலவு : ஆதித்யன் அவர்களின் தேனிலவு பற்றியதொரு பதிவு
அப்பூங்காவில் : என்.சுரேஷ் அவர்களின் ஒரு கவிதை பதிவு
பிரசவித்த : தமிழ்சங்கமி அவ்ர்களின் ஒரு சுகமான வலி
முகம் : ஜெ ஜெ ரீகன் அவர்களின் ஒரு ஜீன்ஸ் கவிதை
சுயம் : என் சுரேஷ் அவர்களின் ஒரு சுயக்கவிதை
நட்புக்கரம் : நிஜமா நல்லவன் அவர்களின் ஒரு நட்புபதிவு
நட்சத்திரம் : தயாளன் அவர்களின் ஒரு நட்சத்திர பதிவு

22 comments:

  1. சிதறிய நட்சத்திரங்களைச் சேர்ப்பது போலிருந்தது கவிதை படிக்கும் போது
    அன்புடன் அருணா

    ReplyDelete
  2. கொடுத்து வைத்த தோழி!

    ReplyDelete
  3. ஆகா ஆகா

    வித்தியாசமான சிந்தனை - சுட்டிகளை நேரடியாகச் சுட்டாமல் - கவிதையில் இணைத்திருப்பது பாராட்டத்தக்கது

    ReplyDelete
  4. மிக வித்தியாசமான முயற்சி கோகுலன்.வலைச் சரத்திலேயே முதல் முறை என நினைக்கிறேன்.
    வாழ்த்துக்கள் நண்பா :)

    ReplyDelete
  5. கண்ணா..
    இந்த கவிதையினை இங்கே கண்டதில் பேரானந்தம்...:)))))
    கொஞ்ச நேரம் என் கண்களில் கண்ணீர்....

    //கொடுத்து வைத்த தோழி!//

    :)))))))))))))

    அன்புடன்

    நட்சத்திரா....

    ReplyDelete
  6. ////கொடுத்து வைத்த தோழி!////

    நிச்சயமாக நட்சத்திரா.

    ReplyDelete
  7. கவிதைகளுடனான கவிதை சூப்பர் வித்தியாசமாகவும் இருக்கு :))

    ReplyDelete
  8. கோகுலன்,

    அருமை, அற்புதம், வித்தியாசம், கவிதை, புதுமை.

    வாழ்த்துக்கள் !!!!!

    ReplyDelete
  9. மிக்க நன்றி அருணா அவர்களே!!!

    ReplyDelete
  10. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் ராமலக்ஷ்மி!!

    ReplyDelete
  11. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் ராமலக்ஷ்மி!!

    ReplyDelete
  12. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் ராமலக்ஷ்மி!!

    ReplyDelete
  13. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் ராமலக்ஷ்மி!!

    ReplyDelete
  14. மிக்க நன்றிகள் சீனா!!

    ReplyDelete
  15. நன்றி நண்பா ரிஷான்!!

    ReplyDelete
  16. நன்றி நண்பா ரிஷான்!!

    ReplyDelete
  17. நன்றிகள் நட்சத்ரா!

    ReplyDelete
  18. நன்றிகள் நட்சத்ரா!

    ReplyDelete
  19. பின்னூட்டத்திற்கு நன்றிகள் சதங்கா!!

    ReplyDelete
  20. நன்றிகள் நண்பரே ஆயில்யன்!!!

    ReplyDelete
  21. கலக்கல் கவிதை நண்பரே

    ReplyDelete
  22. // நிலவு தாழ்வாயிருந்த அப்பூங்காவில்
    குழந்தையின் கண்கள் ஏந்தி
    நீ நட்சத்திரங்கள் பொறுக்கச்சென்றாய் //

    " நிலவு தாழ்வாயிருந்த " ரொம்ப நல்ல கற்பனை...கோகுலன் ....

    ReplyDelete