பசியாலே செத்தவங்க பட்டகல்லு சொமந்தவங்க
ஒதைபட்டுச் சுருண்டவங்க எங்க சனங்க
கைய கால புடிக்கறவங்க கைகட்டி நடக்கறவங்க
பக்தருப்பா பக்தருங்க எங்க சனங்க
.............................
..............................
மாளிகைய எழுப்பனவங்க பங்களாங்க கட்டனவங்க
அடிமட்டத்துல மாட்டனவங்க எங்க சனங்க
தெருவிலேயே உழுந்தவங்க சத்தாமில்லாம கெடந்தவங்க
மனசுக்குள்ளயே அழுதவங்க எங்க சனங்க
...........
தங்கத்த எடுக்கறவங்க சோத்தயே பாக்காதவங்க
துணிமணிய நெஞ்சவங்க எங்க சனங்க
சொன்னபடி கேக்கறவங்க எங்க சனங்க
காத்துலயே வாழறவங்க எங்க சனங்க
ஆகா இந்தக் கவிதை இன்றைக்கும் பொருத்தம்தான் என்று பெருமைப்பட முடியாது.நாம் வேறு
இடத்தில் வேறு வேளையில் பிறந்துவிட்டதால் நம் வாழ்க்கை வேறு மாதிரி அமைந்துவிட்டது.
தினசரி செத்துக்கொண்டிருப்பவர்களை எண்ணி ஏதோ ஒரு விதத்தில் அதற்கு நாமும் பொறுப்போ என்ற குற்ற உணர்வு எழாமல் இருக்காது.
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செய்
என்ற பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் வைரவன்http://www.yennamviri.blogspot.com/
சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இவரது புன்னகைக்கும் இயந்திரங்கள்' (சிறுகதைத் தொகுப்பு) அண்மையில்
வெளியிடப்பட்டது.
சிங்கப்பூர் களமாகக் கொண்டு எழுதப்பட்ட
எல்லாம் அவன் செயலின் சுட்டி இதோ
படைப்புகளால் பயன் உண்டா? வைரவனின்
கருத்துகளை அறிய, இதோ அவருடைய
இன்னொரு வலைப்பூவில் பார்க்கலாம்.
ஹாங்காங்கிலிருந்து எழுதும் அருண், சளைக்காமல் ஆங்கிலப் பாடங்களை நடத்தி வருகிறார். தமிழ் மூலம் http://www.aangilam.blogspot.com/ என்ற வலைப்பூவில்
கற்பிக்கும் இவர் தெளிவாக இலக்கணத்தின் பல்வேறு கூறுகளைக் குறுந்தலைப்புகளாகப் பிரித்துக்கொண்டு சொல்லித்தருகிறார். கூடுதலாக
தமிழ் ஆங்கில அகராதி, ஆங்கில இலக்கிய வரலாறு, பாடதிட்டம் என்று உதவிப்பாடங்களும் உண்டு.http://aangilam.blogspot.com/2008/09/list-of-fruits.html என்ற பதிவில் ஏராளமான காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் தமிழ் - ஆங்கிலப் பெயர்களை எழுதியிருக்கிறார். குழந்தைகளுக்குச் சொல்லித்தரவும் இவை பயன்படும்.
நகைச்சுவைக்கு என்றே வலைப்பூ துவக்கியிருக்கும் கிரிஜா மணாளன்
(http://www.humour-garden.blogspot.com/)
தான் எழுதிய துணுக்குகள் மட்டுமன்றி தன்னைக் கவர்ந்தவற்றையும் வலையேற்றி வருகிறார்,
நிகழ்சிகளுக்கும் அழைக்கிறார்.
http://humour-garden.blogspot.com/2008/08/blog-post_19.html
இனி ஆரம்பம்
http://pandiidurai.wordpress.com/ என்ற வலைப்பூ
சிங்கப்பூர் பாண்டித்துரை உடையது.
கவிதைகள், எண்ணங்கள், கதைகள் மட்டுமன்றி சிங்கப்பூரில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளின் விவரங்களையும் இவர் வலைப்பக்கத்தில் காணலாம். இந்தக் கவிதை
http://pandiidurai.wordpress.com/2009/02/ அனைவரும் படிக்கவேண்டியது.
ஜனரஞ்சக இதழ்களில் இலக்கியம் சார்ந்த படைப்புகள் வெளிவருகையில், அவற்றை அனைவரும் படிக்க ஏதுவாக, http://www.nagulan.wordpress.com/
நகுலன் என்ற பெயரில் இன்னொரு வலைப்பூவும் உள்ளது.
சில பதிவுகள் நாம் எப்பேர்ப்பட்ட உலகில் வாழ்கிறோம் என்பதை விட, வாய்ப்பு கிடைத்தால் என்னவெல்லாம் செய்வோம் என்பதை நெத்தியடியாகச் சொல்கிறது.
நண்பர்களுடன் இணைந்து பிரம்மா என்ற கவிதை நூல் வெளியிட்டுள்ள இவர், நாம் என்ற பெயரில் கலை இலக்கிய இதழையும் நடத்தி வருகிறார்.பதிவுகள் என்ற வலைப்பூவில் வர்ஜீனியாவிலிருந்து எழுதும் சத்தியப்ரியன் நிகழ்வுகள், அனுபவம் போன்று பல தலைப்புகளில் எழுதி வருகிறார். இந்தியப் போர்கள் என்ற தலைப்பில் சியாச்சின் போர், கார்கில் போர் இன்னும் பல போர்களை விளக்கமான கட்டுரைகளாக எழுதியிருப்பது இவரது தனிச்சிறப்பு. ரங்கபவனம் என்ற தொடர்கதையின் சுட்டி இதோ
இன்றைய இளைஞரிடையே நடப்பவைகளை மிக சுவாரசியமாகவும் யதார்த்தமாகவும் (காதலும் கனவும் அசைத்துப்பார்க்கப்படுகிறது) ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதியிருக்கிறார்.
இளையர்கள் மனதை புரிந்துகொள்ளவும் அவர்களின்
மெல்லுணர்ச்சிகள் கலைக்கப்படுவதும் அப்படியே
காட்டப்படுகிறது.
தொடர்ச்சியாக எழுதி வந்த இவர், இனியும் தொடர்ந்து எழுதுவார் என்று நம்புவோம்.
//இனியும் தொடர்ந்து எழுதுவார் என்று நம்புவோம்//
ReplyDeleteவாழ்த்துக்கள்... நம்புகின்றேன்..
/-- இவ்விணைப்பையோ பாடங்களை அச்சிட்டோ அளிக்கலாம். (http://www.blogger.com/www.aangilam.blogspot.com)--/
ReplyDelete/--திருச்சி கிரிஜா மணாளன் (http://www.blogger.com/www.humour-garden.blogspot.com)--/
/-- இனி ஆரம்பம் --/
/--நகுலன்--/
மேலே உள்ள வாசகத்தில் இணைப்பை சரிபார்க்கவும்.அவசரத்தில் தவறுதலாக இணைப்பைக் கொடுத்துள்ளீர்கள் போலிருக்கிறது.
நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். நன்று.அருனின் ஆங்கில இலக்கியம் படிப்பவர்களில் நானும் ஒருவன்.
nandri krishna prabhu
ReplyDeletesari seythu vittaen
உடனடி கவனைத்தை செலுத்தியதற்கு நன்றி மாதங்கி. தொடர்ந்து பல அறிய பதிவுகளை அறிமுகப்படுத்துங்க.
ReplyDeleteநன்றி கிருஷ்ணப் பிரபு
ReplyDeleteசரி செய்துவிட்டேன்
(இப்போது தமிழ் உரு வேலை செய்கிறது)
நன்றி ஞானசேகரன்
ReplyDelete