Friday, November 21, 2008

கர்ணன் ஏன் கொடுத்தான்?

புராணங்களில் என்னை மிகக் கவர்ந்த ஆதர்ச ஹீரோ "கர்ணன்."

அவன் ஏன் கொடுத்தான் என்பதற்கு என்னுடைய, "என் இனிய கர்ணா-" வில் அழுத்தமான காரணம் சொன்னாலும்...
இன்னும்....
அது பற்றி இன்னும் எழுத வேண்டும் போலத் தோன்றுகிறது.

பல ஆன்மீகப் பெரியவர்கள்... இதற்குப் பல காரணங்களைச் சொல்கிறார்கள்.

ஒரு சாதாரணத் தேரோட்டியின் மகனனான கர்ணனை "துரியோதனன்" தன் நண்பனாக்கிக் கொண்டு.. அவனை அங்கத தேசத்து அரசனாக்குகிறான்.

காரணம் அர்ஜுனனை எதிர்த்து நிற்க அவனுக்குச் சரி நிகரான வீரன் கர்ணன் மட்டுமே.

ஆக துரியோதனின் நட்பில் ஒரு வியாபாரத்தனம் மறைந்திருக்கிறது.

இதை கர்ணன் நன்கு உணர்ந்தே இருந்தான்..

அதற்கு நன்றிக் கடனாகத்தான்.......
துரியோதனன் தீயவன் எனத் தெரிந்திருந்தும் இறுதி வரையில் அவனோடேயே இருந்து அவனுக்காக தன் உயிரையும் கொடுத்தான்.

துரியோதனன் நேர்மையற்றவன்.
எப்போது எதைச் செய்வான் என்று யாராலும் யூகிக்க முடியாது.

(மிகக் கெட்டவனிலும் கெட்டவனான துரியோதனன் தன் வாழ்வில் செய்த ஒரே நல்ல காரியம் என்ன தெரியுமா? கர்ணனை நண்பனாகக் கொண்டது.
அதே போல...
மிக நல்லவனிலும் நல்லவனான கர்ணன் தன் வாழ்நாளில் செய்த ஒரே கெட்ட காரியம்...
துரியோதனனை நண்பனாகக் கொண்டது.)

அவன் கொடுத்த அங்கத நாட்டை திரும்ப எப்போது வேண்டுமானாலும் பிடுங்கிக் கொள்ளவும் செய்யலாம் எனறு கர்ணன் எதிர்பார்த்திருக்கக் கூடும்.
அதோடு அவனுக்காக எந்த வினாடியும் தன் உயிரை இழக்க நேரிடும் என்பதற்கும் தயாராய் இருந்தான்.

அதற்கு முன்பாக எந்த அளவு தன்னால் பிறருக்குக் கொடுக்க முடியுமோ அந்த அளவு கொடுத்து முடித்துவிட வேண்டும், பிறரின் வறுமைத் துயர் தீர்த்துவிட வேண்டும் என எண்ணியிருக்கலாம்.

ஏனெனில் இளவயதிலேயே சாதாரண தேரோட்டி மகனாக இருந்து.., வறுமையின் கொடுமையை நன்றாக அறிந்தவன் கர்ணன்.

இந்த உலக வாழ்வும்... வசதிகளும்.... உயிரும்...
நிலையற்றது....

எப்போது வேண்டுமானாலும்.... இவை போய் விடும்... என்ற நிலையாமைத் தத்துவத்தை பூரணமாக உணர்ந்தவன் கர்ணன்.

இருப்பது தீர்ந்து போகுமுன்னால்... அடுத்தவருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்கிற நெருப்பு
எப்போதும் சுட்டுக் கொண்ட இருந்தது.

சாகும் வினாடியில் கூட "கிருஷ்ண பரமாத்மா" "உன் தர்மத்தின் பலனையெல்லாம் கொடு" என்று கேட்டபோது...
"இந்த வினாடியில் கொடுக்க என்னிடம் இதுவாவது இருந்ததே" என்று மகிழ்ந்தானாம் கர்ணன்.
-------------------------------------------------------------------------------------

கடவுள் எனும் அந்த பெயரற்ற பிரபஞ்ச மகாசக்தியிடம் நான் நித்தமும் பிரார்த்திப்பது இதைத்தான்.
"இறைவா..! எனக்கு எப்போதும் கர்ணனின் மனநிலையிலேயே இருக்கும் வரம் தா...!"

என்னுடைய இந்த வாழ்வும், வசதியும்ம், உயிரும்...எப்போது வேண்டுமானாலும்...
என்னை விட்டுப் பிரியக் கூடும்

எனவே அதற்கு முன்பாக நான்....
என்னால் முடிந்த வரையில்...
பிறருக்கு...
எந்த அளவு நன்மை செய்ய முடியுமோ...
அந்த அளவு....
செய்துவிட வேண்டுமென விரும்புகிறேன்.

வேறென்ன சொல்ல..!

--------------------------------------------------------------------------------
இன்றைக்கு நான் சமீபத்தில் படித்த புராணக் கதைகளின் வலைதளம் அறிமுகம்.

மழலைகள்

(மற்ற சில Link- களை நான் மேலோட்டமாய் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு முழுக்கப் படிக்காமல் அவசரத்தில் நேரமின்மை காரணமாக இங்கே இட்டு விட்டேன்.
பதிவெல்லாம் போட்டு முடித்த பிறகு போய்ப் பார்த்தால் எல்லாமே பிரச்சினைக்குரிய விஷயங்கள்.
ஆ....! ஐயோ! இப்பவே பாத்தியே...! தப்பிச்சடா அந்தோணி முத்து- ன்னு எல்லாத்தையும் எடுத்துட்டேன்.
யார் ,மனமாவது புண்பட்டிருந்தால்... தயவு செய்து மன்னித்து விடுங்கள்!)

8 comments:

  1. ""அவன் கொடுத்த அங்கத நாட்டை திரும்ப எப்போது வேண்டுமானாலும் பிடுங்கிக் கொள்ளவும் செய்யலாம் எனறு கர்ணன் எதிர்பார்த்திருக்கக் கூடும்.
    அதோடு அவனுக்காக எந்த வினாடியும் தன் உயிரை இழக்க நேரிடும் என்பதற்கும் தயாராய் இருந்தான்""

    அட..இப்படியும் ஒரு சித்தனை கோனமா...

    ReplyDelete
  2. கர்ணனை பற்றி நான் எழுதிய பதிவுகள்:

    http://dondu.blogspot.com/2008/06/1.html

    http://dondu.blogspot.com/2007/09/blog-post_29.html

    இரண்டாம் பதிவில் கர்ணன் உதாரணமாக காட்டப்படுகிறான். இருப்பினும் நல்ல உதாரணமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. //கடவுள் எனும் அந்த பெயரற்ற பிரபஞ்ச மகாசக்தியிடம் நான் நித்தமும் பிரார்த்திப்பது இதைத்தான்.
    "இறைவா..! எனக்கு எப்போதும் கர்ணனின் மனநிலையிலேயே இருக்கும் வரம் தா...!"//

    வாழ்த்துக்கள் அந்தோணி.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  4. இருப்பது தீர்ந்து போகும் முன்னால் அடுத்தவர்க்குக் கொடுத்து விட வேண்டும் என்ற நெருப்பு சுட்டுக் கொண்டே இருந்தது - வைர வரிகள் அந்தோணி

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி மோகன் காந்தி ஐயா.

    ReplyDelete
  6. Blogger dondu(#11168674346665545885) said.

    //கர்ணனை பற்றி நான் எழுதிய பதிவுகள்:

    http://dondu.blogspot.com/2008/06/1.html

    http://dondu.blogspot.com/2007/09/blog-post_29.html

    இரண்டாம் பதிவில் கர்ணன் உதாரணமாக காட்டப்படுகிறான். இருப்பினும் நல்ல உதாரணமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்//

    ஆஹா..! வருகைக்கு மிக்க நன்றி டோண்டு சார்..! நிச்சயம் படிக்கிறேன்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கு நன்றி அருணா மேடம்.

    ReplyDelete
  8. cheena (சீனா) said...

    //இருப்பது தீர்ந்து போகும் முன்னால் அடுத்தவர்க்குக் கொடுத்து விட வேண்டும் என்ற நெருப்பு சுட்டுக் கொண்டே இருந்தது - வைர வரிகள் அந்தோணி

    நல்வாழ்த்துகள்//

    உங்களின் ஆசீராக இதை எடுத்துக் கொள்ளுகிறேன் சீனா அப்பா..!

    ReplyDelete