எனக்கு மிகவும் பிடித்த நான் பலமுறை படித்த இந்த புத்தகம் The Goal - A Process of Ongoing Improvement. By Eliyahu M. Goldratt, Jeff Cox.
மருந்து சாப்பிட குழந்தைகள் மறுக்கும் போது அதே மருந்தை தேனில் கலந்து தருவார்கள் அல்லவா? அது போலத்தான் இந்த புத்தகமும். இலியாஹூ.எம்.கோல்ட்ராட் எனும் ஒரு சிறந்த தொழில் மேலாண்மை ஆலோசகரின் அருமையான கண்டுபிடிப்பான தியரி ஆஃப் கன்ஸ்ட்ரைன்ஸ் Theory of Constraints சுருக்கமாக TOC ஜெஃப் காக்ஸ் எனும் நாவலசிரியரின் கைவண்ணத்தில் அழகிய நாவலாக உருபெற்றதுதான் இந்த புத்தகம்.
இந்தக் கதையின் கதாநாயகன் அலெக்ஸ் ரோகோ ஒரு பெரிய உற்பத்தி நிறுவனத்தில் உள்ள மெட்டல் ப்ராஸஸிங் ப்ளாண்டின் மேலாளர். இவரது ப்ளான்ட்டில் எந்த வேலையும் நேரத்துக்கு முடிவதேயில்லை. இதனால் வாடிக்கையாளர்களிடம் கெட்ட பெயரும், நிறுவனத்துக்கு பொருள் இழப்பும் ஏற்படுகிறது. இதனால் இவரது உயர் அதிகாரி இவருக்கு 3 மாத கெடு விதிக்கிறார். இந்த மூன்று மாதத்திற்குள் இழப்பை சரிகட்டி, லாபம் சம்பாதிக்கவில்லையென்றால் உன் ப்ளான்ட்டை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என உயர் அதிகாரி சொல்லிவிடுகிறார்.
ஜோனா எனும் தொழில் மேலாண்மை ஆலோசகரின் உதவியுடன் நம்ம கதாநாயகன் அலெக் ரோகோ எப்படி தனது ப்ளான்டை நஷ்டத்தில் இருந்து மீட்டு, லாபப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார் என்பதுதான் முக்கியக் கதை. அதோடு வேலை வேலை என எல்லா நேரமும் வேலையையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தன் மனைவியுடன் நேரம் செலவழிக்காமல் இருப்பதால் இவரது மனைவி கோபித்துக் கொண்டு செல்வதும், அவரை சமாதானப்படுத்துவதும் முக்கிய கதையின் ஓட்டத்தைப் பாதிக்காத வண்ணம் அழகாக சொல்லப்பட்டுள்ளது.
ரோகோவின் பிரச்சனைகள் அனைத்திற்கும் ஜோனா தீர்வு அளிக்கும் முறை மிக அருமையாய் இருக்கும். ரோகோ ஒரு கடினமான கேள்வி கேட்டால் ஜோனா பத்து சுலபமான கேள்விகள் கேட்டு, இவை அனைத்திற்கும் நீயே விடை கண்டுபிடி, அப்போது உனது கேள்விக்கு பதில் கிடைத்துவிடும் என்றுச் சொல்வார்.
இது தான் நான் இந்தப் புத்தகத்தில் இருந்து கற்றுக்கொண்ட முக்கிய பாடம், இதை நான் எனது வேலையிலும் உபயோகித்து வெற்றியடைந்திருக்கிறேன். ஒரு பிரச்சனையை ரொம்ப சுலபமாக அணுக அதை முழுவதுமாய் அணுகுவதைவிட முதலில் அதை சுக்கு நூறாய் உடைக்க வேண்டும். பின் ஒரு ஒரு துகளையும் மிக எளிதாக சமாளித்து விடலாம்.
இப்படி செய்வதில் உள்ள மிகப்பெரிய பலன் என்னவென்றால், நான் நமது பிரச்சனைகளைத் தீர்க்க யார் உதவியையும் நாட வேண்டியதில்லை. நாமே தீர்த்துவிடலாம். அதைத்தான் ஜோனா, அலெக்ஸ் ரோகோவிற்கு கற்றுத் தருவார். எல்லாவற்றிற்கும் ஜோனாவையே தேடும் அலெக்ஸ் ஒரு கட்டத்தில் தானே இனி என்னென்ன பிரச்சனைகள் வரும், அவற்றை எப்படி அணுகுவது என மிக அருமையாகத் திட்டமிட்டுவார்.
சரி, இந்த கதையில் சொல்லப்பட்டிருக்கும் TOC ஐ கொஞ்சம் என்னான்னு பார்போமா? நாம் எதை இலக்கு என்று நினைக்கிறோமோ அது உண்மையான இலக்காக பல நேரங்களில் இருப்பதில்லை. வெற்றியடைய முதல் தேவை இலக்கு எது அல்லது என்ன என்பதை சரியாக தீர்மானிப்பது தான். இலக்கை அடைய பல நிலைகளை (Stages) தாண்டி வரவேண்டியிருக்கும், பல செயல்களை ( Processes) செய்ய வேண்டியிருக்கும். அதில் ஏதாவது ஒரு நிலை/செயல் சிக்கலான நிலையாக/செயலாக (Bottle Neck Process or Bottle Neck Stage. This is called as Constraint) இருக்கும் அதை கண்டறிந்து, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சரிசெய்ய வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை. இதில் நாம் கவனமாக இருக்க வேண்டியது என்ன என்றால் ஒரு சிக்கலான நிலையை கண்டறிந்து அதை சரிசெய்ய முயலும் போது சாதாரணமாக இருந்த ஒரு நிலை அல்லது செயல் பாட்டில்நெக்காக மாறிவிடும் அபாயமாமுள்ளது. இந்தக் கதையில் கூட நம் கதாநாயகனின் தொழிற்சாலையில் அவர்கள் மிகவும் சாதகமான விசயமாகக் கருதும் ரோபோ இயந்திரம் ஒன்றே அவர்களுக்கு மிகப்பெரிய பாட்டில்நெக்காக இருப்பதை கண்டறிந்து அதிர்வார்கள். இது போல நாமும் பல நேரங்களில் மிக நல்லது என்று கருதும் ஒன்றே, நம் வளர்ச்சியை தடுக்கும் காரணியாக இருக்கக்கூடும்.இதையெல்லாம் மிகத் தெளிவாக விளக்கி உள்ளார்கள் இந்த புத்தகத்தில்.
Theory of Constraints குறித்து அறிய விரும்புபவர்கள் கீழ்கண்ட சுட்டிக்களை கிளிக்குங்கள்.
விக்கிப்பீடியாவில் TOC
TOC வெவ்வேறு துறைகளில் எப்படி செயல்படுத்துவது எப்படி என விளக்கும் தளம்.
TOC கண்டறிந்த கோல்ட்ராட்டின் இணைய தளம்.
கோல் புத்தகத்தின் எளிமையான தமிழாக்கம் ஆனந்த விகடனில் வெளிவந்து, விகடன் பதிப்பகத்தால் புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. விகடனில் படிக்க ஆரம்பித்துவிட்டு, அடுத்த வாரத்திற்காக காத்திருக்க முடியாமல் சிங்கையின் நூலகங்களில் அதன் மூலமான ஆங்கிலப்பிரதியை தேடி எடுத்துப் படிக்க வைத்த புத்தகம் இது. மிக நல்ல கதையின் வாயிலாக ஒரு அருமையான கொள்கையை அறிந்துக் கொள்வது சுகமான அனுபவம். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.
அப்பாடா இந்த பதிவிற்க்காவது மீத பர்ஸ்ட் பின்னூட்டம் போட ஜெகதீசன் வழி விட்டானே
ReplyDeleteநா ரெண்டாவதா? என்ன கூட்டத்தையே காணோம்?
ReplyDeleteமீ த தே்ர்டூ!!!!
ReplyDeleteகோவி.கண்ணன் அய்யாவை வழி மொழியவில்லை....
அண்ணே...நானும் இந்தக்கதை படிச்சிருக்கேன்...ஹிஹிஹி...ஆனா தமிழ்ல....ஆ.வி-ல தொடரா வந்ததுன்னு நெனக்கிறேன்....
:-))))
அய்யய்யோ....மீ த சாரி...கடைசி பத்திய சரியா படிக்காம, கமெண்ட்டு போட்டுட்டே்ன்...
ReplyDelete;-(((
அண்ணே பதிவைப் படிச்சுட்டேன்
ReplyDeleteஆனந்தவிகடனில் வந்த பொழுது ஒரு வாரம் கூட விடாமல் படித்தேன்.
ReplyDeleteஉண்மையில் எங்கள் தொழிலுக்கும் அதிலுள்ள நுட்பங்கள் உதவின.
அருமையான புத்தகம்
இந்தப் பதிவு வலைச்சரத்தின் எந்த விதியையும் கடபிடிக்கவில்லை.. ஆனாலும் மிக நல்ல பதிவாக இருப்பதால் ஜோசப் மாமா மன்னிக்கப் படுகிறார்.. இது மாதிரி அடிக்கடி உங்க வலைலயும் எழுதுங்க ராசா.. :)
ReplyDeleteபாராட்டுக்கள்..
அருமையான விளக்கம்.. புத்தகத்தை முக்கால்வாசி வாசித்தது போன்ற ஓர் உணர்வு.. இது போல இன்னும் பல புத்தகங்களைப் பற்றி குறிப்பு இருந்தால், என் போன்ற சோம்பேறிகளுக்கு புத்தகம் வாங்கி வாசிக்க வசதியாக இருக்கும்..
ReplyDelete