Monday, March 2, 2009

என்னைப் பற்றி நானே!

நானும் வலைச்சர ஆசிரியரா ஆகீட்டேன்!!!!!!
முதல் இடுகையில் என்னைப் பற்றி நானே அறிமுகப்படுத்திக்கலாமாம்.. என்னைப் பத்தி சொல்ல ஒன்னுமே இல்லையே.. :P

பிறந்து வளர்ந்தது எல்லாம் விருதுநகர் பக்கத்தில் இருக்கும் ஆமத்தூர் என்னும் கிராமம். படித்தது ஆமத்தூர், விருதுநகர், சாத்தூர் மற்றும் மதுரை. இப்போ சிங்கையில் பொட்டிதட்டும் வேலை.:P

நான் வலைச்சரத்துக்கு திடீர் ஆசிரியர்தான். சீனா ஐயா "வெட்டியாத்தான இருக்க (அவருக்குக் கூட தெரிஞ்சிருக்கு நான் வெட்டியாத்தான் இருக்கேன்னு.. )... இந்த வாரம் வலைச்சரம் எழுது" அப்படின்னு கட்டளையிட்டுட்டார்... (ஒரு பேச்சுக்காவது எழுதுறயான்னு கேட்டுருக்கலாம். :P). என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி சீனா ஐயா. இது திடீரென முடிவானதால் முழுக்க தயாராகவில்லை... முடிந்தவரை எழுதுகிறேன்.

இந்த இடுகையில் என் பதிவை அறிமுகப்படுத்திக்கொள்ளலாமாம். ஆனால் சொல்லும் அளவுக்கு எதுவும் எழுதவில்லை.

இருந்தாலும்... என் பதிவில் எனக்குப் பிடித்த சில இடுகைகள்...

சிங்கப்பூரில் தமிழ் இல்லாத ஒரே இடம்
தமிழ்பித்தனுக்கு ஒரு எதிர்பதிவு
இதுவும் எதிர்பதிவுதான்.. ஜீவி ஐயாவுக்கு

நமக்கு அரசியல் எல்லாம் வரலைன்னு, கதையெழுத முயற்சித்தேன்.. அந்த முயற்சிதான் இது..

எதிர்பாராத திருப்பம்
இளம் ஜோடி - நஒக போட்டிக்கு அல்ல!

வழக்கம்போல, அதும் சரியா வராததால் ஆணியே பிடுங்கவேண்டாமின்னு முடிவு செய்து அன்றுமுதல் செவ்வனே மொக்கை போட்டு வருகிறேன்..
அடுத்த ஒரு வாரத்துக்கு வலைச்சரத்திலும் மொக்கை போடுறேன்.

77 comments:

  1. அதெப்படி - மீ த பர்ஸ்டு - செல்லாது செல்லாது - பி.க செல்லாது

    நாந்தேன் பர்ஸ்டு

    ReplyDelete
  2. அதென்னா உங்க கிட்டே கேக்கறது - ஏனக்கு நம்பிக்கை இருக்கு - நீங்க தூள் கெளப்புவீங்கன்னு

    ஆமா வேணும்னா கண்டினியூ பண்ணிக்கலாம் - கவலை வேண்டாம் - ஆசை தீர எழுதலாம் -
    சரியா

    ReplyDelete
  3. படிச்சது மதுரையா - எங்க - நானும் மதுரைலே தான் படிச்சேன்

    ReplyDelete
  4. செல்லாது செல்லாது :)

    வாழ்த்துகள்

    ReplyDelete
  5. வாங்க ஜெகதீசன் அவர்களே !!!

    வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    உங்கள் பணியை செவ்வனே செய்து வெற்றி வாகைப் பூ சூட இறைவனை இறைஞ்சுகிறேன்.

    ReplyDelete
  6. ஜெகதீசனுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  7. //cheena (சீனா) said...
    அதெப்படி - மீ த பர்ஸ்டு - செல்லாது செல்லாது - பி.க செல்லாது

    //

    நாட்டமை தீர்ப்ப மாத்து !
    :)

    ReplyDelete
  8. //பிறந்து வளர்ந்தது எல்லாம் விருதுநகர் பக்கத்தில் இருக்கும் ஆமத்தூர் என்னும் கிராமம். //

    பிறந்தே சரி, வளர்ந்தியா ? பால் குடிக்கும் குழந்தையாகத்தானே எல்லோரும் நினைச்சிருக்கோம்

    ReplyDelete
  9. ஆமத்தூரா ...ஆஹா நானும் அங்க தான் படிச்சேன்....இல்லை இல்லை ..அங்க இருக்குற கல்லூரிக்கு தான் என்னை படிக்குராதுககாக அனுப்பினாங்க.....
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. எனக்கு முதன் முறையாக அறிமுகமாகும்
    ஜெகதீசன் அவர்களுக்கு முதல்நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. வாழ்த்துகள் ஜெகதீசன் !!!! கலக்குங்க.

    ReplyDelete
  12. எப்பவுமே சிரிச்சுட்டு போகும் ஜெகதீசனுக்கு வாழ்த்துக்கள்

    உங்க பதிவுகாளை படித்துவிட்டு கண்டிப்பா சிரிப்பானை மட்டும் போட்டுவோம்

    ReplyDelete
  13. //
    நிலாவும் அம்மாவும் said...

    ஆமத்தூரா ...ஆஹா நானும் அங்க தான் படிச்சேன்....இல்லை இல்லை ..அங்க இருக்குற கல்லூரிக்கு தான் என்னை படிக்குராதுககாக அனுப்பினாங்க.....
    வாழ்த்துக்கள்..
    //
    ?????
    ஆமத்தூரில கல்லூரியா???
    மெப்கோவா?

    ReplyDelete
  14. வாழ்த்துகள்.
    என்ன ஒரே சிங்கப்பூர் வாசனையாக இருக்கு!!

    ReplyDelete
  15. வாங்க ஜெகதீசன் அவர்களே !!!

    வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  16. எனக்கு முதன் முறையாக அறிமுகமாகும் ஜெகதீசன் அவர்களுக்கு முதல்நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  17. //
    cheena (சீனா) said...
    அதெப்படி - மீ த பர்ஸ்டு - செல்லாது செல்லாது - பி.க செல்லாது

    நாந்தேன் பர்ஸ்டு

    //

    சொன்னா சொன்னத்ததுதான்
    மறுபரிசீலனை கிடையாதாம்!!!

    ReplyDelete
  18. //RAMYA said...
    //
    cheena (சீனா) said...
    அதெப்படி - மீ த பர்ஸ்டு - செல்லாது செல்லாது - பி.க செல்லாது

    நாந்தேன் பர்ஸ்டு

    //

    சொன்னா சொன்னத்ததுதான்
    மறுபரிசீலனை கிடையாதாம்!!!
    //

    அதானே..டீச்சர் சொல்லிட்டாங்கனா மேல்முறையீடே கிடையாது.

    ReplyDelete
  19. //
    அ.மு.செய்யது said...
    //RAMYA said...
    //
    cheena (சீனா) said...
    அதெப்படி - மீ த பர்ஸ்டு - செல்லாது செல்லாது - பி.க செல்லாது

    நாந்தேன் பர்ஸ்டு

    //

    சொன்னா சொன்னத்ததுதான்
    மறுபரிசீலனை கிடையாதாம்!!!
    //

    அதானே..டீச்சர் சொல்லிட்டாங்கனா மேல்முறையீடே கிடையாது.

    //


    ஆரம்பம் ஆகிடுச்சா செய்யது ??
    செய்யது நலமா??

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் ஜெகதீசன்.

    // ஆமத்தூரில கல்லூரியா??? //

    அட! ஆமத்தூர்ல கல்லூரியா? அஞ்சாங்கிளாஸ் பள்ளிக்கூடத்துக்கு மேல எதுவுமே இல்லியே.

    ReplyDelete
  21. ///
    வெயிலான் said...

    வாழ்த்துக்கள் ஜெகதீசன்.

    // ஆமத்தூரில கல்லூரியா??? //

    அட! ஆமத்தூர்ல கல்லூரியா? அஞ்சாங்கிளாஸ் பள்ளிக்கூடத்துக்கு மேல எதுவுமே இல்லியே.

    ///
    வெயிலான்... இதெல்லாம் ரெம்ப ஓவர்... :)

    ReplyDelete
  22. //திடீரென முடிவானதால் முழுக்க தயாராகவில்லை... முடிந்தவரை எழுதுகிறேன்.//

    முன் கூட்டியே அறிவிச்ச எக்ஸாம்ஸ் எல்லாத்துக்கு அப்படியே தயாராகி எழுதின மாதிரிதான்!

    ReplyDelete
  23. //ஒரு வாரத்துக்கு வலைச்சரத்திலும் மொக்கை போடுறேன்.//

    சரி மொக்கை மட்டும் சரியாக வருதுன்னு யாரு உங்களுக்கு சொன்னது????

    ReplyDelete
  24. //
    குசும்பன் said...

    //ஒரு வாரத்துக்கு வலைச்சரத்திலும் மொக்கை போடுறேன்.//

    சரி மொக்கை மட்டும் சரியாக வருதுன்னு யாரு உங்களுக்கு சொன்னது????

    //
    கிகிகி... எனக்கு மொக்கை நல்லா வருதுன்னு எங்கயாவது சொல்லீருக்கேனா என்ன?
    :P

    ReplyDelete
  25. // வடுவூர் குமார் said...

    வாழ்த்துகள்.
    என்ன ஒரே சிங்கப்பூர் வாசனையாக இருக்கு!!//

    :))

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் ஜெகதீசன்.

    எல்லாம் வல்ல இறைவனின் துணையோடு, கொடுத்த பணியினை சீரும் சிறப்புமாக முடிப்பீர்கள்.

    ReplyDelete
  27. // cheena (சீனா) said...

    அதென்னா உங்க கிட்டே கேக்கறது - ஏனக்கு நம்பிக்கை இருக்கு - நீங்க தூள் கெளப்புவீங்கன்னு

    ஆமா வேணும்னா கண்டினியூ பண்ணிக்கலாம் - கவலை வேண்டாம் - ஆசை தீர எழுதலாம் -
    சரியா //

    ஆசை தீர எழுதலாம்...

    எழுதற ஆசை தீர்ந்துடுச்சுன்னா எப்படி எழுத முடியும்...

    புரியல ... ஒரே கன்பூயஷன்ப்பா..

    ReplyDelete
  28. // cheena (சீனா) said...

    படிச்சது மதுரையா - எங்க - நானும் மதுரைலே தான் படிச்சேன் //

    படிச்சீங்களா......

    ஐ... பொய் சொல்லப்பிடாது... பள்ளிக்கூடம் போனோம் அப்படின்னு சொல்லணும்

    ReplyDelete
  29. // நட்புடன் ஜமால் said...

    செல்லாது செல்லாது :)

    வாழ்த்துகள் //

    தம்பி ஜமாலு... எதுக்கு வாழ்த்துக்கள்... செல்லாததுக்கா...

    ReplyDelete
  30. // கோவி.கண்ணன் said...

    //cheena (சீனா) said...
    அதெப்படி - மீ த பர்ஸ்டு - செல்லாது செல்லாது - பி.க செல்லாது

    //

    நாட்டமை தீர்ப்ப மாத்து !
    :)//

    யெஸ் நாட்டமை ... சேஞ்ச் தெ தீர்ப்பு...

    ReplyDelete
  31. // கோவி.கண்ணன் said...

    //பிறந்து வளர்ந்தது எல்லாம் விருதுநகர் பக்கத்தில் இருக்கும் ஆமத்தூர் என்னும் கிராமம். //

    பிறந்தே சரி, வளர்ந்தியா ? பால் குடிக்கும் குழந்தையாகத்தானே எல்லோரும் நினைச்சிருக்கோம் //

    அப்படின்னா அமுல் பேபி அப்படின்னு சொல்லுங்க...

    ReplyDelete
  32. // நிலாவும் அம்மாவும் said...

    ஆமத்தூரா ...ஆஹா நானும் அங்க தான் படிச்சேன்....இல்லை இல்லை ..அங்க இருக்குற கல்லூரிக்கு தான் என்னை படிக்குராதுககாக அனுப்பினாங்க.....
    வாழ்த்துக்கள்.. //

    கரெக்ட்டா சொல்றாரு பாருங்க... படிக்கிரத்துக்காக அனுப்பினாங்க...

    ReplyDelete
  33. // அன்புமணி said...

    எனக்கு முதன் முறையாக அறிமுகமாகும்
    ஜெகதீசன் அவர்களுக்கு முதல்நாள் வாழ்த்துக்கள்! //

    அப்படீங்களா...

    சேம் பிளட்... எனக்கு முதல் முறைதானுங்கோ...

    ReplyDelete
  34. // Mahesh said...

    வாழ்த்துகள் ஜெகதீசன் !!!! கலக்குங்க. //

    ஆமாம் பார்த்து மிக்ஸ் பண்ணுங்க...

    ReplyDelete
  35. // RAMYA said...

    //
    cheena (சீனா) said...
    அதெப்படி - மீ த பர்ஸ்டு - செல்லாது செல்லாது - பி.க செல்லாது

    நாந்தேன் பர்ஸ்டு

    //

    சொன்னா சொன்னத்ததுதான்
    மறுபரிசீலனை கிடையாதாம்!!! //

    தங்கச்சி ரம்யா சொல்லிட்டா அதுக்கு மறு பரிசீலனைக் கிடையாதுங்க..

    ReplyDelete
  36. // RAMYA said...

    //
    அ.மு.செய்யது said...
    //RAMYA said...
    //
    cheena (சீனா) said...
    அதெப்படி - மீ த பர்ஸ்டு - செல்லாது செல்லாது - பி.க செல்லாது

    நாந்தேன் பர்ஸ்டு

    //

    சொன்னா சொன்னத்ததுதான்
    மறுபரிசீலனை கிடையாதாம்!!!
    //

    அதானே..டீச்சர் சொல்லிட்டாங்கனா மேல்முறையீடே கிடையாது.

    //


    ஆரம்பம் ஆகிடுச்சா செய்யது ??
    செய்யது நலமா??//

    ஆ....ரம்பம் ...

    ReplyDelete
  37. // பிரியமுடன் பிரபு said...

    எப்பவுமே சிரிச்சுட்டு போகும் ஜெகதீசனுக்கு வாழ்த்துக்கள்

    உங்க பதிவுகாளை படித்துவிட்டு கண்டிப்பா சிரிப்பானை மட்டும் போட்டுவோம் //

    சும்மா இருப்பதற்கு அதாவது போடும் உங்களை வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  38. // வடுவூர் குமார் said...

    வாழ்த்துகள்.
    என்ன ஒரே சிங்கப்பூர் வாசனையாக இருக்கு!! //

    ஆமாங்க ஒரே சிங்கப்பூர் வாசனையா இருக்குங்க...

    ReplyDelete
  39. // வெயிலான் said...

    வாழ்த்துக்கள் ஜெகதீசன்.

    // ஆமத்தூரில கல்லூரியா??? //

    அட! ஆமத்தூர்ல கல்லூரியா? அஞ்சாங்கிளாஸ் பள்ளிக்கூடத்துக்கு மேல எதுவுமே இல்லியே. //

    அப்படிங்களா... யாரவது இந்த சந்தேகத்த தீர்த்து வைங்கப்பா...

    மண்டையே வெடிச்சுடும் போலிருக்கு

    ReplyDelete
  40. // குசும்பன் said...

    //திடீரென முடிவானதால் முழுக்க தயாராகவில்லை... முடிந்தவரை எழுதுகிறேன்.//

    முன் கூட்டியே அறிவிச்ச எக்ஸாம்ஸ் எல்லாத்துக்கு அப்படியே தயாராகி எழுதின மாதிரிதான்! //

    இதுதான் குசும்பு டச்...

    கரெக்டா பாயிண்ட பிடிச்சார் பாருங்க..

    ReplyDelete
  41. // ஜெகதீசன் said...

    ///
    வெயிலான் said...

    வாழ்த்துக்கள் ஜெகதீசன்.

    // ஆமத்தூரில கல்லூரியா??? //

    அட! ஆமத்தூர்ல கல்லூரியா? அஞ்சாங்கிளாஸ் பள்ளிக்கூடத்துக்கு மேல எதுவுமே இல்லியே.

    ///
    வெயிலான்... இதெல்லாம் ரெம்ப ஓவர்... :) //

    அப்படிங்களா...

    வெயில் ரொம்ப ஓவர் அப்படின்னு சொல்றமாதிரி இருக்கு...

    ReplyDelete
  42. // குசும்பன் said...

    //ஒரு வாரத்துக்கு வலைச்சரத்திலும் மொக்கை போடுறேன்.//

    சரி மொக்கை மட்டும் சரியாக வருதுன்னு யாரு உங்களுக்கு சொன்னது????//

    ஜெகதீசன் பதிவு எதையும் சரியா படிச்ச ஞாபகம் இல்ல...

    அதனால இதுக்கு ஒரு இஃகி...இஃகி மட்டும் போட்டுகிறேன்

    ReplyDelete
  43. // ஜெகதீசன் said...

    //
    குசும்பன் said...

    //ஒரு வாரத்துக்கு வலைச்சரத்திலும் மொக்கை போடுறேன்.//

    சரி மொக்கை மட்டும் சரியாக வருதுன்னு யாரு உங்களுக்கு சொன்னது????

    //
    கிகிகி... எனக்கு மொக்கை நல்லா வருதுன்னு எங்கயாவது சொல்லீருக்கேனா என்ன?
    :P //

    ஆமாம்... மொக்கை போட முயற்சி பண்ணுகிறேன் என்றுதான் சொல்லியிருக்காரு...

    ReplyDelete
  44. // நான் வலைச்சரத்துக்கு திடீர் ஆசிரியர்தான். //

    திடீர் ரசம், திடீர் சாம்பார் மாதிரி.. இதுவும் திடீர் ஆசிரியர் திட்டங்களா..

    ReplyDelete
  45. // ஒரு பேச்சுக்காவது எழுதுறயான்னு கேட்டுருக்கலாம். //

    ஆமாங்க கேட்டுருக்கலாமில்ல..

    ஒரே ஒரு பேச்சுத்தானே...

    பாவம் அழுகின்றார் பாருங்க

    ReplyDelete
  46. // அவருக்குக் கூட தெரிஞ்சிருக்கு நான் வெட்டியாத்தான் இருக்கேன்னு //

    அவர் மட்டுமில்ல... சிங்கை வாழ் பதிவர்கள் அனைவரும் அறிந்த விசயம் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
  47. // இந்த இடுகையில் என் பதிவை அறிமுகப்படுத்திக்கொள்ளலாமாம். ஆனால் சொல்லும் அளவுக்கு எதுவும் எழுதவில்லை. //

    அப்படின்னா சொல்ல முடியாத அளவுக்கு எழுதியிருக்கீங்களா...

    ReplyDelete
  48. 30 முதல் 50 வரை...

    தனியா டீ ஆத்தியாச்சுப்பா..

    இங்க இப்படி அண்ணன் டீ ஆத்திகிட்டு இருக்காரே அப்படின்னு தம்பிகள் யாருக்காவது பொருப்பு இருக்கான்னு பாருங்க...

    வாங்க பின்னாடி வச்சுக்கிறேன்....

    ReplyDelete
  49. அம்மாடியோவ்...
    1/2 மணிநேரத்தில இவ்வளவு பின்னூட்டமா... நன்றி ராகவன் சார்...
    :)

    ReplyDelete
  50. //
    முன் கூட்டியே அறிவிச்ச எக்ஸாம்ஸ் எல்லாத்துக்கு அப்படியே தயாராகி எழுதின மாதிரிதான்!
    //
    ஹல்லோ...மிஸ்டர் குசும்பன்.. வலைச்சரம் எழுதுறதென்ன எக்ஸாம்ஸ் எழுதுற அளவுக்கு சுலபமா என்ன?
    நாங்கல்லாம் எக்ஸாமுக்கு பஸ்ல போறப்பவே படிச்சு தயாராகீருவோமாக்கம்..

    ReplyDelete
  51. சீனா, ஜமால், கோவி, செய்யது, விஜய், வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  52. நன்றி மகேஸ், அன்புமணி, பிரபு & ரம்யா..

    //
    வடுவூர் குமார் said...

    வாழ்த்துகள்.
    என்ன ஒரே சிங்கப்பூர் வாசனையாக இருக்கு!!
    //
    கிகிகி.... நன்றி குமார் அண்ணே...

    ReplyDelete
  53. வருக!!
    வாழ்த்துக்கள்!!!

    தேவா!

    ReplyDelete
  54. எதிர்பாராத திருப்பம் 'குட்டி'க் கதை?!

    ReplyDelete
  55. /ஜெகதீசன் said...

    me the first!/

    கயவாளித்தனம்...:)

    ReplyDelete
  56. வாழ்த்துக்கள் ஜெகதீசன்
    கலக்குங்க‌
    பின்னூட்டமிட நாங்க இருக்கிறோம்

    ReplyDelete
  57. //cheena (சீனா) said...
    அதென்னா உங்க கிட்டே கேக்கறது - ஏனக்கு நம்பிக்கை இருக்கு - நீங்க தூள் கெளப்புவீங்கன்னு

    ஆமா வேணும்னா கண்டினியூ பண்ணிக்கலாம் - கவலை வேண்டாம் - ஆசை தீர எழுதலாம் -
    சரியா
    //

    ம்ம் நல்லா எழுதுங்க‌

    ReplyDelete
  58. அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்......ஜெகதீசனார் எல்லோருடைய பதிவிலும் ஒரு ஸ்மைலி மட்டுமே போடுவார்.......நாமும் இங்கு அதை பின்பற்றுவோம்.....இனிமேல் வரும் பதிவுகளில்....:)

    ReplyDelete
  59. அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்......ஜெகதீசனார் எல்லோருடைய பதிவிலும் ஒரு ஸ்மைலி மட்டுமே போடுவார்.......நாமும் இங்கு அதை பின்பற்றுவோம்.....இனிமேல் வரும் பதிவுகளில்....:)

    ReplyDelete
  60. அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்......ஜெகதீசனார் எல்லோருடைய பதிவிலும் ஒரு ஸ்மைலி மட்டுமே போடுவார்.......நாமும் இங்கு அதை பின்பற்றுவோம்.....இனிமேல் வரும் பதிவுகளில்....:)

    ReplyDelete
  61. /cheena (சீனா) said...

    படிச்சது மதுரையா - எங்க - நானும் மதுரைலே தான் படிச்சேன்/


    ஹலோ...என்ன நக்கலா....நீங்க படிச்சது....வெள்ளைக்காரன் காலத்தில்....நம்ம ஜெகு இப்ப தான் .....முந்தா நாளுன்னு நினைக்கிறேன்.... மதுரைல படிப்பை முடிச்சாரு....:)

    ReplyDelete
  62. அன்பின் சேகு!
    நல்வரவு!
    வலைச்சர ஆசிரியப்பணியை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்!
    சிறப்பாகச் செய்யுங்கள்!
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  63. என்னாது ஜெகதீசனும் சீனா சாரும் மதுரைல படிக்கிறப்ப க்ளாஸ் மேட்டா?????

    ReplyDelete
  64. :))))

    வாழ்த்துகள் ஜெகதீசன்.

    ReplyDelete
  65. அடடா..நம்ம ஜெகதீசனாரு...!

    சொல்லவே இல்லை..நீங்கள் இந்த வாரம் எழுதப் போவதாக...

    ஜெகதீசன் தான் இந்த வார நட்சத்திர பதிவர் என்று எனக்கு முன்னறிவித்தல் தந்து என்னை கும்மியில் இணைக்காத சக சிங்கை பதிவர்கள் அனைவரையும் வன்மையாக கண்டிக்கிறேன்...

    ReplyDelete
  66. அப்படியே உங்கள் கமெரா கவிதைகளையும் எடுத்து விடவும்...:-)

    ReplyDelete
  67. வாழ்த்துக்கள் ஜெகா! உங்க அறிமுகத்துல பில்ஸ்பெரி ரொட்டியின் நுண்ணரசியல் பதிவை விட்டுட்டீங்களெ.. அது ரொம்ப முக்கிய்மான பதிமாச்சே.. ;-)

    ReplyDelete
  68. ”...எனக்கு முதன் முறையாக அறிமுகமாகும்
    ஜெகதீசன் அவர்களுக்கு முதல்நாள் வாழ்த்துக்கள்! ”

    டிட்டோ

    ReplyDelete
  69. இவ்வார வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  70. வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  71. இன்றைய பதிவு எப்போ!

    ReplyDelete
  72. வாழ்த்துகள் :)

    ReplyDelete