சி அ : என்னப்பா இந்த பதிவுல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச சப்ஜெக்ட் பத்தித்தானே?.
சந்தேகம் என்ன ஆன்மீகம் தான் அதுலயும் அனைவரும் பார்த்து வியக்கும் சில பதிவர்களை அறிமுகம் செய்யலாம்னு இருக்கேன்.
பெ. அ : அதான் அவங்களைப் பாத்து எல்லாரும் மூக்கில விரல வைக்கிறாங்கன்னு சொல்றேங்களே பின்ன அவங்களுக்கு எதுக்கு அறிமுகம்.
நீ சொல்றது கரெக்ட்தான் , அவங்க எல்லாம் குன்றின்மேல் இட்ட விளக்குகள், அதனாலதான் அனைவரும் பார்த்து வியக்கும்ன்னு தலைப்பு கொடுத்திருக்கேன்.
சி. அ : சரிப்பா, யாரை மொதல்ல சொல்ல போறீங்க?
இவரை சிலர் பதிமூன்றாம் ஆழ்வாருன்னு கூப்பிடறாங்க, சிலர் விஷ்ணுங்கறாங்க, ஒருத்தர் கண்ணாங்கறாங்க, வேறொருத்தர் வைணவ வாரியாருங்கறாங்க, சன்மத காவலர்ங்கறாங்க, மறு பக்கம் வருத்தபடாத வாலிபர் சங்கத்துல இவரை இளையனாருன்னு புகழ்றாங்க, துளசி டீச்சர் ***-உனக்கு ஆப்பு ஏலோ ரெம்பாவாய்ன்னு தலைப்பு போட்டுட்டு இவரை புகழறாங்க.
பெ.அ : எனக்கு புரிஞ்சு போச்சு, தமிழ் இவர் கையில் மட்டும் எப்படி இப்படி வளையுதுன்னு நானும் ரொம்பத்தடவை ஆச்சரியப்பட்டிருக்கேன். சேந்தானார் சரிதத்தை எவ்வளவு அருமையா தில்லை நடராசன் தின்பானா ஏழை வீட்டுக் களியை? ன்னுட்டுகொடுத்தாரு.
இவ்வளவு கூறிய பின்னுமா அன்பர்களே தெரியவில்லை அவர் தான் The Great kannabiran, RAVI SHANKAR (KRS). ஆன்மீகமும் காதலும் எனது இரு கண்கள் என்று கூறும் இவர் ஒரு சகல கலா வல்லவ்ன், எழுதுகின்றார், பாடுகின்றார், வரைகின்றார் எல்லாவற்றிலும் இவர் வல்லவர். கண்ணன் பாட்டு, முருகனருள், சிவன் பாட்டு, அம்மன் பாட்டு எல்லாத்திலயும் இவரின் பங்கு உண்டு.
சி. அ : அப்பா இவர் எழுதின சுப்ரபாத பதிவு நெசமாவே சூப்பர்ப்பா,
இன்ன்னொரு பதிவு சிவலிங்கம் ச்சே "அதை"யா குறிக்கிறது? சூப்பரோ சூப்பர்.
இவர், குமரன், சைலஜா, கவிநயா எல்லாம் ஒன்னா சேர்ந்து பல அருமையான பதிவுகள் தர்றாங்க.
மாதவிப்பந்தல் ஒரு பிரம்மகமலம் என்பதில் ஐயமில்லை
.
மூவரும் கோரஸாக KRS ஐயா! தாங்கள் வாழ்க பல்லாண்டு! வளர்க தங்கள் தொண்டு!.எல்லோரும் உங்களுக்கு பட்டம் தந்திருக்கறாங்க நாங்களும் உங்களுக்கு நவீன நாரதருன்னு பட்டம் தர்றோம்.
-------------------------------------------------------------------------------------
பெ. அ : அடுத்தது குமரன் சாரை பற்றி சொல்லலாங்களா?
நீ சொன்னா அதுக்கு நான் மறுப்பு சொல்ல முடியுமா? அப்பிடியே செய்துறலாம்.
சி. அ : இதுக்கு முதல்ல எழுதின பதிவுல அபிராமி அந்தாதிக்கு விளக்கம் எழுதின கூடல் மாநகர அஙகிள்ன்னு சொன்னீங்களே அவராப்பா?.
பெ அ : ம்ம்ம்ம் இருங்க இருங்க , இவருதானே புல்லாகிப் பூண்டாகி நினைத்ததும் நடந்ததும் ன்னு அருமையான தொடர் கதை எழுதினாரு?.
சரியா சொன்னமா, ஆன்மீகமும் இலக்கியமும் இவரது இரண்டு கண்கள்.
அடியேன் சிறிய ஞானத்தன் என்று அடக்கமாக சொல்லிக் கொள்ளும் இவர் எழுவதோ பெரிய ஞானங்களைப் பற்றித்தான்.
ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்க்கும் பொருள் விளக்கம் சொல்ல ஆரம்பிச்சிருக்காரு.
பெ.அ : இவரும் கண்ணன் பாட்டு, சிவன் பாட்டு, அம்மன் பாட்டு, முருகனருள் அத்தனையிலும் கலந்து கொள்றாரே.
இவர் திருப்பாவைக்கு ஒரு வலைப்பூவும் எழுதியுள்ளார்.
இரண்டாவது தடவை தமிழ் மணத்தின் நட்சத்திர பதிவாளர் ஆன வெகு சிலருல இவரும் ஒருத்தருங்களிருந்தே இவரோட எழுத்து வன்மை அனைவருக்கும் புரிஞ்சிருக்குமே.
மூணு பேரும் சேர்ந்து இவரையும், தங்கள் சேவை மேலும் சிறக்கன்னு வாழ்த்துகிறோம்.
------------------------------------------------------------------------------------
சி அ : இப்ப ஒரு தலைவியைப் பத்தி சொல்லலாமா அப்பா?
எந்தத் தலைவிம்மா?
பெ அ: வலைத்தலைவிதான் அதாவது வலை அன்பர்கள் அன்போட தலைவின்னு கூப்பிடற கீதா சாம்பசிவம் அம்மாவைப்பத்தித்தான்.
இவங்களோட காலடி சுவட்டிலே அப்படியே அடியேன் எழுதுறேன்னோன்னு சில சமயம் சந்தேகம் வரும். இவங்க முதல்ல ஆன்மீகப் பயணம் பதிவு திருக்கயிலாய யாத்திரை பற்றி இவருதான் எழுதினார் அதுவும் , மிகவும் அருமையாக எழுதியிருக்கிறாங்க இவங்க.
பெ. அ : இவங்க நேபாளத்தின் வழியாக போனாங்க நீங்க இந்தியா வழியாக போனீங்க அல்லவா ?
அதேதான் அதனால ரெண்டு பேரு பதிவுகளிலும் நிறைய மாறுதல்கள் உள்ளன அதனால இஷ்டப்பட்டவங்க வந்து தாராளமா படிக்கலாம் முதல்ல படிச்சதையே மறுபடியும் படிப்போமோன்னு பயம் வேண்டாம்.
சி. அ : யாத்திரையை விட்டு நீங்க மறுபடியும் அவங்க எழுதற நடராஜரைப் பற்றியும் எழுதுறீங்க இல்லப்பா? (மனசுக்குள்ள ... ஈயடிச்சான் காப்பி)
ஆமாம்மா, ஆனா அவங்க அளவுக்கு ஆழமாக ஆராய்ச்சி செய்து எழுத நிச்சயமா நம்மாள முடியாதும்மா. அவ்வளவு ஆத்மார்த்தமா எழுதறாங்க அவங்க, simply superb.
பெ. அ : இதை தவிர இவங்க எண்ணங்கள் என்னும் வலைப்பூவிலே "கதை கதையாம் காரணமாம்னு" இராமாயண கதையை சூப்பரா சொல்லிட்டு வராங்க.
சி .அ : அந்த பதிவுல ஆடிப் பூரத்த்தன்னிக்கு "திருவாடிப் பூரத்து ஜெகத்துதித்தாள் வாழியேன்னு" , ஆண்டாள் பற்றியும் அவங்களோட திருப்பாவையைப் பற்றியும் ஒரு சூப்பர் பதிவு போட்டிருக்காங்களே அதைப் படிச்சீங்களாப்பா?
படிக்காம இருப்பனா? படிச்சிட்டேனே, திருப்பாவை , நாச்சியார் திருமொழி இரண்டையும் அற்புதமா எடுத்து எழுதியிருக்காங்க.
சி. அ : இப்ப கணபதிராயன் அவனிரு காலைப் பிடிப்போம்னுட்டு விநாயகரைப் பத்தியும் எழுதிட்டு வராங்க இல்லப்பா?
பெ. அ : இவங்களும் மதுரைக்காரங்களா?
அட! எப்படி கரெக்டா சொல்ற? சரி
மூவரும் : அவருக்கும் வாழ்த்து சொல்லுவோமா? அருமையான தொண்டு செய்யும் கீதாம்மா, வளர்க தங்கள் தொண்டு.
-----------------------------------------------
நீயேந்தும் கிளியாக
நான் மாறக் கூடாதோ? - உன்
காலடியில் ஒரு மலராய்
நான் சேரக் கூடாதோ?
சி. அ : என்னப்பா திடீர்ன்னு பாட ஆரம்பிச்சிட்டீங்க, வலைச்சரத்துல பதிவு எழுதறதை விட்டுட்டு, எதாவது நட்டு கிட்டு கழண்டிடுச்சா?
அப்படித்தான்னு வெச்சுக்கோவே இவங்க கவிதையைப் படிக்கறவங்க எல்லாம் இப்படித்தான் ஆயிடறாங்க.
பெ.அ : யாருங்க அவங்க.
கண்ணனுக்குத் தந்த உள்ளம் அப்படின்னு ஒரு அருமையான தொடர் கதையும் எழுதியிருகங்க இப்ப சொல்லு அவங்க யாருன்னு.
பெ. அ : யாருன்னு இன்னும் தெரியல்லையே.
சி. அ : மம்மி ட்யூப் லைட் , இது கூடவா தெரியல்லை, கவிநயா அவங்களை சொல்றாரு அப்பா.
பெ. அ: "நினைவின் விளிம்பில்..." உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்... அருமையான கவிதைகளை எழுதுறாங்க.
" நினைச்சுட்டீங்க! அதை சொல்லீடுங்க :) ன்னு அவர் பின்னூட்டம் இடச்சொல்லும் பாணி சூப்பர்.
சி. அ : இப்பத்தான் அவங்க 50வது பதிவு போட்டு தங்க விழா கொண்டாடியிருக்காங்க,
அவங்களுக்கும் ஒரு ஓ! போடலாம். இன்னும் பல கவிதைகள் எழுதி நல்ல மணம் பரப்பு வேண்டுகின்றோம் கவிநயா.
------------------------------------------------------------------
இன்று தியாகராஜரின் அகோர முகம் எனப்படும் தெற்கு முக தரிச்னம் பெற்று இன்புறுங்கள் அன்பர்களே.
div align="center">
தெற்கு முகம் - அகோர முகம் : தக்ஷ’ணாமூர்த்தி ரூபம். இந்தியாவை நோக்கியுள்ள முகம். யாத்திரை செல்லும் போது முதலில் தரிசனம் தரும் முகம். திருமுக வதனம், முக்கண்கள், ஜடா முடி முதலியன தரிசனம் தரும் முகம். வலப்பக்கத்திலே கணேசரையும் எதிரே நந்தியெம்பெருமானையும் தரிசனம் தரும் முகம். யம துவாரத்திலிருந்தும் தரிசனம் செய்யும் முகம். மூன்று நாட்கள் தரிசனம் தரும் முகம். மானசரோவர் மற்றும் இராக்ஷஸ் தால் தடாககங்களிடமிருந்தும் தரிசனம் செய்யும் முகம்.
அகோர முக தரிசனம் அருமை. கணபதிகள் இருவரையும் ஒரு சேர எம்பிரானோடு சேர்த்து காட்டியதற்கும் நன்றிகள்.
ReplyDeleteயாத்திரை இன்னும் தொடரும் வந்து தரிசியுங்கள் குமரன் ஐயா.
ReplyDeleteஅன்பான சொற்களுக்கும் ஆசிகளுக்கும் நன்றி கைலாஷி ஐயா!
ReplyDeleteஅடியேன் பொடியேன்!
மட்டத்தில் உள்ள அடியேனுக்குப் பட்டமா?
அடி மட்டத்தில் இருந்து திரு-அடி மட்டம் பற்ற ஆசி கூறுங்கள்! அது போதும்!
கயிலைப் படங்கள் பலவற்றைச் சேமித்துக் கொண்டேன்!
ReplyDeleteகயிலை நாதன்
எதிரே காளை நாதன்
உடன் கண நாதன்
என்று காணக் கிடைக்காத காட்சி...காட்டித் தந்தமைக்கு அடியோங்கள் நன்றி!
குமரன் அகில உலக ஆன்மீக சூப்பர் ஸ்டார்! அவரை அ.உ.ஆ.சூ என்று தான் அழைப்போம்!
ReplyDeleteஅடியேன் பதிவு வாசிப்பாளராய் மட்டுமே இருந்த காலத்தில், குமரன் தான் எனக்கு விடி வெள்ளி!
குமரன் வலையுலகில் அருந்தமிழுக்கும் ஆன்மீகத்துக்கும் செய்யும் நற்செயல்களைப் பட்டியல் இட்டு மாளாது!
(ஒரு முறை பேர் சொல்லி மரியாதைக் குறைவாய் கூப்பிட்டுக்கறேன்...)
எங்கள் குமரா - இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
கீதாம்மா = நிரந்தர முதல்வர் மாதிரி நிரந்தரத் தலைவி! சிம்ம வாகினி! கர்-என்னும் கர்ஜனை தலைவி எம்பெருமாட்டியின் தாரக மந்திரம்! :)
கவிநயா அக்கா = கவிதாயினி கவிநயா! கவி, நயம் என்று தனியாகப் பிரிக்க முடியாமல், ஒன்றாய் இருப்பவர்!
நாங்க பதிவு இடும் முன்னரே, கவி அக்காவின் பின்னூட்டம் அங்கு இருக்கும்!
"பின்னூட்ட மின்னல்"-ன்னே அக்காவுக்குப் பட்டம் கொடுக்கலாம்!
இது போன்ற சமயங்களில் என் நெஞ்சினிலே விரும்பிப் படிக்கும் இன்னொரு ஆன்மீகப் பதிவரைப் பற்றியும் சொல்ல விழைகிறேன்!
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பார்வையை மீறிச் சொல்வதாக யாரும் தவறாக எண்ண வேண்டாம்! நேற்று பூத்த மலர் வாசமும் தோட்டத்தில் வீசத் தானே செய்யும்!
அவர் பதிவர் ஜிரா என்னும் கோ.இராகவன்! சண்முகச் செம்மல்!
முருகனருள் வலைப்பூவில் இப்போதும் சிலவமயம் பதிவார்! அன்னாரின் கந்தரனுபூதியும் திருப்பாவையும் அவசியம் சுவைக்க வேண்டிய ஒன்று!
மாறுபட்ட கோணங்களில் இதிகாச நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டுவார். காளமேகம், பாஞ்சாலியின் கதைகள் அவற்றுள் சில!
இப்போது அதிகமாக அவர் ஆன்மிகம் பதிவதில்லை! அதற்கு அவர் ஆயிரம் தனிப்பட்ட காரணங்களைச் சொல்லிக் கொண்டாலும், அவை எல்லாம் சும்மாச் சாரமில்லாக் காரணங்கள்! :)
அவர் மீண்டும் ஆன்மீகம் பதிய வேண்டும்!
குறைந்த அளவிலாவது, நிறைந்த அளவில் பதிய வேண்டும்!
அதற்கு, முருகப்பெம்மானின் திருவருள் துணைக் கொண்டு, அவரிடம் முயன்று முட்டி மோதுவேன் என்பதையும் அடியேன் இவ்வமயம் தாழ்மையோடு சொல்லிக் கொள்கிறேன்! :)
இனியது கேட்கின், சொல்ல வேண்டும் அல்லவா?
சொல்லாமல் சொல்லிக் கேட்கும் நாள் போய்,
சொல்லிச் சொல்லிக் கேட்கும் நாள் எந்த நாளோ? அவர் உந்த நாளோ? அந்தக் கந்த நாளோ?
This comment has been removed by the author.
ReplyDeleteஆன்மீகம் அதிகம் பதிவாய் எழுதாமால், பின்னூட்டக் கேள்விகளாய் வேள்வி நடத்தும் பலர் உள்ளார்கள்! :)
ReplyDeleteவெட்டிப்பயல்
கோவி கண்ணன்
அம்பி
இலவசக் கொத்தனார்
...
...
இன்னும் பலர்
எந்தரோ மகானுபாவுலு!
அந்தரிகி வந்தனமுலு!
//இது போன்ற சமயங்களில் என் நெஞ்சினிலே விரும்பிப் படிக்கும் இன்னொரு ஆன்மீகப் பதிவரைப் பற்றியும் சொல்ல விழைகிறேன்!
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பார்வையை மீறிச் சொல்வதாக யாரும் தவறாக எண்ண வேண்டாம்! நேற்று பூத்த மலர் வாசமும் தோட்டத்தில் வீசத் தானே செய்யும்!
அவர் பதிவர் ஜிரா என்னும் கோ.இராகவன்! சண்முகச் செம்மல்!
முருகனருள் வலைப்பூவில் இப்போதும் சிலவமயம் பதிவார்! அன்னாரின் கந்தரனுபூதியும் திருப்பாவையும் அவசியம் சுவைக்க வேண்டிய ஒன்று!
மாறுபட்ட கோணங்களில் இதிகாச நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டுவார். காளமேகம், பாஞ்சாலியின் கதைகள் அவற்றுள் சில!
இப்போது அதிகமாக அவர் ஆன்மிகம் பதிவதில்லை! அதற்கு அவர் ஆயிரம் தனிப்பட்ட காரணங்களைச் சொல்லிக் கொண்டாலும், அவை எல்லாம் சும்மாச் சாரமில்லாக் காரணங்கள்!
அவர் மீண்டும் ஆன்மீகம் பதிய வேண்டும்!
குறைந்த அளவிலாவது, நிறைந்த அளவில் பதிய வேண்டும்!
அதற்கு, முருகப்பெம்மானின் திருவருள் துணைக் கொண்டு, அவரிடம் முயன்று முட்டி மோதுவேன் என்பதையும் அடியேன் இவ்வமயம் தாழ்மையோடு சொல்லிக் கொள்கிறேன்!
இனியது கேட்கின், சொல்ல வேண்டும் அல்லவா?
சொல்லாமல் சொல்லிக் கேட்கும் நாள் போய்,
சொல்லிச் சொல்லிக் கேட்கும் நாள் எந்த நாளோ? அவர் உந்த நாளோ? அந்தக் கந்த நாளோ?//
சொல்லுக்குச் சொல் வழிமொழிகிறேன். :-)
//அடி மட்டத்தில் இருந்து திரு-அடி மட்டம் பற்ற ஆசி கூறுங்கள்! அது போதும்!//
ReplyDeleteஎங்கள் அப்பர் பெருமான் போல நாத்திகம் சென்று பின் ஆத்திகத்திற்கு கொண்டுவரப்ப்ட்டது அந்த நீலகண்ட்ரின் ஆசி தானே.
அவரிடம் பிரார்த்தனை செய்கின்றேன் இன்னும் பல ஆயிரம் பதிவுகள் தாங்கள் எழுதி இன்னும் ஆன்மீக மணம் பரப்ப வேண்டும் என்று.
அடியேன் ஒரு பட்டம் மட்டுமே யோசிக்க முடிந்தது தாங்கள் எல்லாருக்கும் பட்டம் கொடுத்து உயர்த்தி விட்டீர்கள்.
ReplyDelete//குமரன் அகில உலக ஆன்மீக சூப்பர் ஸ்டார்!//
அகில உலக் ஆன்மீக சூப்பர் ஸ்டார் குமரன் சேவை மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.
//கீதாம்மா = நிரந்தர முதல்வர் மாதிரி நிரந்தரத் தலைவி! சிம்ம வாகினி! கர்-என்னும் கர்ஜனை தலைவி //
யாரோ ஒருவர் நீங்கள் இராமாயணம் எழுதுவது தேவையற்றது என்பதற்காக கீதாம்மா கர்ஜித்தது இன்னும் நினைவில் உள்ளது. அம்மா வாழ்க உங்கள் தொண்டு.
//"பின்னூட்ட மின்னல்"-ன்னே அக்காவுக்குப் பட்டம் கொடுக்கலாம்!//
அருமையான observation கண்ணபிரானாரே, பதிவு வெளியிட்டவுடன் எப்படித்தான் அவருக்கு தெரிகின்றது என்று அடியேனும் பலமுறை வியந்திருக்கிறேன்.
சபாஷ் சரியான பட்டங்கள்.
//வலைச்சர ஆசிரியர் பார்வையை மீறிச் சொல்வதாக யாரும் தவறாக எண்ண வேண்டாம்! நேற்று பூத்த மலர் வாசமும் தோட்டத்தில் வீசத் தானே செய்யும்!//
ReplyDeleteவலைச்சரத்தின் நோக்கமே எவ்வளவு பதிவர்களை அடையாளம் காட்ட முடியுமோ அவ்வளவு பேரை அடையாளம் காட்டுவதுதான்.
அடியேன் சீனா ஐயாவிடம் கேட்டேன் ஐயா ஒரு வாரத்தில் 50 பேரை கூற முடியும் போதுமா என்று?
அதற்கு அவர் அளித்த பதில், "வானமே எல்லை".
எனவே வலைச்சர ஆசிரியர் என்பது ஒரு ஆரம்பம் அதைத் தொடர்ந்து தாங்கள் வழி மொழிவது அருமை.
வரும் பதிவுகளிலும் வந்து தங்கள் கருத்துக்களை கூறுங்கள்
//அதற்கு, முருகப்பெம்மானின் திருவருள் துணைக் கொண்டு, அவரிடம் முயன்று முட்டி மோதுவேன் என்பதையும் அடியேன் இவ்வமயம் தாழ்மையோடு சொல்லிக் கொள்கிறேன்! :)//
ReplyDeleteதங்கள் சார்பாகவும், மற்ற அன்பர்கள் சார்பாகவும், அடியேனும் சேர்ந்து கொள்கிறேன், அவரை நம் வழிக்குக் கொண்டு வர.
//ஆன்மீகம் அதிகம் பதிவாய் எழுதாமால், பின்னூட்டக் கேள்விகளாய் வேள்வி நடத்தும் பலர் உள்ளார்கள்! :)
ReplyDeleteவெட்டிப்பயல்
கோவி கண்ணன்
அம்பி
இலவசக் கொத்தனார்
...
...
இன்னும் பலர்
எந்தரோ மகானுபாவுலு!
அந்தரிகி வந்தனமுலு!//
ஆம் எங்க சுத்துனாலும் கடைசியில திண்ணைக்கு வந்து தானே ஆக வேண்டும் என்று ஒரு பழமொழி உள்ளதே.
நாத்திகம் பேசுவதாக நினைத்துக் கொண்டு கடவுளைத் திட்டுபவ்ர்கள் கூட உண்மையில் கடவுளை எவ்விதத்திலாவது நினைக்கின்றனர் அல்லவா? ( சிசுபாலன், இராவணன், கம்சன் போல) அவர்களுக்கும் அல்லவா அருளினான் அந்த கருணைக் கடல்.
படங்கள் எல்லாம் அருமை கைலாஷி ஐயா...கே.ஆர்.எஸ் பற்றிய வரிகள் மிகச்சரி...நானும் வழிமொழிகிறேன் :)
ReplyDeleteவாருங்கள் மதுரையம்பதி ஐயா.
ReplyDelete//ஐயா...கே.ஆர்.எஸ் பற்றிய வரிகள் மிகச்சரி...நானும் வழிமொழிகிறேன் :)//
இன்னும் ஒரு வோட்டு இரவிசங்கருக்கு.
வாழ்த்துக்கள்.
அருமை கைலாஷி ஐயா, இன்னிக்குப் பலநாட்கள் கழிச்சுத் தமிழ்மணத்தைத் திறந்தால் இவ்வாரமும் தொடரும் ஆசிரியர்னு தலைப்பைப் பார்த்துட்டு வந்தேன், நிஜமாவே ஆச்சரியமா இருக்கு! இவ்வளவு உன்னிப்பான கவனிப்போடு எழுதவும் செய்யறீங்கன்னா அது தான் உண்மையான தொண்டு, வாழ்த்துகள். மனப் பூர்வமான வாழ்த்துகள். திரும்பி வந்து எல்லாத்தையும் படிக்கிறேன்.
ReplyDelete//இவ்வளவு உன்னிப்பான கவனிப்போடு எழுதவும் செய்யறீங்கன்னா அது தான் உண்மையான தொண்டு, வாழ்த்துகள்//
ReplyDeleteமற்றவர்களின் எழுத்துக்களில் இவ்வளவு உன்னிப்பான கவனிப்போடுனு வந்திருக்கணும், அந்த இரண்டு வார்த்தைகள் விடுபட்டுப் போயிருக்கின்றது. நல்லவேளையா பின்னூட்டப் பெட்டி முழுக்கத் திறந்தே இருக்கு, திருத்தம் உடனே சொல்ல முடிந்தது, இறை அருளாலே.
வாருங்கள் கீதாம்மா.
ReplyDelete//அருமை கைலாஷி ஐயா//
தாங்கள் எனக்கு முன்னோடி, ஐயா இல்லாமல் அழைக்கலாமே.
இன்று மதியம் பதிவு எழுதிக் கொண்டிருக்கும் போதுதான் யோசித்தேன் ஐயனின் அற்புத தரிசனம் காண கீதாம்மா இன்னும் ஏன் வரவில்லை தெரியவில்லையே என்று.
மலைக்கு மருகர் எனது வேண்டுதலைக் கேட்டு தங்களுக்கு தரிசனம் தந்தது குறித்து மகிழ்ச்சி.