வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
Monday, January 5, 2009
கதம்பத்திலிருந்து (வலைச்)சரத்துக்கு
அய்யா, வலையுலக எழுத்தாளர்களே, என்னத்த எழுதினாலும் சலிக்காம வாசிக்கிறவகளே, அயத்துப் போகாம பின்னூட்டம் போடுறவகளே வணக்கம்; உங்க எல்லாத்துக்கும்.
நம்ம சீனா சார்வாள்தான் வம்படியா என்ன வலச்சரத்துக்கு வாத்தியாராக்கிப் புட்டாக. ஏதும் திட்டனும்னா அவுகளத் திட்டீராதீக. அவுகளுக்கென்ன தெரியும் நம்ம திறமை(யின்மை)? அவுக வெளுத்ததெல்லாம் பாலுன்னு நெனைக்கிறவுக.
சரி ஏத்துக்கிட்டோம், அத நிறைவாச் செய்வோமுன்னு தொடங்கீட்டேன். எப்படின்னாலும் நீங்கெல்லாம் ஆதரவு தருவீங்கதானே. பின்ன இல்லாமலா இம்புட்டு நாளும் நம்ம வண்டியும் ஓடுது? மத்தவகளப் பத்தி எழுத முன்னே என்னப் பத்தியும் கொஞ்சங்கானம் சொல்லிக்கிடட்டுமா?
நானும் மத்தவுக மாதிரி ஆரம்பத்துல வலைப் பூக்கள வெறுமனே படிச்சிட்டுத்தாம் இருந்தேன். நம்ம தங்கமணியும் பிள்ளியளும்தான் சொல்லிச்சுக. இப்பிடியாக்கும் அப்பிடியாக்கும்னு பூச்சாண்டி(ச்சின்னப்பையன் இல்ல) காட்டுதியளே எழுதித்தாம் பாருங்களேம்னாங்க. சரி நமக்கு ஒரு பதிவான இடம் இருந்தா நல்லதுதாம்னு எழுத ஆரம்பிச்சிட்டேன்.
ஆரம்பிக்கப்ப கொஞ்சம் மொக்கையாத்தாம் எழுதுனேன். பொறவுதான் கொஞ்சமாச்சும் சீரியஸா(!?) எழுதுவோமேன்னு எழுதுதேன். நாம எழுதுனத விட எழுதுனதப் படிச்சி ஒரு நாலு பேருகிட்டப் பகிர்ந்துக்கிட்டோம்னா நல்லா இருக்குமேங்கிறதுதான் நம்ம பாலிசி. அது கதம்பம்ங்கிற பேர்ல எழுதுதேன். மாதிரிக்கு ஒன்னு ரெண்டு பாருங்களேன்.
கதம்பம் - 30/12/08
கதம்பம் 15/12/08
கதம்பம் - 8/12/08
கதம்பம் - 1-12-08
இதல்லாம வேற ரெண்டு மூனு பதிவுகள ஓரளவுக்குப் பரவாயில்லங்கிற வகையில எழுதியிருக்கேன். அதுல ஒன்னுதான் மற(றை)ந்து போன பழைய விஷயங்களப் பத்தின பதிவு கும்மியும் தொடர் சைக்கிளோட்டமும். கும்மி அடிக்கிறதுங்கிறது இப்ப வலையில வேற அர்த்தமாயிருச்சுல்லா.
சின்ன வயசுல செஞ்ச, இன்னும் மனசில நிக்கிற விஷயங்களப் பத்தின பதிவு ஒரு தொடரா வந்தது . அதுல இது நம்ம அனுபவம் பத்த வைச்சுட்டியே பரட்ட (அல்லது) ஊக்கமுள்ளோருக்கு பரம திருப்தி.
ஒரு கதை எழுதிப் பார்க்கலாம்னு முயற்சி செஞ்சதோட விளைவப் பார்த்தியளா? ஆனா நல்லா இருக்குன்னு எல்லோரும் சொல்லுதாவ, அம்மாவுக்கும் அக்காவுக்கும் சண்டை நீங்க என்ன சொல்லுதிய?
வலையில எழுதுதவகளுக்கு சரியான தமிழ் எழுதிப் பழக்கம் இல்லாததால கொஞ்சம் பிழையோட எழுதுதாங்களேன்ன ஆதங்கத்துல எழுதுனது. நீங்க என் மனைவி நான் உங்க கணவர் இந்தப் பதிவயையும் அனியம்பேரு பாராடுனாவ.
தற்(ம்)பெருமை போதுமுன்னு நெனைக்கேன். மத்தவுக பதிவுகள நாள பாப்பமா?
நாள மறக்காம வருவியளா?
வர்றோம் :)
ReplyDeleteஅழகான பேச்சுத்தமிழ்...
ஆரம்பமே கலக்கல்..வாழ்த்துக்கள் நண்பரே :)
உங்களுடைய பரந்த வாசிப்புதளம் தெரியும். அதனால் இந்த வாரம் நிறைய பேரை அறிமுகப்படுத்துவீர்களென எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் வேலன்
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே
ReplyDeleteஅண்ணாச்சி, வலைச்சர ஆசிரியர் கூடுதல் பொறுப்புக்கு வாழ்த்துகள்!
ReplyDelete//அவுக வெளுத்ததெல்லாம் பாலுன்னு நெனைக்கிறவுக.//
அப்படியா ? வால் பையன் வெளுத்ததெல்லாம் கள்ளுன்னு நினச்சி பாலைக் குடிச்சிட்டே ரவுசு பண்ணுவாராம்.
வருக வருக
ReplyDeleteதமிழ் மழை பொழிக
வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!!
ReplyDeleteவலைச்சரம் வலையின் மூலம் பல புதிய வலைத்தள நண்பர்கள் அறிமுகமாகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் எனக்கு அறிமுகமாகும் வடகரை வேலன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணாச்சி... நீங்க எழுதுங்க... நாங்க வருவம்லா...
ReplyDeleteவாங்கோண்ணாச்சி! கலக்குவீங்களே... ஜ்யோவ்ராம்ஜி சொன்னதை வழிமொழிஞ்சுகிட்டு எஸ்கேப்பிக்கறேன்!
ReplyDeleteஅண்ணாச்சி உங்க புத்தக வாசிப்பு பத்தி அங்கங்க கோடிகாட்டியிருக்கீங்க..இங்க விரிவா அறிமுகப்படுத்தனும்னு விரும்பி கேட்டுக்கிறேன்.
ReplyDeleteநன்றி ரிஷான்
ReplyDeleteநன்றி சுந்தர்
நன்றி கிரி
நன்றி திகழ்மிளிர்
நன்றி ஜீவராஜ்
நன்றி கோவி
நன்றி வால்
நன்றி வெயிலான்
நன்றி அன்புமணி
நன்றி மகேஷ்
நன்றி பரிசல்
வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணாச்சி...
ReplyDeleteதேடிப்பிடிச்சி நிறைய படிக்கிறீங்கன்னு தெரியும். அதனால் ஆவலுடன்....
ReplyDeleteவாழ்த்துகள் அண்ணாச்சி. சுந்தர் சொல்லி, பரிசல் வழிமொழிஞ்சதை, மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் பரந்த வாசிப்பு அனுபவம் மற்றவர்களுக்கும் தெரிய வரட்டும். கலக்குங்க.
ReplyDeleteகொஞ்ச நாட்களாகவே, தெரிஞ்ச பதிவர்கள் தான் 'வலைச்சர' ஆசிரியர்கள். சேவியர், வசந்தகுமார், பரிசல், வெயிலான், ரிஷான் இப்போ நீங்கள் என்று.
அனுஜன்யா
வடகரை வேலன் - அறிமுகப் பதிவு அருமை. நல்வாழ்த்துகள்
ReplyDeleteலேபிள் தங்களுடைய அனைத்து வலைச்சரப் பதிவுகளிலும் "வடகரை வேலன்" என்று இடுங்கள். தமிழ் மணத்தில் இணைக்கவும்.
கலக்கிட்டீங்களே! நாளைக்கும் வர்றோம். நல்ல அறிமுகங்களை எதிர்நோக்குகிறேன்.(வசந்தகுமார், வெயிலான்,ரிஷான் மாதிரி)
ReplyDeleteவாழ்த்துக்கள் வடகரை வேலன்
ReplyDelete'நீங்க என் மனைவி' இப்போதான் படிக்கிறேன், ஹிஹி.. கலக்கல் தல.!
ReplyDelete