Monday, July 7, 2008

இசையால் வசமாகா இதயம் எது?

இசை நம் மனதை உருக்கும். இளக செய்யும்.

இறைவனுக்கு பிடித்தமானது இசை. அதனால்தான்
பக்தியை பரப்ப ஆழ்வார்களும், நாயன்மார்களும்
இசைத்தொண்டு பரப்பினார்கள்.

நாமும் இங்கே சில இசை வலைப்பூக்களை பார்ப்போம்.

கண்ணன் பாட்டு இந்த வலைப்பூ கண்ணன் அன்பர்கள்
dubukudisciple
மலைநாடான்
மடல்காரன்
Raghavan
குமரன் (Kumaran)
kannabiran, RAVI SHANKAR (KRS)
தி. ரா. ச.(T.R.C.)
ஷைலஜா .
இவர்களின் கூட்டு முயற்சி.

ஷீராப்தி கன்யககு ஸ்ரீ மகாலக்ஷ்மி கினி
நீரஜா லயகுனு நீராஜனம்

பாற்கடல் பாவையாம் திருமகள் லட்சுமிக்கு
தாமரைத் தாய்க்கொரு தீப ஆரத்தி

அன்னமாச்சாரியரின் அற்புதமான கீர்த்தனை இது

தாயார் குளிக்கும் அழகு - வெள்ளிக்கிழமை நீராட்டம் காணுங்கள்.இந்தப் பதிவில் எவ்வளவு அழகா சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கண்ணன் மனம் என்னவோ கண்டுவா தென்றலே
மயூரி சுதா சந்திரன் நடனமாடிய பாடல்.
வசந்த ராகம் திரைப்படத்தின் அப்பாடல் இங்கே.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பாடகர் யேசுதாஸ் பற்றியும் அவர் குரலில் குழைவு பற்றியும் பெரிதாக விளக்கித் தான் சொல்லவேண்டும் என்றில்லை! முருகன் பாடல்களில் எப்படி டி.எம்.எஸ் குழைவாரோ, அப்படிக் கண்ணன் பாடல்களில் யேசுதாஸ் குழைவார்.


ஒவ்வொரு வரியின் முடிவிலும் ஸ்ரீமன் நாராயணா என்று வரும்! அப்படியே யேசுதாஸ், பெருமாளிடம் டைரக்ட் லைன் போட்டுப் பேசுவது போலவே இருக்கும்! :-)


சரி இப்படி சொல்லி எந்தப் பாடலை பதிவாக தந்துள்ளார்கள்
வந்துதான் பாருங்களேன்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இதுவும் கானக்கந்தர்வனின் குரலின் மயக்கும் பாடல்தான்.

என்னெஞ்சில் பள்ளிக்கொண்டவன்.கேட்கும் போது நாமும் தூங்கிவிடுவோம். ஏனெனில்
நமக்குள்ளே உறையும் இறைவனைத் தாலாட்டும் பாடலாச்சே.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பச்சை மா மலை போல் மேனி
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்க மா நகர் உளானே!

இந்தப் பாடலைக்கேட்க பதிவை ரசிக்க இங்கே

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அன்னமய்யா திரைப்படத்தில் ஒரு காட்சி,

அன்னமய்யா வேங்கடநாதனை தேடி அலைந்து கொண்டிருக்கும்
போது நாரத மகிரிஷி அங்கே வந்து தனது கையில் இருக்கும்
தம்புராவைக் கொடுத்து,” அன்னமய்யா, இறைவன் தான் ஜபிப்பவர்களிடம்
மட்டுமல்ல, அவனைப் பாடுபவரது இதய சிம்மாசனத்தில்
ஆனந்தமாக அமர்கிறான். மந்திரத்தை விட பாட்டே
இறைவனை உருக்குகிறது” என்று சொல்வார்.

உண்மைதான் பாட்டினால் ஒன்று படும் இதயம். அங்கே
அப்போது அன்பெனும் ஒளிதானே இருக்கும். அன்பு இருக்கும் இடத்தில்
ஆண்டவன் எப்போதும் இருப்பான்.

12 comments:

  1. ஆஹா ஒரு நாளைக்கு இத்தனை பதிவா?

    ReplyDelete
  2. நடத்துங்க!நடத்துங்க!!

    ReplyDelete
  3. பதிவுக்கு கமெண்ட் போடவே நேரம் பத்தலை:)

    ReplyDelete
  4. கொடுத்திருக்கிற சுட்டிகள் எல்லாம் நல்லா வேற இருக்குது.

    ReplyDelete
  5. எப்ப தான் எல்லா சுட்டிகளையும் போய் பார்க்கிறதுன்னு தெரியலையே?

    ReplyDelete
  6. பத்து நாள் லீவ் போட்டுட்டு தான் படிக்கணும்:)

    ReplyDelete
  7. அப்படியே யேசுதாஸ், பெருமாளிடம் டைரக்ட் லைன் போட்டுப் பேசுவது போலவே இருக்கும்!//

    :0))

    ஒரே நாளில் ஏகப்பட்ட பதிவுகள் போடுவது எப்படின்னு டீச்சரக்கா எங்களுக்கு பாடம் நடத்தவும்.

    ReplyDelete
  8. வாங்க நிஜமா நல்லவன்.

    கிடைத்திருக்கும் வாய்ப்பை மிகச் சரியாக பயன் படுத்திக்கொள்ள திட்டம்.

    அதான்.

    ReplyDelete
  9. பத்து நாள் லீவெல்லாம் வேணாம் நிஜமா நல்லவன்.

    1 நாள் லீவு போடுங்க போதும்.

    ReplyDelete
  10. ஒரே நாளில் ஏகப்பட்ட பதிவு போடணும்னா
    பதிவுகள் போடணும் அம்புட்டுதானே
    அப்துல்லா.


    :))))))))))))))
    வலைச்சர ஆசிரியராக வாய்ப்பு கிடைத்ததை சரியாக பயன்படுத்திக்கணும்ல.

    ReplyDelete
  11. சாதனைகள் முறியடிக்க படுவதற்குதான். சில சாதனைகள் மட்டும் விதிவிலக்காகலாம். கூடிய விரைவில் அப்படி ஒன்று நடந்தே தீரும் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  12. வாங்க நிஜமா நல்லவன்,

    என் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்.

    இறையருளால் எதுவும் சாதகமே.

    ReplyDelete