Tuesday, March 10, 2009

பூரித்துப் போனேன்

முதல் நாள் வரவேற்பிலும் ,பாராட்டிலும் வாழ்த்திலும் பூரித்துப் போனேன்.நன்றி.

உலகம் எப்படி உழன்றாலும் சுழன்றாலும் அது வயலில் உழுதுச் செல்லும் ஏரூக்குப்பின்னால்தான்.
வள்ளுவர் சொன்னது இது.

மண்ணில் தடம் பதித்து
ஏர் தரும் தானியம்.
தானியம் தரும் உணவு .
அந்த உணவு தரும்
ஆரோக்கியம்.
அனைத்தையும் தரும்
அந்த ஆரோக்கியம்.

சுவர் இல்லாமல் சித்திரமா
கல் இல்லாத சிற்பமா.
ஆகவே நண்பர்களே தோழிகளே!

இன்று
என் பதிவுக்கு [வலைப்பூவுக்குத்] தலைப்பூ,

சமையல்...வா...ர...ம்
தயாராக இருங்கள்.என் நேரப்படி காலை 10 மணிக்கு வெளியாகும்

23 comments:

  1. இரண்டாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. உலகம் எப்படி உழன்றாலும் சுழன்றாலும் அது வயலில் உழுதுச் செல்லும் ஏரூக்குப்பின்னால்தான்.
    வள்ளுவர் சொன்னது இது.\\


    நல்ல பகிர்வு ...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்!

    //அனைத்தையும் தரும்
    அந்த ஆரோக்கியம்.//

    திருவார்த்தை!

    ReplyDelete
  4. இரண்டாம் நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. ஜமால் நீங்கள் கரம் நீட்டி ‘ஜமாய்’என்று கூறி என் கரத்தை மேலும் வலுப்படையச் செய்கிறீர்கள் நன்றி ஜமால்

    ReplyDelete
  6. உண்மைதானே ராமலஷ்மி எல்லாம் இருந்தும் ஆரோக்கியம் குறைந்தால் அத்தனையும் பின்னடைந்து விடும் இல்லையா.
    டேக் கேர்

    ReplyDelete
  7. அன்புமணி ஜமால் உங்கள் வாழ்த்து எனக்கு சிறுமி விளையாட்டை நினைவு படுத்துகிறது.
    ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்துச்சாம் ரெணு குடம் தண்ணி எடுத்து ரெண்டு பூ பூத்துச்சாம்....100 வரை வாழ்த்துங்கள்
    அதற்குள் அடுத்த பதிவு தயாராகி விடும்

    ReplyDelete
  8. ஓஓ சமையல் தயாராவுதா .... வெயிட்டீங்க்ஸ் - இன்னும் 10 மணி ஆகலயா

    அன்பு மணி, ஜமால் - எத்தனை குடம் தண்ணி ஊத்தி இருக்கீங்க - இன்னும் எத்தனைகுடம் ஊத்தணும் - உதவி தேவையா .........

    ReplyDelete
  9. நல்ல டிப்ஸா கொடுங்கப்பா. Bachelors-ஸும் செய்து சாப்பிடற மாதிரி

    ReplyDelete
  10. பசியோட காத்திருக்கிறோம்!

    ReplyDelete
  11. S.A.navasudeen மன்னிக்கணும்.
    கொஞ்சம் மாற்றி கேளுங்கள்.’பேச்சுலரும் சாப்பிடுற மாதிரி ’என்று ,கேட்கக் கூடாது ’பேச்சுலரும் செய்ற மாதிரி ’என்று இருக்க வேண்டும்.சரிதானே?

    அது சரி..
    பேச்சுலர் என்னவெல்லாம் சாப்பிட மாட்டாங்க சொல்லுங்க ????!!!!

    ReplyDelete
  12. நாமக்கல் சிபி
    போய் வந்தீர்களா.பக்கத்திலேயே மெடிகல் ஸ்டோர் இருந்தால் ரெண்டு டைஜீன் மாத்திரை வாங்கிக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  13. சீனா பேனாவைக் கீழே வைத்து விட்டு ஜமாலுக்கும் அன்பு மணிக்கும் உதவச் செல்லுங்கள்.பாவம் .பாலச்சந்தர் படத்தில் கதாநாயகி கொட்ற மழையிலும் எவனோ சொன்னான் என்று விடி விடிய மழையில் நிற்பது போல் ,இவர்களும் சகோதரி சொன்னதால் தண்ணி எடுக்கப் போயிருக்கலாம் சீக்கிரம் ..ஏற்கனவே 56 குடம் எடுத்திருப்பார்கள்

    ReplyDelete
  14. S.A.navasudeen மன்னிக்கணும்.
    கொஞ்சம் மாற்றி கேளுங்கள்.’பேச்சுலரும் சாப்பிடுற மாதிரி ’என்று ,கேட்கக் கூடாது ’பேச்சுலரும் செய்ற மாதிரி ’என்று இருக்க வேண்டும்.சரிதானே?

    நான் செய்து சாப்பிடற மாதிரின்னுதான் எழுதி இருக்கேன். ஏன்னா இங்கு பெரும்பாலும் வெளிநாட்டில் பனி புரியும் பெரும்பாலானோர் தானே சமைத்து சாப்பிட வேண்டிய சூழ்நிலை. அதை மனதில் கொண்டு கேட்டதுதான் இது.

    ReplyDelete
  15. அப்படியா.
    ரொம்ப சாரி.
    தனியாளாய் பணியையும் சமையலையும் கவனிப்பது எளிதல்ல .ஆகவே துரித சமையல் ஈசி குக்கிங் 2மினிட்ஸ் நூடில்ஸ் மாதிரி சொல்ல வந்த வார்த்தைகள்தான் அவை.
    சீக்கிரமே இல்லாள் வர வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  16. என்ன
    பூரி
    இத்து
    போயிட்டிங்களா

    கொஞ்சம் மசாலாவும் கொடுங்க
    பசிக்குது!

    ReplyDelete
  17. goma said...

    அப்படியா.
    ரொம்ப சாரி.
    தனியாளாய் பணியையும் சமையலையும் கவனிப்பது எளிதல்ல .ஆகவே துரித சமையல் ஈசி குக்கிங் 2மினிட்ஸ் நூடில்ஸ் மாதிரி சொல்ல வந்த வார்த்தைகள்தான் அவை.
    சீக்கிரமே இல்லாள் வர வாழ்த்துகிறேன்

    நன்றி தங்கள் வாழ்த்துக்கு. எனக்கு இந்த பிரச்னை இல்லாத போதிலும் மற்ற நண்பர்களுக்காக விடுத்த விண்ணப்பம்தான் அது.

    ReplyDelete
  18. பூரித்துபோனேன் என்ற வார்த்தையில் இருக்கும் பூரியையே இத்துப் போகும் படி பிய்த்து எடுக்கும் போதே புரிந்து[பூரிந்து] கொண்டேன் உங்கள் பசியை.
    நான் பூரி போட்டால் இத்துப் போகாது பிள்ளையாராய் வருவார்.பார்க்கிறீர்களா .அடுத்த பதிவில் காட்சி தருவார் .காத்திருங்கள்

    ReplyDelete
  19. S.A.Navasudeen
    எனக்கு வெறு அப்பம்தான் தெரியும் அது கூட சுமாராய்தான் வரும் .
    நீங்கள் விண்ணப்பம் கூட செய்வீர்களா.எப்படி என்று எழுதுங்கள்.

    ReplyDelete
  20. S.A.Navasudeen
    எனக்கு வெறு அப்பம்தான் தெரியும் அது கூட சுமாராய்தான் வரும் .
    நீங்கள் விண்ணப்பம் கூட செய்வீர்களா.எப்படி என்று எழுதுங்கள்.

    ஒ ரொம்ப சுலபம். அப்பம் செய்யுற போட்டியில நீங்க ஜெயிச்சா அதுதான் Win-அப்பம்.

    என்ன பிய்ச்சு சாபிடற மாதிரி இல்லாம (கடி)ச்சு சாப்பிடற மாதிரி இருக்கா?

    ReplyDelete
  21. நான் என்ன நினைச்சேன்.அழகா அப்பம் செய்துட்டு அதை அப்படியே விண்ணிலே போட்டுப் பிடிச்சா அது விண்ணப்பம்.
    கடியோ கடி.
    நான் அடிக்கடி இப்படித்தான் கடிப்பேன்

    ReplyDelete
  22. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்.

    //
    இன்று
    என் பதிவுக்கு [வலைப்பூவுக்குத்] தலைப்பூ,

    சமையல்...வா...ர...ம்
    தயாராக இருங்கள்.//

    இந்த பின்னூட்டம் போடும் போது அது ரிலீஸ் ஆயிடுச்சு...

    அதை போய் படிக்கின்றேன்.

    ReplyDelete
  23. இரண்டாம் நாள் வாழ்த்துகள்!!! பசிக்கிது.

    ReplyDelete