Wednesday, August 20, 2008

அன்புள்ளம் கொண்ட மூன்று மலர்கள்



அன்பர்களே,

தனது எழுபத்தி இரண்டு வயதில் தான் எனது தந்தை இறந்துபோனார் என்றாலும், அவர் இல்லாத என் வாழ்க்கையின், கடந்த பத்து வருடங்களில், அவர் என் மீது வைத்திருந்த பாசத்தால், அவரை நினைத்து என் மனம் உருகாத ஒரு நாள் கூட இருந்ததில்லை. இதை உணர்ந்த சிலரில் மூன்று பேர் என்னை தங்களின் சொந்த மகனாகவே நேசித்து வருகிறார்கள். அன்பு உள்ளம் கொண்ட அந்த மூவர், எனது ஆசிரியர் திரு மைக்கல் ராஜ் ஐயா அவர்கள், ஊடகச்செல்வர் திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள், கலைமாமணி திரு வி.கே.டி பாலன் அவர்கள்.

ஆசிரியர் திரு மைக்கல்ராஜ அவர்களைப் பற்றி எனது வலைப்பூவில் எழுதினதை இங்கே வெளியிடுகிறேன்.

ஊடகச்செல்வர் திரு அப்துல் ஜப்பார் ஐயாவின் புத்தகத்தைப் பற்றி எழுதின கருத்துக்களை இங்கே வெளியிடுகிறேன்.

கலைமாமணி திரு வி.கே.டி. பாலன் ஐயாவைப் பற்றி எழுதினதை இங்கே வெளியிடுகிறேன்.

இந்த மூவரைப் பற்றியும் நீங்கள் வாசித்து உங்கள் பின்னூட்டங்களை இட அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பாசமுடன்
என் சுரேஷ்

2 comments:

  1. அன்பின் சுரேஷ்,

    மும்மதத்தினைச் சார்ந்த மூன்று மாமனிதர்களை - அவர்களின் சுயசரிதையினைப் படிக்கும் வாய்ப்புக் கொடுத்த இப்பதிவினிற்கு நன்றி.

    நல்லதொரு செயல் - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. ஊக்கம் தரும் பின்னூட்டமிடுவதில் பீஷ்மர் - சீனா ஐயாவை அன்போடும் நன்றி உள்ளத்தோடும் பாராட்டி மகிழ்கிறேன்.

    அன்புடன்
    என் சுரேஷ்

    ReplyDelete