மீண்டும் பெஞ்ச் சூடிபிடித்தது! "என்னவே! என்னோவோ ஒரு வாரம் எழுத போனார் திரும்பிடலாமான்னு யோசிக்கிறாரோ?" என்றார் டீக்கடையில் இருந்த ஐயார் " "என்ன சங்கதி" என்றபடி பாய் அருகில் சாமியும், அண்ணாவும் அமர்ந்தனர். "அதொன்னும் இல்லபா ஒரு பதிவர் பத்தி ரெண்டு நாளுக்கு முன்னால பேசுனோம் அதுல ஒன்னும் அவ்வளவா பெருஸ்ஸா இல்லபா!" "பெருசா இல்லாமலா பேசுனீங்க! இப்ப சொல்றீங்களா இல்லையா" என்று அதட்டினார் சாமி.
"ஒவ்வொருநாளும் ஒரு பதிவா போடலாம்ன்னு இருந்த கதையா?" என்று அண்ணா வார்த்தையை விட! "அதே தாம்பா!" என்று பாய், துள்ளாத குறையாக கத்தினார். "அதொன்னும் இல்ல ராசா! நேத்து இவர் வழக்கமா ஒரு கபேக்கு போயி டைப் அடிப்பாராம் நேத்து பெங்களூர் ரிலையன்ஸ்ல ஏதோ கோளாராம் அதான் போயி டைப் அடிக்க முடியலையாம்! நாளைய சங்கதிய கேளும்"
"இடுக்கண் வருங்கால் நகுக சொன்னாருல வள்ளுவர்! அத வச்சுக்கிட்டு விளையாடலாம்ன்னு நினைக்குறாராம் இந்த பதிவர்." "அப்போ சங்கத்து சிங்கங்களை பற்றி சொல்லுவார்ங்றீரா" என்று ஐயர் கொஞ்சம் சீரியஸாக! "கண்டிப்பா அது தானே இவர் கலாய்க்க கத்துக்கிட்ட இடம். இன்னிக்கி இவரோட சுற்றுவட்டம் சிரிக்குதுன்னு அதுக்கு இந்த சங்கம் பெரிய பங்குண்டு." என்று சாமி முடிக்க. பாய் தொடர்ந்தார்
"அப்பறம் யோசிபவரோட லொள்ளுல நனைவிடுவார்பா!" "அவரோட ஒரு சில பதிவுகளையும் குறிப்பிட்டு சொல்லுவாராம்." என்று பாய் சற்று மூச்சு வாங்குவதற்க்குள் "அதானவே அந்த இளைஞனோட காதலி, அவரோட குருஞ்செய்தி அதத்தானே சொல்றீரு?" "அட ஆமாப்பா!" என்று பாய் அமைதியானார்.
சமயம் பாத்து அண்ணா அரம்பித்தார்"இதோ பாரும் ஓய் சாதாரணமாக எல்லாம் ஒரு நகைச்சுவைய பத்தி சொல்லிட முடியத்து, இவரோ ஆன்மீக பதிவரு!" என்று முடிப்பதற்க்குள்! "இல்லபா மூணுநாலு நகைச்சுவை பதிவும் போட்டுருக்கார்பா, ஒரு தொடரே கூட எழுதிற்க்கார்பா" என்று பாய் வக்காலத்து வாங்க "ஒத்துக்குறேன்பா இருந்தாலும் அடுத்த அறிமுகமா என்ன போடுவார், அதையும் சொல்லும்!"
"அப்படி கேளு சொல்லுறேன்!" என்ற அண்ணா தொடர்ந்தார் "இவர் ஒருவரோட ஆஸ்தான கமெண்டர்ன்னு பேர் வாங்குனவய்யா!" "யாரு! அந்த குச்சி மிட்டாய் குருவி ரொட்டி எல்லாம் தன்னோட ஆர்குட்ல காட்டுவாரே அந்த மழைக்கு அசராதவர் தானே?" என்று சாமி கண்டுபிடிக்க! உடனே "அதே பிரதாபமான ஆளுதான்யா"என்று உறுதி செய்தார்!
"அப்பறம் ஒரு முக்கியமானவர் இவர் ஒரு காலத்துல தினம் ஒரு பதிவா போடுவார்! காலய்க்கரதுல இவருக்கு நிகர் இவர் தான்னு பதிவரே சொல்லிருக்கார்" "அந்த சுஜாதா கதையில வர்ர ஹீரோ பேர் கொண்டவர்தானே?" என்று அசரிரியாய் சாமி சொல்ல எல்லோரும் திரும்பி அவர்பக்கம் பார்த்தனர்!"
"ஏதோ திரும்பிடலாம்ன்னு வார்த்தை கேட்டுச்சே, அது என்னதுய்யா? " என்று சாமி ப்ளாஷ் பேக்க்குக்கு போக! "அதெல்லாம் ஒன்னுமில்லைபா! சும்மா என்ன எழுதலாம்ன்னும் இவர் யோசிச்சாராம் ஒன்னும் வரததால சரி வித்ட்ரா பண்ணலாமான்னு யோசிச்சாராம், ஆனா ஒன்னும் நடக்கலைபா!" "என்னமோ ஒரு மாசத்துக்கு முன்னாடியே எழுத ஆரம்பிச்சுடதா சொன்னீரு?" என்று தன்னோட ஞாபக சக்தியை ஐயர் காட்ட! "ஆமாபா எழுதி வச்சார் எல்லாம் தன்னோட ஆபீஸ் கணினில ஒரு போல்டர்ல வச்சாராம்! அது இப்போ கணலையாம்! மறுபடியும் டைப்ப ஆரம்பித்து பதிவ தொடர்ந்து போடுவாருன்னு அவரோட நன்பர்கள் சொல்றாங்கபா!" இப்போ எல்லாம் அந்த அலுவலகத்துல செக்யூரிட்டி அதுவும் ஐடி செக்யூரிட்டி பயங்கரமாம்! அதான் இந்த மாயத்துக்கு காரணமா இருக்கலமோன்னு யோசிக்கிறாராம் நம்மவர்.
"சரிப்பா அப்பறம் என்ன எழுதறார்?" என்று மீண்டும் ட்ராக்க்கு கொண்டுவந்தார் சாமி!
"கொஞ்சநாளுக்கு முன்னாடி ரெண்டுன்னு ஒன்னு ஓடிச்சில்ல அதுல ஒரு பதிவு இவர ரொம்பவே சிரிக்க வச்சுதாம். "
"அப்பறம் இவரோட எந்தவொரு நகைச்சுவைபதிவ படிச்சாலும் சிரிப்பாராம்! அதான் இவரோட தனித்துவமாம்" என்று முடித்துக்கொண்டார்.
"அதெப்படிப்பா இவரோ அவர் வராம ஒரு பதிவ எழுதினார்?" என்று நமுட்டு சிரிப்பு சிரித்தப்படி அண்ணா எழுந்திருக்க, மற்றவருக்கும் புரிய எல்லோரும் சிரித்த படியே கிளம்பினர். பெஞ்ச் அமைதியானது.
ஏழாம் சுவையான இந்த நகைச்சுவையை சுவைக்கும், சுவைக்க வைக்கும் அனைவருக்கும் இச்சரம் சமர்பணம்.
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் ஆரம்பித்து யோசிங்க, குறுஞ்செய்தி ஆகிய வலைப்பூக்களின் பக்கம் போய் விட்டு, இவரது பதிவுகளையும் சுட்டி விட்டு, பிரதீப்பின் பதிவுகள், மற்றுமொறு போட்டிக்கன இரண்டு பதிவு ஆகியவற்றைச் சுட்டும் பதிவு இது
ReplyDeleteநல்வாழ்த்துகள் சிவ முருகன்
//வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் ஆரம்பித்து //
ReplyDeleteநகைச்சுவை என்றாலே அங்கிருந்து தான் ஆரம்பிக்கணும்ன்னு எழுதப்படாத விதியா இருக்கே!
//யோசிங்க, குறுஞ்செய்தி ஆகிய வலைப்பூக்களின் பக்கம் போய் விட்டு//
இவர் நகைச்சுவைக்காக ரொம்பவே மெனகெடுபவர்.
//இவரது பதிவுகளையும் சுட்டி விட்டு//
ஹி... ஹி...
//பிரதீப்பின் பதிவுகள்//
இவரோட ஆஸ்தான கமெண்டர்!
//மற்றுமொறு போட்டிக்கன இரண்டு பதிவு //
இதப்படிச்சு மொதல்ல ரொம்பவே குழம்பிப்போயிட்டேன்! அப்பறம் தெரிஞ்சது இது போட்டிக்கான பதிவாம்! சிரிச்சு சிர்ச்சு தாங்கலை சாமி!
//நல்வாழ்த்துகள் சிவ முருகன்//
மிக்க நன்றி ஐயா!
இந்த பதிவுல கடைசியில் ஐயர் ஏன் மௌனமானார்ன்னு தெரியல! இவர் ஒரு வரி சொல்வார் "சூப்பர், ஆன்மீகம் இல்லாத பதிவுன்னு!"
ReplyDeleteநகைச்சுவை ஒரு நல்மருந்து
ReplyDeleteதாங்கள் சுட்டிய பதிவுகளில்
அதைச் சுவைத்து வந்தேன்.
::-)))))))))))))ஆரோக்கியத்துக்கு
வழி காட்டும் நல்ல பதிவு.
நன்றி சிவமுருகன்!
//நகைச்சுவை ஒரு நல்மருந்து
ReplyDeleteதாங்கள் சுட்டிய பதிவுகளில்
அதைச் சுவைத்து வந்தேன்.
::-)))))))))))))//
நன்றி. ராமலக்ஷ்மி.
//ஆரோக்கியத்துக்கு
வழி காட்டும் நல்ல பதிவு.
நன்றி சிவமுருகன்!//
அப்போ டாக்டர் பீஸ் ஏதாவது உண்டா! :-)
பதிவ படிச்சா மட்டும் போதாது!
ReplyDeleteஎல்லார் Blogger Profile ஐயும் பத்து முறை க்ளிக் செய்ய வைக்கணும் சிவாவுக்கு கனவுல உத்தரவு! அதான்! :-)))
//ஆரோக்கியத்துக்கு
ReplyDeleteவழி காட்டும் நல்ல பதிவு.
நன்றி சிவமுருகன்!//
அப்போ டாக்டர் பீஸ் ஏதாவது உண்டா! :-)//
பின்னூட்டம்தாங்க ஃபீஸ்:))))
இது எப்படி இருக்கு?
//பதிவ படிச்சா மட்டும் போதாது!
ReplyDeleteஎல்லார் Blogger Profile ஐயும் பத்து முறை க்ளிக் செய்ய வைக்கணும் சிவாவுக்கு கனவுல உத்தரவு! அதான்! :-)))//
தன்யனானேன்!
////ஆரோக்கியத்துக்கு
ReplyDeleteவழி காட்டும் நல்ல பதிவு.
நன்றி சிவமுருகன்!//
அப்போ டாக்டர் பீஸ் ஏதாவது உண்டா! :-)//
பின்னூட்டம்தாங்க ஃபீஸ்:))))
இது எப்படி இருக்கு?//
நினைத்தேன் வந்தது ஃபீஸ்ஸ சொல்றேன்! :))
என் பதிவின் சுட்டியை கோடிட்டு காட்டியமைக்கு
ReplyDeleteநன்றி சிவமுருகன்.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள். தாமதமாக பின்னூட்டமிட்டதற்கு மன்னிக்கவும்
anbudan
KRP
http://visitmiletus.blogspot.com/