மூன்று முறை நண்பர்கள்(!!!) கொடுத்த ஆப்பில் சற்றும் மனம் தளராத விக்கி போல், மன ஆறுதல் பெறவும் சரியான வேவ்லெங்த் உடைய நண்பர்களைப் பெறவும் இணையத்திற்கு வந்த என்னை இணையம் ஏமாற்றவில்லை.
அப்படிப்பட்ட அற்புதமான நண்பர்களில் சிலரைப் பற்றி
இங்கே சொல்ல விரும்புகிறேன். இது முழுமையான பட்டியல் அல்ல - மேலும் இது அதிக நட்பு - குறைந்த நட்புங்கற தரவரிசையிலும் இல்லை.
--------------
தமிழ் பிரியன் :-> தினமும் ஒரு பதிவு போடும் பழக்கமுடைய இவரு, தன்னிடத்திலிருந்து அமெரிக்காவுக்கு இலவச தொலைபேசின்னவுடனே,
எனக்குத் தொலைபேசி மொக்கை போட்டவரு. இவரோட இந்த பதிவுலே சொல்லியிருக்கிற மேட்டர்தான் என்னை மிகவும் நெகிழ வைத்த
சம்பவம்.
ராதாகிருஷ்ணன் ஐயா -> அமெரிக்கா கிழக்குக் கரைக்கு வந்து - நியூயார்க் வருவேன்னு சொல்லி ஏமாத்திட்டு - வராமலேயே இந்தியா
திரும்பப் போறவர். ஆன்லைனில் இருந்தால் எப்போதும் பேசும் இவரோட அரசியல் பதிவுகளோடு நான் விரும்பிப் படிப்பது - (மொக்கையாக
இருந்தாலும்!!!) வாய் விட்டு சிரிங்க பதிவுகளைத்தான்.... :-)))
இளா -> ஒரு நடமாடும் தகவல் களஞ்சியமா இருக்கிற இளாவோடு சில முறை பேசியதுண்டு. பல தளங்களை நிர்வகிக்கும் இவர், பல தளங்களிலும் பயணிக்கிறார். தற்போது இவர் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் - சாண்டில்யனின் ஜல தீபம். (அப்பாடா... சொல்லிட்டேம்பா...!!!).
வெண்பூ -> சில முறை சேட்டினதாலும் (சௌகார்பேட் சேட்? நோ நோ!!!) ஒரு முறையே பேசினாலும், நெருங்கிய நண்பராக கருதுவதில் இவரும் ஒருவர். சிறுகதை மன்னர் என்று அழைக்கப்படும் இவர் எழுதிய அறிவியல் போட்டிக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்ததாகும்.
அப்துல்லா -> என் தம்பி கூட என்னை 'டேய்'ன்னு ஆரம்பிச்சி '$%$%' அப்படின்னுதான் கூப்பிடுவான். இவர்தான் என்னை முதலில் அண்ணே
என்று கூப்பிட்டு நெகிழ வைத்தவர். சென்னையிலிருந்து என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசிய நல்ல நண்பர். நான் புதுசா ஒண்ணும்
சொல்லப்போறதில்லை. நம்ம நண்பர் ஜோசப் கொடுத்த அறிமுகம் இங்கே.
வால்பையன் -> பலமுறை பேசிய இவரையும் நெருங்கிய நண்பராக கருதுகிறேன். பல்வேறு எதிர்ப்பதிவுகள், மொக்கைகள் எழுதினாலும்,
நச்சென்று இவர் எழுதிய இந்த பதிவு காலத்துக்கும் எனக்கு நினைவிலிருக்கும்.
பரிசல் -> முதல் தொலைபேசியிலேயே கடகடவென்று பேசி நெருக்கம் காட்டிய நண்பர். (அடிக்கடி, நான் ரொம்ப அறுக்கலியேன்னு கேள்வி
வேறே!!!). இவரைப் பற்றி போன பதிவிலேயே சொல்லிவிட்டதால், நெக்ஸ்ட்.
விஜய் ஆனந்த் -> சிரிப்பான் பின்னூட்டம் மட்டுமே போடும் புகழ் பெற்ற பதிவர் இவர். வாரயிறுதியில் என்னுடைய சாப்பாட்டு மெனு என்னவென்று தெரிந்து கொள்வதில் ஆர்வமுடையவர். அத்துடன் தன் நடவடிக்கைகளையும்(!!!) அப்டேட் செய்பவர்.
ராப் -> சொல்லாமல் கொள்ளாமல் பதிவுக்கு லீவ் போட்டால், மெயிலடித்து நலன் விசாரிக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் இவரும் ஒருவர்.
(ஆயிரத்தில் ஒருத்தி!!!).
விக்னேஸ்வரன் -> கதை, கட்டுரை, கவிதை எல்லாத்திலேயும் கலந்து கட்டி கலக்கும் ஒரு நண்பர். நிறைய வாசிப்பு பழக்கமுடைய விக்கி, ஏகப்பட்ட மேட்டர்கள் ஊடகங்களிலும் எழுதி வருகிறார். அடிக்கடி பேசும் நல்ல நண்பர்களில் ஒருவர்.
------------
மக்களே, நான் பெற விரும்புவது வெறும் உங்க நட்பைத்தான். அதனால், நான் ஆன்லைனில் இருந்தால் - அந்த சமயம் உங்களுக்கு பொழுது போகலேன்னா - தயவு தாட்சண்யம் பார்க்காமல் பிங் செய்யவும்.
நான் மொதொ... நான் மொதோ... நாந்தான் மொதொ...
ReplyDeleteஹிஹிஹி தன்யனானேன் அண்ணே!
ReplyDeleteஇலவச தொலைபேசி Us, can, aus, nz, uk எல்லாம் இருப்பதால் பொழுது போகாதவர்கள் பிங்க் செய்தால் போன் செய்யப்படும்.
ReplyDeleteme the 4TH:):):) innaikku collections super:):):)
ReplyDeleteசிங்கை, மலேசியா, லேன்ட் லைன் நம்பர்கள், அமெரிக்கா, கனடா லேண்ட் லைன் , மொபைல் போன் நம்பர்களுக்கு இலவச மொக்கை வசதி உண்டு நம்பர் மெயிலவும்
ReplyDeleteஒரே ஒரு தரம் இளாவுக்கு மொக்கை போட்டேன். நெஜமா நல்லவருக்கு மொக்கை போட்டிருக்கேன்.
இப்ப இன்னொருத்தர் (ச்சின்ன பையனாம்) சிக்கியிருக்கார். ரொம்பாஆஆ நல்லவராம்.
:)))))))))))
//மூன்று முறை நண்பர்கள்(!!!) கொடுத்த ஆப்பில் சற்றும் மனம் தளராத விக்கி போல்//
ReplyDeleteஇது பிடிபட மாட்டேங்குதே?
அதுக்கப்பறம் நீங்க என்னைக் கூப்பிடவே இல்லைங்கறதையும் சபையில் சொல்லிக்கொள்கிறேன்!
ReplyDeleteஆப்பு பலமா?
ReplyDeleteநான் உள்ளே வரலாமா!
//தன்னிடத்திலிருந்து அமெரிக்காவுக்கு இலவச தொலைபேசின்னவுடனே,
ReplyDeleteஎனக்குத் தொலைபேசி மொக்கை போட்டவரு.//
அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லுங்க
நாங்களும் மொக்கை போடுவோம்ல
//ஒரு நடமாடும் தகவல் களஞ்சியமா இருக்கிற இளாவோடு சில முறை பேசியதுண்டு.//
ReplyDeleteஇவருடன் இணைந்திருக்கும் இசையை பற்றி சொல்லுவிங்கன்னு எதிர்பார்த்தேன்
//சிறுகதை மன்னர் என்று அழைக்கப்படும் இவர் //
ReplyDeleteபிரியாணி விட்டு போச்சு.
சென்னை வரும் போது உங்களுக்கு பிரியாணி கிடையாது
//என் தம்பி கூட என்னை 'டேய்'ன்னு ஆரம்பிச்சி '$%$%' அப்படின்னுதான் கூப்பிடுவான்.//
ReplyDeleteஅது உங்களோட பட்ட பெயர் தானே,
கொஞ்சம் எனக்கு மட்டும் சொல்லுங்களேன்
//நான் புதுசா ஒண்ணும்
ReplyDeleteசொல்லப்போறதில்லை. //
அதானே அறிமுகத்திற்க்கே அறிமுகமா!
//பலமுறை பேசிய இவரையும் நெருங்கிய நண்பராக கருதுகிறேன்.//
ReplyDeleteஎன்னையும் மனுசனா மதிச்சி ஒருத்தர் நண்பர்ன்னு சொல்லிட்டாரைய்யா
கொஞ்ச நேரத்துக்கு வால சுருட்டி வச்சிக்கனும்
//சிரிப்பான் பின்னூட்டம் மட்டுமே போடும் புகழ் பெற்ற பதிவர் இவர்.//
ReplyDeleteஅனைவரையும் வாரம் ஒரு முறையாவது அலைபேசியில் அழைத்து நலம் விசாரிப்பார்.
//(ஆயிரத்தில் ஒருத்தி!!!).
ReplyDelete//
இருந்தாலும் இவரது மெயில் தான் முதலாவதாக இருக்கும் அதை சொல்ல மறந்து விட்டீர்கள்
வாங்க மகேஷ்ஜி -> ஆமா. நீங்கதான் மொதோ.... அவ்வ்வ். அட்டென்டன்ஸ் போட்டுட்டு தூங்கிட்டீங்களா????... :-)))
ReplyDeleteவாங்க தமிழ் -> நன்றி...
வாங்க ராப் -> வலைச்சரத்துக்கு இதுவும் ஒரு டெம்ப்ளேட் பின்னூட்டமாஆஆஆ????
வாங்க சிவா -> மெயிலறேன்......
//நிறைய வாசிப்பு பழக்கமுடைய விக்கி, ஏகப்பட்ட மேட்டர்கள் ஊடகங்களிலும் எழுதி வருகிறார்.//
ReplyDeleteஆமாம். நல்ல விசயங்களை எல்லாம் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவிட்டு
நமக்கு மொக்கையை மட்டும் தருவார்.
அந்த பத்திரிக்கை கட்டுரை வேண்டுவோர் என்னை மெயிலில் அனுகலாம்
//தயவு தாட்சண்யம் பார்க்காமல் பிங் செய்யவும்.//
ReplyDeleteஆமா
எப்ப பார்த்தாலும் சாப்பிட போயிட்டேன்
டெஸ்க்குல இல்லை
ஆணி புடுங்குறேன்ன்னு ஸ்டேடஸ் வச்சா எப்படி பிங் பண்றதாம்
20
ReplyDeleteஅடடே விக்கி -> நான் சொன்னது வேறே விக்கிபா... அது ராஜா விக்ரமாதித்யன்... ஆப்பு கிடைச்சது எனக்கு... புரிஞ்சுதா..... அவ்வ்வ்...
ReplyDeleteஅவ்வ்வ் பரிசல் -> சரி சரி.... கூப்பிடறேன்...
வாங்க வால் -> அது அமீரகத்திலிருந்து மட்டும்தான் சாத்தியம் போல... தமிழ் / சிவாகிட்டே கேளுங்க...
எல்லாரையும் கலாய்க்கறீங்க... அதுக்கெல்லான் அவங்களே வந்து பதில் சொல்வாங்கன்னு எதிர்பார்க்கறேன்...
//-> அமெரிக்கா கிழக்குக் கரைக்கு வந்து - நியூயார்க் வருவேன்னு சொல்லி ஏமாத்திட்டு - வராமலேயே இந்தியா
ReplyDeleteதிரும்பப் போறவர்.
ஆஹா..சத்யா..இப்படி ஒரு ஆதங்கம் உங்களுக்கு இருக்கிறது தெரிஞ்சா..கண்டிப்பா வந்திருப்பேன்..அதனாலென்ன..சந்திக்காமலா இருந்திடப்போறோம்.
//கப்பட்ட மேட்டர்கள் ஊடகங்களிலும் எழுதி வருகிறார். //
ReplyDeleteமேட்டர் என்றால் என்ன என்று தெளிவாக சொல்லவும். ஏற்கனவே சிற்றிதழில் எழுதுகிறேன் என்பதை உயர் திரு. ஞானக் குழந்தை குசும்பன் அவர்கள் சிற்றின்ப இதழில் எழுதுறேனு சொல்லி வச்ச ஆப்பு பிடுங்கப்படாமல் இருக்கிறது... இப்போது மொட்டையாக மேட்டர் என எழுதினால் தாங்காது.... எங்க போனாலும் விடமாட்றாங்கய்யா.... அவ்வ்வ்வ்வ்வ்....
//சென்னை வரும் போது உங்களுக்கு பிரியாணி கிடையாது//
ReplyDeleteஅதை எனக்கு கொடுத்துவிடவும்....
//அது உங்களோட பட்ட பெயர் தானே,
ReplyDeleteகொஞ்சம் எனக்கு மட்டும் சொல்லுங்களேன்//
எனக்கும் எனக்கும்...
அப்பாடா போட்டாச்சு 25....
ReplyDelete//என்னையும் மனுசனா மதிச்சி ஒருத்தர் நண்பர்ன்னு சொல்லிட்டாரைய்யா
ReplyDeleteகொஞ்ச நேரத்துக்கு வால சுருட்டி வச்சிக்கனும்//
தோடா வாலு பீலிங்ஸ்....
//ஆமாம். நல்ல விசயங்களை எல்லாம் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவிட்டு
ReplyDeleteநமக்கு மொக்கையை மட்டும் தருவார்.
அந்த பத்திரிக்கை கட்டுரை வேண்டுவோர் என்னை மெயிலில் அனுகலாம்//
இது என் மீது சுமத்தப்படும் வீண் பழி... எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி....
/*
ReplyDeleteமக்களே, நான் பெற விரும்புவது வெறும் உங்க நட்பைத்தான். அதனால், நான் ஆன்லைனில் இருந்தால் - அந்த சமயம் உங்களுக்கு பொழுது போகலேன்னா - தயவு தாட்சண்யம் பார்க்காமல் பிங் செய்யவும்.
*/
நீங்க ரெம்ப நல்லவரு..
அவ்வ்வ்வ்வ்...
ReplyDeleteஎனக்கு நாக்கு மேலண்ணத்துல ஒட்டிக்கிச்சி...வார்த்தையே வரல....அனால, தமிழ் அண்ணாச்சி சொன்ன " ஹிஹிஹி தன்யனானேன் அண்ணே! "-ஐ ரிப்பீட்டிக்கிறேன்...
இவரையும் நெருங்கிய நண்பராக கருதுகிறேன்.
ReplyDelete//
என்னாது...கருதுரீங்களா?? அப்ப வாலு மெய்யாலுமே உங்க ஃபிரண்ட் இல்லையா???
//(அடிக்கடி, நான் ரொம்ப அறுக்கலியேன்னு கேள்வி
ReplyDeleteவேறே!
////
தெருஞ்க்கிட்டே தப்பு பண்றதுல பரிசல் எப்பவுமே கில்லாடி :)
//வாரயிறுதியில் என்னுடைய சாப்பாட்டு மெனு என்னவென்று தெரிந்து கொள்வதில் ஆர்வமுடையவர்
ReplyDelete//
நாடு விட்டு நாடு புடுஙகித் திங்குறாருங்கிறத இவ்வளவு நாகரீகமா சொல்லுறீக :))
This comment has been removed by the author.
ReplyDelete//innaikku collections super:):):)
ReplyDelete//
அடப்பாவி மகளே...வேலை இல்லைன்னு சொல்லி வருத்தப்பட்ட...அதுக்காக...
:)))
//எல்லாத்திலேயும் கலந்து கட்டி கலக்கும்
ReplyDelete//
இந்த வரி வாலுப்பையனுக்குத்தான் பொருந்தும்போல இருக்கே :)))
வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> கண்டிப்பா சென்னையில் சந்திக்கலாங்க... நோ ப்ராப்ளம்... :-))
ReplyDeleteவாங்க விக்கி -> அட.. மேட்டர்னாவே கெட்ட மேட்டர்தானா... அப்பப்ப நல்ல மேட்டரும் எழுதறீங்களே... அவ்வ்வ்...
வாங்க நசரேயன் -> :-))))
வாங்க விஜய் -> டெம்ப்ளேட் பின்னூட்டப் பதிவராயிட்டீங்க.... :-))
அடடே வாங்க அப்துல்லாஜி -> நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்... :-))))
ReplyDelete