Saturday, August 2, 2008

கண்மணி அன்போட சொன்னவை

கண்மணி
ஜங்ஃபுட்,ஃபாஸ்ட் புட் போன்ற நிகழ்கால கலாச்சாரத்தினால் விளையும் தீமைகள் பற்றி
உறைக்கும்படி(உப்பு காரமல்ல)நச் நச் நச் நச் என்று சொல்லியிருக்கிறார். வயிற்றை அடைத்து கொழுப்பைக்கூட்டும் இவ்வகை உணவுகள் நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு சரிவராது.
படிச்சிட்டு இவைகளை சாப்பிடுவதைக் குறைத்தால் நல்லது
இதப்படிங்க



பாப்பா பாட்டு
கண்மணி தொடர்விளையாட்டாக ஆரம்பித்த இப்பதிவில் நானும் சம்மன் இல்லாமல் ஆஜராகியிருக்கிறேன். காரணம் அழைப்பு அப்படி. மறந்து போன தமிழ் ஆங்கிலம் நர்சரி
ரைம்ஸ் எல்லாம் நினைவு படுத்தி பதிவிட கேட்டிருந்தார். மறந்தால் அல்லவோ ஞாபகப்படுத்த?
எட்டு திசைகளிலும் இருந்து வந்து விழுந்த குட்டீஸ் பாட்டுகள் ரொம்ப சுவாரஸ்யமானவை
இங்கே வாங்க


நாய் தொலஞ்சு போனா..
ஜியோபோன்!!!நாய்களுக்கான ஒரு போன். பலவகை செல்போன்களுக்கிடையில் இது ஒரு வித்தியாசமான போன். செல்ல நாய்(நாய்யின்னு சொன்னால் எத்தனை பேர் அடிக்க வருவாங்க?)
கழுத்தில் இதை கட்டிவிட்டு கவலையில்லாமல் இருக்கலாம். GPS மூலம் இயங்கும். நாய் தொலைந்து போனால் இது தரும் சிக்னல் மூலம் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்துவிடலாமாம்.
பாருங்க

12 comments:

  1. கண்மணி எழுத்தே தனிச் சுவை.
    நன்றி நானானி.

    ReplyDelete
  2. ஆமாம்! வல்லி!
    வருகைக்கு நன்றி!!
    நல்லாருக்கீங்களா? எப்ப வருவீங்க?

    ReplyDelete
  3. எங்க டீச்சருக்கும் தனி பதிவு போட்டதுக்கு கோடி நன்றிகள்...
    (ஆகா! கோடிகள் அதிகமாகிக் கிட்டே போகுதே... :) )

    ReplyDelete
  4. நானானிம்மா! எங்க கண்மணி டீச்சர் இப்ப உங்க ஊர்ல தான் இருக்காங்க... அடிக்கடி பதிவு பக்கம் வந்து போகச் சொல்லுங்க.... :)

    ReplyDelete
  5. எனக்கும் பொட்டிகள் அதிகமாகிக் கொண்டே போகுதே!!தமிழ்பிரியன்!

    ReplyDelete
  6. அதான் எனக்குத்தெரியுமே! தமிழ்பிரியன்!
    அவர் பதிவிலேயே போய் வரவேற்றிருக்கேனே! அவங்கதான்
    வர்ர்ர்ர்ரதேயில்லை.

    ReplyDelete
  7. (கும்மி) டீச்சர்னா தமிழ்மணத்துல எல்லார்க்கும் தெரியுமே!!

    :))))

    ReplyDelete
  8. /
    தமிழ் பிரியன் said...

    எங்க டீச்சருக்கும் தனி பதிவு போட்டதுக்கு கோடி நன்றிகள்...
    (ஆகா! கோடிகள் அதிகமாகிக் கிட்டே போகுதே... :) )
    /

    ரிப்பீட்டு

    ReplyDelete
  9. நான் தமிழ் மணத்துக்குள் நுழைந்த இந்த மூன்று மாதங்களில் இவரை அடிக்கடி காண இயலவில்லைதான். முதன் முறை பின்னூட்டமிட்ட போதே ஊருக்கு வந்தால் சந்திப்போம் என "அன்போட" சொன்னவர். இவரது சிறப்பான பதிவுகளுக்கு இட்டு சென்றதற்கு நன்றி நானானி! எல்லோரையும் போல இவர் அடிக்கடி எழுத வேண்டும் என நானும் விண்ணப்பத்தில் கையெழுத்திடுகிறேன்.

    வழக்கம் போல தலைப்பு ரொம்பப் பொருத்தம் நானானி! தமிழ் பிரியன் அதை இந்த முறை நீங்கள் கவனிக்கவில்லையா:))?

    ReplyDelete
  10. நானும் என் பதிலை ரிப்பீட்டு! ம.சிவா!

    ReplyDelete
  11. ராமலஷ்மி!
    தலைப்பின் பொருத்தம் உங்க கண்களில்தான் பட்டிருக்கு.

    ReplyDelete