Thursday, April 16, 2009

வலைச்சரம் நான்காவது நாள் - உயிர்ப்பு

ஒரு தாவோ கதை

யென் ஹுய் என்பவன் தன் எசமானிடம் விவசாயப் பணியில் தான் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதாகச் சொன்னான்.

எப்படி ? எசமான் கேட்டான்.

சடங்குகள், இசை ஆகியவற்றை மறந்துவிட்டேன்.

நல்லது; ஆனால் இவை போதா; நீ இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.

சில நாட்கள் கழித்து மீண்டும் எசமானனிடம்கூறினான் 'இப்போது இன்னும் சிறப்பாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன், மனிதாபிமானம், நேர்மை இதெல்லாம் கூட மறந்துவிட்டேன்.

இதுபோதாது; நீ தொடர்ந்து உழைத்து வா என்றான் எசமான்.

சில நாட்கள் கழித்து மீண்டும் வந்து இம்முறை அடையவேண்டியவற்றை அடைந்துவிட்டேன்' என்றான்.

சரி இப்போது மணி என்ன- இது எசமான்

தெரியாது; ஏனெனில் உட்கார்ந்தவாறு என்னையே மறப்பதையும் கற்றுவிட்டேன்.

அதென்னது, உட்கார்ந்தவாறு மறப்பது எசமான் கேட்க,

சரிதான், அமர்ந்தவாறு என்னிலிருந்து என்னை விடுவித்துக்கொள்வேன், மனதை அமைதிப்படுத்திவிட்டு பரம்பொருளுடன் ஐக்கியமாவேன். இதைத்தான் சொன்னேன், என்கிறான் யென் ஹுய்

ஆகா, என்றவாறு யென் ஹுய் காலில் விழுந்தான்எசமான். வழியைக் கண்டுபிடித்துவிட்டாய். இனிநான் உன்னைத் தொடர்ந்து வருவேன் என்றான்.

'உயிர்ப்போட நான் இருப்பது சித்திரம் எழுதும்போதுதான்' அப்படின்னு வான்கா சொல்லியிருக்கார். எதையாவது புதியதாய் கற்றுக்கொள்ளும்போதோ நமக்குப் பிடித்ததைச் செய்யும் போதோ ஒரு புத்துணர்வு ஏற்படுவதை நாமும் உணர்ந்திருப்போம்.

சித்திரம் எழுதுதல், கைவேலை, கோலங்கள் இடுதல் இவை மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் கலை. மன அழுத்தத்தை நம்மை அறியாமல் குறைக்கும் அல்லது இல்லாமல் செய்துவிடும்.

கோலங்கள் என்றதுமே கமலாவின் அடுப்பங்கரை. இவரது அரிசியில் செய்த சுண்டலுக்கு இதோ சுட்டி

வண்ணப்படங்களுடன் கைப்பக்குவங்களும், திருத்தமான கோலங்களுமே என்னைக் கவர்ந்தவை. அதிலும் கிருஸ்துமஸ் கோலம்,

தும்பிக்கையான் கோலம் மற்றும் தேர்க்கோலம். கற்றுக்கொள்ள ஆசைப்படுபவர்களுகென்று, எளிய கோலங்களும் உள்ளன. ஆங்கிலத்திலும்
இணையான வலைப்பூ உள்ளது.

அடுத்தது சித்திரங்கள்
கபீரன்பனின் வலைப்பூவை முதல் முறை பார்த்தபோது அவரது கறுப்பு வெள்ளை ஓவியங்களின் துல்லியம் தெரிந்தது.
இன்னும் கொஞ்சம் இடுகைகளைப் பார்த்தபோது,வண்ணக்கலவை கொண்ட சித்திரங்களைக் கண்டேன் . மைசூர் ஓவியங்களை மகளுடன் சேர்ந்து பயிற்சி
வகுப்புக்குச் சென்று கற்றுக்கொண்டதை ஒவ்வொரு நிலையிலும் எழுதப்பட்ட படங்களுடனும்
, பூசுவேலைக்களின் ஒவ்வொரு நிலையையும் படம் பிடித்து எழுதியுள்ளார்.

கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மிக எளிதாகத் தோன்றும் , மிகுந்த பொறுமை இவருக்கு இருக்கிறது. செய்வதற்கு மட்டுமன்றி படிப்படியாக அதை எழுதுவதற்கும் தான். வண்ணங்களைக் கையாள்வதற்கு, சில முக்கிய குறிப்புகளையும் தந்திருக்கிறார்.
அந்தக் குரங்காட்டி படம் மனதிலேயே நிற்கிறது.

அடுத்த பதிவர் :
சுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு, இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். இவற்றிலெல்லாம் மிகுந்த அக்கறை காட்டி வரும்

வின்சென்ட்டின் வலைப்பூ
நீர் மேலாண்மையைப் பற்றி அவ்வப்போது ஜுரம்
வருகையில் படிக்கிறோம். ஆனால் தனிமனிதராக நாம் செய்யக்கூடியது என்ன? சுருக்கமாக பட்டியல் இட்டுள்ளார்.

அவரது virtual water என்ற பதிவைப் பாருங்கள்.
நெத்தியடி.
நீர், முதலிய இயற்கையின் ஒவ்வொரு அம்சமும் இவரது நேசிப்பில் வருவது வியப்பு. இவரைப் போன்ற களப்பணியாளர்கள் வலைப்பூவில் எழுதுவது நமக்கு அறியாததை அறிந்துகொள்ள நல்லதொரு வாய்ப்பு
மேற்கண்ட சுட்டியில் தேனிக்களின் நடனத்தை ஒளிவழிக் காணலாம்.


அடுத்த பதிவர்:
தகவல் தொழில்நுட்பம் தொடர்புள்ள செய்திகளையும் அதில் நாம் கற்றுக்கொள்ளக்கூடியதையும் இந்த வலைப்பூவில், பாபு சொல்லித்தருகிறார்.

'தெரிந்ததும் தெரியாததும்' இல் பாபு சொல்லித்தருபவை வலைப்பூ வாசகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அனுப்பிய மின்னஞ்சலைத் திரும்பப் பெறுவது எப்படியாம்?

இணைப்பில் பாருங்கள்

கொஞ்சம் கனவு + நிறைய நம்பிக்கை=பாபு. வலை தளம் வடிவமைத்தல், கணினி பழுது நீக்கம், வலைப்பூ தொடங்குதல், மென்பொருள் நிறுவுதல், லினக்ஸ் குறித்து ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி தொடர்பு எண்கள், நேரம் முதற்கொண்டு கொடுத்திருக்கும் இவரது ஆர்வம் உள்ளங்கை செல்பேசி.

இப்பதிவில் இவர் எழுதிவரும் தெரிந்ததும் தெரியாததும்' ஐபடித்துப்பாருங்கள்.





6 comments:

  1. கதை, அறிமுகங்கள் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளாய்!
    அருமை!
    நான்காம் நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. ///
    எதையாவது புதியதாய் கற்றுக்கொள்ளும்போதோ நமக்குப் பிடித்ததைச் செய்யும் போதோ ஒரு புத்துணர்வு ஏற்படுவதை நாமும் உணர்ந்திருப்போம்
    ///

    ஆமாங்க
    எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

    ReplyDelete
  3. அருமை!
    நான்காம் நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. சித்திரமும் கைப்பழக்கம் வலைப்பூ தங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. அதை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முன்வந்ததற்கும் மிக்க நன்றி.

    மேலும் பல நல்ல வலைப்பூக்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  5. நன்றி ஜோதிபாரதி,பிரியமுடன்
    பிரபு, கபீரன்பன்

    ReplyDelete