சி.அ : இன்னா நைனா, காலங்கார்த்தால குந்திகினூ இன்னா ரோசனைல கீறீப்பா?
அது ஒன்னுமில்ல்ம்மே , ஏதோ ஒன்னு இடிக்குதும்மே அதாங் இன்னான்னு ரோசிச்சிகீனு கீறேன்.
பெ.அ : அட கஸ்மாலம், இதுக்கு என்னா ரோசனை, ஒரு தபா எழுதுனது எல்லாத்தயும் திருப்பிப்ப் பாரு, இன்னா விட்டு போச்சுன்னு அம்புட்டுடிம்.
கரீக்டா சொன்னேம்மே இப்பவே ஒரு தபா பாத்துட்றேன்.
சி.அ: இன்னா சிக்குச்சா.
ஆங் மாட்டிகிச்சு, புச்சா பதிவு எழுதவறங்லை சொல்லிக்க்லையே.
பெ அ. அதுக்கிண்ணா, இப்போ சொல்லிப்போடு
இத இபபால எழுதறேன், ரொம்ப டேங்ஸ்ம்மே.
பெ அ: சீக்கரம் எழுதுபா இல்லாட்ட டைம் முடிஞ்சு போகும் நாளைல இருந்து வேற மனுஷன் எழுதனுமில்ல.
அகாங் இப்பவே எழுதி கடாசிர்ரேங்.
(பிறந்தது,வளர்ந்தது பள்ளியில் படித்தது எல்லாம் உடுமலைப்பேட்டையில், மேற்படிப்புக்காக கிண்டி வந்த பின். இந்தியா முழுக்க சுற்றினாலும் வாசம் சென்னையிலே அதிகம், ஆயினும் சென்னை செந்தமிழ்( மெட்ராஸ் பாஷை) சரியாக வரவில்லை. ஆகவே இப்பதிவில் சிறு முயற்சி செய்துள்ளேன், ஆயினும் சரியாக் வராததால் பாதியில் விட்டு விடுகிறேன்.)
----------------------------------------------------------
வலைச்சரத்தில் புது அன்பர்களையும் அறிமுகம் செய்ய்யும் ஒரு வழக்கம் உள்ளது . ஆகவே இப்பதிவு அப்படிப்பட்ட புது பதிவர்களுக்காக.
ஆனால் முதல் அன்பர் அடியேன், கீதாம்மா போல திருக்கயிலாய தரிசனம் பெற்றவர். திருக்கயிலாய யாத்திரை பற்றி ஒரு நூலும் எழுதியுள்ளார், இது வரை எழுதிய பதிவுகளில் இவர் இடம் பெறவில்லை என்பதால் இவர் இப்பதிவில் இடம் பெறுகிறார்.
திருக்கயிலை நாத்னை தரிசன்ம் செய்யும் பேறு பெற்ற இன்னொரு அன்பர் சிங்கை கிருஷ்ணன்
இவரது வலைப்பூ சிங்கை கிருஷ்ணன் ப்திவுகள்
இவர் தன்னை பற்றி கூறும் அறிமுகம்:
தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மீகத் தேடலில் இன்புறுகிறேன். அம்மையப்பன் அருளால் மூன்று நூல்கள் எழுதியிருக்கிறேன். அருளாட்சி அழைக்கிறது, கண்டேன் கயிலையை, மற்றும் சிங்கப்பூர் கோவில்கள் என்பன அம்மூன்று நூல்கள்.
எனது பிற தளங்கள்:
சைவம்
சிங்கைக் கோவில்கள்
தற்போது பொருணை நதிக்கரை கோவிலகள் பற்றியும் பதிவிடுகிறார். வளர்க சிங்கை கிருஷ்ணன் ஐயாவின் தொண்டு.
--------------------------------
இனி சில புதுப்பதிவர்கள் பற்றிய அறிமுகம்
ரங்க மீனா மலேசியாவில் வசிப்பவர். மிகவும் அருமையாக ஆத்திச்சூடிக்கதைகளை பதிவிடுகிறார்.
ஆத்திசூடி நீதிக்கதைகள். இவர் ஏன் ஔவையின் கதைகளை பற்றி எழுதுகின்றார் அவரே இவ்வாறு கூறுகின்றார்.
"இங்கு சொல்லப் போகும் 108 ஆத்திசூடிக்கான நீதிக்கதைகள் யாவும் அந்தக்கால கதைகள்!.இக்கதைகள் பெரும்பாலும் நாம் அறிந்ததுதான் என்றாலும் அறியாதவரும் இருப்பார்கள். இதில் வரும் பல கதைகள் இந்தக்கால கட்டத்திற்கு பொருந்தாமலும் இருக்கக்கூடும் அப்படி இருக்குமெனில் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்."
இவரது இன்னொரு வலை மொக்கு தாலாட்டு கூட்டுக்குடும்பங்கள் மறைந்து,கணவன் , மனைவி இருவரும் வேலைக்கு ஒடுவதால் மறைந்து வரும் தாலாட்டுப்பாடல்கள், அடுத்த தலைமுறைக்கு மறந்து போகாமல் இருக்க மல்ரும் நினைவுகளாய் தாலாட்டுப்படல்களை பதிவிடுகிறார்.
நன்றி மற்றும் வாழ்த்துக்க்கள் ரங்க மீனாம்மா.
-----------------------------
இவர் தற்பொது இங்கிலாந்தில் வசிக்கும் புது வண்டு. லண்டனில் வசிப்பதால் வலைப்பூவிற்கு Newbee என்று பெயரிட்டுள்ளார், ஆனால் URL - naanpudhuvandu என்று கொடுத்திருக்கிறார். பிறந்த வீட்டையும், புகுந்த வீட்டையும் விட்டுத்தராதது அருமையோ அருமை.
NewBee ஒரு வண்டின் ரீங்காரம், குழந்தைகளுக்கன படக்கதை, கதை என்று அருமையாக மிளிர்கிறது. தன் மகனுக்காக எழுதியதை அன்பர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும் என்று பதிவிடும் அன்பு உள்ளம் கொண்டவர்.
இவர் தன்னைப்பற்றி இப்படி சொல்லுகின்றார்.
வருகைக்கு நன்றி! உங்கள் வருகையால், நீங்கள் பெற்றது வண்டின் நட்பு; கொடுத்தது 'என் புன்னகை' யார் இந்த வண்டு? ஏன் இந்தப்பதிவு? வண்டு! உங்களைப் போல் ஒன்று. ஆம்! உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது........... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு?' என்று. :) :)
குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்' படிக்க கிளிக்குங்கள் இங்கே.
இவர் வலைச்சரத்தில் கற்ற புதுமொழியை ( விக்கி பாஷை) என்று அழைக்கலாமா? இப்படி பட்டியலிடுகிறார். புதிதாக வலையில் நுழையும் அன்பர்களுக்கு ஒரு அருமையான Dictionery இது.
1. வலைப்பூ = Blog / வலைத்தளம் = Website ;
2. பதிவு, இடுகை = Post ;
3. சுட்டி = Pointer, Link ;
4. வழிமொழிகிறேன், சொல்லேய், மறுக்கா சொல்லேய் = Repeat(u) - (நன்றி - TBCD :)) ;
5. மறுமொழி , பின்னூட்டம் = Comment ;
6. மறுமொழி மட்டுறுத்தல் = Comment moderation ;
7. சிரிப்பான் = smiley (நன்றி - ரசிகன்:-));
8. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...! அல்லது ஐயோ! = Oops! (நன்றி- An&);
9. முன்னோட்டம் = Trailer(நன்றி விஜய்);
10. முதலிலேயே நன்றி அல்லது முன் நன்றிகள் = Thanks in advance ;
11.அதிர்ஷ்டமடிக்கட்டும் = Best of Luck ;
12. சிறப்பாக அமையட்டும் = All the Best ;
13. அடிக்குறிப்புகள் = Footer Message(10,11,12,13 - நன்றி Shanevel)
மற்றவை அனைத்திற்கும் நன்றி - சீனா ஸார் :). (இன்னும் பழகுவேன்....) என்று கூறும் புது வண்டிற்க்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
( இரங்கமணி, தங்கமணி, கும்மி, மொக்கை, கவுஜை இதற்கெல்லாம் எனக்கும் விளக்கம் தெரியவில்லை யாராவது உதவுவீர்களா? அன்பர்களே) ------
-------------------------------------
அடுத்தப் புதுப்பதிவர் கடையம் ஆனந்த் அவர்கள்.
என்னுடன் நீங்களும், உங்களுடன் நானும்... பிடித்திருந்தால் பழகுவோம் (இது கடையத்து தென்றலின் அன்பு அழைப்பு) என்று ஆரம்பிக்கும் ஒரு பிள்ளையார் பக்தர். மார்ச் 2008ல் வலைப்பூவை துவங்கியவர் இது வரை 55 பதிவுகள் இட்டுள்ளார்.
மனம் இவரது வலைப்பூ.பல்வேறு தலைப்புக்ளிலும் எழுதி மலரத்தொடங்கியுள்ளார். தனக்கு பிடித்தது ஆன்மிகம் என்று சொல்லும் ஒரு இனிய அன்பர் இவர் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்.
என்னை பற்றி எழுதி சிறப்பித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன். நன்றி...நன்றி...நன்றி
ReplyDeleteஆன்மீகத்தில் ஆரம்பித்தேன் ஆன்மீகத்திலேயே முடிக்கின்றேன்.
ReplyDeleteநன்றி கடையம் ஆனந்த.
அன்பின் கைலாஷி
ReplyDeleteஅருமையான பதிவு - புதிய அறிமுகம் இல்லாத பதிவர்களைப் பற்றிய பதிவு - அனைவரும் படிக்க வேண்டிய சுட்டிகளைத் தந்த பதிவு.
நல்வாழ்த்துகள்
இரங்கமணி = கணவர்
தங்கமணி = மனைவி
நன்றி சீனா ஐயா,
ReplyDeleteவாய்ப்பு அளித்தமைக்கும் நடு நடுவே வந்து உற்சாகப்படுத்தியதற்கும்.
நாளை ஒரு பதிவுடன் விடை பெறுகின்றேன்.
கைலாஷி,
ReplyDeleteநலமா? :)
வண்டுவும் சிண்டுவும் தங்களைக் கவர்ந்ததில் மிக்க்க்க மகிழ்ச்சி!
கடையம் ஆனந்த், சிங்கை கிருஷ்ணா, ரங்கமீனா - அனைவரின் பதிவுகளின் சுட்டிகளுக்கும் நன்றி :)
//கைலாஷி,
ReplyDeleteநலமா? :)//
நலமே newbee.
அனைவர் சார்பாகவும் நன்றி கூறியதற்கு நன்றி.