Wednesday, October 8, 2008

புதுசா மயக்கிய பதிவர்கள்

சாதாரணமாக நாம், நம் நண்பர்கள் பதிவை முதலில் படிப்போம். பின்னர்
தமிழ்மணத்தில் மேயும்போது, கண்ணில் படும், நமக்குத் தேவைப்படும் தலைப்புகளில் தேர்ந்தெடுத்துப் படிப்போம்.

அதையும் மீறி, பதிவர் புதியவராக இருந்தாலும் படிப்போம்.

இவையெல்லாம் போக, நண்பர்கள் சுட்டிக்காட்டியதைப் படிப்போம்.

இவற்றையெல்லாம் தாண்டி, தேடியதில் கிடைத்த நல்ல பதிவுகளைக்கொண்ட வலைப்பூ என்று சொன்னால், சந்திரமௌளீஸ்வரனுடையதை தாராளமாகச்சொல்லலாம். இனி இவரது பதிவுகளுக்கு நான் நிரந்தர வாசகன்.

ஆம்..அவ்வளவு சுவாரஸ்யமாக விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
கிராமர் கிருஷ்ணமூர்த்தி என்ற பாத்திரத்தின் மூலம் ஆங்கிலத்தில் நாம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுகிறார். மிகவும் சிறப்பாக உள்ளது. After reading this post we will not repeat this again sir! :)

எதையெல்லாம் அடையாளமாக வைத்துக்கொண்டு, கடைக்காரர் தரவேண்டிய பாக்கியை கேட்கிறார் பாருங்கள் இவரது முட்டாள் கதையில் !

பாரதியாரின் அழகான ஒரு படத்தைப்போட்டு, அவருடன் நேரில் பேசுவதுபோல் ஒரு தீர்க்கமான விவாதத்தை எடுத்துவைத்திருக்கிறார்.

அச்சமில்லை, அச்சமில்லை பாடலை அப்படியே படித்துவிட்டுப்போகும் நம் மத்தியில் இது கட்டாயத்தேவையாக இருக்கிறது!

இந்தப்பதிவர் மிகச்சிறப்பாக , எழுத்தாளர் சுஜாதா அவர்களையும், அவரது படைப்புகளையும் நேசிக்கிறார் என்று தெரிகிறது.

இந்தப்பதிவில் சுஜாதா அவர்களின் நினைவுகளை, அழகாக, நெகிழ்வாக
நினைவுகூர்கிறார். ஏனெனில் இவருக்கு, சுஜாதா அவர்கள்தான் குரு! பின் சிஷ்யப்பிள்ளை சுவாரஸ்யமாக எழுதுவதில் வியப்பேதுமில்லை!


இது தவிர...கார்ட்டூன் கண்ணன் என்ற வலைப்பூவும் இவருடையதுதான்..ஆனால் அதில் வரும் கார்ட்டூன்கள் இவரது அண்னனுடையது என்கிறார்.

அண்ணன் கண்ணனுக்கும் நகைச்சுவையுணர்வுடன் கூடிய சமூக, அரசியல் விமர்சனம் கைவந்திருக்கிறது என்பதை இந்தக்கார்ட்டூன் ஒன்றே
சான்றாக்குகிறது. வாழ்த்துக்கள் அண்ணன் கண்ணன் அவர்களே!


இனியும் சந்திரமௌளீஸ்வரன் பக்கத்துக்கு மக்கள் அதிகம் செல்லவேண்டும். அவரது எழுத்தை ரசிக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.!

அடுத்து....

9 comments:

  1. சில நல்ல தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  2. நன்றிக்கு நன்றிங்கண்ணா !

    ReplyDelete
  3. அருமையான சுட்டி - சுரேகா - புதிய வலைப்பூ - மேலோட்டமாக படித்தேன் - இன்று அத்தனை பதிவுகளையும் படித்து விடுகிறேன் - மறுமொழியும் இட்டு விடுகிறேன்.

    ReplyDelete
  4. அட என்ன ஆச்சர்யம் 2 நாளைக்கு முன்புதான் சந்திரமெளலியின் வலைப்பக்கம் பார்த்து படித்து வியந்தேன். நீங்களும் அதேபோல உணர்ந்திருக்கீங்களே!!!!!!

    ReplyDelete
  5. கலக்கல் அறிமுகம் சுரேகா!

    ReplyDelete
  6. //cheena (சீனா) said...
    அருமையான சுட்டி - சுரேகா - புதிய வலைப்பூ - மேலோட்டமாக படித்தேன் - இன்று அத்தனை பதிவுகளையும் படித்து விடுகிறேன் - மறுமொழியும் இட்டு விடுகிறேன்.//

    கண்டிப்பா சார் !

    ReplyDelete
  7. //புதுகை.அப்துல்லா said...
    அட என்ன ஆச்சர்யம் 2 நாளைக்கு முன்புதான் சந்திரமெளலியின் வலைப்பக்கம் பார்த்து படித்து வியந்தேன். நீங்களும் அதேபோல உணர்ந்திருக்கீங்களே!!!!!!//

    நம்மள்லாம் ஒரு கூட்டுப்பறவைகள்தானே !

    அதான். இப்படி கரெக்டா நீங்க நினைக்கிறதை
    நான் செய்யுறேன்...

    :)

    ReplyDelete
  8. //மங்களூர் சிவா said...
    கலக்கல் அறிமுகம் சுரேகா!//

    நன்றி சிவா!

    அவரை நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்க !

    ReplyDelete
  9. வலைச்சரம் மற்றும் சுரேகாவுக்கு நன்றி

    ReplyDelete