இந்த முறை சற்றே சிறிய,குட்டி,தக்கனூண்டு கதைகள் பார்க்கலாமா?
இந்த கதைகள் எழுதுவதற்கு எனக்கு inspiration,கணேஷ் ,வசந்த் இன் பிரம்மா சுஜாதா.கணேஷும் வசந்தும் இனி இல்லை என்று நினைக்க முடியவில்லை,நாம் பார்க்கும் பலரின் சாயல் அவர்களை போல் உள்ளதை நாம் காணலாம்,அதுதான் சுஜாதா,எத்தனை கற்பனை மற்றும் சயின்ஸ் fictions கொண்டிருந்தாலும் அவருடைய story characters நிஜம் போலவே,ஒரு சராசரி மனிதனின் பலம்,பலவீனத்துடன் காணப்படுவான்.என்ன வசந்த் யாரையாவது கல்யாணம் செய்தானா?போன்ற கேள்விகள் முன் நிற்கிறது.மற்றும் அந்த(!)மெக்சிகோ சலவைக்காரி ஜோக்,ஹ்ம்ம் யாரை போய் கேட்பது?...
இனி ஒவ்வொரு , குட்டி கதைகளுக்கு இடையே ஒருசில அறிமுகங்கள்....
1.கதையின் தலைப்பு: சுவற்றில் ஆணி(ஆனி?) அடிப்பவன் கேட்ட கடைசி வார்த்தை.
கதை:பார்த்து concealed wiring தம்பி.
இனி அறிமுகங்கள்...
இவரின் பட பதிவுகளும் , காமெடி பதிவுகளும், மற்றும் சில தத்துவங்களும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.....
--------------------------------
2.தலைப்பு:கரடி வேடமிட்டவனின் கடைசி வார்த்தை:
கதை:என்னை சுட்டுடாதிங்க
கதை:என்னை சுட்டுடாதிங்க
ராஜேஸ்வரி அக்கா...
இவரின் பள்ளிகள் அனுபவப்பாடமும் , இவரின் சிறு கதை மற்றும் ஒரு பட பதிவும் உங்களுக்கு பிடிக்கும்....
சில நாட்களே எழுத வந்து ஆகியிருந்தாலும் வேகமான நடையில் கவருகிறார்........
இது அவர் "cast away" என்னும் ஆங்கில படம் பற்றி எழுதியது.....
சில நாட்களே எழுத வந்து ஆகியிருந்தாலும் வேகமான நடையில் கவருகிறார்........
இது அவர் "cast away" என்னும் ஆங்கில படம் பற்றி எழுதியது.....
-------------------------------------------------------
3.இந்த கதை நானே எழுதியது...(மெய்யாலுமே)
தலைப்பு:கடைசி மனிதன் டாக்டர்கள் புடைசூழ மரணபடுக்கையில்,
கதை:கைவிரித்தன ரோபோட்டுகள்.
தேவன் மாயம்
மருத்துவர்....நல்ல எழுத்துக்கு சொந்தகாரரும் கூட......
இவரின் பல படைப்புகள் தமிழ்மணம் சூடான இடுகைகளில் இடம் பிடிக்கும்....
இவரின் அனுபவம் கலந்த படைப்புகளும்...,
வாங்க தேநீர் அருந்தலாம் என்னும் பாங்கும் அலாதியானது.....
இவரும் வலைச்சர ஆசிரியராக பணியாற்றியவர் என்பது போனஸ்.....
---------------------------------------
இவரின் பல படைப்புகள் தமிழ்மணம் சூடான இடுகைகளில் இடம் பிடிக்கும்....
இவரின் அனுபவம் கலந்த படைப்புகளும்...,
வாங்க தேநீர் அருந்தலாம் என்னும் பாங்கும் அலாதியானது.....
இவரும் வலைச்சர ஆசிரியராக பணியாற்றியவர் என்பது போனஸ்.....
---------------------------------------
4.தலைப்பு:காஸ் லீக் ஆகிறதா என்று பார்க்க சுவிட்ச் போட்டான்,
கதை:இருந்தது,வயது 24, கண்ணீர் அஞ்சலி மாலை ஐந்து மணிக்கு.
என்று வலை வைத்திருக்கும் நண்பர் காளிராஜ் அவர்கள்.....இவரின் பள்ளி நாட்களின் அனுபவங்கள் , அங்கே இருக்கும் ஒவ்வொரு வகை மாணவர்களின்
குறும்புகள் ஆகியவற்றை ரசிக தன்மையுடன் சொல்லி இருப்பார்......
----------------------------------
என் நண்பர் சிவா அவர்களின் வோர்ட் பிரஸ் வலை இது.....
இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்,
இவர் பல download options,மற்றும் சில கவிதைகள் , ஹை கூக்கள் என்று கவருகிறார்.....
-------------------------------------------------
நன்றி நண்பர்களே....உங்களின் மறுமொழிக்கு காத்து கொண்டு......
இந்த வகை கதைகள் பிடித்ததா?
அறிமுகங்களை பற்றியும் சொல்லவும்.....
Be cool....
Stay cool....
இந்த வகை கதைகள் பிடித்ததா?
அறிமுகங்களை பற்றியும் சொல்லவும்.....
Be cool....
Stay cool....
அருமையான வடிவம் கொடுத்திருக்கிறீர்கள் .நறுக்கென்று கதைகளும் அதன் ஆசிரியர்களின் அறிமுகமும் சூப்பர்
ReplyDeleteதலைப்பு: இன்று ஒரு நல்ல பதிவாவது படித்து பாராட்ட வேண்டும்
ReplyDeleteகதை: வலைச்சரத்துக்கு பின்னூட்டம்.
ஏனுங்க நம்ம வலையையும் வந்து பாருங்க....
பதிவு அட்டகாசம்.
நல்ல முயற்சி..
ReplyDeleteசூப்பர்
ReplyDelete// ஒருவேளை உங்களுக்கு போர் அடித்து விடும் //
ReplyDeleteபோர் அடித்தால் நாங்க திருப்பி அடிப்போமில்ல..
// சற்றே வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இப்படி....... //
ReplyDeleteசற்று அல்ல நிறையவே வித்யாசமாக இருக்கின்றது...
புதுவிதமான முயற்ச்சி.. வாழ்க..
//
ReplyDeleteஇந்த முறை சற்றே சிறிய,குட்டி,தக்கனூண்டு கதைகள் பார்க்கலாமா?//
ஐ குட்டி கதைகளா... (ஐ மீன் சுமால் ஸ்டோரிஸ்)...
சந்தோஷமா இருக்கு...
// இந்த கதைகள் எழுதுவதற்கு எனக்கு inspiration,கணேஷ் ,வசந்த் இன் பிரம்மா சுஜாதா. //
ReplyDeleteமுதல்ல அப்பா..
அப்புறம் மாமா..
இப்போ சுஜாதா...
வெரிகுட்.. வெரிகுட்..
// எத்தனை கற்பனை மற்றும் சயின்ஸ் fictions கொண்டிருந்தாலும் அவருடைய story characters நிஜம் போலவே,ஒரு சராசரி மனிதனின் பலம்,பலவீனத்துடன் காணப்படுவான் //
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள். சுஜாதா கதைகளை படிக்கும் போது கதை மாந்தர்கள் நிஜத்தில் இருப்பது போலவே இருக்கும். புனைவு என்றே தெரியாது.
// என்ன வசந்த் யாரையாவது கல்யாணம் செய்தானா?//
ReplyDeleteஆஹா.. பக்கத்து இலைக்கு பாயாசம் வேண்டும் கதை மாதிரி இல்ல இருக்கு.. வசந்த் கல்யாணத்தைப் பற்றி கவலைப் படும்போது.
// அந்த(!)மெக்சிகோ சலவைக்காரி ஜோக்,ஹ்ம்ம் யாரை போய் கேட்பது?...//
ReplyDeleteஉங்களுக்குத் தெரிஞ்சா எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கப்பு..
// நண்பர் அறிவுமதி
ReplyDeleteஇவரின் பட பதிவுகளும் , காமெடி பதிவுகளும், மற்றும் சில தத்துவங்களும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்..... //
இன்றுதான் நண்பர் அறிவுமதி அவர்களின் வலைப் பதிவைப் போய் பார்த்தேன்.
ஜோக் எல்லாம் சூப்பர்.
//ராஜேஸ்வரி அக்கா...
ReplyDeleteஇவரின் பள்ளிகள் அனுபவப்பாடமும் , இவரின் சிறு கதை மற்றும் ஒரு பட பதிவும் உங்களுக்கு பிடிக்கும்....
சில நாட்களே எழுத வந்து ஆகியிருந்தாலும் வேகமான நடையில் கவருகிறார்........
இது அவர் "cast away" என்னும் ஆங்கில படம் பற்றி எழுதியது.....//
ராஜேஸ்வரி அவர்கள் எழுத்துக்கள் மிகவும் பிரமாதாம்.
சரளமான நடை, நன்றாக எழுதுகின்றார்கள். வருங்காலத்தில் ஒரு நல்ல பதிவராக வருவதற்கான சாத்திய கூறுகள் தெரிகின்றன.
கதை கூட மிக அருமையாக எழுதுகின்றார்கள்.
// தேவன் மாயம்
ReplyDeleteமருத்துவர்....நல்ல எழுத்துக்கு சொந்தகாரரும் கூட......
இவரின் பல படைப்புகள் தமிழ்மணம் சூடான இடுகைகளில் இடம் பிடிக்கும்....//
மிகச் சிறந்த, எனக்கு பிடித்த பதிவர்களில் மருத்துவர் தேவாவும் ஒருவர்.
ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகள் போடுவதுதான் கொஞ்சம் கஷ்டம். சில சமயங்களில் இவரின் பதிவை படிக்கவே எனக்கு சாயங்காலம் ஆகிவிடும். அதற்குள் அடுத்த பதிவு வந்துவிடும்.
ReplyDeleteஇரண்டு குழந்தைகளுக்கு இடையில் இடைவெளி கொடுங்கள் என்று சொல்வது மாதிரி, மருத்துவரும் இரண்டு பதிவுகளுக்கு இடையில் இடைவெளி கொடுங்க.
// இவரின் அனுபவம் கலந்த படைப்புகளும்..., //
ReplyDeleteமருத்துவ குறிப்புகள். எலும்பு முறிவு பற்றிய ஒரு பதிவு அருமை.
// வாங்க தேநீர் அருந்தலாம் என்னும் பாங்கும் அலாதியானது.....//
ReplyDeleteஆம் இவர் தேநீர் வழங்கும் பாங்கே அலாதியானது..
மிக அருமையான கவிதைகள்.
// இவரும் வலைச்சர ஆசிரியராக பணியாற்றியவர் என்பது போனஸ்.....//
ReplyDeleteபோனஸ் அவருக்கல்ல...
வலைச்சரப்பதிவுகளை படிப்பவர்களுக்கு
டவுசர் பாண்டி
ReplyDeleteஇயற்கை எழில் கொஞ்சும் தேனியைச் சேர்ந்தவர் டவுசர் பாண்டி என்கிற காளிராஜ் சுப்ரமணியன் என்று வித்யாசமாக தன்னை அறிமுகப் படுத்தி கொள்வதை வைத்தே, தம்பி கொஞ்சம் விசயம் உள்ள ஆளு அப்படின்னு புரியுதுங்க.
டவுசர் பாண்டி இன் பகடி..
ReplyDelete// புளுகு களை கூசாமல் பேசுவதில் கலைஞன் உதாரணமாக வல்லரசு படம் மதுரை மாவட்டத்தில் மட்டும் முன்னூறு கோடி ரூபாய்க்கு ஓடியது என கூறும் அவனின் உண்மை தன்மை )//
சூப்பர் பகடி.. ஒருவன் எந்த அளவுக்கு பொய் சொல்லுகின்றான் எனபதற்கான உதாரணம்தான் இது.
// மாவீரர் பத்தி எழுத சொன்ன இந்த நாயே என்ன எழுதி இருக்குன்னு பாருங்க படி அந்த கேள்விய நீ எழுதுன பதிலோட சேர்த்து . வாசிக்க ஆரம்பித்தான்
ReplyDelete" மகாவீரர் ஒரு பெரிய வீரர். ஒரு சமயம் காட்டுக்கு சென்று மன்னரை காப்பாற்றினார். அவர் பல பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றியவர். எனவே அவர் மகாவீரர் என அழைக்க படுகிறார்."//
சூப்பர் டவுசர் பாண்டி...
// கொழுப்பு பற்றிய கேள்வியை " கொழுப்பு சத்து உள்ளவர்களுக்கு வயிறு வீங்கி குண்டாக இருக்கும் வயிற்றில் ஒரு குத்து விட்டால் அழுது விடுவார்கள் " //
ReplyDeleteடவுசர் பாண்டி ரூம் போட்டு யோசனை பண்ணீங்களா..
நல்லா எழுதுரீங்க...
என்ன மாதிரியே ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு. அதை கரெக்ட் பண்ணிகிட்டீங்கன்னா ரொம்ப நல்லா இருக்குங்க..
// சிவாஜி
ReplyDeleteஎன் நண்பர் சிவா அவர்களின் வோர்ட் பிரஸ் வலை இது.....
இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்,
இவர் பல download options,மற்றும் சில கவிதைகள் , ஹை கூக்கள் என்று கவருகிறார்.....//
ஆமாம். மிக அழகாக எழுதுகின்றார்.
ஒரு பதிவு Windows XP SP3 பற்றி போட்டுள்ளார். அருமை.
ஒரு கணவன் மனைவிக்கு அனுப்பிய இ-மெயில் தவறுதலாக வேறு ஒருவருக்கு போய்விட்டது. அதனால் ஏற்பட்ட குழப்பத்தை மிக அருமையாகச் சொல்லியுள்ளார்.
// நன்றி நண்பர்களே....உங்களின் மறுமொழிக்கு காத்து கொண்டு......
ReplyDeleteஇந்த வகை கதைகள் பிடித்ததா?
//
போட்டு தாக்கிடோமில்ல...
வரிசையா 20 பின்னூட்டம் போட்டாச்சுல்ல..
சந்தோஷமா தம்பி
// அறிமுகங்களை பற்றியும் சொல்லவும்.....
ReplyDeleteBe cool....
Stay cool....
//
அறிமுகங்கள் அனைத்தும் அருமை.
டவுசர் பாண்டி, சிவாஜி இருவரையும் இப்போதுதான் முதன் முதலாகப் படிக்கின்றேன்.
நன்றாக இருக்கின்றது.
மீ த 25 த் பின்னூட்டம்.
ReplyDeleteஆளில்லாத டீக் கடையில் டீ ஆத்துவது ஒரு சுகம் தான் போலிருக்கின்றது.
// விஜயசாரதி said...
ReplyDeleteதலைப்பு: இன்று ஒரு நல்ல பதிவாவது படித்து பாராட்ட வேண்டும்
கதை: வலைச்சரத்துக்கு பின்னூட்டம்.
ஏனுங்க நம்ம வலையையும் வந்து பாருங்க....
பதிவு அட்டகாசம்.//
வந்துடுவோமில்ல..
சொல்லிட்டீங்க இல்ல.. வரேன்.. வந்துகிட்டே இருக்கேன்
இந்த பின்னூட்டத்தையும் சேர்த்து 24 பின்னூட்டம் போட்டாச்சுப்பா...
ReplyDeleteஇன்னும் ஒரு பின்னூட்டம் போட்டால், ஒரு பதிவில் வரிசையாக 25 பின்னூட்டம் போட்ட பெருமை வந்துவிடும்
போட்டு விடுவோம். காசா பணமா..
வரிசையாக போடப்பட்ட 25 வது பின்னூட்டம் இதுதான்.
ReplyDeleteரொம்ப சந்தோஷமா இருக்குங்க...
யாரவது இருக்கீயளா?
ReplyDeleteவாழ்த்துகள் கார்த்தி ...
ReplyDeleteதக்கனூண்டு கதைகள்\\
ReplyDeleteஒன்றுக்கு மேற்பட்டதா ...
நிஜம் போலவே,ஒரு சராசரி மனிதனின் பலம்,பலவீனத்துடன் காணப்படுவான்\\
ReplyDeleteஉணர்ந்து சொல்லியிருக்கீங்க
// நட்புடன் ஜமால் said...
ReplyDeleteதக்கனூண்டு கதைகள்\\
ஒன்றுக்கு மேற்பட்டதா ... //
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள் இல்லையா அது மாதிரி இதுவும்
// நட்புடன் ஜமால் said...
ReplyDeleteநிஜம் போலவே,ஒரு சராசரி மனிதனின் பலம்,பலவீனத்துடன் காணப்படுவான்\\
உணர்ந்து சொல்லியிருக்கீங்க //
உண்மை, உண்மையைத்தவிர வேறு இல்லை
அடடடே நானும் கதைகள் என்று நினைத்தனன்
ReplyDeleteஅருமையா இருக்கே நீங்க அறிமுகம் செய்யும் விதம்.
\\காமெடி பதிவுகளும், மற்றும் சில தத்துவங்களும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்...\\
ReplyDeleteநன்கு பிடித்ததே அறிவும் மதியும் செய்யும் காமெடிகள்
// நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஅடடடே நானும் கதைகள் என்று நினைத்தனன்
அருமையா இருக்கே நீங்க அறிமுகம் செய்யும் விதம்.//
அருமையோ அருமை.. சூப்பர்.. வித்யாசமா இருந்தது..
\\ நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\காமெடி பதிவுகளும், மற்றும் சில தத்துவங்களும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்...\\
நன்கு பிடித்ததே அறிவும் மதியும் செய்யும் காமெடிகள்\\
காம நெடி அடிக்காத காமெடி பதிவுகள்
\\கதை:என்னை சுட்டுடாதிங்க
ReplyDeleteராஜேஸ்வரி அக்கா...\\
ஹா ஹா ஹா
இவரின் ப்ள்ளிக்கூட அனுபவங்கள் அருமை
இவரை எமக்கு அறிமுகம் செய்த இராகவண் அண்ணாவுக்கு நன்றி.
\\ இராகவன் நைஜிரியா said...
ReplyDelete\\ நட்புடன் ஜமால் said...
\\காமெடி பதிவுகளும், மற்றும் சில தத்துவங்களும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்...\\
நன்கு பிடித்ததே அறிவும் மதியும் செய்யும் காமெடிகள்\\
காம நெடி அடிக்காத காமெடி பதிவுகள்\\
அண்ணே அண்ணே
சொல்லாடல் ...
\\ நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\கதை:என்னை சுட்டுடாதிங்க
ராஜேஸ்வரி அக்கா...\\
ஹா ஹா ஹா
இவரின் ப்ள்ளிக்கூட அனுபவங்கள் அருமை \\
இன்னும் இந்த தொடரை முடிக்கவில்லை
தொலைக்காட்சியில் சீரியல் எழுதினால் நல்ல பேர் வாங்குவார்
\\மருத்துவர்....நல்ல எழுத்துக்கு சொந்தகாரரும் கூட......
ReplyDeleteஇவரின் பல படைப்புகள் தமிழ்மணம் சூடான இடுகைகளில் இடம் பிடிக்கும்....\\
நல்ல விடயங்களை நயம் பட சொல்கிறார் ...
கவித்தேநீரும் உண்டு
\\என்று வலை வைத்திருக்கும் நண்பர் காளிராஜ் அவர்கள்.....இவரின் பள்ளி நாட்களின் அனுபவங்கள் , அங்கே இருக்கும் ஒவ்வொரு வகை மாணவர்களின்\\
ReplyDeleteசமீக காலங்களாகத்தான் இவரை படிக்க தொடங்கியுள்ளேன்
\\என் நண்பர் சிவா அவர்களின் வோர்ட் பிரஸ் வலை இது.....
ReplyDeleteஇது நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்,
இவர் பல download options,மற்றும் சில கவிதைகள் , ஹை கூக்கள் என்று கவருகிறார்...\\
இவரை இன்னும் படித்ததில்லை
இனி படிப்போம் ...
அடடடே சிவாஜி நம்ம ஜாதிக்காரவளா
ReplyDeleteநல்லா இருக்கு
இன்னும் நிறைய கத்துக்கிடலாம்
\\இந்த வகை கதைகள் பிடித்ததா?
ReplyDelete\\
ரொம்ப வித்தியாசமாவும்
இரசிக்கும் படியாகவும் இருக்கு
இராகவன் நைஜிரியா said...
ReplyDelete// என்ன வசந்த் யாரையாவது கல்யாணம் செய்தானா?//
ஆஹா.. பக்கத்து இலைக்கு பாயாசம் வேண்டும் கதை மாதிரி இல்ல இருக்கு.. வசந்த் கல்யாணத்தைப் பற்றி கவலைப் படும்போது.\\
ஹி ஹி ஹி
சீக்கிரம் பார்த்திட வேண்டியது தான்
\\ இராகவன் நைஜிரியா said...
ReplyDelete// சற்றே வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இப்படி....... //
சற்று அல்ல நிறையவே வித்யாசமாக இருக்கின்றது...
புதுவிதமான முயற்ச்சி.. வாழ்க..\\
நானும் கூவிக்கிறேன்
ஹையா 50 போட்டாச்சே!
ReplyDeleteமீண்டும் காத்திருக்கிறோம் கார்த்தி
It's coooool man! You rock!
ReplyDeleteவாழ்த்துகள் கார்த்தி ...!
உங்களுக்கு பிடித்த கதைகள் எங்களுக்கு பிடிக்காமல் போகுமா?
ReplyDelete//
ReplyDelete1.கதையின் தலைப்பு: சுவற்றில் ஆணி(ஆனி?) அடிப்பவன் கேட்ட கடைசி வார்த்தை.
//
ஆணியா??
ஆணியிலே மாட்டிகிட்டு கார்த்தியின் பதிவையும் படிக்காம கஷ்டப்படறோம்!!!
//
ReplyDeleteவிஜயசாரதி said...
தலைப்பு: இன்று ஒரு நல்ல பதிவாவது படித்து பாராட்ட வேண்டும்
கதை: வலைச்சரத்துக்கு பின்னூட்டம்.
ஏனுங்க நம்ம வலையையும் வந்து பாருங்க....
பதிவு அட்டகாசம்.
//
போயி பாக்கலாம் வாங்க வாங்க எல்லாரும்!!
அருமையான பதிவுகளின் அறிமுகங்கள்
ReplyDeleteபதிவர்களைப் பற்றி கூறி இருப்பதோ அதை விட சுவாரசியம்.
அசத்துங்க கார்த்தி!!
//
ReplyDeleteஇராகவன் நைஜிரியா said...
// சற்றே வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இப்படி....... //
சற்று அல்ல நிறையவே வித்யாசமாக இருக்கின்றது...
புதுவிதமான முயற்ச்சி.. வாழ்க..
//
இதை நான் கன்னா பின்னாவென்று வழிமொழிகின்றேன் கார்த்தி!!!
// இந்த கதைகள் எழுதுவதற்கு எனக்கு inspiration,கணேஷ் ,வசந்த் இன் பிரம்மா சுஜாதா. //
ReplyDeleteஅருமையானவர்களை, அருமையாக வரிசை படுத்தி இருக்கின்றீர்கள்.
இதில் இருந்தே உங்கள் ரசனை தெரிகின்றது!!!
// எத்தனை கற்பனை மற்றும் சயின்ஸ் fictions கொண்டிருந்தாலும் அவருடைய story characters நிஜம் போலவே,ஒரு சராசரி மனிதனின் பலம்,பலவீனத்துடன் காணப்படுவான்
ReplyDelete//
சுஜாதாவின் படைப்புக்கள் அனைத்தும் பைத்தியம் பிடித்தது போல் படித்திருக்கின்றேன்.
ஒரு கதையில் ஒரு வடிவம் 'ஜினோ' ஒரு பொம்மை என்று அவரு கூறி இருந்தாலும், எனக்கு அது என் நண்பன் தான். 'ஜினோவை; இன்றும் என்னால் மறக்க முடியாது.
சுஜாதாவை நினைவு கூர்ந்து மறுபடியும் அவரின் கதைகளை அசை போட வைத்ததிற்கு நன்றி கார்த்தி!!!
// ஒருவேளை உங்களுக்கு போர் அடித்து விடும் //
ReplyDeleteஅதெல்லாம் எங்களுக்கு அடிக்காது கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி நிறைய எழுதுங்கள்.
மிகவும் சுவையாக இருக்கின்றது உங்களின் எழுத்துக்கள்.
ராகவன் அண்ணே ....என்ன சொல்றது அப்படின்னே தெரியல......என்னோட பதிவுல அம்பது பின்னோட்டங்களுக்கு மேலா?
ReplyDeleteமிக்க நன்றி கோமா அக்கா ....
ReplyDeleteஜமால் சார் மிக்க நன்றி.....என்னோட பதிவ அம்பது பின்னூட்டங்களில் கொண்டு போனதற்கு....
ReplyDeleteமிக்க நன்றி விஜய சாரதி சார்....
ReplyDeleteநன்றி கிருஷ்ணா சார்...
ReplyDeleteநன்றி நிலா அம்மா....
ReplyDelete////
ReplyDeleteஇந்த முறை சற்றே சிறிய,குட்டி,தக்கனூண்டு கதைகள் பார்க்கலாமா?//
ஐ குட்டி கதைகளா... (ஐ மீன் சுமால் ஸ்டோரிஸ்)...
சந்தோஷமா இருக்கு...//
இது என்ன வில்ல தனம்.....
ஹி ஹி ஹி....
நன்றி கணினி தேசம்.....
ReplyDeleteநன்றி வால் சார்....
ReplyDeleteவாங்க ரம்யா அக்கா......எங்க காணோம் அப்படின்னு பார்த்தேன்....
ReplyDeleteநன்றி அண்ணா என்னை உங்களது வலைப்பதிவில் சுட்டிக்காட்டியமைக்கு!!
ReplyDeleteசொல்ல வார்த்தையில்லை....அவ்வளவு சந்தோஷமாக உள்ளது அண்ணா
\\\இராகவன் நைஜிரியா said...
ReplyDelete// நண்பர் அறிவுமதி
இவரின் பட பதிவுகளும் , காமெடி பதிவுகளும், மற்றும் சில தத்துவங்களும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்..... //
இன்றுதான் நண்பர் அறிவுமதி அவர்களின் வலைப் பதிவைப் போய் பார்த்தேன்.
ஜோக் எல்லாம் சூப்பர்.\\\
நன்றி அண்ணா..என்னுடைய வலைக்கு வருகை தந்தமைக்கு...
என்பெயர் அறிவுமதி இல்லை அண்ணா..அன்புமதி