குழந்தைகளுக்கான பாடல்கள் ஆங்கிலத்தில் கிடைக்குமளவிற்கு இணையத்தில் தமிழில் காணக்கிடைக்கவில்லை என்ற எண்ணமுண்டு எனக்கு !! ஆனால், அந்த எண்ணம் மாறிவருகிறது இப்போது!!
ராம்மலரின் குழந்தைப்பாடல்கள்
சிறுவர் பாடல்களுக்குன்னே ஒரு தளம் தொடங்கியிருக்காங்க சுந்தரவடிவேலுவும் மதியும்.
மிகவும் சுவாரசியமா இருக்கு! தொடர்ந்து புதுப்பித்தால் நலமாயிருக்கும்!!
மரப்பாச்சிக்கு காய்ச்சலடி என்ற பாடல் இங்கே!!
மிருகக்காட்சி சாலை என்ற இந்த பதிவும் சுவாரசியம்!! சிறுவர்களுக்கு பாட எளிதாகவும், பயனுள்ளதாயும் இருக்கும்!!இந்தப் வலைப்பூவிலேயே ஓவியர்களிடையேயும், இசைஆர்வலர்களிடையேயும் உதவி கேட்டிருக்கிறார்கள்..கொஞ்சம் லேட்தான்...இதன்மூலம் ஏதாவது உதவி கிடைக்குமாயின் நலமே!! இதோ..அந்தப் பதிவு!!
ஜெய் என்பவரின் உள்ளோட்டம் எனும் பேரிட்ட வலைப்பூ இது!! குழந்தைப்பாடல்களும், நாட்டுப்புறப் பாடல்களும் (ஒலி வடிவிலும்)
கொண்ட வலைப்பூ!!
ஆடுமாம் பெருச்சாளி ஆடுமாம்
கோலு கோலு கோலு - நாட்டுப்புறப் பாடல்கள்
இன்னமும் உண்டு..அவரின் வலைப்பூவில்!! வலைப்பூ எல்லாருக்கும் பலனளிக்கிறது தெரிந்தால் இன்னும் புதுப்பிக்கப்படலாம் என்ற எண்ணத்தோடு!!
குழந்தைகளுக்கான கதைகள் - இதோ என்னுடைய சிறுவயது பேவரிட் கதை..ஏழுநிறப் பூ சோவியத் கதைகள் படிக்கவென்றே ஒரு வலைப்பூ!! நன்றி சரவணன்!
வலைஞனும் மீனும் -இந்த கதையை அந்த படங்கள் தரும் உணர்வுக்காகவே படிக்கவேண்டும்..ஆனால் படங்கள் இல்லையெனினும் கதைஇங்கே!
தமிழில் குட்டிக் கதைகள் சொல்கிறார்..ந.உதயக்குமார்!
காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது வளர்ந்த பிள்ளைகளுக்குச் சொல்லலாம்!!
ஒளிஒலிக் காட்சிகள் கதைகளுடன் இங்கே!!
அரும்புகள் எனும் வலைப்பூவை குழந்தைகளுக்காக நடத்துகிறார் கண்மணி! அதில் சுவாரசியங்கள்!!
பிள்ளைகளுடன் சேர்ந்து பாடுவது அலாதியானது...
ReplyDeleteபச்சைகிளி பாடும்
பறந்து பறந்து ஓடும்
உச்சி கிளையில் ஆடும்
உலுக்கி உலுக்கி ஆடும்
குண்டு மாம்பழம் தேடும்
கூண்டில் அடைத்தால் வாடும்...
இது என் மகள் எனக்கு சொல்லிக்கொடுத்த பாடல் , எப்படி??
அருமையான பதிவு
ReplyDeleteநல்ல பல புதிய சுட்டிகள் - அறிமுகம் அருமை. அத்தனையும் படிக்க வேண்டும் - நல்வாழ்த்துகள்
குழந்தைக்காக... நல்லா இருக்கு..:)
ReplyDeleteஇந்த பதிவுகள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்குமே!
ReplyDeleteபட் கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டுதான் அப்டேட் பண்றாங்களா? அதான் என்னிய மாதிரி குட்டீஸ்ங்களுக்கு டய்ர்டாகிடுது :(