ஒருவரது எண்ணக் கருத்துக்கள் பலதுறைகளிலும், பலவிதங்களிலும் வெளிப்படுத்தப்படலாம். கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், ஓவியங்கள், புகைப்படங்கள், பத்தி எழுத்துக்கள், நகைச்சுவை எழுத்துக்கள் எனத் தனது ஆற்றல்களைப் பலரும் பல விதங்களில் வெளிப்படுத்தலாம். நான் இன்று குறிப்பிட இருப்பவர்கள் மேற்கூறிய பல ஆற்றல்களைத் தமது ஒரே வலைப்பூவில் வெளிப்படுத்துபவர்கள். தேடிச் செல்லும் வாசகனை, அலுப்பூட்டாது விருந்து படைக்கும் வலைப்பூக்களுக்குச் சொந்தக்காரர்கள்.
கண்ணபிரான் ரவிஷங்கர் - ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் இருபது வலைப்பூக்களில் பங்கெடுத்து எழுதிவருகிறார். ஒரு பதிவு எழுதுவதற்குள்ளேயே விழிபிதுங்கி நிற்குமென்னைப் பெரும் ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தும் பதிவர் இவர். ஆன்மீகம், இசை, பாடல்கள், நகைச்சுவை, விமர்சனங்களெனப்பலதும் எழுதி அசத்துமிவர் அவ்வப்போது வாக்கெடுப்புக்களையும் நடத்திவருகிறார். கடந்த வருடங்கள் தந்த மிகச் சிறந்த பதிவர்களில் ஒருவர்.
ஜமாலன் - மிகக் காத்திரமான அரசியல் மற்றும் இலக்கியக் கட்டுரைகளை எழுதிவரும் இவரது நூலின் தலைப்பு 'மொழியும் நிலமும்'. வலைப்பூவும் அதுவேயாகி பல பதிவுகளைத் தாங்கி நிற்கிறது. இவரது 'காலக்குறி' வலைப்பூ இவரது கவிதைகள், இலக்கியம் சம்பந்தமான பதிவுகளைக் கொண்டிருப்பதோடு இவரது இன்னுமொரு வலைப்பூவில் உடலரசியல் குறித்த கட்டுரைகளை எழுதிவருகிறார்.
நண்பன் - அமீரகத்திலிருந்து வலைப்பதிந்து வருமிவர் மிகக் காத்திரமான அரசியல் கட்டுரைகளை எழுதிவருபவர். கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்களென இன்னும் பல குறித்தும் அருமையாக எழுதிவருகிறார்.
கார்த்திக் - பாரதியார் கவிதையைத் தனக்குப் பிடித்த கவிதையெனக் கூறும் இவரது வலைப்பூ பல தளங்களையும் சேர்ந்த பதிவுகளைத் தன்னுள் கொண்டது. கட்டுரைகள், விமர்சனங்கள், புகைப்படங்களென இவர் பல பதிவுகளை அருமையாக எழுதி வருகிறார்.
சதங்கா - 'நான் நான் என்று அலைந்தால் அகந்தை, நான் யார் என்று ஆராய்ந்தால் தத்துவம், நான் நீ என்றால் அன்பு ...' என அழகாகச் சொல்லும் இவரது வலைத்தளம் அழகிய ஓவியங்களால் மனம் நிறையச் செய்கிறது.
லதானந்த் - வித்தியாசமாகத் தனது ஒவ்வொரு பதிவோடும் தனது புகைப்படங்களையிட்டுப் பதிவெழுதிவருமொரு பிரபல எழுத்தாளரான இவர் தனது எழுத்துக்களால் குறுகிய காலத்திலேயே வலையுலகத்திலும் தனக்கென ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுக்கொண்டவர். இவரது எழுத்துக்களில் பிரதிபலிக்கும் கொங்கு மொழிநடை எழுத வந்த விடயத்திற்கு மேலும் வலுச் சேர்ப்பதோடு, நகைச்சுவை கலந்து எழுதுவதானது பதிவினை மனதுக்கு நெருக்கமாக்கிறது. அனுபவக் குறிப்புக்கள், கட்டுரைகள், சிறுகதைகள் என்பனவற்றோடு பதிவர்களின் கேள்விகளுக்கும் அருமையாக பதிலளித்துவருகிறார்.
தாமிரா - இவரது பதிவுகள் எல்லாத் தளங்கள் நோக்கியும் பயணிப்பவை. பெரும்பாலானவை அனுபவக்குறிப்புக்கள். அவற்றையும் திருப்பங்கள் வைத்து நகைச்சுவை தொனிக்கும் நடையில் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்.
தமிழ் பிரியன் - 'இது என்னோட இடம்' எனச் சொல்லும் இவரது வலைத்தளம் பல விதமான கட்டுரைகளால் நிறைந்திருக்கிறது . கவிதை, விமர்சனம், அனுபவக் குறிப்புக்கள் எனப் பலவற்றால் தனது வலைப்பக்கம் நோக்கிக் கவர்ந்திழுக்கிறார்.
தமிழ் பறவை - சிறந்த ஓவியரான இவரது வலைத்தளம் அழகான ஓவியங்களால் மின்னுகிறது. ஓவியம் மட்டுமல்லாது கவிதை, விமர்சனம், அனுபவக் குறிப்புகள் எனப் பலவற்றை எழுதிவருகிறார்.
அபி அப்பா - வலையுலகில் அனைவராலும் அறியப்பட்ட இன்னுமொரு சிறந்த பதிவர். இவரது பதிவுகளை, அனுபவக்குறிப்புக்களைப் படித்தால் வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் அளவிற்கு மிகவும் சுவாரஸ்யமாக எழுதுகிறார்.
சஞ்சய் - 'ஒன்றா இரண்டா? எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா?' எனக் கேட்கும் பொடியனான இவரது வலைப்பூ Break the rule எனச் சொல்கிறது. எலலவிதமான பதிவுகளையும் சுவாரஸ்யமான முறையில் எழுதி விருந்து படைக்கிறார்.
மங்களூர் சிவா - பல பதிவர்களாலும் நகைச்சுவை தொனிக்க எழுதிவரும் பதிவரென அறியப்பட்ட இவரும் பன்முகம் கொண்ட ஒரு படைப்பாளி. பணம், பங்குச் சந்தை, இன்னும் பிற சந்தை நிலவரங்கள் எனவும் பல பயனுள்ள பதிவுகள் எழுதிவருகிறார்.
பிரேம்குமார் - இவரது கவிதைகளை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கக் கூடும். 'மொழியோடு ஒரு பயணம் ' எனும் இவரது இந்த வலைத்தளத்தில் கவிதைகளோடு இவரது அனுபவக் குறிப்புக்களை அழகாக எழுதிவருகிறார்.
வால்பையன் - வலையுலகிற்கு இவரைப் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தன் சுவாரஸ்யமான பதிவுகளால் மிகவும் பிரபலமானதொரு பதிவர். எல்லாவிதமான பதிவுகளையும் எல்லோரும் விரும்பும் வண்ணம் சொல்லவந்த விடயத்தை வெகு திறமையாகச் சொல்கிறார்.
ச்சின்னப் பையன் - அனுபவக் குறிப்புக்களை வாய்விட்டுச் சிரிக்கும் படியாக எழுதி பலர் மனதையும் கவர்ந்தவர் இவர். தேர்ந்தெடுக்கும் விடயத்தை நகைச்சுவை மிகுந்த மொழிநடையோடு சொல்லி வருகிறார்.
நாடோடி - இவரது 'புய்ப்பம்' வலைப்பூ என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய வலைப்பூக்களிலொன்று. அரசியல், சினிமா, கவிதை,விளையாட்டு, அனுபவங்கள் என எல்லாம் சார்ந்து அருமையாக எழுதுகிறார் இவர். சீன ஒலிம்பிக், இனக்கலவரம் குறித்த விரிவான பதிவுகள் நன்றாக உள்ளன.
சர்வேசன் - 'ஆக்கியவன் அல்ல அளப்பவன்' என தன்னைப் பற்றிச் சொல்லும் இவர் வலையுலகில் எல்லோராலும் அறியப்பட்ட ஒரு மூத்த பதிவர். அனுபவக் கட்டுரைகள், விமர்சனங்கள் எனப் பலவற்றை எழுதிவருகிறார்.
வடுவூர் குமார் - தனது தொழில்சார்ந்த அனுபவங்களை புகைப்படங்களோடு அருமையான பதிவுகளாக எழுதிவருகிறார் இவர். அத்தோடு தனது 'லினக்ஸ்' வலைப்பூவில் கணினி சம்பந்தமான பாடங்களை பயனுள்ள விதத்தில் கற்றுத் தருகிறார்.
மஹேஷ் - அரசியல் கட்டுரைகள், உலக சினிமாக்கள், அனுபவக் குறிப்புக்களெனப் பரந்துபட்ட எழுத்துலகம் இவருடையது. நல்ல பல கட்டுரைகளை காத்திரமாக எழுதிவருகிறார்.
பல்துறைகளிலும் எழுதிவரும் இன்னும் பல சுவாரஸ்யமான பதிவர்கள் அனேகர்கள் இப்பதிவுக்கு வெளியே இருக்கிறார்கள். எல்லோரையும் ஒரு பதிவில் இடம்பெறச்செய்ய ஆசைதான் எனினும் நேரமும் இணையமும் தற்சமயம் இடமளிக்கவில்லை. அவர்களை இன்னுமொரு பதிவில் சந்திப்போம்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்.
கலக்கல் ;)
ReplyDeleteஅடேங்கப்பா.... எம்மாம் பெரிய பட்டியல் :)
ReplyDeleteவாழ்த்துக்களும் நன்றிகளும்....
ReplyDeleteகடைசியில் "மஹேஷ்" என்ற பதிவரின் சுட்டியில் அபிஅப்பா பதிவு இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் சுட்ட வந்தது என்னுடைய பதிவையா? ஹி ஹிஹ் ஹி ஹிஹ் ஹி :)))))
அட நான் கூடவா! என்ன கொடுமை ரிஷான்!உன் அட்ரஸ் சொல்லுப்பா:-))
ReplyDelete//அடேங்கப்பா.... எம்மாம் பெரிய பட்டியல் :)//
ReplyDeleteஅதே ! அதே !!
அதில் 'சித்திரம் பேசுதடி'யையும் சேர்த்துக் கொண்டதற்கு நன்றிகள் பல.
ஆஹா ... பதிவின் படம் அற்புதம். ச்சோ ச்வீட் க்யூட்டீஸ் ....
ReplyDeleteபல திறமைமிக்க பதிவர்கள் மத்தியில் என் பதிவுமா?
ReplyDeleteஉங்கள் அன்பே காரணம் என நான் அறிவேன்!
நன்றி நண்பரே!
எலேய்.. இம்புட்டு பேரை வாச்சி பண்றியா நீயி? நல்லா இருலெ.. இந்த சூப்பர் பதிவருங்க பட்டியல்ல சுமாருக்கும் கீழ இருக்கிற என்னையும் பட்டியலிட்டதுக்கு ரொம்ப நன்றி ராசா.. :)
ReplyDeleteஅட நான் கூடவா!
ReplyDeleteநன்றி.
வாங்க கானாபிரபா :)
ReplyDelete//கலக்கல் ;)//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாங்க பிரேம்குமார் :)
ReplyDelete//அடேங்கப்பா.... எம்மாம் பெரிய பட்டியல் :)//
இன்னும் இருக்கிறார்கள்..:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் மஹேஷ்,
ReplyDelete//வாழ்த்துக்களும் நன்றிகளும்....
கடைசியில் "மஹேஷ்" என்ற பதிவரின் சுட்டியில் அபிஅப்பா பதிவு இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் சுட்ட வந்தது என்னுடைய பதிவையா? ஹி ஹிஹ் ஹி ஹிஹ் ஹி :)))))///
ஆமாம்..உங்களுடைய பதிவைத்தான் :)
இப்பொழுது சரிசெய்துவிட்டேன்..பாருங்கள் :)
வருகைக்கும் கருத்துக்கும் சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி நண்பரே :)
வாங்க அபி அப்பா :)
ReplyDelete//அட நான் கூடவா! என்ன கொடுமை ரிஷான்!உன் அட்ரஸ் சொல்லுப்பா:-))//
அட்ரஸா? இப்படிப் பப்ளிக்காக் 'கேக்'கக் கூடாது..வரும் போது எடுத்துட்டு வாங்க :P
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாங்க சதங்கா :)
ReplyDelete//
அதில் 'சித்திரம் பேசுதடி'யையும் சேர்த்துக் கொண்டதற்கு நன்றிகள் பல. //
அழகான ஓவியங்களைத் தொடருங்கள் :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாங்க வால்பையன் :)
ReplyDelete//பல திறமைமிக்க பதிவர்கள் மத்தியில் என் பதிவுமா?
உங்கள் அன்பே காரணம் என நான் அறிவேன்!
நன்றி நண்பரே! //
வலையுலகப் புகழ்பெற்றவர் நீங்கள்..உங்களை குறிப்பிடுவதில் எனக்கு மகிழ்ச்சியே :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாங்க சஞ்சய்காந்தி :)
ReplyDelete//எலேய்.. இம்புட்டு பேரை வாச்சி பண்றியா நீயி? நல்லா இருலெ.. இந்த சூப்பர் பதிவருங்க பட்டியல்ல சுமாருக்கும் கீழ இருக்கிற என்னையும் பட்டியலிட்டதுக்கு ரொம்ப நன்றி ராசா.. :)//
என்னது சுமாருக்கும் கீழயா? எனக்கும் மூத்த பதிவர் நீங்க..என்னமாக் கலக்குறீங்க :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாங்க வடுவூர் குமார் :)
ReplyDelete//அட நான் கூடவா!
நன்றி. //
ஆமாம் நீங்களும் தான் :)
உங்கள் சேவைகள் தொடரட்டும் நண்பரே :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)
/
ReplyDeleteஅபி அப்பா said...
அட நான் கூடவா! என்ன கொடுமை ரிஷான்!உன் அட்ரஸ் சொல்லுப்பா:-))
/
டபுள் ட்ரிபிள் ரிப்பிட்டேய்
வாழ்த்துக்கள் ரிஷான்...
ReplyDeleteநல்ல தொகுப்புக்கள் ரிஷான்... எவ்வளவுதான் இணையத்தில் தேடினாலும் இத்தனை பேரையும் எம்மால் கண்டு பிடித்திருக்க முடியாது.. அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்
ReplyDeleteஸாரி வழக்கம் போல மீ த லேட்டு.!
ReplyDelete"குட்டிப்பதிவர்களுக்கிடயே நானுமா? இதை கண்டிக்கிறேன்". என்னபா இது, ஒருத்தராவது மாற்றிச்சொல்ல வேண்டாமா? அதான் இப்பிடி.! ஹிஹி..
ஆமா. என்னோட ச்சின்ன வயசு புகைப்பட ஆல்பம் உங்களுக்கு எப்படி கிடைச்சது?????? :-))))
ReplyDeleteஎன்னையும் பட்டியலில் சேர்த்ததற்கு மிக்க நன்றி நண்பா....
ReplyDeleteரிஷான் ஷெரீப்,
ReplyDeleteஅனேகமாக என்னைத் தவிர அந்த பட்டியலில் இருந்த அனைத்து பதிவர்களும் மூத்த அல்லது அடிக்கடி தவறாமல் பதிவு எழுதி வருபவர்கள். இவர்கள் மத்தியில் என்னையும் சேர்த்ததிற்கு நன்றி.
என்னை தமிழ் பதிவு உலகத்திற்கு அறிமுகம் செய்த காலப்பயணி (kaalapayani.blogspot.com)'க்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
என்னை பொறுத்தவரை எழுத்து என்பது எளிதான காரியம் அல்ல . குஷ்வந்த் சிங்க் சொல்லியபடி "it's a pain in the arse".
அதிலும் ப்ளாக் என்பது தங்கு தடை அற்று கணினி உள்ள அனைவரையும் எளிதில் போய் சேரும் விஷயம். இப்படி பட்ட ஒன்றை பல்வேறு காரியங்களுக்கும் நடுவிலும் சிறப்பாக, வழமையாக எழுதி வரும் அனைவரும் எனக்கான ஊக்க கருவிகள்.
நன்றி அனைவருக்கும்.
அருமை ரிஷான்!!
ReplyDeleteஜமாலனை இணையத்தில் படிப்பவர்கள் குறிப்பிட்ட சிலராகத்தான் இருக்க முடியும் ஆனால் அவரை தீராநதியில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது...என்பது என் கருத்து...
மிக காத்திரமான கட்டுரைகளுக்க சொந்தக்காரர்...
:) நன்னி.
ReplyDelete"ஆத்தா நான் மூத்த பதிவர் ஆயிட்டேன்" ;)
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாங்க மங்களூர் சிவா :)
ReplyDelete//அட நான் கூடவா! என்ன கொடுமை ரிஷான்!உன் அட்ரஸ் சொல்லுப்பா:-))
/
டபுள் ட்ரிபிள் ரிப்பிட்டேய்//
அட்ரஸ் கேட்டு ஆட்டோ அனுப்ப மாட்டீங்களே சிவா :)
அன்பின் ஜமாலன்,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் சக்தி ,
ReplyDelete//நல்ல தொகுப்புக்கள் ரிஷான்... எவ்வளவுதான் இணையத்தில் தேடினாலும் இத்தனை பேரையும் எம்மால் கண்டு பிடித்திருக்க முடியாது.. அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் //
:)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சினேகிதி :)
வாங்க தாமிரா :)
ReplyDelete//ஸாரி வழக்கம் போல மீ த லேட்டு.!
"குட்டிப்பதிவர்களுக்கிடயே நானுமா? இதை கண்டிக்கிறேன்". என்னபா இது, ஒருத்தராவது மாற்றிச்சொல்ல வேண்டாமா? அதான் இப்பிடி.! ஹிஹி.. //
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா புது டயலாக்கோட வந்திருக்கீங்க தல :)
வாங்க ச்சின்னப்பையன் :)
ReplyDelete//ஆமா. என்னோட ச்சின்ன வயசு புகைப்பட ஆல்பம் உங்களுக்கு எப்படி கிடைச்சது?????? :-))))//
உங்களோடதா? அது நானாக்கும் :P
//என்னையும் பட்டியலில் சேர்த்ததற்கு மிக்க நன்றி நண்பா....//
ReplyDeleteச்சின்னப் பையன் ...உங்கள் சேவைகள் தொடரட்டும் !
அன்பின் நாடோடி,
ReplyDelete//ரிஷான் ஷெரீப்,
அனேகமாக என்னைத் தவிர அந்த பட்டியலில் இருந்த அனைத்து பதிவர்களும் மூத்த அல்லது அடிக்கடி தவறாமல் பதிவு எழுதி வருபவர்கள். இவர்கள் மத்தியில் என்னையும் சேர்த்ததிற்கு நன்றி.
என்னை தமிழ் பதிவு உலகத்திற்கு அறிமுகம் செய்த காலப்பயணி (kaalapayani.blogspot.com)'க்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
என்னை பொறுத்தவரை எழுத்து என்பது எளிதான காரியம் அல்ல . குஷ்வந்த் சிங்க் சொல்லியபடி "it's a pain in the arse".
அதிலும் ப்ளாக் என்பது தங்கு தடை அற்று கணினி உள்ள அனைவரையும் எளிதில் போய் சேரும் விஷயம். இப்படி பட்ட ஒன்றை பல்வேறு காரியங்களுக்கும் நடுவிலும் சிறப்பாக, வழமையாக எழுதி வரும் அனைவரும் எனக்கான ஊக்க கருவிகள். //
மிகச் சரியான கருத்து நண்பரே..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..:)
உங்கள் காத்திரமான எழுத்துக்கள் தொடரட்டும் நண்பரே !
அன்பின் தமிழன்,
ReplyDelete//அருமை ரிஷான்!!
ஜமாலனை இணையத்தில் படிப்பவர்கள் குறிப்பிட்ட சிலராகத்தான் இருக்க முடியும் ஆனால் அவரை தீராநதியில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது...என்பது என் கருத்து...
மிக காத்திரமான கட்டுரைகளுக்க சொந்தக்காரர்...//
ஆமாம் தமிழன்..ஜமாலனின் கட்டுரைகள் சிந்திக்கவைப்பவை..இவரது எல்லாப் பதிவுகளும் கூட அப்படித்தான்..பெரும் ஆச்சரியத்துக்குள்ளாக்குவன..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாங்க சர்வேசன் :)
ReplyDelete//:) நன்னி.
"ஆத்தா நான் மூத்த பதிவர் ஆயிட்டேன்" ;)//
ஆமாம்..அறிவிலும்..பதிவுகளிலும் மூத்த பதிவர் :)
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே :)
// வால்பையன் said...
ReplyDeleteபல திறமைமிக்க பதிவர்கள் மத்தியில் என் பதிவுமா?
உங்கள் அன்பே காரணம் என நான் அறிவேன்! //
அதே அதே
வாழ்துக்கள் ரிசான்.
அன்பின் கார்த்திக்,
ReplyDelete//பல திறமைமிக்க பதிவர்கள் மத்தியில் என் பதிவுமா?
உங்கள் அன்பே காரணம் என நான் அறிவேன்! //
அதே அதே
வாழ்துக்கள் ரிசான்.//
நல்ல எழுத்துக்களும் ஆய்வும் உங்களுடையது..தொடருங்கள் கார்த்திக் !
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)