Sunday, August 17, 2008

ஏன் ??

இன்றைய இளைஞர்கள் அதிகமும் ஆன்மிகததில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். ஒரு கோவில் திருவிழா என்றால் அகமகிழ்ச்சியுடன் தங்களுடைய பணத்தை கொடுக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்னர் என் தந்தை அவர்கள் ஒரு கருமாரி அம்மன் கோவிலில் கொடுத்து வந்த சிறியத் தொகைக்கு அப்படி ஒரு நன்றியினனத் தெரிவிப்பார்கள். சின்ன ஒரு விஷயத்திற்கு அவர்கள் அப்படி நன்றி சொல்வதைக் கண்டு நான் வியந்து போயிருக்கிறேன். இப்போது பெரியவர்களை விட இளைஞர்கள் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டு கோயில்களுக்கு நன்கொடை கொடுத்து வருகிறார்கள். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடுள்ளவர்களாக இளைஞர்கள் இருக்கிறார்களே, இதற்கு காரணம் என்ன என்று யோசித்து தயவாக உங்கள் பதில்களை சொல்லுங்கள், நண்பர்களே!!

அன்புடன்
என் சுரேஷ்

9 comments:

  1. நல்ல கேள்வி - நண்பர்களே பதில் சொல்லுங்களேன் - கருத்தினைத் தெரிவியுங்களேன்

    ReplyDelete
  2. ஆன்மீகத்தில் இளைஞர்கள் அதிக ஈடுபாட்டுடன் இருக்கின்றார்கள் என்பது எனக்கு புது செய்தியா இருக்கு. என‌க்கு தெரிஞ்சு இளைஞ‌ர்க‌ள் த‌ற்போது ஏழைக‌ளுக்கு உத‌வுவ‌தில் மிக‌ ஆர்வ‌மாக‌ இருக்கின்றார்க‌ள்.
    உதார‌ண‌மாக‌ ந‌ம‌து சீனா அய்யா முன்னின்று அருமை அண்ண‌ண் அந்தோணிக்கு ச‌க்க‌ர‌ நாற்காலி வாங்க‌ முய‌ற்சித்த‌போது வ‌ரும் உத‌விக‌ளை போதும் என்று கூறி ம‌றுக்கு சூழ‌ல் ஏற்ப‌ட்ட‌து. அத்த‌னை ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ள் இருக்கின்றார்க‌ள். மேலும் தின‌ம‌ல‌ரில் ஒரு ஏழை மாண‌வ‌ணுக்கு பொறியிய‌ல் ப‌டிப்பிற்கு உத‌வி தேவை என்ற‌ செய்திய‌றிந்த‌வுட‌ன் ந‌ம‌து வ‌லையுல‌ ந‌ண்ப‌ர்க‌ள் உதவிய வேகம், எ.அ.பாலா அண்ணா ம‌ற்றும் ப‌ல‌ர் சேர்ந்து செய்துவ‌ரும் க‌ல்வி உத‌விக‌ள், என‌க்கு தெரிந்து டிசிஸ் நிறுவ‌ன‌த்தில் ப‌ணிபுரியும் ந‌ண்ப‌ர்க‌ளால் உருவாக்க‌ப்ப‌ட்டு இன்று சென்னையில் இரு ஆத‌ர‌வ‌ற்ற‌ குழ‌ந்தைக‌ள் இல்ல‌ங்க‌ளுக்கு உதவுவ‌து, வ‌ச‌திய‌ற்ற‌வ‌ற்க‌ளுக்கு ம‌ருத்துவ‌ உத‌வி, க‌ல்வி உத‌வி போன்ற‌வ‌ற்றை செய்து வ‌ரும் வீஷேர் அமைப்பு போன்ற‌வை . ஒவ்வொரு மென்பொருள் நிறுவ‌ன‌த்திலும் ஒரு அமைப்பு இருக்கின்ற‌து, அவ‌ர்க‌ளும் க‌ல்வி உத‌வி, ம‌ருத்துவ‌ உத‌வி போன்ற‌வ‌ற்றை செய்து கொண்டு இருக்கின்றார்க‌ள்.
    இன்றைய‌ இளையோர் தாங்க‌ள் ச‌ம்பாதிக்கும் ப‌ண‌த்தில் தாங்க‌ள் ம‌ட்டும் ம‌கிழ்ச்சியாய் இருக்க‌ வேண்டும் என‌ நினைப்ப‌தில்லை, பிற‌ருக்கும் உத‌வ‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். ஒரு வேளை இதே எண்ண‌த்தின் வெளிப்பாடாய் ஆன்மீக‌ காரிய‌ங்க‌ளுக்கும் தாராள‌மாய் உத‌வ‌லாம். ஆனால் என‌க்கு அது குறித்த‌ செய்திக‌ள் எதுவும் தெரியாது.

    ReplyDelete
  3. அன்புள்ள ஜோசப் ஐயா,

    உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

    உதாரணமாக சென்னையில் எல்லா யோகா/தியான நிலையங்களும் சரி, வேதபாட சாலைகளும் சரி, மாணவர்களால் நிறைந்துள்ளது.

    நீங்கள் குறிப்பிட்டது போல், உதவும் உள்ளமும் இன்றைய இளைஞர்களிடம் மிகவும் உயர்ந்துள்ளது/ விஸ்தாரமடைந்துள்ளது.

    இந்த இரண்டும் சமூகத்திற்கு நிச்சயம் மகிழ்ச்சியான செய்தி தான்.

    நல்ல மனம் வாழ்க!

    அன்புடன்
    என் சுரேஷ்

    ReplyDelete
  4. வேகமாக இந்த உலகின் நிச்சயமற்றதன்மைகளால் ஏற்படும் மனபயம், மனஅழுத்தங்களால் இருக்கலாம்.

    ReplyDelete
  5. அன்பினிய சிவா,

    இன்றைய இளைஞர்கள் அடுத்தவர்களுக்கு உதவும் அன்புள்ளம் கொண்டவர்களாக இருப்பது மனதிற்கு மிகவும் சந்தோஷமாகத் தெரிகிறது.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. அன்பினிய சிவா,

    இன்றைய இளைஞர்கள் அடுத்தவர்களுக்கு உதவும் அன்புள்ளம் கொண்டவர்களாக இருப்பது மனதிற்கு மிகவும் சந்தோஷமாகத் தெரிகிறது.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. ஜோசப் அண்ணா சொல்வது போல் இளைஞர்களுக்கு உதவும் எண்ணம் அதிகமாகி இருக்கிறது... சமூகத்தை பற்றிய விழிப்புணர்வும் அதிமாகி இருக்கிறது... எனக்கு தெரிந்து பலர் ஆன்மீகத்தில் ஈடுபடுகிறார்கள் (என்னையும் சேர்த்து).. ஒரு சிலர் முழுமையாகவே தங்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள் (இதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்).. இதற்கு இதுதான் காரணம் என்று வரையறுக்க முடியாது. எப்படி ஒரு சிறிய பொறி பெருந்தீயை உருவாக்குமோ, ந்து போல மனதில் எழும் ஏதோ ஒரு எண்ணம் ஆன்மிகத்தில் அவர்களை ஈடுபட வைக்கிறது

    ReplyDelete
  8. அன்புள்ள தம்பி சிவா,

    உங்களுடைய பின்னூட்டம் படி எல்லோரும் உதவும் உள்ளம் கொண்டவர்களாக இருக்க எனது பிரார்த்தனைகள்.

    ReplyDelete