Sunday, September 7, 2008

இன்னுமொரு வாரம் எழுதும்

திருக்கயிலை நாதரின் பொன் முகங்கள்
வடக்கு முகம்

சூரிய ஒளி விழும் முகம் கிழக்கு
நேராக உள்ளது தெற்கு முகம்

வடக்கு முகம்


வடக்கு மற்றும் கிழக்கு பின் புறம்
சிவ லிங்கத்தின் தாரா போல் உள்ள பகுதி.



பொன்னிற எம்பெருமான்










எம்பெருமானின் சாதாரண தோற்றம்.
(படங்களின் மேல் கிளிக்கி பாருங்கள் முழு தோற்றத்தையும் காணலாம்)


இது வரை நடந்த கதை:

சீனா ஐயா வலைச்சரத்தில் செப்டெம்பர் மாதம் தாங்கள் ஆசியராக இருக்க சம்மதமா? எதோ ஒரு வாரத்தை தேர்ந்தெடுங்கள் என்று கேட்ட போது, முதலில் 8ம் தேதியிலிருந்து எழுதுகின்றேன் என்று ஒத்துக்கொண்டு ஓய்வாக இருந்த சமயம் ஒரு 6 பதிவுகளை எழுதி pendriveல் எடுத்துக்கொண்டு வெளியூர் பணி நிமித்தமாக சென்று விட்டேன்.


திடீரென்று ஒரு நாள் ஒரு மின்னஞ்சலில் ஐயா ஒன்றாம் தேதியிலிருந்தே எழுத முடியுமா? என்று கேட்டிருந்தார். முதலில் வெறும் ஆறு பதிவுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அவரிடம் ஐயா அதிகமான பதிவுகளை இட முடியாது முடிந்த வரை பதிவிடலாமா? என்று கேட்க அவரும் வானம் தான் எல்லை தங்களின் வானம் எதுவோ அது வரை தாங்கள் தொடுங்கள் என்று அனுமதியும் தந்தார்.


ஆகவே முதலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு மலர் பற்றி யோசித்திருக்கவில்லை, விநாயகரை பற்றியும் சொல்ல வேண்டும் அதே சமயம் அன்பர்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ன செய்வது என்று யோசித்த போதுதான் ஞான கணேசர் குழுப் பதிவுகளை அடையாளம் காட்டி அதில் எனக்காக ஒரு பாட்டு மலரையும் ஆரம்பி என்று ஆணையிட்டார். KRS அவர்களும் ஒத்துக் கொண்டார். விநாயக்ர் பாடல் துவங்கும் நாளை ஆவலுடன் எதிர்பாருங்கள்.



பகலில் பணி நிமித்தம் சென்று விட்டதால் இரவில்தான் பதிவுகளை பதிவிட சமயம் கிடைத்தது. ஆயினும் தமிழ் மணத்தில் பதிவிட மறந்து விட்டேன் அதை சுற்றி காட்டி சரி செய்தார் சீனா சார்.

ஆறு பதிவுகளைப்பிரித்து, ஒன்று கூட்டி இந்த முதல் வாரம் எப்படியோ பத்து பதிவுகள் இட்டு விட்டேன்.



கிழக்கிலிருந்து அதாவ்து நியூசிலாந்திலிருந்து துளசி டீச்சரும், சின்ன அம்மிணியும், மேற்கிலிருந்து அதாவது அமெரிக்காவிலிருந்து KRS, குமரன் முதல் அநேகர் வந்து திருக்கயிலை நாதர் தரிசனம் பெற்று சென்றிருக்கிறனர். தினமும் ஐயன் தரிசனம் தர ஐடியா கொடுத்த( இனி வாரம் முழுவது சிவ சிவ என்றிருக்கும்) துளசி டீச்சருக்கு நன்றி. பதிவிடுவதற்கு முன்பே வந்து வரவேற்ற சதாங்கா முதல் இன்று வரை வந்து தரிசனம் பெற்று சென்ற அனைவருக்கும் நன்றி.



வேளராசி அவர்கள் ஐயா திருக்கயிலையின் பொன்னிற படம் பதிவிடுங்கள் என்று கேட்டிருந்தார் இப்பதிவில் அப்படங்களை தாங்களும் தரிசனம் செய்யலாம், இப்படங்களை சொடுக்கினால் உண்மையான பெரிய படம் கிட்டும்.



இன்னும் ஒரு வாரம் எழுத அனுமதியுள்ளது இதைப்போலவே வந்து தரிசனம் பெற வேண்டுகிறேன். இனி மேலும் கொங்கு பாஷையில் தங்களை கஷ்டப்படுத்தாமல் நேராகவே எழுதுகின்றேன்.


7 comments:

  1. அன்பர்களின் வேண்டுகோளை ஏற்று கயிலை நாதனின் பொன்முகங்களைப் பதிவில் இட்டமைக்கு நன்றி கைலாஷி. தங்கள் பணி மேன்மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. பயணம், தரிசனம் என்பதெல்லாம் எல்லாருக்கும் அமைஞ்சுடறதில்லைங்க.

    இப்ப உடல் இருக்கும் நிலையில் மானஸரோவர் எல்லாம் போகும் வாய்ப்பு அறவே இல்லை எனக்கு.

    உங்க பதிவின்மூலம் கயிலையை ஒவ்வொரு கோணத்திலும் கண்டு மகிழ்கின்றேன்.

    இந்தவாரமும் தரிசனம் பண்ணிவையுங்க.

    ReplyDelete
  3. கயிலை போகணும்னு ஒரு ஆசை இருக்கு. எப்ப அமையுதுன்னு தெரியலை

    ReplyDelete
  4. //உங்க பதிவின்மூலம் கயிலையை ஒவ்வொரு கோணத்திலும் கண்டு மகிழ்கின்றேன்.//

    வாருங்கள் துளசி டீச்சர் நல்வரவு.

    தாங்கள் அளித்த ஒரு ஐடியாதான் வாரம் முழுவதும் தொடர்ந்த திருக்கயிலைந்ர்தன் தரிசனம், இல்லையென்றால் முதல் நாள் மட்டும் தான் படங்களை பதிவிட எண்ணியிருந்தேன்.

    எல்லாப் புண்ணியமும் உங்களுக்கே. கயிலை நாதரின் அருள் தங்களுக்கு பூரணமாக கிடைக்க அவரிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

    இந்த வாரத்தில் இன்னும் சில நாட்கள் தாங்கள் அவசியம் வந்து தரிசிக்க வேண்டியிருக்கும் எந்த நாள் என்பது சஸ்பென்ஸ்.

    திருக்கயிலை யாத்திரை பற்றிய CD/DVD/புத்தகம் தேவைப்பட்டால் தெரிவிக்கவும் நிச்சயம் அனுப்பி வைக்கின்றேன்.

    //இந்தவாரமும் தரிசனம் பண்ணிவையுங்க.//

    நிச்சயம் தரிசனம் தொடரும்.

    ReplyDelete
  5. //கயிலை போகணும்னு ஒரு ஆசை இருக்கு. எப்ப அமையுதுன்னு தெரியலை//

    தூய அன்புடன் தினமும் விளக்கேற்றி சிவசக்தியிடம், அம்மையப்பா தங்கள் தரிசனம் தர வேண்டும் என்று வேண்டுங்கள். அந்த கருணா மூர்த்தி நிச்சயம் செவி சாய்ப்பார்.

    பல பேருக்கு இந்த வழியை அடியேன் கூறியுள்ளேன் அவர்களும் கயிலை நாதரை தரிசனம் செய்து விட்டு வந்துள்ளனர்.

    உங்களுக்கு யாத்திரை சம்பந்தமான என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்ய காத்திருக்கின்றேன்.

    ReplyDelete
  6. கைலை நாதரை பல கோணங்களில் தரிசிக்க தந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. யாரை அருகே அழைத்து தரிசனம் தரவேண்டும், யாருக்கு தூரத்திலிருந்தே தரிசனம் தர வேண்டும், எப்போது தரிசனம் தர வேண்டும் என்று தீர்மானிப்பவர் அந்த நீலகண்டரே.

    எப்படி பெற்றாலும், அவர் தரிசனம் பெற்றவர்கள் அனைவரும் பேறு பெற்றோர்கள் என்பது மட்டும் உண்மை கவிநயா.

    ReplyDelete