Monday, July 7, 2008

மதுரைப்பதிவர் மதுரையம்பதி.

இவர் மதுரையைச் சேர்ந்தவர். பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரை.
கடந்த 12 வருடங்களாக பெங்களூரில் இருக்கிறார்.

இவரது பதிவுகள் பக்திரசம் சொட்டும் பதிவுகள்.
பார்த்து வியந்திருக்கிறேன்.

இதைத் தவிர அன்னையின் அழகைச்சொல்லும்
சொளந்தர்யலஹரி என்னும் வலைப்பூவிலும் கலக்குகிறார்.

பக்தி எண்ணங்கள் என்ற இப்பதிவில் ,..
எந்த யோகமும், செய்ய இயலாத நமக்கு இறையருள் கிடையாதா என்று பேசிக்கொண்டிருக்கையில் சட்டென நினைவில் வந்தது "த்வமேவ உபாயபூதோ மே பாவ இதி ப்ரார்தநா மதி: சரணாகதி:" என்னும் கீத வாக்கியம், கீதாம்மா வாக்கியமல்ல....கீதையில் கண்ணன் சொன்னது. அதாவது கர்ம/பக்தி/ஞான யோகம் செய்தால் அடையும் கிடைக்கும் பலன்களை, பரமாத்மாவின் திருவடியைப் பற்றி சரணாகதியானாலேயே கொடுத்து விடுகிறானாம். 'என்னையே சரணடை' என்றும் அடைந்தால் எளிதில் பலனளிக்கிறேன் என்றும் கூறுகிறான் கண்ணன். இறைவன் திருவடியை பற்றிக் கொள்வதே சிறந்தது, அதுதான் சரணாகதி. "நீ தான் உபாயம்; நீ தான் உபயம்; பலனும் நீயே" என்பதாக பிடித்துக் கொள்வது சரணாகதி.

இதைப் படித்தபோது எளியோர் வாக்காகிய செய்யும் தொழிலே தெய்வம்
என்ற கூற்றுதான் ஞாபகம் வந்தது. மேலும் பல விடயங்கள் இந்தப்
பதிவில் அறியலாம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


தச மஹா வித்யையில் ஒன்பதாவது ஸ்வருபமாக வருபவள் ராஜ மாதங்கி. இந்த அன்னையே ராஜ ஸ்யாமளா என்றும் அழைக்கப்படுகிறாள். சாக்தர்களில் சிறந்தவரான மஹாகவி காளிதாஸர் எழுதிய "ச்யமளா தண்டகம்" இவளைக் குறித்து எழுதியதே.

என்ற முகவுரையுடன் அன்னை ராஜமாதங்கியைப் பற்றிய பதிவும்
சியமளா தண்டக ஸ்லோகமும் மிக அருமை.
இதோ இங்கே பாருங்கள் அன்னையின் அருள் சிந்து படமும், பதிவும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மதுரையம்பதி அவர்களின் மற்றொரு வலைப்பூவாகிய
சொளந்தர்யலஹரியிலிருந்து பதிவுகளை இங்கே பார்க்கலாம்.

தாய் மூகாம்பிகை படத்தில் ஜனனி ஜனனி பாடலுக்கு முன்பு
ஒரு ஸ்லோகம் ”சிவ சக்தயா” என்று வருமே அது சொளந்தர்யலஹரியின் முதல் ஸ்லோகம்.

அன்னையின் அழகை வர்ணிக்கும் அந்த ஸ்லோகம் பிறந்த கதை 1கதை 2 இங்கே.
************************************************************************

சொளந்தர்யலஹரியின் ஸ்லோகத்திற்கு இங்கே கொடுக்கப்பட்டிருக்கும்
விளக்கத்தால் அன்னையின் அழகுக்கு அழகு சேர்க்கப்பட்டுள்ளது.
பொருள் புரியாவிட்டால் எதுவும் நம் மனதில் நிலைக்காது.
பொருள் புரிந்துவிட்டாலோ சொல்லவே வேண்டாம்.

இதோ இந்த ஸ்லோகங்களைப் படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்களேன்.

ஆனந்தலஹரி

ஆனந்தலஹரி 27 & 28

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அகில சராசர ஜனனி நாராயணி, கல்யாணி.

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, அபிராமி பட்டரைக்
காத்ததுபோல நம்மனைவரையும் காத்து அருள் புரியட்டும்.

அன்புடன்
புதுகைத் தென்றல்

8 comments:

  1. வணக்கம் புதுகை-அக்கா...

    சில மாதங்கள் முன் நீங்க என் பதிவுக்கான லின்க் கேட்டு அதனை உங்கள் தந்தை படிக்க தந்ததே மிகுந்த மன நிறைவினைத் தந்தது.

    பலரும் வலைச்சரத்தில் என்பதிவுகளை சேர்த்துச் சரம் தொடுத்திருந்தாலும், நீங்கள் தனிப் பதிவே அளித்து பெருமைப் படுத்திவிட்டீர்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!

    உங்களது இந்த வாரம் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாங்க மதுரையம்பதி,

    வாழ்த்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. ஒரே நாளில் நீங்க ஏகப்பட்ட பதிவு போடுறீங்க. இப்போதைக்கு எல்லாவற்றையும் படிக்க முடியுமான்னு தெரியலை. பிறிதொரு நாள் படிக்கனும்னு நினைச்சிருக்கிறேன்:)

    ReplyDelete
  4. ஆஹா நிஜமா நல்லவன்,

    கண்டிப்பா படிங்க.

    ReplyDelete
  5. அன்பின் கலா

    அருமை நண்பர் மௌளி பற்றிய ஒரு பாராட்டத்தக்க பதிவு. இவரது வலைப்பூக்கள் பக்கம் அடிக்கடி செல்வேன்.

    //பொருள் புரியாவிட்டால் எதுவும் நம் மனதில் நிலைக்காது.
    பொருள் புரிந்துவிட்டாலோ சொல்லவே வேண்டாம்.// உண்மை உண்மை - அதனால் தான் என் மறு மொழிகள் அங்கே இல்லை.

    சரணாகதித் தத்துவம் சிறந்த ஒன்று.
    "செய்யும் தொழிலே தெய்வம்
    அந்தத் திறமைதான் உனது செல்வம்"

    செய்யும் தொழிலே தெய்வம் - செயல்களே வழிபாடு - அருமையான தத்துவமல்லவா = கீதையின் சாரமில்லையா இது

    ReplyDelete
  6. மௌலி அவர்களின் பணியும், அவர்தம் பணியை வலையுலகம் அறியத் தந்த தங்கள் பணியும் இறையருளால் சிறக்கட்டும்!

    ReplyDelete
  7. வாங்க சீனா சார்,

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  8. வாங்க கவிநயா,

    மொளலி அவர்களின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.

    மிக மிக அருமையாக இறைவனைப் பற்றி எழுதுகிறார்.

    தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete