Sunday, August 3, 2008

வழியனுப்புதலும் வரவேற்பும்

இந்த வார ஆசிரியராகச் சிறப்பாகச் செயல்பட்ட அருமைச் சகோதரி நானானி 12 பதிவுகள் போட்டு 312 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். இது சராசரியாக 26 மறு மொழிகள் வருகிறது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் - பதிவுகளின் தரத்தினையும் அவை பெற்ற வரவேற்பினையும். வசூல் மகிழ்வாக இருந்த காரணத்தால் தான் கடையை மூடாமல் தொடர்ந்து வாரம் முழுவதும் செயல் பட்ட்டிருக்கிறார். அருமையான பதிவுகள் தந்து பல புதிய சுட்டிகள் கொடுத்தமைக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

அன்பின் நானானி - வலைச்சரத்தின் சார்பில் வணங்கி வழியனுப்புகிறேன்.
நன்றி கலந்த நல்வாழ்த்துகள்
---------------------------------------------------------------------------

ஆகா - ஆகா - 04.08.2008 தொடங்கும் வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் அருமைத் தோழி தமிழ் மாங்கனி. அவரைப் பற்றிய அறிமுகப் பதிவு இதற்கு முந்தைய பதிவாக - அவரது மனச்சாட்சியின் தூண்டுதலின் பேரில் பதிவாகி விட்டது. ஆகவே நான் வேறு புதிதாக அறிமுகப் படுத்த விரும்ப வில்லை.

கல்லூரி மாணவி - சிங்கையிலே பிறந்து வளர்ந்தவர். 21 வயதே ஆனவர். இளம் அறிவியல் (கணிதம்) பட்டப் படிப்பில் இறுதி ஆண்டு படிப்பவர்.
துறுதுறுப்பானவர். வலைப்பூ மூண்றாண்டுகளாக செம்மையாக நடத்திச் செல்பவர். கவிதை மழை பெய்பவர். 150 பதிவுகள் வரை பதிந்திருக்கிறார். ப.பா.ச விலும் உறுப்பினராகி கலாய்த்து வருகிறார். சமையல் தெரியும் என்கிறார். பார்க்கலாம்

நல்வாழ்த்துகள் தமிழ் மாங்கனி

Cheena (சீனா)

13 comments:

  1. அன்புள்ள சீனா!
    உங்கள் வழியனுப்புரை படித்ததும் எனக்கு இப்படி கூவத் தோன்றியது.
    "ஆத்தா...!நான் பாஸாயிட்டேன்!"

    மிக்க நன்றி!!வருகிறேன்.

    ReplyDelete
  2. வாங்க தமிழ் மாங்கனி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ///கல்லூரி மாணவி - சிங்கையிலே பிறந்து வளர்ந்தவர். 21 வயதே ஆனவர். இளம் அறிவியல் (கணிதம்) பட்டப் படிப்பில் இறுதி ஆண்டு படிப்பவர்.
    துறுதுறுப்பானவர். வலைப்பூ மூண்றாண்டுகளாக செம்மையாக நடத்திச் செல்பவர். கவிதை மழை பெய்பவர். 150 பதிவுகள் வரை பதிந்திருக்கிறார். ப.பா.ச விலும் உறுப்பினராகி கலாய்த்து வருகிறார். சமையல் தெரியும் என்கிறார். பார்க்கலாம் ///

    சீனா ஐயா! தவறான தகவல்களை கொடுத்து எங்க தங்க மாங்கனி உங்களை ஏமாற்றி விட்டதாக தெரிகின்றது.. தங்க மாங்கனி ஒ.. சாரி சாரி.... தமிழ் மாங்கனி பாட்டி வயதை எட்டியவர் என்பதை இங்கு பணிவன்புடன் தெரிவித்துக் கொ'ல்'கிறேன்... ;))

    ReplyDelete
  4. அருமையான வழியனுப்புரை பாராட்டுடன்.

    மனசாட்சியுடன் பேசியபடி அட்டகாசமான என்ட்ரி கொடுத்துள்ள தமிழ்மாங்கனிக்கு அழகான வரவேற்புரை.

    இவற்றில் தங்களுடன் நாங்களும் இணைந்து வழி மொழிகிறோம் சீனா சார்!

    ReplyDelete
  5. அருமையான வழியனுப்புரை பாராட்டுடன்.

    மனசாட்சியுடன் பேசியபடி அட்டகாசமான என்ட்ரி கொடுத்துள்ள தமிழ்மாங்கனிக்கு அழகான வரவேற்புரை.

    இவற்றில் தங்களுடன் நாங்களும் இணைந்து வழி மொழிகிறோம் சீனா சார்!

    ReplyDelete
  6. தமிழ் பிரியன் சரியாச் சொல்லுங்க!
    தமிழ் மாங்கனி
    ஒளவையா பாவையா:)))?

    //தமிழ் மாங்கனி பாட்டி வயதை எட்டியவர் என்பதை//

    அதியமானுக்கு நெல்லிக்கனி தந்த ஒளவையா அல்லது ப.பா சங்கத்தில் லூட்டிகள் செய்யும் பாவையா..:))?

    ReplyDelete
  7. தமிழ் பிரியனும் ராமலஷ்மி அக்காவும் சொல்லுறதை பார்த்தா தமிழ்மாங்கனிக்கு ஸ்பிலிட் பெர்சனாலிட்டி இருக்கும் போல தெரியுதே?

    ReplyDelete
  8. வாங்க தமிழ் மாங்கனி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வாங்க தமிழ் மாங்கனி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி! நானானி சிறப்பாக போன வாரம் வலை ஆசிரியராக இருந்து தூள் கிளப்பியிருக்கிறார். அவர் வழியில் இப்போ நான்... கொஞ்சம் பயமா இருக்கு! மத்தவங்க அளவுக்கு சிறப்பா செய்ய முடியுமா என்று!

    but it's ok... என் மனசாட்சி என்கூட இருக்கும்வரைக்கும் என்னை ஒன்னும் பண்ணமுடியாது!:)

    ReplyDelete
  11. @தமிழ் பிரியன்

    //தவறான தகவல்களை கொடுத்து எங்க தங்க மாங்கனி உங்களை ஏமாற்றி விட்டதாக தெரிகின்றது//

    ஆஹா... என்னய்யா! என் birth certificateட்ட போடனும்ய்யா! நம்புங்கய்யா!:)

    ReplyDelete
  12. @நிஜமா நல்லவன்

    //தமிழ் பிரியனும் ராமலஷ்மி அக்காவும் சொல்லுறதை பார்த்தா தமிழ்மாங்கனிக்கு ஸ்பிலிட் பெர்சனாலிட்டி இருக்கும் போல தெரியுதே?//

    ஆமாங்க... ராத்திரி தினமும் சந்திரமுகி டான்ஸ் கூட ஆடுறேன். ரா ரா...ரா ரா...

    ReplyDelete
  13. என் தங்கச்சி ஒரு வாரமா கலக்கிட்டு இருக்கா போல.. இருந்தாலும் இங்கும் ஒரு வாழ்த்துக்கள். :)

    ReplyDelete