பதிவுலகில் பல பேர் இருந்தாலும் சிலருடைய எழுத்துக்களைப் படித்ததும் “செமயா எழுதுறாங்களே” என்று சொல்லத் தோன்றும். எனது பார்வையில் அப்படி நான் ரசிக்கும் சில பதிவர்களை அறிமுகம் செய்ய எண்ணுகிறேன். இவைகள் கண்டிப்பாக பதிவு போடப்பட்டதும் படிக்க வேண்டியவை.
http://pookri.com/
யானைகளின் மீது பாசம் கொண்ட இந்த ஆனைத் தலைவி வலைச்சரத்தின் முன்னோடி மட்டுமல்ல முதல் வலைச்சரம் தொடுத்து ஆரம்பித்து வைத்தவர். முன்பு சென்னை வலைப்பதிவர் பட்டறைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தவர். இவரது பழைய பிளாக்கர் பக்கங்களில் நிறைய எழுதியுள்ளார். பின்னர் தனக்கென pookri எனற தளத்தை ஆரம்பித்து எழுதி வருகின்றார். எங்க கண்மணி டீச்சரின் வார்த்தையில் சொன்னால்
“பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை.'பொன்ஸ்' பற்றி நான் சொன்னால் திருநெல்வேலியில் அல்வாவும்,பழனியில் பஞ்சாமிர்தமும்,திருப்பதியில் லட்டும் விற்பது போலிருக்கும்.அதனால் 'அப்பீட்டு'ஆகிடுறேன்”
தமிழ்மணத்தின் பார்வையாளராக இருந்தாலும் பின்னூட்டம் போடுவதில்லையாதலால் புதியவர்களுக்குத் தெரிவதில்லை. பா.க.ச பதிவுகளில் அத்தி பூத்தாற் போல் காணலாம். கூகுள் ரீடரில் இந்த பூக்கூடையைப் பிடித்து வைத்துக் கொள்ளூங்கள். இறை நம்பிக்கை பற்றிய இவரது பின்னூட்ட விவாதங்கள் நான் மிகவும் ரசித்தவை.
துளசி கோபால்
எங்க நியூஸிலாந்து டீச்சரைப் பற்றி இங்கு சொல்வது சூரியனுக்கு டார்ச் வெளிச்சம் காட்டியது போலாகி விடும். அவங்க ஊர்ல சூரியனைப் பார்ப்பதே கஷ்டமாகிட்டதால நாம கொஞ்சம் டார்ச் அடிச்சி பாத்துடுவோம். 2004 முதல் பதிவெழுதும் டீச்சர் இதுவரை 700 க்கும் மேல் பதிவுகள் எழுதி இருக்காங்க. முழு ஈடுபாட்டோடு பதிவெழுவது இவரது சிறப்பு. வீடு வாங்குவதைப் படித்ததும் வீடு கட்டும் யோசனையை நினைத்து மலைப்பாகி விட்டது. இது தவிர அவரது பயணக் குறிப்புகள் சமையல் குறிப்புகள் ஆகியவை படிக்க வேண்டியவை. கிவிக்கு போகிறவர்கள் நியூஸிலாந்து பற்றிய பகுதிகளை படித்து விட்டுச் செல்வது உபயோகமாக இருக்கும்.
ஆசிப் மீரான்
பதிவுலகுக்கு வரும் முன்னேயே குரல் மூலமாக தெரிந்த பதிவர். நேர்த்தியாக எழுதும் திறம் மிக்கவர். தனக்கே உரித்தான ஸ்டைலில் எழுதுபவர். மரத்தடியிலும் ஆசிப் மீரான் படைப்புகளை அளித்துள்ளார். பிம்பம், சூனா1, 2 என்னை மிகவும் பாதித்தவை. அவரது பிளாக்கர் பதிவிலும் நிறைய நல்ல பதிவுகளைப் பார்க்கலாம்.
லக்கிலுக்
தனது கலக்கலான பதிவுகளின் மூலம் பதிவர்களைக் கவர்ந்தவர். எல்லா துறைகளைப் பற்றியும் பதிவுகள் எழுதும் ஆற்றல் மிக்கவர். அரசியல், சமூகம் தொடர்பான இவரது பதிவுகளில் சமூகத்தின் மீதான அக்கறையும், சில நேரங்களில் கோபமும் வெளிப்படும். கலாய்க்கும் பதிவுகளைக் கூட ரசிக்கும்படி எழுதக் கூடியவர். வ.வா.சங்க இரண்டாமாண்டு விழாவுக்கான போட்டியில் இவர் எழுதிய திரும்பிப்பாருடி படிக்கும் போது சீட்டின் நுனிக்கே வந்து கீழே விழுந்த அனுபவம் உண்டு.
பாலபாரதி
தமிழ் வலையுலகின் மூத்த பதிவர்களில் ஒருவர். சூடான தலைப்பு வைக்காமலேயே இவர் எழுதும் பதிவுகளை சூடான இடுகைக்குக் கொண்டு செல்லும் இவரது எழுத்துக் கவர்ச்சியே இவரது எழுத்தின் ஆற்றலைச் சொல்லும். பத்திரிகை உலகில் இருப்பதால் இவரது படைப்புகள் எப்போதும் வித்தியாசமான கோணத்தில் இருக்கும். தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி வருகிறார். பழைய பதிவுகள்]
மோகன்தாஸ்
வித்தியாசமான ரசனை கொண்ட பதிவர்களில் ஒருவராக இவரைப் பார்க்கிறேன். மரத்தடியில் குந்தவை வந்தியத்தேவன் என்ற பெயரில் எழுதியுள்ளார். பின்னர் தனது , செப்புப்பட்டயம், பூனையாக இல்லாமல் போன சோகங்கள் மற்றும் குந்தவை போன்ற வலைப்பதிவுகளில் எழுதி வருகின்றார். சோழர் கால வரலாற்றை எழுதுவதில் முனைப்பாக உள்ளார். நிறைய சிறுகதைகளும் எழுதி உள்ளார். படைப்புகள் படிக்க இனிமையாக இருக்கும்.
ஆயில்யன்
இந்த வரிசையில் ஆயில்யனையும் சேர்ப்பதில் பெருமை கொள்கிறேன். கடந்த ஓராண்டில் நானூறு பதிவுகளை எழுதி இருக்கின்றார். இவ்வளவு பதிவுகளுக்கு எப்படிச் சிந்திக்க முடிகிறது என ஆச்சரியப்பட வைத்தவர். எப்போதுமே ஒருவிதமான சமூகத்தைப் பற்றிய சிந்தனைகளிலேயே அதிகமாக எழுதக் கூடியவர். 1ம் இல்லை என்றே சூப்பரா எழுதுபவர். என் உள்ளத்தில், ஆன்மீகம் ஆகியவை வாசிக்க வேண்டியவை. அதோடு எங்கள் ஸ்ரேயா கோசல் நற்பணி மன்ற உறுப்பினர் வேறு.
நேரமின்மின்மை காரணமாக இன்னும் பல பதிவர்களை இதில் சேர்க்க நினைத்திருந்தும் இயலவில்லை. மற்ற, புதிய பதிவர்களுக்கு முன்னுதாரணமாக இவர்கள் செயல்பட்டு பதிவுகள் எழுதினால் தமிழ் கூறும் பதிவுலகம் நல்ல முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

mE tHe fiRstUU
ReplyDeleteபதிவு அருமை. ஆயில்யன் இப்போது தினம் நாலு பதிவு போடும் கொலைவெறி ஏன்????
ReplyDeleteஎல்லோருமே தனித்தன்மையான எழுத்து நடை உள்ளவங்க...
ReplyDelete///நேரமின்மின்மை காரணமாக இன்னும் பல பதிவர்களை இதில் சேர்க்க நினைத்திருந்தும் இயலவில்லை///
ReplyDeleteஇந்த சுட்டிகளே போதும் உங்க தெரிவுகளை சொல்லுறதுக்கு...
அசத்துங்க...:)
ReplyDelete///பதிவு அருமை. ஆயில்யன் இப்போது தினம் நாலு பதிவு போடும் கொலைவெறி ஏன்????///
ReplyDeleteரிப்பீட்டு...!
இதுக்கு 'ரிப்பீட்டு' போடச்சொல்லி சிவாண்ணன் தான் சொன்னாரு... ;)
அனைவருமே அருமையான தேர்வு தமிழ்பிரியன்!
ReplyDelete//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
ReplyDeleteஅனைவருமே அருமையான தேர்வு தமிழ்பிரியன்!//
ரிப்பீட்டு...!
தமிழ்மணத்தில தனக்குரிய எழுத்து நடையில் பல உள்ளங்களை வென்ற பெருமைக்குரியவர்கள் பட்டியலில் என் பெயரை இணைத்தது ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருக்கிறது! அவர்களின் உயரத்திற்கு ஈடானவன் அல்ல என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன் தமிழ் பிரியன்!
ReplyDelete/./புதிய பதிவர்களுக்கு முன்னுதாரணமாக இவர்கள் செயல்பட்டு பதிவுகள் எழுதினால் தமிழ் கூறும் பதிவுலகம் நல்ல முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் என்பதில் ஐயமில்லை//
ReplyDeleteநிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய கருத்து@
என்னதான் பிரச்சனைகள் எழுந்தாலும் இணையதமிழ் உலகெங்கும் பெருமளவில் பரவிச்செல்லும் வழி இது போன்ற வ்லைபூக்களில்தான் இருக்கிறது!
தமிழ் பிரியன்
ReplyDeleteஅருமையான பதிவு -தனித்தன்மை வாய்ந்தவர்கள் பட்டியல் சிறப்பாக இருக்கிறது. அனைவரும் ஆயில்யன் உட்பட தனித்தன்மை வாய்ந்தவர்களே !
பல்வேறு பிரிவினரையும் சிறப்பித்த விதம் பாராட்டத் தக்கது. உழைப்பிற்கு நல்வாழ்த்துகள்
//மங்களூர் சிவா said...
ReplyDeleteபதிவு அருமை. ஆயில்யன் இப்போது தினம் நாலு பதிவு போடும் கொலைவெறி ஏன்????
///
தூண்டாதே சிவா தூண்டாதே நானே சரி போனா போகுது கொஞ்ச நாளைக்கு பயபுள்ளைங்கள பயமுறுத்த வேணாம்னு அடக்கிவாசிக்க ஆரம்பிச்சிருக்கேன்! மறுபடியும் முதல்லேர்ந்தா ???????
/தமிழன்... said...
ReplyDelete///பதிவு அருமை. ஆயில்யன் இப்போது தினம் நாலு பதிவு போடும் கொலைவெறி ஏன்????///
ரிப்பீட்டு...!
இதுக்கு 'ரிப்பீட்டு' போடச்சொல்லி சிவாண்ணன் தான் சொன்னாரு... ;)
//
அதான்னே பார்த்தேன் சிவாவுக்கு சொன்ன பதிலுக்கு நான் திரும்ப இங்க ரிப்பிட்டு போட்டுக்கிறேன் :)))
நீங்கள் குறிப்பிட்ட பதிவர்களின் வரிசையில் சேரத் தகுதியுடையவனா என்று தெரியவில்லை. இருந்தாலும் சேர்த்ததற்கு நன்றி! :-)
ReplyDelete///மங்களூர் சிவா said...
ReplyDeletemE tHe fiRstUU///
ஆமா அண்ணே நீங்க தான் முதலில்... :)
///மங்களூர் சிவா said...
ReplyDeleteபதிவு அருமை. ஆயில்யன் இப்போது தினம் நாலு பதிவு போடும் கொலைவெறி ஏன்????///
தமிழ் சேவை அண்ணே!
///தமிழன்... said...
ReplyDeleteஎல்லோருமே தனித்தன்மையான எழுத்து நடை உள்ளவங்க...///
ஆமா தமிழன்! அனைவரும் சிறந்த எழுத்துக்களுக்கு உரியவர்கள்!
///தமிழன்... said...
ReplyDelete///நேரமின்மின்மை காரணமாக இன்னும் பல பதிவர்களை இதில் சேர்க்க நினைத்திருந்தும் இயலவில்லை///
இந்த சுட்டிகளே போதும் உங்க தெரிவுகளை சொல்லுறதுக்கு...///
அப்படியா? நன்றி!
///தமிழன்... said...
ReplyDeleteஅசத்துங்க...:)///
கண்டிப்பாக!
///தமிழன்... said...
ReplyDelete///பதிவு அருமை. ஆயில்யன் இப்போது தினம் நாலு பதிவு போடும் கொலைவெறி ஏன்????///
ரிப்பீட்டு...!
இதுக்கு 'ரிப்பீட்டு' போடச்சொல்லி சிவாண்ணன் தான் சொன்னாரு... ;)///
எல்லாம் குரூப்பாத்தான் திரியுதுகப்பா! அவ்வ்வ்வ்வ்வ்வ்
///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
ReplyDeleteஅனைவருமே அருமையான தேர்வு தமிழ்பிரியன்!///
நன்றி அண்ணே!
///நிஜமா நல்லவன் said...
ReplyDelete//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
அனைவருமே அருமையான தேர்வு தமிழ்பிரியன்!//
ரிப்பீட்டு...!///
ஸ்ஸ்ஸ்ஸ் நன்றி அண்ணே!
///ஆயில்யன் said...
ReplyDeleteதமிழ்மணத்தில தனக்குரிய எழுத்து நடையில் பல உள்ளங்களை வென்ற பெருமைக்குரியவர்கள் பட்டியலில் என் பெயரை இணைத்தது ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருக்கிறது! அவர்களின் உயரத்திற்கு ஈடானவன் அல்ல என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன் தமிழ் பிரியன்!///
மனசாட்சிக்கு கட்டுப் பட்டு தான் எழுதி இருக்கேன்... உண்மை சுடர் விட்டுப் பிரகாசிக்கும்!
///ஆயில்யன் said...
ReplyDelete/./புதிய பதிவர்களுக்கு முன்னுதாரணமாக இவர்கள் செயல்பட்டு பதிவுகள் எழுதினால் தமிழ் கூறும் பதிவுலகம் நல்ல முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் என்பதில் ஐயமில்லை//
நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய கருத்து@
என்னதான் பிரச்சனைகள் எழுந்தாலும் இணையதமிழ் உலகெங்கும் பெருமளவில் பரவிச்செல்லும் வழி இது போன்ற வ்லைபூக்களில்தான் இருக்கிறது!///
ஒத்த கருத்துக்கள் !
///cheena (சீனா) said...
ReplyDeleteதமிழ் பிரியன்
அருமையான பதிவு -தனித்தன்மை வாய்ந்தவர்கள் பட்டியல் சிறப்பாக இருக்கிறது. அனைவரும் ஆயில்யன் உட்பட தனித்தன்மை வாய்ந்தவர்களே !
பல்வேறு பிரிவினரையும் சிறப்பித்த விதம் பாராட்டத் தக்கது. உழைப்பிற்கு நல்வாழ்த்துகள்///
நன்றி சீனா ஐயா!
///ஆயில்யன் said...
ReplyDelete/தமிழன்... said...
///பதிவு அருமை. ஆயில்யன் இப்போது தினம் நாலு பதிவு போடும் கொலைவெறி ஏன்????///
ரிப்பீட்டு...!
இதுக்கு 'ரிப்பீட்டு' போடச்சொல்லி சிவாண்ணன் தான் சொன்னாரு... ;)
//
அதான்னே பார்த்தேன் சிவாவுக்கு சொன்ன பதிலுக்கு நான் திரும்ப இங்க ரிப்பிட்டு போட்டுக்கிறேன் :)))///
ஆகா ஜோதியில் நீங்களும் ஐக்கியமாயாச்சா? அவ்வ்வ்
///லக்கிலுக் said...
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட பதிவர்களின் வரிசையில் சேரத் தகுதியுடையவனா என்று தெரியவில்லை. இருந்தாலும் சேர்த்ததற்கு நன்றி! :-)///
மனதில் உள்ள உண்மையைத் தான் சொல்லி உள்ளேன்... :)