Monday, October 20, 2008

நான் கவியரசியான கதை........

நான் நாகர்கோவிலில் தவழ்ந்து தூத்துக்குடியில் வளர்ந்து ஜெய்பூரில் சிறகடிக்கும் ஒரு தமிழ்ப் பறவை...!

மழை, நிலவு, கடல், மேகம், அலை, பாட்டு, புத்தகங்கள், நட்சத்திரம் என்று ஒரு கனவுலகில் வாழப் பிடிக்கும்.

மன நிலைக்கு ஏற்றவாறு பிடித்த பாடல்களின் வரிசை மாறும்.

பாலகுமாரனின் ,சுஜாதாவின் எழுத்துக்களில் உயிர் கரையப் பிடிக்கும்.

உயிர் உருக்கும் நட்பு பிடிக்கும்..!

மழையுடன் எப்போதும் இணைந்து நனையப் பிடிக்கும்..!

மழை முடிந்த மரம் உதிர்க்கும் மழையும் பிடிக்கும்.

மழையுடன் ரயில் பயணம் பிடிக்கும்.

பிடிக்காத ஒன்று...

என்னுடைய மௌனமும்,யாருடைய மௌனமும்.......

கொஞ்சம் எழுதுவேன்...............

நிறைய படிப்பேன்............

கொஞ்சம் பதியவும் செய்வேன்....

சில நேரங்களில் கைவிரல்களாக..........

பல நேரங்களில் கால்தடங்களாக................

ஆனால் நிச்சயம் உங்கள் மனதில் பதிவேன்.............

கவிதைகள் எனக்கு அறிமுகமாகியது என் தமிழ் ஆசிரியர் சாலமன் மூலமாக.....

கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ???? இதுதான் கட்டுரைப் போட்டியின் தலைப்பு....

நானும் எழுதிட்டுப் போனதைப் படித்த அவர், "சில கவிதைகளும் மேற்கோள் காட்டி எழுதியிருந்தால் நல்லாருக்குமே..." அப்படின்னார்.

எங்கிட்டே கவிதைப் புத்தகங்கள் எதுவும் இல்லை....
அதனால நானே சில வரிகள் எழுதி சேர்த்துக் கொண்டேன்.

அதற்கு மூன்றாவது பரிசு கிடைத்தது.... பாராட்டும் கிடைத்தது..... அந்தக் கவிதை வரிகள் யார் எழுதினதுன்னு எல்லோரையும் கேட்க வைத்தது......

அதற்கப்புறம்தான் நம்ம கவியரசியானதெல்லாம்.......!!!!!.??????

நம்பாதவங்களுக்காக என் முதல் கவிதை வாரமலரில் பிரசுரமாகியதற்கு அனுப்பிய 10 ரூபாய் மணி ஆர்டர் ரசீதைப் பார்த்துக்கோங்கப்பா.....ம்ம்ம்ம்



ம்....ம்ம்ம்...இதெல்லாம் சைக்கிள் கேப்லெ ஆட்டோ ஓட்டற வித்தை!!!! இப்போ விட்டா அப்புறம் முடியுமா???

என்னையும் என் எழுத்துக்களையும் ஒரு பொருட்டாக மதித்து இந்த வார வலைச் சர ஆசிரியராக ஆக்கிய சீனா அய்யாவுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

எனக்குப் பிடித்த என் பதிவுகள் சில......

என் வீட்டுக் கதை

ஒரே நாளில் கதாநாயகியாயிட்டோமில்லே!!!

அன்றொரு நாளில் முட்டாளாகிட்டொமில்லே!!!!

அன்றைக்கு ஒருநாள் ஜெயிலுக்குப் போனோமில்லே!!!!

ஒரு நிமிஷத்திலே திருடனாயிட்டோமில்லெ!!


அட இன்னும் நிறைய ஒருநாள் வித்தை வச்சுருக்கோம்லே!!!

16 comments:

  1. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. //
    ம்....ம்ம்ம்...இதெல்லாம் சைக்கிள் கேப்லெ ஆட்டோ ஓட்டற வித்தை!!!! இப்போ விட்டா அப்புறம் முடியுமா???
    //

    ஆட்டோ இல்ல ஏர்பஸ்ஸோ இல்ல போயிங்கோ கூட ஓட்டுங்க கலக்குங்க.

    வலைச்சர ஆசிரியரானதுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.

    தங்களின் வாசிப்பை படிக்க வைப்பதற்கு கூட இந்த வலைச்சரம் ஆசிரியர் பதவி மற்றும் வாரமலர் எழுத்தாளர் என்ற கருவிகளை பயன்படுத்த வேண்டி உள்ளது.

    இன்றைய உலகத்தில் வாசிக்க செய்ய வைக்க கூட விளம்பரங்கள் தேவையாக இருக்கிறது.

    வாசிக்கும் பழக்கத்தை அடுத்த தலைமுறைக்கு சிறப்பாக எடுத்து செல்வோம்.

    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  4. திகழ்மிளிர் said...
    //வாழ்த்துகள்//
    நன்றி திகழ்மிளிர்....
    அன்புடன் அருணா

    ReplyDelete
  5. மங்களூர் சிவா said...

    //ஆட்டோ இல்ல ஏர்பஸ்ஸோ இல்ல போயிங்கோ கூட ஓட்டுங்க கலக்குங்க.

    வலைச்சர ஆசிரியரானதுக்கு வாழ்த்துக்கள்.//

    முதல்லே ஆட்டோவை ஒழுங்கா ஓட்டறோமான்னு பாருங்க.....அப்புறம் ஏர்பஸ் முயற்சி செய்யலாம்....
    வாழ்த்துக்கு நன்றி..
    அன்புடன் அருணா

    ReplyDelete
  6. குப்பன்_யாஹூ said...
    //வாழ்த்துக்கள்.

    தங்களின் வாசிப்பை படிக்க வைப்பதற்கு கூட இந்த வலைச்சரம் ஆசிரியர் பதவி மற்றும் வாரமலர் எழுத்தாளர் என்ற கருவிகளை பயன்படுத்த வேண்டி உள்ளது.//

    என்ன செய்வது குப்பன்? என் வலைப்பூவில் அனேக கவிதைகள் கட்டுரைகள்....ரொம்ப வருடங்களுக்கு முன்னால் எழுதியவை...ஒரு வலைப்பூ இல்லையென்றால் அது வாசிப்பாரின்றி...மக்கிப் போயிருக்கும்.இந்த மாதிரிக் கருவிகள் இல்லையென்றால் வாசிப்பு என்பது அடியோடு மறைந்துவிடும்....

    //வாசிக்கும் பழக்கத்தை அடுத்த தலைமுறைக்கு சிறப்பாக எடுத்து செல்வோம்.//

    கண்டிப்பாக எடுத்துச் செல்வோம்....முயன்றால் முடியாதது கிடையாது..
    அன்புடன் அருணா

    ReplyDelete
  7. வாத்தியார் அம்மா வாழ்க...

    ReplyDelete
  8. சிம்பா said...
    //வாத்தியார் அம்மா வாழ்க...//

    வாழ்த்துக்கு நன்றி சிம்பா..
    அன்புடன் அருணா

    ReplyDelete
  9. வாழ்த்துகள் :)))))))))

    ReplyDelete
  10. //கொஞ்சம் பதியவும் செய்வேன்....
    சில நேரங்களில் கைவிரல்களாக..........
    பல நேரங்களில் கால்தடங்களாக................ //

    அட..அட.. வாவ்.. சூப்பரா இருக்கு இந்த வரிகள்.. என்ன ஒரு அழகு..

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் அக்கா.. :))

    ReplyDelete
  12. ஸ்ரீ said...
    //வாழ்த்துகள் :)))))))))//

    நன்றி..ஸ்ரீ!
    அன்புடன் அருணா

    ReplyDelete
  13. Saravana Kumar MSK said...
    //கொஞ்சம் பதியவும் செய்வேன்....
    சில நேரங்களில் கைவிரல்களாக..........
    பல நேரங்களில் கால்தடங்களாக................ //

    //அட..அட.. வாவ்.. சூப்பரா இருக்கு இந்த வரிகள்.. என்ன ஒரு அழகு..//

    அப்பிடியா சரவணா...
    நன்றிப்பா.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் அருணா!
    :)

    ReplyDelete
  15. Karthik said...
    //வாழ்த்துக்கள் அருணா!
    :)//

    நன்றி கார்த்திக்.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  16. "உயிர் உருக்கும் நட்பு பிடிக்கும்..!"

    மனதை நெகிழச்செய்யும் வரிகள்..

    வலைச்சர ஆசிரியரானதுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete