Thursday, October 30, 2008

வேலைகள் அதிகமானால் வேண்டுவோம் மீள்பதிவாண்டவரை


வலைச்சரத்தில் ஒரே ஒரு பதிவு சுயபுராணம் போட்டுக்கலாம்னு நம்ப பொறுப்பாசிரியர் சீனா அய்யா அனுமதி கொடுத்தாரு. என்னுடைய வலைச்சர வாரத்தில் ஒரு பதிவு கூட சுயபுராணம் போடக்கூடாதுன்னு முடிவு பண்ணி இருந்தேன். ஆனால் என் நேரமோ என்னவோ தெரியவில்லை பதிவு போட முடியாத அளவிற்கு ஆசிரியர் ஆனதில் இருந்து அலைந்து கொண்டு இருக்கிறேன். வலைச்சரத்தில் முதல் பதிவை எழுதும் போது டில்லியில் இருந்தேன். நேற்றும் இன்றும் ஹைதராபாத். அதனால் வேறு வழி இன்றி சுயபுராணம் போட்டுக்குறேன்.



அந்தக் காலத்தில் நான் பதிவு போடத்துவங்கிய போது எழுதிய கவிதை இது. அப்போது என் வலைப்பூ தமிழ்மணத்தில் இணைக்கப் படாமல் இருந்ததால் யாராலும் படிக்கப்படாமலேயே போய்விட்டது. புதுகைத் தென்றல் அக்காவும், நிஜமா நல்லவன் அண்ணனும், சுரேகா அண்ணனும், மகேஷ் என்ற எனது கல்லூரித் தோழனும் மட்டுமே அதை அப்போது படித்து கருத்து சொன்னார்கள். படிங்க...புடிக்காட்டினலும் கூட சொல்லிட்டுப் போங்க...

அந்தக்கவிதை இதோ

சாய்வு நாற்காலி
பால்ய பிராயத்து
தொட்டில் ஆட்டத்தின்
நினைவுகளின் நீட்சிகள்
சாய்வு நாற்காலி!

மாத்திரை மாறாமல
அவை எழுப்பும் ஓசைகள்
எந்த வித்வான்களுக்கும்
வசப்படாதவை!

காலையில் முன்வாசல்
மதியம் நடுகூடம்
மாலையில் காற்று வாங்க
பின் தோட்டமென
தாத்தாகளை விட
அதிகம் நடமாடுபவை!

சரிந்து விழும் தேகத்தை
சாய்த்துக் கொண்டு
அமரும் போது
தாத்தாகளுக்கு வரும்
ஒரு தனி கம்பீரம்!

மற்ற நேரங்களை விட
தாத்தாகள் பேப்பர் பார்க்கும்
நேரத்தில் ...
சாய்வு நாற்காலிகளுக்கு
வரும் ஒரு தனி அழகு!

நாகரீக உலகத்தில்
நம்மால் வசதியாக
மறக்கப்படுகின்றன.......
சாய்வு நாற்காலிகளும்
கூடவே தாத்தாகளும்!
புதுகை.அப்துல்லா

40 comments:

  1. //அந்தக் காலத்தில் நான் பதிவு போடத்துவங்கிய போது//

    அண்ணே, இதெல்லாம் உங்களுக்கே ஜாஸ்தியா தெரியல? பதிவு போடத் துவங்கி இன்னும் ஆறுமாசம் கூட ஆகலை, அதுக்குள்ள அந்தக்காலமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........

    ReplyDelete
  2. நல்ல கவிதை:):):)

    ReplyDelete
  3. உங்களுக்கு கவிதை எழுத தெரியும்னு சொல்லவேயில்ல

    ReplyDelete
  4. அண்ணே, சாய்வு நாற்காலிகளை இன்னும் நாம மறக்கல நம்ம வசதிக்காக தாத்தக்களத்தான் மறந்துட்டோம்.

    ReplyDelete
  5. உங்களுக்கு கவிதை எழுத தெரியும்னு சொல்லவேயில்ல

    //

    valarum gavigyar abdulla valga valga.

    ReplyDelete
  6. //நாகரீக உலகத்தில்
    நம்மால் வசதியாக
    மறக்கப்படுகின்றன.......
    சாய்வு நாற்காலிகளும்
    கூடவே தாத்தாகளும்! //

    அருமை நண்பரே !

    ReplyDelete
  7. //நாகரீக உலகத்தில் நம்மால் வசதியாக மறக்கப்படுகின்றன.......
    சாய்வு நாற்காலிகளும் கூடவே தாத்தாகளும்!//

    எனக்கும் இந்த வரிகள்தான் பிடித்திருந்தன...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  8. நல்லா இருக்கு, எங்க வீட்ல சாய்வு நாற்காலியெல்லாம் இல்ல ஆனா தாத்தா இருந்தாரு.

    ReplyDelete
  9. rapp said...
    // //அந்தக் காலத்தில் நான் பதிவு போடத்துவங்கிய போது//

    அண்ணே, இதெல்லாம் உங்களுக்கே ஜாஸ்தியா தெரியல? பதிவு போடத் துவங்கி இன்னும் ஆறுமாசம் கூட ஆகலை, அதுக்குள்ள அந்தக்காலமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........

    //

    அந்தக் காலத்த டோண்டு சார் சமீபத்துலன்னு சொல்றாரு. அத யாரும் கேட்க மாட்டேங்குறீங்க. நான் சமீபத்த அந்தக் காலம்னா சண்டைக்கு வர்றீங்களேஏஏஏஏஏஏஏ :)))))

    ReplyDelete
  10. நல்ல கவிதை:):):)

    //

    தேங்க்யூ தங்கச்சி :)

    ReplyDelete
  11. வாங்க வால்பையன் அண்ணே

    //உங்களுக்கு கவிதை எழுத தெரியும்னு சொல்லவேயில்ல

    //

    நீங்க கேக்கவே இல்லையே :)

    ReplyDelete
  12. வணக்கம்
    உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

    ReplyDelete
  13. //நினைவுகளின் நீட்சிகள்//

    பின்நவீனத்துவ ரேஞ்சுக்கு வார்த்தைகள் இருக்கே பாய்..

    கலக்கல்..

    நர்சிம்

    ReplyDelete
  14. //காலையில் முன்வாசல் மதியம் நடுகூடம் மாலையில் காற்று வாங்க பின் தோட்டமென தாத்தாகளை விட அதிகம் நடமாடுபவை!//

    அருமை:).

    //நாகரீக உலகத்தில் நம்மால் வசதியாக மறக்கப்படுகின்றன.......//

    பரணைப் போலவே, இல்லையா:(?

    கடைசி வரி டச்சிங்.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. வாங்க ஜோசப் அண்ணே

    //நம்ம வசதிக்காக தாத்தக்களத்தான் மறந்துட்டோம்
    //

    நீங்க சொல்றதும் உண்மைதான்ணே :(

    ReplyDelete
  16. கவிதையெல்லாம் எழுதி இருக்கீங்களா? ... இப்பத்தான் பார்க்கிறென்... கவிஞருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. அன்பின் அப்துல்லா

    கவிதை அருமை - தாத்தாக்கள் மறக்கப் படுகின்றனர் - உண்மை

    ReplyDelete
  18. எங்க வீட்டில் ரொம்ப நாளாக வெளியில் கிடந்த ,அந்த சாய்வு நாற்காலியின் சட்டங்களை ,இரண்டு நாட்களுக்கு முன்தான் என் சகோதரியிடம் கேட்டேன்.ஆனால் பயன் படுத்த முடியாத அளவில் இருந்தது.
    என் தாத்தா உபயோகபடுதியது. எல்லாமே நமக்கு லேட் ஆதான் புரியுது

    கவிதை மிக அருமை

    ReplyDelete
  19. 'நயன் தாராவை சந்தித்தேன்' என்று தலைப்புப் போடாதவரை மீள் பதிவு என்றாலும் யாரும் வைய மாட்டார்கள்.
    :)

    ReplyDelete
  20. கலக்கல் கவிதை அப்துல்லா.. அருமை..

    ReplyDelete
  21. சாய்வு நாற்காலிய ஒரு போட்டோ புடிச்சி போட்டிருக்கலாம். மத்தபடி கவிதை நல்லாயிருக்கு...

    ReplyDelete
  22. வாங்க புதுகைத் தென்ரல் அக்கா

    //valarum gavigyar abdulla //

    ஏங்கா இந்தக் கொலவெறி :)))

    ReplyDelete
  23. வாங்க ரிஷான் செரீப் அண்ணே

    பாராட்டிற்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  24. வாங்க அருணா அக்கா

    //எனக்கும் இந்த வரிகள்தான் பிடித்திருந்தன...
    //

    உங்க பாராட்டு எனக்கு மிகுந்த ஊக்கத்தை தருகிரது.மிக்க நன்றி :)

    ReplyDelete
  25. வாங்க வருங்கால முதல்வர்

    எனக்கு ஒரு சந்தேகம்...நீங்க குடுகுடுப்பையார்தானே???

    ReplyDelete
  26. வாங்க சூப்பர்லிங்ஸ்

    //உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.
    //

    பார்த்தேன். மிக்க நன்றிங்க :)

    ReplyDelete
  27. வாங்க நர்சிம் அண்ணே

    //பின்நவீனத்துவ ரேஞ்சுக்கு வார்த்தைகள் இருக்கே பாய்..
    //

    பின்னவீனத்துவமாஆஆஆஆஆஆ???
    அய்யோ சாமி நீங்க தேடி வந்த ஆளு நான் இல்ல :))))

    ReplyDelete
  28. வாங்க இராமலெஷ்மி அக்கா

    //கடைசி வரி டச்சிங்.

    வாழ்த்துக்கள்!
    //

    பாராட்டிற்கு, வாழ்த்திற்கும், வருகைக்கும் நன்றிக்கா :))))

    ReplyDelete
  29. வாங்க ச்சின்னப்பையன் அண்ணே

    //கவித கவித....//

    நன்றி நன்றி :)

    ReplyDelete
  30. வாங்க தமிழ்பிரியன்

    //கவிஞருக்கு வாழ்த்துக்கள்!

    //

    மிக்க நன்றிங்கன்ணா :)

    ReplyDelete
  31. வாங்க சீனா அய்யா

    கருத்துக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  32. வாங்க பாபு அண்ணே

    //எல்லாமே நமக்கு லேட் ஆதான் புரியுது
    //

    எப்படியோ புருஞ்சா சரி :))

    ReplyDelete
  33. வாங்க கோவி அண்ணே

    //'நயன் தாராவை சந்தித்தேன்' என்று தலைப்புப் போடாதவரை மீள் பதிவு என்றாலும் யாரும் வைய மாட்டார்கள்.
    :)

    //

    நம்ப பதிவு ஒருநாள் கூட சூடான இடுகையில வந்ததில்லை. நயந்தாரான்னு போட்டவுடனே கொஞ்ச நேரத்துலயே வந்துருச்சு :)))

    ReplyDelete
  34. வாங்க வெண்பூ அண்ணே

    மிக்க நன்றின்ணே :))

    ReplyDelete
  35. அண்ணே!கவிதை உங்களுக்கு சரளமாக வருகிறது.

    நம்மகிட்ட பழமைபேசின்னு ஒருத்தரு இருக்கார். உங்களுடையது டாஸ்மார்க்ன்னா அவரோடது நாட்டுக் களளு போங்க.

    ReplyDelete
  36. உங்களுக்கு கவிதை எழுத தெரியும்னு சொல்லவேயில்ல

    ReplyDelete