Friday, July 11, 2008

வெட்டிப்பயலின் வலைப்பூ

பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது

இப்படி சொல்லிகிட்டு சும்மா கலக்கலா பதிவு
எழுதறாரு. நான் அறிமுகப் படுத்தத் தேவையே
இல்லை. உங்களுக்கு நல்லா தெரிஞ்சவர் தான்

சாஃப்டுவேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்கன்னு
சொல்லி சூப்பர் பதிவுங்க இது.

நீங்களும் படிச்சு பாருங்க.

*************************************************


ஒரு உறவினர் ஒருவருக்கு திருமணம்.

ரொம்ப கலாய்ச்சோம் அவரை. மணமகன்
தாலிகட்ட ரெடியாகி கிட்டு இருந்தபோது சடனாக அந்த பக்கம்
கிராஸ் ஆன பையனோட மாமா,”டேய்! இப்ப ஒண்ணும்
கெட்டுப் போகலை! கல்யாணம் வேணுமான்னு நல்லா
யோசிச்சு முடிவைச் சொல்லுன்னாரு”!!!!!!!!!!!!!!

ஏன்னு யோசிச்சுகிட்டே போய் தாலிகட்டிட்டு வந்த
பிறகு,” நான் சொன்னேன். நீ தான் கேக்கலை.
உன் தலையெழுத்து. நீயும் அனுபவி”ன்னுட்டு
போயிட்டாரு. :))

இங்க இது எதுக்குன்னு கேக்கறீங்களா?

நம்ம வெட்டி கி.மு, கி.பி பதிவுப் போட்டிருக்காருல்ல.
அதான் டைமிங்கா இருகட்டுமேன்னு. :)

**************************************
T-Mobile Wing, Magellan 3200, Nextar C3 அனுபவங்கள்!

இதுவும் நல்ல இன்ப்ஃர்மேட்டிவா இருக்கு.

**************************************************

டைரக்டர் விசுவுக்கு நான் வேண்டுகோள் வைச்சு
பதிவு போட்டேன். அவர் பிஸியா இருக்காருன்னு
அவருக்காக வெட்டி கதை வசனம் ரெடி செஞ்சிருக்காரு.

அதைப் படிக்க்க வேண்டாமா நீங்க?!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

வலைப்பூக்களில் அவரவர் எழுதுவது அவரவர் விருப்பம்.
அந்தக் கருத்தில் நமக்கு உடந்தை இல்லாவிட்டால்,
அதை நயமான வார்த்தைகளில் சொல்வது நாகரீகம்.

அதை விடுத்து. கடுமையான, அநாகரீகமான வார்த்தைப்
ப்ரயோகம், முகம் தெரியாத மனிதர்களுக்கு நம்மைப்
பற்றிய ஒரு தவறான எண்ணத்தை அல்லவா
ஏற்படுத்துகிறது.


வாயில் இருந்து வார்த்தைகள் வரும் வரைத்தான்
நாம் அதற்கு எஜமானன்.

வந்த பிறகு வார்த்தைகள் நமக்கு எஜமானன் ஆகிவிடுகிறது.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருக்க காய்கவர்ந்தற்று.

2 comments:

  1. வலைப்பூக்களில் அவரவர் எழுதுவது அவரவர் விருப்பம்.
    அந்தக் கருத்தில் நமக்கு உடந்தை இல்லாவிட்டால்,
    அதை நயமான வார்த்தைகளில் சொல்வது நாகரீகம்.

    அதை விடுத்து. கடுமையான, அநாகரீகமான வார்த்தைப்
    ப்ரயோகம், முகம் தெரியாத மனிதர்களுக்கு நம்மைப்
    பற்றிய ஒரு தவறான எண்ணத்தை அல்லவா
    ஏற்படுத்துகிறது.//

    ரொம்ப..ரொம்ப..ரொம்பச் சரியாச் சொன்னீங்க‌

    ReplyDelete