என் மனம் கவர்ந்த இருபதிவர்களை குறித்த பதிவு இது.
இவர்களை உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். ஆனாலும் இவர்களைப் பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை.
மனசுக்குள் மத்தாப்பு
மென்பொருள் துறையில் இருப்பதாலோ என்னவோ மிக மென்மையான காதல் கதைகளை எழுதி குவிக்கிறார் இந்த பதிவர். மிக எளிய நடையில், சரளமான ஓட்டத்தில் கதை எழுதும் இவரது தனிச்சிறப்பே கதையின் இடையே வரும் கவிதைகளும் அந்த கதைக்கும், கவிதைக்கும் ஏற்றப் படங்களும் தான்.
இவரது கதாப்பாத்திரங்கள் எல்லாம் மிக சரளமான எளிய நடையில் உரையாடுவது போல் கதையை அமைத்திருப்பது இவரது தனிச் சிறப்பு. அத்தோடு இவரது கதைகளில் எல்லாம் முடிவுகளும் எப்போதும் இனிமையான முடிவுகளாகத்தான் இருக்கும். தன் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்தைக் கூட கதைக்குள் ஒரு அழகிய கவிதையை பொதிந்து வைத்து அதற்கும் சில அழகிய படங்களை சேர்த்து அழகாய் வாழ்த்துச் சொல்லும் பாசக்கார அக்கா இவர்.
தந்தையின் நினைவில் இவர் வடித்துள்ள இந்தக் கவிதை அனைவரின் உள்ளங்களையும் கட்டாயம் உருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
மனைவியின் மனதைக் கவர்வது எப்படி, பெண்களின் மனதைக் கவர்வது எப்படி என்றும் பல நல்ல பதிவுகளையும் இட்டு ரங்கமணிகளுக்கும், ரங்கமணியாக முயற்சிப்பவர்களுக்கும் பல பயனுள்ள ஆலோசனைகளையும் அள்ளித்தெளித்துள்ளார். இந்தப் பதிவுகளில் கூட உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் அழகிய படங்களின் அணிவரிசை உண்டு.

அழகிய பாடல் வரிகளை தலைப்பாக கொண்ட பல தொடர்கதைகளை எழுதியுள்ள இவரது, அத்தனை கதைகளிலும் கதையின் ஓட்டத்திற்கு தகுந்த அழகிய கவிதைகளும், படங்களும் இருக்கும் என்று நான் தனியே சொல்லவும் வேண்டுமோ? எனக்கென ஏற்கெனவே ...பிறந்தவள் இவளோ??? என்ற தலைப்பில் இவர் எழுதிய அழகிய தொடர்கதையும், அந்தக் கதையில் அவர் எடுத்துக் கொண்ட கதைத் தளமும், கதையை கொஞ்சம் கூட தொய்வில்லாமல் நகர்த்திய விதமும், கவித்துமான முடிவும் மிகவும் இனிமையாய் இருக்கும். படிக்காதவர்கள் படித்து இன்புறுங்களேன்.
கவிதை எழுதுபவர்களுக்கு கவிதாயினி எனப் பட்டமளிக்கின்றார்களே, நல்ல கதையும், கவிதையும் அதற்கு ஏற்ற படங்களையும் சேர்த்துத் தருபவர்களுக்கு என்ன பட்டம் அளிக்கலாம் என்று பின்னூட்டமிடுங்கள் , கட்டாயம் இந்த கதாசிரியருக்கு ஒரு சிறந்த பட்டம் அளிக்க வேண்டும்.
இத்தனைச் சிறந்த படைப்புகளுக்கு சொந்தக்காரரான இவர் சமீபகாலமாய் பணிச்சுமையின் காரணமாக எழுத இயலாமல் இருப்பது வருத்தமளிக்கும் செய்தி, பணிச்சுமையிலிருந்து விடுபட்டு, விரைவில் மீண்டும் சிறந்த படைப்புகளை அளிக்க வாழ்த்துவோம்.
பொடிப் பொண்ணு
நம்ம பக்கத்து வீட்டுல வாலுத்தனம் செஞ்சுகிட்டு இருக்க ஒரு சின்னப் பெண்ணைப் பார்ப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துவது தான் இந்த பொடிப் பொண்ணோட பதிவுகள். போதாத குறைக்கு இந்த பொடிப் பொண்ணுகிட்ட ஒரு கேமரா வேற மாட்டிகிடுச்சு. அத வைச்சுக்கிட்டு பறக்கிற பட்டாம்பூச்சி, தும்பி எல்லாத்தையும் படுத்துற பாடு இருக்கே, அத ஒரு பதிவ போட்டு வைச்சுருக்கு இந்த பொண்ணு. அதையும் பாருங்களேன்.
சொந்த ஊருக்கு பயணம் செய்யிறது சுகமான ஒன்னுதான், ஆனா தமிழ்நாடு போக்குவரத்து கழக பேருந்துல பயணம் செஞ்ச, எப்ப எங்க பேருந்து நிக்கும்னு தெரியாது, அப்டி ஒரு சோதனை பயணம் போனத கூட இந்த பொடிப் பொண்ணு எவ்வளவு சுவையா சொல்லியிருக்குன்னு பாருங்களேன்.
என்ன அந்த டண்டணக்க கவிதைகளும் , அந்த கவிதைகளுக்கு போட்ருக்க டி.ஆர் படமும்தான் கொஞ்சம் பயமா இருக்கு. என்னை போல் இளகிய மனம் படைத்தவர்கள் பொடிப் பொண்ணிண் டண்டணக்கா கவிதைகளை பார்க்காமல் விட்டுவிடுவது நலம்
இந்த வாலுப் பொண்ணு, இப்டி ஒரு ஆராய்சியா என ஆச்சரியப்படும் அளவுக்கு இந்த பொண்ணு எழுதியிருக்க ஒரு ஆராய்சி கட்டுரையப் பாருங்களேன். பழையப் பாடல்களிலும், புதியப் பாடல்களிலும் காட்சியமைப்பிலும், எடிட்டிங்கிலும் இருக்கும் துல்லியமான வேறுபாடுகளை அலசி ஆராயும் இந்த கட்டுரை, உங்களையும் கட்டாயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
எல்லாத்துக்கும் மேல இந்தப் பொடிப் பொண்ணு எங்க ஊரு பொண்ணுங்க.
மனசுக்குள் மத்தாப்பு திவ்யா, பொடிப் பொண்ணு இருவரையும் அறிமுகப்படுத்தும் பதிவல்ல இது. அவர்கள் ஏற்கனவே எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர்கள் தான். இது அவர்களின் படைப்புகளில் எனக்குப் பிடித்தவைகளை சொல்லும் ஒரு பதிவு மட்டுமே. வாருங்கள் என்னோடு சேர்ந்து இவர்களை நீங்களும் பாராட்டுங்கள், அதற்கு முன் அவர்களின் படைப்புகளை படித்துவிடுங்கள்.

மீ த பஸ்ட்டு
ReplyDelete//
ReplyDeleteஜெகதீசன் said...
மீ த பஸ்ட்டு
//
வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்!
//
ReplyDeleteவாருங்கள் என்னோடு சேர்ந்து இவர்களை நீங்களும் பாராட்டுங்கள், அதற்கு முன் அவர்களின் படைப்புகளை படித்துவிடுங்கள்.
//
வீட்டுல போய் படிக்கிறேன்... இப்ப பாராட்டிவிடுகிறேன்...
மத்தாப்புக்கும் பொடிப் பொண்ணுக்கும் பாராட்டுக்கள்!!!
ஜெகதீசனின் மூன்று பின்னூட்டத்தையும் வழி மொழிகிறேன்
ReplyDeleteதிவ்யா, பொடிப்பொண்ணு இருவருமே நல்ல பதிவர்கள். நான் உங்களுக்கு டாக் செய்த காதல் எனப்படுவது யாதெனில் பதிவைக் கூட நீங்க திவ்யாவுக்குத்தான் டாக் செய்தீங்கன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஇருவரில் பொடிப்பொண்ணு எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல் காரணம் எனது வலைப்பதிவிற்லு அவரது பதிவில் இனைப்பு குடுத்து இருக்கிறார்.
பொடிப்பொடியா எழுதுவியன்னு பாத்தா...!
ReplyDeleteபொடி வச்சு எழுதுறேளே!
மனசுக்குள்ள மத்தாப்பு!
வாழ்த்துக்கள்!
இட்லிப் பொடி காரம் தான்..
ReplyDeleteஆனால்..
அதில் ஒரு விறுவிறுப்பு உண்டு..
பொடிப்பொண்ணு அடக்கம் தான்..
ஆனால்..
இதில் ஒரு துறுதுறுப்பு உண்டு..
எல்லாம்..
தஞ்சாவூர் தண்ணீரின் மாயம்..
ஜோசஃப்!!
ReplyDeleteஎன் வலைதளம் குறித்தான உங்கள் பாராட்டுக்களும் ,
விரிவான விமர்சனமும் படித்ததும்.......
நன்றி சொல்ல
வார்த்தைகள்
எனக்குள் அங்குமிங்கும்
ஓடுகின்றன......
அவைகளை ஒன்றாக
சேர்த்து
நன்றி செலுத்தவா??
நல்ல பதிவர்களின் அறிமுகம் கிடைத்தது நன்றி
ReplyDeleteநல்ல பதிவர்களின் அறிமுகம் கிடைத்தது நன்றி//
ReplyDeleteநானும் மறுக்கா கூவிக்கிறேன்.
//மனசுக்குள் மத்தாப்பு திவ்யா, பொடிப் பொண்ணு இருவரையும் அறிமுகப்படுத்தும் பதிவல்ல இது. அவர்கள் ஏற்கனவே எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர்கள் தான்//
ReplyDeleteஅப்டியா? நான் இதுவரைக்கும் கேள்விப் பட்டதே இல்லையே..
சரி .. எதோ நல்லா எழுதுவாங்கன்னு சொல்லிட்டிங்க..
வாழ்த்து சொல்லிடுவோம்.. வாழ்த்துக்கள் திவ்யா & நித்யா.. :)
//
ReplyDeleteமனசுக்குள் மத்தாப்பு
மென்பொருள் துறையில் இருப்பதாலோ என்னவோ மிக மென்மையான காதல் கதைகளை எழுதி குவிக்கிறார் இந்த பதிவர்.
//
எப்பா இந்த பதிவர் அமேரிக்காவுல படிச்சினு இருக்கிறார்னு இல்ல தகவல்! மாத்தி சொல்லுறீங்கோ!!
சுட்டிகள் எல்லாம் ஜூப்பரு!
இருவருக்கும் பாராட்டுக்கள்!
மங்களூர் சிவா said...
ReplyDelete//
மனசுக்குள் மத்தாப்பு
மென்பொருள் துறையில் இருப்பதாலோ என்னவோ மிக மென்மையான காதல் கதைகளை எழுதி குவிக்கிறார் இந்த பதிவர்.
//
எப்பா இந்த பதிவர் அமேரிக்காவுல படிச்சினு இருக்கிறார்னு இல்ல தகவல்! மாத்தி சொல்லுறீங்கோ!!
சுட்டிகள் எல்லாம் ஜூப்பரு!
இருவருக்கும் பாராட்டுக்கள்
\\\
ரிப்பீட்டு...:)
@ Mangalore Shiva & Tamilan
ReplyDelete\மங்களூர் சிவா said...
//
மனசுக்குள் மத்தாப்பு
மென்பொருள் துறையில் இருப்பதாலோ என்னவோ மிக மென்மையான காதல் கதைகளை எழுதி குவிக்கிறார் இந்த பதிவர்.
//
எப்பா இந்த பதிவர் அமேரிக்காவுல படிச்சினு இருக்கிறார்னு இல்ல தகவல்! மாத்தி சொல்லுறீங்கோ!!\\
For your kind information, I have successfully completed my studies 3 months back & Im working at present.
மிகவும் நன்றி நண்பரே :)
ReplyDeleteபுதுப் பதிவராக இருக்கும் எனக்கு இவ்வள்வு ஊக்கம் கொடுத்து பாராட்டியமைக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி :) :)