Monday, July 21, 2008

தமிழுக்கும் அமுதென்று பேர் - தமிழ்ப் பதிவர்கள்

“தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்”

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது வேறெங்கும் காணோம் என்றான் பாரதி. அந்த கூற்றை மெய்பிப்பது போல் அந்த சுவையை உணர்ந்து தமிழின் மேன்மையை மற்றவர்க்கு உணர்த்தும் வண்ணம் வரும் பதிவர்களைப் பற்றிய அறிமுகம் இது.

அன்புடன் புகாரி
அன்புடன் புகாரி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இவரது பதிவுகளில் தமிழின் இனிமையை உணரலாம். கனடா நாட்டில் இருக்கும் இவரது படைப்புகளை படிப்பது என்பதே ஒரு இன்பமான அனுபவம். இவரது பதிவுகள் முழுவதும் அழகு தமிழில் கவிதைகளும், கட்டுரைகளும் கொட்டிக் கிடக்கின்றன. எதை விட, எதை எடுக்க எனத் தெரியாததால் அவரது பதிவு முழுவதும் தமிழார்வலர்கள் காண வேண்டிய அமுதம். அவரைப் பற்றிய இந்த அறிமுகத்தைப் படித்தாலே போதும் அவரைப் பற்றி விளங்கிக் கொள்ளலாம்.

நெல்லை கண்ணன்
தமிழகத்தில் இருக்கும் சிறந்த பட்டிமன்ற, இலக்கிய பேச்சாளர்களில் முக்கிய இடத்தில் இருக்கும் நெல்லை கண்ணன் அவர்களும் வலை பதிய வந்திருப்பது பெருமைக்குரிய விடயம். தனது பதிவில் மிக உயரிய இலக்கிய நடையில் திருக்குறள் விளக்கங்கள், பழம்பாடல் புதுக்கவிதை, கவிதைகள் என்று வகை வாரியாக கிடைக்கின்றன. படித்து தமிழ் என்னும் அமுதை ருசியுங்கள்.

செல்வி ஷங்கர்
மதிப்பிற்குரிய சீனா அவர்களின் வாழ்க்கைத் துணைவர். தமிழாசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். தனது பழுத்த தமிழ் அனுபத்தை நமக்கு பதிவின் வாயிலாக திறம்பட வழங்கி வருகின்றார். திருக்குறளுக்கு அவரது விளக்கங்கள் சுலபமாக விளங்கிக் கொள்ளும் வகையில் அருமையாக இருக்கின்றன.

கடுவெளி
இது ஒரு கூட்டுப்பதிவு. செல்வி சங்கர், ஐயப்பன், பொன்வண்டு, கயல்விழி முத்துலட்சுமி, ஆயில்யன், ஜீவ்ஸ் ஆகியோர் இணைந்து இதில் தமிழ் இலக்கணப் பாடங்களை நடத்துகின்றனர். தற்போது அதில் செல்வி சங்கர் அவர்கள் தொல்காப்பியத்திற்கான விளக்கங்களை அளித்து வருகின்றனர். தமிழ் மொழி மரபை மறக்காமல் இருக்க உதவும் பதிவு.

நா. கண்ணன்
2003 முதல் பதிவிட்டு வரும் சிறந்த ஆற்றல்மிக்கவர். தனது பதிவுகளில் பிற மொழி சேராமல் பார்த்துக் கொள்பவர். இவரது கவினுலகம் என்ற பதிவில் எழுதிய அனைத்து பதிவுகளும் ரசிக்கும்படியாக இருப்பவை. குறிப்பாக அவரது சொந்த இ மொழி தளத்தில் பல படைப்புகளைப் படைத்துள்ளார்.

17 comments:

  1. //தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்”//

    உண்ணும் நேரம்
    உழைக்கும் நேரம் தவிர்த்த
    மற்றைய நேரங்களில் தமிழ் எமக்கு அமுதாய் இருக்கிறது என்று சொன்னால் முற்றிலும் உண்மையே!
    நல்லதொரு அறிமுகமாய் அமைந்திருக்கும் பதிவிற்கு பாராட்டுக்களுடன் நன்றிகள்

    ReplyDelete
  2. அருமையான சுட்டிகள்
    தமிழ் பிரியன்.

    கலக்குங்க.

    ReplyDelete
  3. பெயருக்கேத்த மாதிரி அமைஞ்ச ஆரம்ப சுட்டிகள் அனைத்தும் அருமை...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள். தமிழ்பிரியன்

    ReplyDelete
  5. தமிழ் பிரியன்

    அன்புடன் புகாரி, நெல்லை கண்ணன், நா.கண்ணன் போன்ற நல்ல தமிழ்ப் பதிவர்களை ( சாதாரணப் பதிவருக்கு அதிகம் அறிமுகம் இல்லாத பதிவர்கள் இவர்கள்) சுட்டிக்காட்டி, அவர்களின் பதிவுகளுக்குத் தொடுப்பு அளித்தமை பாராட்டத்தக்க செயல் - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  6. தமிழன்... said...

    பெயருக்கேத்த மாதிரி அமைஞ்ச ஆரம்ப சுட்டிகள் அனைத்தும் அருமை...

    //

    rippeeettu

    ReplyDelete
  7. GOOD START! THAMILPRIYAN!
    CONGTRATS!!

    ReplyDelete
  8. இப்பதிவில் அன்புடன் புகாரியும், நா.கண்ணனும் உங்களாலே எனக்கு அறிமுகம். நன்றி தமிழ் பிரியன். மற்றவர் வலைப் பூக்களுக்குள் சென்றிருக்கிறேன். அனைவரும் தமிழ் அமுதம் அருந்திட அருமையாய் வழி காட்டியிருக்கிறீர்கள்.

    //“தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்”//

    எனது வலைப்பூவின் முகப்பில் இவ்வரிகள் உண்டெனில் வலைப்பூவின் உரல் "தமிழ் அமுதம்":))!

    ReplyDelete
  9. ///ஆயில்யன் said...

    //தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்”//

    உண்ணும் நேரம்
    உழைக்கும் நேரம் தவிர்த்த
    மற்றைய நேரங்களில் தமிழ் எமக்கு அமுதாய் இருக்கிறது என்று சொன்னால் முற்றிலும் உண்மையே!
    நல்லதொரு அறிமுகமாய் அமைந்திருக்கும் பதிவிற்கு பாராட்டுக்களுடன் நன்றிகள்///
    நன்றி ஆயில்யன்! தமிழ் தானே உயிர் மூச்சு!

    ReplyDelete
  10. //மங்களூர் சிவா said...

    அருமையான சுட்டிகள்
    தமிழ் பிரியன்.

    கலக்குங்க.//
    நன்றி சிவா அண்ணே!

    ReplyDelete
  11. //தமிழன்... said...\
    பெயருக்கேத்த மாதிரி அமைஞ்ச ஆரம்ப சுட்டிகள் அனைத்தும் அருமை...///
    பெயரைக் காப்பாத்தனுமே!

    ReplyDelete
  12. ///குசும்பன் said...

    வாழ்த்துக்கள். தமிழ்பிரியன்///
    மிக்க நன்றி சரவணன்!

    ReplyDelete
  13. ///cheena (சீனா) said...

    தமிழ் பிரியன்

    அன்புடன் புகாரி, நெல்லை கண்ணன், நா.கண்ணன் போன்ற நல்ல தமிழ்ப் பதிவர்களை ( சாதாரணப் பதிவருக்கு அதிகம் அறிமுகம் இல்லாத பதிவர்கள் இவர்கள்) சுட்டிக்காட்டி, அவர்களின் பதிவுகளுக்குத் தொடுப்பு அளித்தமை பாராட்டத்தக்க செயல் - நல்வாழ்த்துகள்///
    நன்றி சீனா ஐயா!

    ReplyDelete
  14. ///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

    தமிழன்... said...

    பெயருக்கேத்த மாதிரி அமைஞ்ச ஆரம்ப சுட்டிகள் அனைத்தும் அருமை...

    //

    rippeeettu///
    ரிப்பீட்டேக்கு நன்றி!

    ReplyDelete
  15. ///நானானி said...

    GOOD START! THAMILPRIYAN!
    CONGTRATS!!///
    நன்றிம்மா!

    ReplyDelete
  16. ///ராமலக்ஷ்மி said...

    இப்பதிவில் அன்புடன் புகாரியும், நா.கண்ணனும் உங்களாலே எனக்கு அறிமுகம். நன்றி தமிழ் பிரியன். மற்றவர் வலைப் பூக்களுக்குள் சென்றிருக்கிறேன். அனைவரும் தமிழ் அமுதம் அருந்திட அருமையாய் வழி காட்டியிருக்கிறீர்கள்.

    //“தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்”//

    எனது வலைப்பூவின் முகப்பில் இவ்வரிகள் உண்டெனில் வலைப்பூவின் உரல் "தமிழ் அமுதம்":))!///
    மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது!

    ReplyDelete