வலைச்சரத்தில் என் எண்ணங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் இனிய வாய்ப்பினை எனக்கு வழங்கிய வலைச்சர நிர்வாக குழுவிற்கும்,வலைச்சர பொறுப்பாசிரியர் சீனா ஐயாவிற்கும் என் நன்றிகள்....
என்னைப் பற்றி என்ன சொல்வது?. கவிதை,பாசம்,நட்பு,தைரியம்,விடா முயற்ச்சி,மன நிறைவு எல்லாம் சரியான விகிதத்தில் கலந்த வாழ்க்கை என்னுடையது. என்னுள் பூத்து மணம் வீசும் கவிதை பூக்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் பூந்தோட்டம் , என் கண்ணாடி மழைதான்
அதிக பதிவுகள் எழுதவில்லை என்றாலும் , ஓய்வில்லா பணிகளுக்கு இடையிலும் , என் மனதிற்கு நிறைவான பதிவுகளை பதித்திருக்கிறேன் என்பதில் ஒரு சின்ன மகிழ்ச்சி. மழலையாய் தொடங்கி உங்களுடன் நட்புக் கரம் பிடித்து, ஒரு சிறுமியாய் பயணிக்கிறேன், நட்புத் தடங்களோடு. இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டும் உங்கள் வாழ்த்துக்களோடு.....
இன்றும் நான் எழுதியதில் எந்தக் கவிதை பிடிக்கும் என்று யார் கேட்டாலும், என் மனதில் சட்டென்று நினைவுக்கு வருவது வெற்றுத்திண்ணை தான்..... என் பால்ய கால மகிழ்ச்சிகளையும், பாசத்தை வாரி இறைந்த என் தாத்தாவின் இழப்பின் வருத்தத்தையும் சுமக்கும் கவிதை.....
கவிதையில் பயணித்த என் மனம் அன்றாட வாழ்வின் இயல்பான அனுபவங்களையும், அவற்றைப் பற்றிய எனது பார்வைகளையும் பகிந்துக் கொள்ள,பதிவு செய்ய ஆவல் கொண்டது . அப்படி எழுதியதில் ஆட்டோ பயண அனுபவம் என்னை மிகவும் கவர்ந்தது...
சென்னை போன்ற நகரங்களில் வளர்வதாலோ?, என்னவோ? கிராமங்களுக்கே உரிய சில இனிய அனுபவங்களை இழக்க வேண்டியிருக்கிறது.
உத்திப்பிரித்தல் மூலம் என் மனதிற்க்கு சமாதானம் கூறிக்கொண்டாலும், நாகரீக வளர்ச்சியால் மறையும் தருவாயிலிருக்கும் , அரிய திறமைகளை வளர்க்கும் கிராமிய விளையாட்டுகளைப் பற்றி பதிவு செய்து, தொலைக்காட்சிப் பெட்டிகளில் தனது மன/உடல் ஆரோக்கியத்தை அடகு வைக்கும் நகரத்து சிறார்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் என் எண்ணம் நிறைவேறாமலே இருக்கிறது. நட்புக்களின் அன்புக்கட்டளைக்கேற்ப விரைவில் அதையும் பதிவு செய்யவிருக்கிறேன்.
இத்தோடு என் அறிமுகத்தை முடித்துக் கொண்டு, வலையுலகில் என்னைக் கவர்ந்த இடுகைகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். படிக்க தவறவிடக் கூடாத, இனிய இடுகைகளின் சுட்டிகளுடன் மீண்டும் சந்திப்போம்,
வருக வருக எழில்
ReplyDeleteஅறிமுகம் அருமை
நல்வாழ்த்துகள்
வாழ்த்துகளுக்கு நன்றி சீனா அய்யா!!!
ReplyDeleteஅருமையான அறிமுகம்,
ReplyDeleteதொடருங்கள் :))
வாழ்த்துக்கள் எழில்!!!
வாழ்த்துகளுக்கு நன்றி திவ்யா!!!!
ReplyDelete// நட்புத் தடங்களோடு. இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டும் உங்கள் வாழ்த்துக்களோடு.....//
ReplyDeleteநிச்சயமாக எழில்பாரதி...!
இனிய இதயங் கனிந்த வாழ்த்துக்கள் தோழி :)
//சென்னை போன்ற நகரங்களில் வளர்வதாலோ?, என்னவோ? கிராமங்களுக்கே உரிய சில இனிய அனுபவங்களை இழக்க வேண்டியிருக்கிறது./
ReplyDeleteஉண்மைதான்.
கவிதாயினி எழில் பாரதிக்கு
வாழ்த்துக்கள்.கலக்குங்க.
அறிமுகம் நன்றாக இருக்கிறது எழில். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல அறிமுகம் தோழி எழில்.,
ReplyDelete//நட்புத் தடங்களோடு. இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டும் உங்கள் வாழ்த்துக்களோடு.....//
நிச்சயமாக..
உங்கள் எழுத்துக்களை நான் இனிதான் வாசிக்க வேண்டும்.. சீக்கிரம் வாசித்து வருகிறேன்..
இந்த வாரம் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்!!
நல்ல நட்பையும் எழுத்துக்களையும் பெற்றுத்தந்த வலைச்சரத்துக்கு நன்றிகள்!
வாழ்த்துகளுக்கு நன்றி ரிஷான்!!!
ReplyDeleteநன்றி ரசிகன்!!!
ReplyDeleteநன்றி நல்லவன்!!!!
ReplyDeleteநிச்சயம் வாசித்து தங்களது கருத்துகளை சொல்லுங்கள்
ReplyDeleteநன்றி கோகுலன்!!!
வருக எழில். முதல் பதிவு நன்று. மேன் மேலும் எழுதிட வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நிலாரசிகன்!
ReplyDeleteநன்றி திகழ்மிளர்
ReplyDeleteஅருமையான அறிமுகம்....
ReplyDeleteவாழ்த்துக்கள் எழில்....
வாழ்த்துகளுக்கு நன்றி நவீன்...
ReplyDelete