Wednesday, April 8, 2009

வளர்மதி,அகநாழிகை,ஜமாலன்,அமிர்தவர்ஷினி...

வளர்ந்தமதி.

நான் அவ்வப்பொழுது, மும்மூணு வார்த்தைகளை ரெவ்வெண்டு வரிகளாக மடக்கிப் போட்டு அதற்கு கவிதை என்றும் லேபிள் கொடுத்து பதிவாக போட்டுக்கொண்டிருப்பேன். “ நீங்கள் கவிதைகளில் எங்கு நிற்கிறீர்கள் என்பது தெரிகிறது” என்று ஒரு பின்னூட்டம் போட்டார் என்பதை விட பொடனியில் போட்டார் என்றே சொல்லலாம். அவர்தான் வளர்மதி.

சிற்றிதழ் பேக்ரவுண்ட் பார்ட்டி. மாற்றுச் சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர். மிகுந்த மெனக்கெடலுடனும் தேடலுடனும் எழுதுபவர். ஆழ்ந்து படிக்க வேண்டும்.

ஒரு சோறு பதத்திற்கு இந்தப் பதிவைப் பாருங்கள்

படித்துவிட்டு “சூப்பர்” என்று பின்னூட்டம் போட்டால் தெறிக்கும் தமிழில் பதில் வரும்.

---------

அகநாழிகை

சட்டக்கல்லூரி விவகாரம் பற்றி பதிவர் சந்திப்பில் பேசப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அடைமழையிலும் சுடச்சுட விவாதம் நடந்த அன்றைய தினத்தில் போலீஸ் மீசையுடன் ஒருவர் வந்து எல்லாரிடமும் பெயர் மற்றும் இன்னபிற டீட்டெய்ல்களைக் கேட்டவாறே இருந்தார்.

உளவுத்துறையோ என்று நினைத்துக்கொண்டே(டரியலாகிக்கொண்டே) அவரது விவரங்களை வாங்கி, வீட்டிற்குப் போனதும் முதல் காரியமாக அந்த வலைத்தளத்தை நோண்டிப்பார்த்ததும் தான் தூக்கம் வந்தது. மிக நல்ல கவிதைகளை எழுதியிருக்கிறார். வடக்குவாசல் என்ற இதழில் வெளிவந்த நல்ல கவிதைகள்.

படிக்க

-------

ஜமாலன்

கொஞ்சம் ஹோம்வெர்க் செய்துவிட்டு படிக்க வேண்டிய ப்ளாக்.அல்லது படித்துவிட்டு மூளையில் வொர்க்கவுட் செய்ய வேண்டிய பதிவுகளா இல்லையா என்பதை இதைப் படித்து முடிவுசெய்யுங்கள்.

--------

அமிர்தவர்ஷிணி அம்மா என்ற அக்காவின் தெருக்கூத்துப் பற்றிய இந்தப் பதிவும் அந்தக் கலையை பற்றி தெ(பு)ரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

..

18 comments:

  1. நல்ல அறிமுகம் நர்சிம். ஆனால், எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. உதாரணமாக, அவர் ஜமாலன். ஜமலான் அல்ல :-).

    தொடருங்கள்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  2. :-)

    தலைப்பை திருத்திவிடவும் நர்சிம்

    ReplyDelete
  3. நன்றி ஜமால், பைத்தியக்காரன்,சென்ஷி.. திருத்திவிட்டேன்.

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்களுக்கு நன்றி நர்சிம்...

    ReplyDelete
  5. தல கிளம்பிடுச்சு..

    நோ நோ நான் கைப்புள்ளய சொல்லல...

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்:)

    ReplyDelete
  7. அக்க்க்க்க்க்க்க்க்க்க்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆஅ

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  8. சீனியர்களையும் அறிமுகப்படுத்துவது நல்லதுதான்.. அப்போதுதான் என்னைப்போல பேக்குகளுக்கு கொஞ்சம் வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் ஃப்ரெண்ட்

    ReplyDelete
  10. அடாடா,

    நாலு பேருமே நல்லாத் தெரிஞ்சவங்க.

    வளரும், ஜமாலனும் தீவிர இலக்கியவாதிகளே அண்ணாந்து பார்க்கும் சிந்தனை வாதிகள். ஒவ்வொரு பதிவரும் அவ்வப்போதாவது படிக்க வேண்டிய வலைத் தளங்கள் அவர்களுடையது.

    வாசு (அகநாழிகை) நல்ல கவிஞர். நம்ம நண்பர்.

    அமித்து.அம்மாவும் நல்ல பரிச்சயம் ஆன பிரபல பெண் பதிவர்.

    இன்னிக்கு என் ஸ்கோர் 4/4.

    அனுஜன்யா

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்:)

    ReplyDelete
  12. தாங்கள் அறிமுகப்படுத்திய நால்வரில் (அமி்த்து அம்மாவும், அகநாழிகை வாசு சாரும்) இருவர் ஏற்கனவே அறிமுகம்தான். மற்றவர்களையும் இப்போது படித்தாகிவி்ட்டது. மிக்க நன்றி! வாழ்த்துகள் தோழரே!

    ReplyDelete
  13. நர்சிம்,
    அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

    //உளவுத்துறையோ என்று நினைத்துக்கொண்டே(டரியலாகிக்கொண்டே) அவரது விவரங்களை வாங்கி, வீட்டிற்குப் போனதும் முதல் காரியமாக அந்த வலைத்தளத்தை நோண்டிப்பார்த்ததும் தான் தூக்கம் வந்தது//

    அ(ட)ப்பாவி... மனுஷா, மதுராந்தகத்திலேயிருந்து (80 கி.மீ.) சென்னைக்கு டிராஃபிக்ல மாட்டி, 6.15-க்கு இருட்ட ஆரம்பிச்சு, மழையில, மணல் சுத்தி உக்காந்திருந்த உங்ககிட்டே வந்து முதல் முதலா பதிவர் சந்திப்புக்கு வந்தேன்னு, அறிமுகப்படுத்திக்கிட்டா இப்படியா சொல்லறது. நல்லா கௌப்புறீங்கய்யா பீதிய..

    அனுஜன்யா said...

    //வாசு (அகநாழிகை) நல்ல கவிஞர். நம்ம நண்பர்.//

    நன்றி, நண்பா.

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்:)

    ReplyDelete
  15. பெரி பெரி ஆளுங்கோ அவங்க. சொம்மா அப்பப்போ அவங்க பக்கம் எட்டிப் பாத்துட்டு ஜீட் வுட்டுருவேன்

    ReplyDelete
  16. வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. அறிமுகங்களுக்கு நன்றி சகா :)

    ReplyDelete