கடந்த ஒரு வாரமாக எனக்கு அளிக்கப்பட்ட வலைச்சர ஆசிரியர் பொறுப்பு இன்றோடு முடிவுக்கு வருகின்றது.
ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது இட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் சில தவிர்க்க இயலாத அலுவலக வேலைகளின் காரணத்தால் அவ்வாறு செய்ய இயலவில்லை. மேலும் பல நல்ல பதிவர்களைக் குறித்தும் எழுத வேண்டும் என்ற எனது எண்ணமும் நிறைவேறவில்லை.
வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் சீனா அய்யா அவர்கள் என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு இந்த ஒரு வார ஆசிரியர் பொறுப்பை அளித்தமைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்திருப்பேன் என நம்புகிறேன்.
எல்லா பதிவர்களைப் குறித்தும் எழுதியிருந்தேன். எனதுப் பதிவுகளைக் குறித்தும் எழுத வேண்டும் என்ற எண்ணமிருப்பினும், என்னைப் பற்றி நானே எழுத எனக்கு மனம் ஒப்பவில்லையாதலால் அதை தவிர்த்துவிட்டேன். எனது எழுத்துக்கள் யாரையாவது கவர்ந்திருந்து அவர்கள் எழுத வேண்டும் என நினைத்தால் எழுதட்டும் என விட்டுவிடுகிறேன்.
மிக நீண்ட நாட்களாக வலைப்பதிவுகளை எழுதாமல் இருந்த லதானந் அவர்களை மீண்டும் பதிவெழுத நான் மேற்கொண்ட முயற்சி நல்ல பலன் அளித்தது என்ற திருப்தியோடும், என் மனம் கவர்ந்த பலரில் ஒரு சிலரைக் குறித்து எழுதினேன் என்ற திருப்தியோடும் விடை பெறுகிறேன். இந்த ஒரு வாரகாலத்தில் பின்னூட்டங்களின் வாயிலாகவும், தொலைபேசி, மின் மடல், வலையுரையாடல் வாயிலாக பாராட்டியவர்களுக்கு மிக்க நன்றிகள். நாளை முதல் ஆசிரியராகப் பெறுப்பேற்க உள்ள பதிவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சிறப்பாக ஒரு வாரத்தை முடித்துச்செல்கிறீர்கள்!
ReplyDeleteசென்றுவாருங்கள் !
வாழ்த்துக்கள்
//மேலும் பல நல்ல பதிவர்களைக் குறித்தும் எழுத வேண்டும் என்ற எனது எண்ணமும் நிறைவேறவில்லை.//
ReplyDeleteஏன் நண்பா சுத்திவலைச்சு சொல்லிக்கிட்டு குசும்பனை பற்றி எழுதனும் என்று நினைச்சேன் என்று சொல்லிட்டா முடிஞ்சு போச்சு:)))
இங்கு ரமதான் லீவ் அதனால் வலைப்பக்கம் வரமுடியவில்லை, உங்க வலைச்சரப் பதிவுகளை படிக்கமுடியவில்லை:(
ReplyDeleteஅன்பின் ஜோசப்
ReplyDeleteஅழகாக ஆசிரியர் பொறுப்பினை நிறைவேற்றி இருக்கிறீர்கள் - பணிச்சுமைகளுக்கு நடுவினில் நேரம் ஒதுக்கி - பல நல்ல பதிவுகளி இட்டமைக்கு பாராட்டுகள்
நல்வாழ்த்துகள்
சிறப்பான வாரம் & பதிவுகள்...
ReplyDeleteவாழ்த்துக்களும், நன்றிகளும்!!!
// குசும்பன் said...
ReplyDeleteஏன் நண்பா சுத்திவலைச்சு சொல்லிக்கிட்டு குசும்பனை பற்றி எழுதனும் என்று நினைச்சேன் என்று சொல்லிட்டா முடிஞ்சு போச்சு:))) //
க்க்க்கர்ர்ர்ர்ர்ர்...ஃப்ரெண்ட்ஸ் படம் காமிக்கிறாங்களே...