வலைச்சர வணக்கம்...
ஆம். இந்த வாரம் எனது விரல்கள் தான் வலைச்சர ஆசிரியர்.வலைச்சரத்திற்கு நன்றி.
ஓராண்டு பதிவனுபவமும், நேற்றைய பதிவர்சந்திப்பில் மேலும் சில அறிமுகங்களை தந்த இவ்வேளையில் இந்த வேலை எளிதாகப் போகிறதெனக்கு என்றாலும்,
10 ரூபாய்க்கு மொத்தமாக ஷாம்புகள் வாங்கி 10 நாளும் ஒவ்வொரு பாக்கெட்டையும் ஊதாரித்தனமாக உபயோகித்து, 14ன்காவது நாளில் ஏற்கனவே உபயோகித்த சாஷேக்கைளை உயிர்போக அமுக்கி பிதுக்கி வரும் ஈரோர் சொட்டு ஷேம்புக்களை உபயோக்கிக்கும் நிலைப் போலத்தான் அறிமுகங்களும். வலைச்சர ஆசிரியர் ஆனால் அவரை,இவரை என அடுக்கி வைத்து அனைத்தும் பிரபலமாகிவிட்ட வலைஞர்களாகிவிட்ட நிலையில்.. எண்ணப்பிதுக்கல், என்றாலும் ஒரு வாரம் இருக்கிறது..இருக்கட்டும்.
நான் ஏன் எழுத வந்தேன் என்ற வரலாற்றுக் கேள்விகளை புறம்தள்ளி, வலையுலகின் நட(ட்)ப்புகளை அகமிழுப்போம்.
ஆம், வலையுலகம் என்னை ஒரு மிகப்பெரிய சோகத்தின் சுவடுகளில் இருந்து மிக வேகமாக வெளிவரச்செய்தது என்றே சொல்ல வேண்டும். அந்த நாட்களில் என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு இயந்திரத்தனமான வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தேன். life has to move on என்ற சொற்றொடர் மிக நன்றாக இருக்கும் அதை அடுத்தவருக்கு ஆறுதலாக சொல்லும்பொழுது.ஆனால் நமக்கு வரும் பொழுது அதில் இருந்து வெளிவர ஏதாவது ஒரு வேற்றுவெளி தேவைப்படுகிறது. எனக்கு யாவரும் கேளிர்.
அதுபோலத்தான் எல்லோருக்கும். பொதுவாக 16 வயதில் இருந்து 22 வயது வரை அனேகம் பேர் ஏதாவது ஒரு வகையில் மினிமம் கவிதைகளாகவாவது எழுதத்தான் செய்கிறோம். அதில் பலர் காதலித்து விடுகிறார்கள்.சிலர் தொடர்ந்து எழுதுகிறார்கள். பிறகு வேலைக்குப் போய்விடுகிறார்கள். அதிலும் சிலர் தொடர்கிறார்கள். விளைவு, ஒரு காலை நேரம், நாக்கை துருத்திக் கொண்டு, தொலைபேசியில் சந்தேகம் கேட்டுக் கேட்டு, பிளாக் ஆரம்பித்துவிடுகிறோம்.
இது செல் போன் மாடல் வாங்குவது மாதிரி தான். முதலில் ஹலோன்னு சொல்றதுக்கு ஒரு போன் இருந்தா போதும் என லோ மாடல் வாங்கி,பிறகு fm, அப்புறம் கேமிரா,(ச்சே எனக்காக இல்ல,வீட்ல) என பிளாக்பரி வரை போகிறவர்கள் உண்டு.
அதுபோலத்தான், டெய்லியா எழுதப்போறோம், என்று தொடங்கி, நல்லா எழுதலன்னா என்ன, நம்ம பிளாக் என்று ஆசுவாசப்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக பின்னூட்ட மெருகேற்றல்களுக்குப் பிறகு பிளாக் டிசைனில் தொடங்கி, பதிவுகளின் தரம் வரை தினமும் அரை நாள் மேனுவலாகவும் 24 மணிநேரம் மெண்டலி(ல்)யாகவும் சுற்றும் பதிவர் மனநிலை.
தமிழில் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் வரப்போவதும் இங்கிருந்துதானோ என புருவம் உயர்த்த வைக்கும் பதிவுகள் எத்தனையோ... பார்ப்போம் இந்த வாரம்.
..
வாழ்த்துகள் ‘தல’
ReplyDelete0 ரூபாய்க்கு மொத்தமாக ஷாம்புகள் வாங்கி 10 நாளும் ஒவ்வொரு பாக்கெட்டையும் ஊதாரித்தனமாக உபயோகித்து, 14ன்காவது நாளில் ஏற்கனவே உபயோகித்த சாஷேக்கைளை உயிர்போக அமுக்கி பிதுக்கி வரும் ஈரோர் சொட்டு ஷேம்புக்களை உபயோக்கிக்கும் நிலைப் போலத்தான் அறிமுகங்களும். வலைச்சர ஆசிரியர் ஆனால் அவரை,இவரை என அடுக்கி வைத்து அனைத்தும் பிரபலமாகிவிட்ட வலைஞர்களாகிவிட்ட நிலையில்.. எண்ணப்பிதுக்கல், என்றாலும் ஒரு வாரம் இருக்கிறது..இருக்கட்டும்.\\
ReplyDeleteதூள் தூள்
வாழ்த்துக்கள் நர்சிம். ஆரம்பமே அருமை.
ReplyDeleteமுதலில் வாழ்த்துகள் தல..
ReplyDelete// வேற்றுவெளி//
ரொம்ப கெட்டு போயிட்டீங்க. அனுஜன்யாகிட்ட சொல்ரேன்
தல,
ReplyDeleteவாழ்த்துக்கள்!ஜுவி,வ.சரம்.அடுத்து?
Going to wear many hats?
நீங்க “ஷாம்பு” பத்தி எழுதின நேரம்
பாத்ரூம்ல இருக்கும் சோப் பத்தி கவிதை நேத்து எழுதிப்புட்டேன்.
படிக்க:-
கை நழுவியது அரிய வாய்ப்பு -கவிதை
http://raviaditya.blogspot.com/search/label/கவிதை
Congrats!
ReplyDeleteவாழ்த்துகள் நர்சிம்...அறிமுகங்கள் தொடங்கட்டும் கூடவே சுவாரஸ்யமாக வாசிக்க கண்ணுக்கு நிறைவாக கருத்துக்கு ஆரோக்யமாக சில விசயங்களும் தருவீர்கள்.நடத்துங்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள் தல
ReplyDeleteவாழ்த்துக்கள்:)
ReplyDeleteவாழ்த்துக்கள் தல..
ReplyDeleteவாழ்துக்கள் :-))
ReplyDeleteவாழ்த்துக்கள் தல,
ReplyDelete//ஆம், வலையுலகம் என்னை ஒரு மிகப்பெரிய சோகத்தின் சுவடுகளில் இருந்து மிக வேகமாக வெளிவரச்செய்தது என்றே சொல்ல வேண்டும்.//
சேம் பிளட்!!!!!
வாழ்த்துகள் சகாண்ணா
ReplyDelete(சகா, அக்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் இந்த தடவையும் நீங்க மொதல??)
வருக வருக தல
ReplyDeleteநல்லா நல்லதா எழுதுங்க
எல்லோருக்கும் ஒரு காரணம் இருக்குப்போல வலைப்பக்கம் வந்ததுக்கு
ReplyDeleteம்ம்ஹூம் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் நண்பரே
ReplyDeleteவாழ்த்துக்கள் நர்சிம்
ReplyDeleteலிங் கொடுக்கும் பொழுது பால் கேக், கூடை கேக் போன்ற பெரும் எழுத்தாளர்களுக்கும் லிங் கொடுப்பீங்கள:)
வாழ்த்துகள் நண்பரே! தங்களின் கலகலப்பான உரையாடலை நேரில் ரசித்தேன். இனி இங்கும் ரசிப்பேன்!
ReplyDeleteவாழ்த்துக்கள் நர்சிம்
ReplyDelete- அகநாழிகை (பொன்.வாசுதேவன்)
வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்!!
ReplyDeleteஉங்கள் கரத்தில் வலைச்சரம் சிறப்புப் பெறட்டும்!
நல்ல ஆரம்பம். இந்த வாரம் வலைச்சரம் ஹிட்ஸ் நிச்சயம் அதிகம் ஆகும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteகார்க்கி: தல ரேஞ்சே இப்ப தனி. 'கவிதையில் இலக்கியம்' பற்றி அவரிடம் பிரைவேட் டியுஷன் போகிறேன். ரகசியம். யார் கிட்டயும் சொல்லாத.
அனுஜன்யா
:-)
ReplyDeleteவாழ்த்துக்கள் நர்சிம்
சொம்மா அட்ச்சி ஆடு அண்ணாத்த
ReplyDelete:)
வாழ்த்துகள்..! :)
ReplyDeleteவாழ்த்துக்கள் நர்ஸிம்..
ReplyDeleteஎண்ணம்போல் எழுத்து வந்து எங்களைக் கவரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..
//கார்க்கி: தல ரேஞ்சே இப்ப தனி. 'கவிதையில் இலக்கியம்' பற்றி அவரிடம் பிரைவேட் டியுஷன் போகிறேன். ரகசியம். யார் கிட்டயும் சொல்லாத//
ReplyDeleteஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார வைத்தியருய்க்கே பைத்தியம் பிடிச்சா அந்த வைத்தியர் எந்த பைத்தியக்கார வைத்தியரிடம் தன் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?
நன்றி.. நம்ம கடைதானா இங்க..
ReplyDeleteவாழ்த்துக்கள் நர்சிம்.
ReplyDeleteஆரம்பமே அசத்தல்!!
நல்வரவு, நர்சிம்.
ReplyDelete//
ReplyDeleteஆம், வலையுலகம் என்னை ஒரு மிகப்பெரிய சோகத்தின் சுவடுகளில் இருந்து மிக வேகமாக வெளிவரச்செய்தது என்றே சொல்ல வேண்டும்.
//
நானும் உங்களுடன் சேர்ந்து இந்த வலையுலகத்திற்கு நன்றி கூறிக் கொள்கின்றேன்!!
//
ReplyDeleteஅந்த நாட்களில் என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு இயந்திரத்தனமான வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தேன். life has to move on என்ற சொற்றொடர் மிக நன்றாக இருக்கும் அதை அடுத்தவருக்கு ஆறுதலாக சொல்லும்பொழுது.ஆனால் நமக்கு வரும் பொழுது அதில் இருந்து வெளிவர ஏதாவது ஒரு வேற்றுவெளி தேவைப்படுகிறது. எனக்கு யாவரும் கேளிர்.
//
அமாம் நீங்கள் கூறி இருப்பது நூறு சதவிகிதம் உண்மைதான்.
இது போல் தருணத்தில் வேற்றுவெளி அவசியம்தான்.
அது வலையுலகம் இல்லையா?
அருமை.
//
ReplyDeleteபிறகு வேலைக்குப் போய்விடுகிறார்கள். அதிலும் சிலர் தொடர்கிறார்கள். விளைவு, ஒரு காலை நேரம், நாக்கை துருத்திக் கொண்டு, தொலைபேசியில் சந்தேகம் கேட்டுக் கேட்டு, பிளாக் ஆரம்பித்துவிடுகிறோம்.
//
அமாம் அப்படித்தான் ஆகிவிட்டது, எங்கள் கதையும்.
//
ReplyDeleteஅதுபோலத்தான், டெய்லியா எழுதப்போறோம், என்று தொடங்கி, நல்லா எழுதலன்னா என்ன, நம்ம பிளாக் என்று ஆசுவாசப்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக பின்னூட்ட மெருகேற்றல்களுக்குப் பிறகு பிளாக் டிசைனில் தொடங்கி, பதிவுகளின் தரம் வரை தினமும் அரை நாள் மேனுவலாகவும் 24 மணிநேரம் மெண்டலி(ல்)யாகவும் சுற்றும் பதிவர் மனநிலை.
//
நிதர்சனத்தின் விளிம்பில் இருந்து விளக்கி இருக்கிறீர்கள்!!
//
ReplyDeleteதமிழில் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் வரப்போவதும் இங்கிருந்துதானோ என புருவம் உயர்த்த வைக்கும் பதிவுகள் எத்தனையோ... பார்ப்போம் இந்த வாரம்.
//
கண்டிப்பாக உங்களுடன் சேர்ந்து நானும் மிகவும் ஆவலாக இருக்கிறேன்
நன்றி நரசிம்.
u deserve it
ReplyDeleteவாழ்த்துக்கள் நர்சிம்...
ReplyDeleteபல நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது....
//எண்ணப்பிதுக்கல்//
ReplyDeleteஉங்க சொல்லாடலுக்காகவே உங்களைப் படிக்கத் தோன்றும் :)
அசத்தலான ஆரம்பத்தோடு
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்
உங்கள் நடை அருமையாக இருக்கிறது என்பது சரிதான்
ReplyDeleteஆனால் வர வர நடை மட்டுமே இருக்கிறது
அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போம்
//ரூபாய்க்கு மொத்தமாக ஷாம்புகள் வாங்கி 10 நாளும் ஒவ்வொரு பாக்கெட்டையும் ஊதாரித்தனமாக உபயோகித்து, 14ன்காவது நாளில் ஏற்கனவே உபயோகித்த சாஷேக்கைளை உயிர்போக அமுக்கி பிதுக்கி வரும் ஈரோர் சொட்டு ஷேம்புக்களை உபயோக்கிக்கும் நிலைப் போலத்தான் அறிமுகங்களும். வலைச்சர ஆசிரியர் ஆனால் அவரை,இவரை என அடுக்கி வைத்து அனைத்தும் பிரபலமாகிவிட்ட வலைஞர்களாகிவிட்ட நிலையில்.. எண்ணப்பிதுக்கல், என்றாலும் ஒரு வாரம் இருக்கிறது..இருக்கட்டும்.\\//
இந்த உதாரணம் அருமை
ஆனால் இங்கு பொருந்த வில்லை. அல்லது புரிந்து கொள்ளும் அளவு எனக்கு அறிவில்லை
வாழ்த்துகள் நர்சிம்.
ReplyDeleteவாழ்த்துகள் தல..
ReplyDeleteவாழ்த்துக்கள் நர்சிம்....
ReplyDelete:))
வாழ்த்துக்கள் நர்சிம்..
ReplyDeleteஆரம்பிங்க...நாங்க இருக்கோம்.
வாழ்த்துக்கள் நர்சிம் !!!
ReplyDelete//அதுபோலத்தான் எல்லோருக்கும். பொதுவாக 16 வயதில் இருந்து 22 வயது வரை அனேகம் பேர் ஏதாவது ஒரு வகையில் மினிமம் கவிதைகளாகவாவது எழுதத்தான் செய்கிறோம். அதில் பலர் காதலித்து விடுகிறார்கள்.சிலர் தொடர்ந்து எழுதுகிறார்கள். பிறகு வேலைக்குப் போய்விடுகிறார்கள். அதிலும் சிலர் தொடர்கிறார்கள். விளைவு, ஒரு காலை நேரம், நாக்கை துருத்திக் கொண்டு, தொலைபேசியில் சந்தேகம் கேட்டுக் கேட்டு, பிளாக் ஆரம்பித்துவிடுகிறோம்//
ReplyDeleteசிறப்பு ! சிறந்த எழுத்தாளராகப் போகும் அறி குறி தெரிகிறது.
வாழ்த்துகள் நர்சிம்!
ReplyDeleteவாழ்த்துகள் நர்சிம்.
ReplyDeleteஇங்கேயும் கலக்குங்க தல!
ReplyDeleteகார்பரேட் கம்பருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete