மரபுக் கவிதை, புதுக் கவிதை என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறோம். மரபின் அடிப்படையில் இன்று எழுதினால் அது புதுக் கவிதையா இல்லை பழைய கவிதையா? சற்று சிக்கலான கேள்வி இல்லையா?
சரி, இதைப் பற்றிய நமது கவிஞர்களின் பதில் என்னொன்று நோக்குவோமே:
திருத்தி எழுதிய தீர்ப்புகள் எனும் எனும் தனதுக் கவிதைத் தொகுப்பு நூலில் இப்படிச் சொல்கிறார் வைரமுத்து:
புதுக்கவிதை
என்பது
சொற்கள் கொண்டாடும்
சுதந்திர தின விழா.
யாப்பு எனும் குதிருக்குள்
இலக்கணம் போட்ட
உத்தரவுக்குப் பயந்து உறங்கும்
சோம்பேறிச் சொற்களுக்கா
நீங்கள்
கவிதை என்று கட்டியங் கூறுவீர்?
ஒன்று கேட்கிறேன்:
உறைக்குள் இருந்தால்தான்
அதற்கு வாள் என்று பெயரா?
புதுக்கவிதை
எனும் போர்வாள்
இலக்கண உறையிலிருந்து
கவனமாகவே
கழற்றப்பட்டிருக்கிறது
ஏனெனில்
'சுவர்கோழிகள் கூவிப்
பொழுது விடியாது'
என்பதந்தப் போர்வாளுக்குப் புரிந்தே இருக்கிறது.
மரபுக் கவிதைகள்-
மண்ணில் இருந்தாலும்
விண்ணையே பார்த்துக் கொண்டிருக்கும்
மலர்வர்க்கங்கள்!
புதுக்கவிதைகள்-
விண்ணிலிருதாலூம்
மண்ணையே
பார்த்துக் கொண்டிருக்கும்
சூரிய சந்திரர்கள்.
கவிப் பேரரசு புதுக்கவிதையை இவ்வாறு விமர்சிக்கிறார். புதுக்கவிதை என்பது கட்டுப்பாடுகளை கட்டுடைத்த சுதந்திர இலக்கணம் எனச் சொல்கிறார்.
அதுவே முனைவர் தமிழ்குயிலார் க.கலியபெருமாள் தமிழ்க்குயில் எனும் தமது கவிதைத் தொகுப்பில் இவ்வாரு குறிப்பிட்டுள்ளார்.
ஒருநாள் ஞாயிறு மாலைப் போது
ஓய்வாய் வீட்டில் அமர்ந்து இருந்தேன்
அறிமுகம் இல்லா நண்பர் ஒருவர்
அருகில் வந்து வணக்கம் என்றார்
தானொரு புதுக்கவி என்று மிடுக்காய்
தன்னை தானே அறிமுகம் செய்தார்
"என்ன செய்தி' என்று கேட்டு
எதிரில் அவரை அமரச் சொன்னேன்
"பழைய புதிய கவிதைப் பற்றி ப
கர வேண்டும்" என்று சொன்னார்
"கவிதை யாப்பில் பழசு புதுசு
கல்வி பேதம் எதுவும் இல்லை
நேற்று எழுதியது பழைய கவிதை
இன்று எழுதினால் புதிய கவிதை
என்று கூறி அவரைப் பார்த்தேன்
ஏனோ அவர் முகம் வாடி விட்டது.
உந்து ஓட்டவும் பயிற்சி வேண்டும்
ஊசி போடவும் பயிற்சி வேண்டும்
ஆடிப்பாடவும் பயிற்சி வேண்டும்
ஆக்கிப் போடவும் பயிற்சி வேண்டும்
பயிற்சி இருந்தால் உயர்ச்சி அடையலாம்
பயிற்றிப் பலரை வழியும் நடத்தலாம்
முயற்சி இன்றியும் பயிற்சி இன்றியும்
முனைப்பு ஆர்வம் எதுவும் இன்றியும்
வரியை மடக்கி வார்த்தை அடக்கி
வந்தது கவிதை வரகவி என்றால்
எந்த விதத்தில் சான்றோர் ஏற்பர்
எங்ஙனம் அஃது கவிதை யாகும்?
எதுகை மொனை என்பதை அறிந்து
ஏற்ற சொல்லால் பொருளைச் சொரிந்து
சொல்லில் இன்பம் பொருளில் இன்பம்
சொல்லும் முறையில் ஒலியில் இன்பம்
சிந்தனை உவமை செம்பொருள் துலங்கவும்
சீரொளிர் சந்தம் சேர்ந்து விளங்கவும்
நினைத்து மனதில் நெட்டுரு போடவும்
நிரவி நிற்பதே எதுகை மோனை!
கொஞ்சம் முயன்றால் கவிதை பாடலாம்
கூர்ந்து பயின்றால் காவியம் இயற்றலாம்
என்று கூறி நிமிர்ந்து பார்த்தேன்
என்ன பதிலோ என்று கேட்டேன்.
நின்று ஒருகணம் நிமிர்ந்து பார்த்தார்
நெருப்பில் அவர்முகம் நீந்தி வந்தது
"கருத்தைச் சொல்ல இலக்கணம் எதற்கு?
கவிதை நிலையில் எல்லாம் மயக்கு
பழமை போக்கி புதுமை நோக்கப்
பாடுங் கவிதை புதுக்கவி" என்றார்
எதுகை மோனை என்றால் என்ன?
என்று கேட்டும் வியப்பில் அழ்த்தினார்
இப்படியாக இரு கவிஞருக்கும் இரு மாறுபட்ட சிந்தனை வடிவங்கள் உள்ளன. காசி ஆனந்தன் புதுக் கவிதைகள் எனும் சொல்லை விடுத்து துணுக்குகள் அல்லது நறுக்குகள் எனக் குறிப்பிடுகிறார்.
கவிதை என்பது மரபிற்குற்பட்டு இருப்பதென்றால் எதற்காக புதுமை எனும் சொல்லை குடைந்து அதனுள் வைக்க வேண்டும். பழயது கவிதையாகவும் புதியதுக்கு புதுப் பெயரிட்டும் அழைப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
நமது பதிவுலகில் மரபுக் கவிதைகள் எழுதுபவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். திரு. அகரம் அழுதா வெண்பாக்களை எழுதிக் குவிப்பதோடு வெண்பா பயிற்சி வகுப்பையும் நடத்தி வருகிறார். இது பாராட்ட தக்கது.
நான் தவறாமல் கவிதை வாசிக்கும் இடம் திரு.சேவியர் அவர்களின் கவிதைச் சாலை. பதிவுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே அறிமுகமான பதிவு. அவரின் பல கவிதைகள் பிடிக்கும். அவற்றுள் ஒன்று மழலை ஏக்கங்கள்.
நான் பார்த்தவரை, பதிவுலகில் பெண்களே அதிகமாகக் கவிதைகளை எழுதிக் குவிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? கவிதை எழுத மெல்லிய மனது வேண்டும் என்பார்கள். பெண்கள் மெல்லிய மனம் கொண்டவர்களாக இருப்பதினாலா?
அப்படி அறிமுகமானவர்களில் ஒருவர் ஹேமா. இவர் சுவிஸ் நாட்டில் இருக்கிறார். திறம்பட பல கவிதைகளை எழுதியுள்ளார். குழந்தை நிலா எனும் தளத்தில் இவர் கை வண்ணத்தைக் காண முடிகிறது.
பதிவுலகில் ஆரம்பக் காலத்தில் அறிமுகமானவர் சத்தியா. இவர் கவிதைகளை படித்து பொறாமைபட்டுக் கொண்டதும் உண்டு. அவ்வளவு அருமையாக கவிதைகளை எழுதுகிறார். இவர் பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறார். கடந்த வருடம் தன் குடும்பத்தோடு மலேசியா வந்திருந்தார். இனிமையாகப் பழகக் கூடியவர். சத்தியாவின் நிசப்தம் எனும் தளதில் இவரது கவிதைகள் காணக் கிடக்கின்றன.
அடுத்ததாக நான் அடிக்கடி கவிதைகளை படிக்கச் செல்லுமிடம் இனியவள் புனிதாவின் தளமாகும். இவர் என் ஊர்க்காரர். ஒரே மாநிலத்தில் 30 நிமிட பயண வித்தியாச குடியிருப்புகளில் வசிக்கிறோம். இவரை கவிதைக் காதலி இனியவள் புனிதா எனக் குறிப்பிடுவதும் உண்டு. அவருடைய இதமான கவிதைகள் ஈரமான நினைவுகள் எனும் தளத்தில் இனிமையோடு உள்ளன.
அடுத்ததாக நவின் பிரகாஷ் என்பவரின் தளம். இவர் தளத்தில் படிப்பதோடு சரி. பின்னூட்டமோ அல்லது அவரை பற்றி அறிந்துக் கொண்டதோ இல்லை. இவரின் காதல் கவிதைகளும் நல்ல கலக்கலாக இருக்கிறது. கிளுகிளுப்பாகவும் இருக்கிறது. இவரின் கவிதைகள் ஆதலினால் எனும் தளத்தில் எழுதப்பட்டு வருகிறது. அவருக்கு இவ்வேளையில் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.
மேலும் சில கவிதை தளங்கள்:
எம்.ரிஷான் ஷெரீப் கவிதகள் ரிஷான் எழுதும் பதிவுகளின் பட்டியலை பார்த்தாலே மிதமாக தலைச் சுற்றல் வருகிறது. அவர் ஒரு புஜபல பராக்கிரமசாலி. வாழ்த்துக்கள் ரிஷான்
கொலைவெறி கவுஜைகள் இந்தப்பக்கம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பிரபல்யமான வலையுலக புலிகள் எழுதும் கவிதைகள். மரபற்ற பாணி என்பதினால் கவுஜை என குறிப்பிடுகிறார்கள் எனக் கருதுகிறேன்.
சத்தீஸ். இவரும் நிறைய காதல் கவிதைகளை எழுதியுள்ளார்.
மேலும் பலர் கவிதைக்கென வலைபதிவுகள் தொடங்கி வெற்றிகரமாக எழுதுகிறார்கள். எனக்குத் தெரிந்தவர்கள் யாருடைய பதிவாகினும் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
பி.கு: நாளை வெளியூருக்கு பயணம் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதின் காரணமாக வலைச்சர பொறுப்பாசிரியரிடம் விடுமுறை கோருகிறேன். தடங்கலுக்கு வருந்துகிறேன்.
மீண்டும் நாளை மறுநாள் சந்திப்போம்...

ஏரளமான வலைப்பூக்கள் புதியதாய் அறியத் தந்திருக்கிறாய் தம்பி.. நன்றி..
ReplyDelete//பி.கு: நாளை வெளியூருக்கு பயணம் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதின் காரணமாக வலைச்சர பொறுப்பாசிரியரிடம் விடுமுறை கோருகிறேன். தடங்களுக்கு வருந்துகிறேன்.//
Post option வசதியை பயன்படுத்தி நாளை வருவது போல் ஒரு பதிவை போட்டு வைத்திருக்கலாமே விக்கி..
//மரபின் அடிப்படையில் இன்று எழுதினால் அது புதுக் கவிதையா இல்லை பழைய கவிதையா? //
ReplyDeleteவிக்கி, கவிதை என்றாலே மரபுக்க்கவிதைதான்.
இலக்கணத்திற்கு உட்படாத கவிதைகளப் புதுக்கவிதை எனலாம்.
மரபோ, புதுசோ சொல்லும் கருத்து நறுக்கெனத் தைக்க வேண்டும்.
புதுக்கவிதை எழுதுவதைவிட மரபுக்க்கவிதை எழுதுவதுதான் சவால். இலக்கணத்திற்குட்பட்டு எழுதவேண்டும் சொல்லுவதும் சுவையாக இருக்கவேண்டும் என்பது சுலபமல்ல.
திருக்குறள், வெண்பா இலகணத்திற்குட்பட்ட மரபுக் கவிதை. அதையே ஒடித்து ஒன்றின்கீழ் ஒன்றாக எழுதினால் புதுக்கவிதை.
ஆனால் எல்லாப் புதுக் கவிதைகளும் நல்ல வாசிப்பனுபவத்தைத் தருவதில்லை.
நிறைட ஹோம் ஒர்க் பார்த்து இருக்கீங்க... நல்ல அறிமுகங்கள்!
ReplyDelete///SanJai said...
ReplyDeletePost option வசதியை பயன்படுத்தி நாளை வருவது போல் ஒரு பதிவை போட்டு வைத்திருக்கலாமே விக்கி..//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்
///வடகரை வேலன் said...
ReplyDeleteஆனால் எல்லாப் புதுக் கவிதைகளும் நல்ல வாசிப்பனுபவத்தைத் தருவதில்லை.//
அதே... ஆனால் எனக்கு மரபுக் கவிதைகளை விட புதுக் கவிதைகளே பிடிக்கின்றன.,... :)
வலைச்சரத்தில் எனது கவிதைகளுக்கான அறிமுகத்தையும் தந்ததற்கு நன்றி விக்னேஷ்வரன்... :)
ReplyDelete//அவர் ஒரு புஜபல பராக்கிரமசாலி.//
அவ்வ்வ்வ்வ்வ்
என்னை வச்சுக் காமெடி, கீமெடி பண்ணலியே? :P
விக்கி.இப்படி ஒரு சந்தோஷ அதிர்ச்சி தந்துவிட்டீர்களே!மிகவும் சந்தோஷமாய் இருக்கு.
ReplyDeleteஇன்னும் கவனமாக எழுத என்று ஒரு அக்கறையும் தந்திருக்கிறது உங்கள் கருத்து.நன்றி விக்கி.
நன்று நன்று விக்கி -சில அதிகம் அறியப்படாத பதிவர்களை அறிமுகப் படுத்தியது நன்று. அனைவருக்கும் ஆசிரியர் பதவி காத்திருக்கிறது.
ReplyDeleteநல்வாழ்த்துகள்
naLLa pathivu naNbaa..
ReplyDelete//மரபோ, புதுசோ சொல்லும் கருத்து நறுக்கெனத் தைக்க வேண்டும்.//
ReplyDeleter
e
p
e
a
t
t
e
a
y
.
.
.
.
கவிதைகள் சரம் தொடுக்கும் பொழுது தமிழச்சியின் கவிதைகளை இங்கும் இரட்டடிப்பு செய்ததுக்கு என் கண்டனங்கள்.
ReplyDeleteநாராயண, நாராயண! ஏதோ என்னால் முடிஞ்சது!
ReplyDeleteகவிதைப் பிரியர்களுக்கு சூப்பரான கலெக்ஷன் தந்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஎன்னுடைய இந்த வார இறுதியின் இனிமை உங்களுக்கு சமர்ப்பணம்.
@ சஞ்சய்
ReplyDeleteவருகைக்கு நன்றி சஞ்சய் அண்ணே... பயணம் ரத்து... :(
@ வடகரை வேலன்
அண்ணா நல்ல விளக்கமும் கருத்தும்... வருகைக்கு நன்றி.
நான் கேட்பது ஒன்றுதான் இன்று எழுதிய மரபுக் கவிதையை புதுக் கவிதை எனக் கூறலாமா கூடாதா.. நான் சொல்லும் அர்த்தம் இன்று எழுதிய புது படைப்பு எனும் அடிப்படையில்
@தமிழ் பிரியன்
மிக்க நன்றி தல. ஹொம் வர்க் இல்லைங்க... சும்மா டைம் பாஸ் மச்சி :-)
ஆமா நீங்க அன்று ஒரு கவிதை எழுதினீர்களே என்ன ஆச்சி?
@எம்.ரிஷன்
அண்ணே காமெடியெல்லாம் கிடையாது. நிசமாதான்... நல்லா எழுதுறிங்க...
@ஹேமா
உங்கள் எழுதுக்கள் எல்லாம் கவனமாகவே இருக்கு. உங்கள் மகிழ்ச்சி என் பெருமை...
@சீனா
நன்றி சீனா ஐயா...
@பரிசல்காரன்
நன்றி பரிசல்...
@குசும்பன்
அந்தக் கவிதையில் சுட்டியை கொடுங்கள் இணைத்து விடுகிறேன்... ஆமாம் அரட்டையில் ஏதோ குறி அறி என சொன்னீர்கள் இங்க அதன் விளக்கம் கொடுக்க முடியுமா?
நாராயணா நாராயணா... எல்லோரும் குசும்பனை கும்மவும்...
@ரத்னேஸ்
மிக்க நன்றி ரத்னேஸ் அண்ணே... மீண்டும் வருக...
தாங்கள் குறிப்பிட்டுக்காட்டியுள்ள வலைதளங்களில் என் வலையையும் குறிப்பிட்டமைக்கு என் முதற்கண் வணக்கம் கலந்த நன்றிகள். மரபு மற்றும் புதுமை பற்றி நல்ல பல கருத்துகளைத் திரட்டிக் கட்டுரைத்துள்ளீர்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteகவிதை பற்றிய விளக்கங்களை கவிஞர்களின் எண்ணங்களுடனே எடுத்துரைத்திருப்பது அருமை.
ReplyDelete//சத்தியா. இவர் கவிதைகளை படித்து பொறாமைபட்டுக் கொண்டதும் உண்டு.//
ReplyDeleteஇது என்ன புதுக் கதை விக்னேஷ்...?
சொல்லவே இல்லையே...?
ம்ம்... எனது கவிதைகளும் உங்கள் மனதில் இடம்பிடித்து...
இப்போது அது இந்த வலைச்சரத்திலும் அறிமுகமானதையிட்டு
மிகவும் சந்தோசம்.
அடுத்து...
நல்ல அழகாய் நல்ல பலகருத்துக்களை
தொகுத்துள்ள விதம் அருமை.
மிக்க நன்றிகள் விக்னேஷ்.
நன்றி தம்பி. அருமையான பதிவு.
ReplyDelete@அகரம் அமுதா
ReplyDeleteநன்றி அமுதா அவர்களே.
@ராமலஷ்மி
நன்றி. மீண்டும் வருக.
@சத்தியா
நன்றி சத்தியா. மேலும் பலக் கவிதைகள் எழுதுங்கள்.
@சேவியர்
நன்றி அண்ணா.
நன்றி விக்கி... எதிர்பார்க்கவில்லை... என்னுடைய முதல் விமர்சகன் நீங்கள்தானே?
ReplyDelete//ஒரே மாநிலத்தில் 30 நிமிட பயண வித்தியாச குடியிருப்புகளில் வசிக்கிறோம்//
நல்லவேளை வீட்டு எண்... சாலை பெயர் விடுப்பட்டுவிட்டது... :-P
//கவிதைக் காதலி இனியவள் புனிதா எனக் குறிப்பிடுவதும் உண்டு//
இது நெம்ப ஓவர் :-))
//முனைவர் தமிழ்குயிலார் க.கலியபெருமாள் //
தமிழ்குயிலாரை பற்றிய அறிமுகம் சிறப்பு... அவருடைய முன்னாள் மாணவி என்ற பெருமையில் சொல்கிறேன்!
அழகான பதிவு... பதிப்புகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் விக்னேஷ்...:))
@புனிதா
ReplyDeleteநன்றி. மீண்டும் வருக.
@நவீன் பிரகாஷ்
நன்றி.
சிறப்பான தொகுப்புப் பதிவு. காட்டியுள்ள சுட்டிகள் உங்கள் வாசிப்புத் திறனை பட்டியலிடுகின்றன.
ReplyDeleteஉரைநடையை மடக்கி எழுதினால் புதுக் கவிதை எனப்புரிந்து கொண்டவர்கள் ஏராளம். அதற்கேது வரையரை, அப்படியும் இருக்கலாம் :-)
nalla irukku post
ReplyDelete@முகவை மைந்தன்
ReplyDeleteநன்றி
@மங்களூர் சிவா
நன்றி பாஸூ...