Wednesday, May 6, 2009

இனிய நண்பர்


இண்ணைக்கு அறிமுகம் செல்வேந்திரன்.

ரமேஷ் வைத்யா மாதிரி பத்திரிக்கையுலக அனுபவசாலிகளோட ஒரே சமயத்துல வேல பாத்தவரு இவரு. மார்க்கெட்டிங்கல இருந்தவரு. இப்பவும் வேற நிறுவனத்துல இருக்குறவரு.

ரமேஷ் வைத்யாதான் போன்ல பேசுறப்போ இவரப் பத்திச் சொன்னாரு. கோயமுத்தூர்லதான் அப்ப நானு இருந்ததால ஃபாரஸ்ட் காலேஜுக்கு வரவழைச்சுப் பேசினேன். நெம்ப ஜாலியான ஆளு. அப்றமேல்ட்டு அடிக்கடி சந்திப்போம். நெம்ப க்ளோஸ் ஆயிட்டோம்.

நல்லா விஷயஞானம் இருக்குறவரு. எந்த விஷயத்தையும் உணர்ச்சிபூர்வமா அணுகாம அறிவு பூர்வமா அணுகுவாரு. கொம்புசீவிகள்கிட்ட மாட்டிக்காம லாவகமாத் தப்பிச்சுக்குவாரு. ”உங்க எச்சில் மணக்குது. ஒங்க பாதம் பட்ட மண் எடுத்துப் பல்லு வெளக்கலாம்” னெல்லாம் பின்புறம் சொறிஞ்சவங்களையும் அசால்டாப் புறந்தள்ளிக் கேலிச் சிரிப்புச் சிரிக்கும் அறிவுள்ளவரு. க்ரூப் பாலிடிக்ஸ்லயும் சிக்காதவரு.

அரசியல் நீங்கலான இவரது கட்டுரைகளைப் படிப்பேன். கருத்துக்கள் நல்லாருக்கும். நடையும் நல்லாருக்கும். புதுப்புது மாதிரி வார்த்தைகளை யூஸ் பண்ணுவாரு. ஆனாப் பாருங்க... மனுஷனுக்குத் தமிழ் சரியா எழுத வராம இருந்துச்சு. நான் சாம, தான, பேத, தண்ட முறைகளைப் பயன்படுத்தினதுக்கப்பறம் இப்பம் ஓரளவுக்குத் தப்பில்லாம எழுதுறாரு. (இதைப் பிற்காலத்துல இவரு சுய சரிதை எழுதுறப்போ என்னையப் பத்தி அவசியம் குறிப்பிட்டே ஆகோணும்!)

இவருகிட்ட நான் பயப் படுற இன்னொரு விஷயம் கவிதை.

“நான் சுஞ்சா நீ மூச்சா” ங்குற மாதிரியாகப்பட்ட கவிதைகளை இவரு படிக்காமையும் படைக்கமையும் இருந்தா மெல்லத் தமிழ் இனி வளரும்.

இவரு பதிவுக்கு இங்கே பாருங்க :
http://www.selventhiran.blogspot.com/

சரி நம்ப டச் எங்கேங்குறீங்களா? பொறுங்க. தொடர்ந்து படிங்க.

என்ர எடத்துக்கு ஒருக்கா வந்திருந்தாரு. அண்ணைக்கு ஜீப்புல ஊரெல்லாஞ் சுத்திட்டு ஊட்டுக்குத் திலும்பறப்போ 245 போட்டோ எடுத்த களைப்புல கொஞ்ச நேரம் அமைதியா வந்த செல்வேந்திரன் மொள்ளமாப் பேச ஆரமிக்கிறாரு.

“லதானந்த் சார்! ஒங்களத் தாக்கி ’மோசமான எழுத்தாளனின் பத்து அடையாளங்கள்’ அப்படினு ஒரு பதிவு போட்ருந்தனே?”

(செல்வேந்திரனின் அந்தப் பதிவுக்கும் என்னோட பதிலுக்கும் இங்க பாருங்க.
http://lathananthpakkam.blogspot.com/2008/10/blog-post_27.html)

”ஆமா! அதுக்கென்ன இப்ப?”

“நான் அப்படி எழுதிருக்கக் கூடாதுனு அடிக்கடி நெனைப்பேன்!”

“ஏம்ப்பா அப்பிடி நெனைக்கிறே?” எனக்கும் குரல் கம்மிப் போச்சு.

இப்ப செல்வேந்திரன் குரல் நெம்ப நெகிழ்சியா இருக்கு. மனவெழுச்சியும் சந்துஷ்டியும் கொரல்ல வழியுது. எங்கியோ மோன வெளிய உத்துப் பாத்துகிட்டே தனக்குத்தானே பேசுற மாதிரி நெம்ப மொள்ளமா ஒவ்வொரு வார்த்தையா உச்சரிக்கிறாரு.

“மோசமான எழுத்தாளனின் இருபத்தேழு அடையாளங்கள்னு எழுதியிருக்கணும் சார்!”

க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச். இன்னொரு சடன் ப்ரேக்!
*************
சரி! சரி!
கேள்வி பதில் போட்டு நெம்ப நாளாச்சு! கேக்குறீங்களா? சொல்றேன்!



******************************************************************

6 comments:

  1. ஹா... ஹா...ரசித்துச் சிரித்தேன்.

    பிற்காலத்துல இவரு சுய சரிதை எழுதுறப்போ என்னையப் பத்தி அவசியம் குறிப்பிட்டே ஆகோணும்! //

    பிற்காலத்துல என்ன பிற்காலத்துல, இப்பவே நண்பர்கள்கிட்ட எனது எழுத்துக்களை லமு, லபி என இருவகைப்படுத்தலாம் என்று சொல்வது வழக்கம்.

    ஏராளமான எழுத்துப்பிழைகளோடும், தாராளமான இலக்கணப்பிழைகளோடும் எழுதிக்கொண்டிருந்த என்னை இடித்துரைத்து எனது பிழைகள் 40 சதவீதமாவது குறைவதற்கு நீங்கள்தானே காரணம்.

    பிழைகளற்ற பதிவு ஒன்றினை எழுதிவிடுவதுதானே இன்றளவும் எனக்கு சவாலானதாக இருக்கிறது.

    மிக்க அன்புடன் (சமயங்களில் வம்புடன்...)

    செல்வேந்திரன்.

    ReplyDelete
  2. செல்வேந்திரனை பற்றிய சில உண்மைகளையும் சில புனைவுகளைய்ம்(நல்லா விஷயஞானம் இருக்குறவரு. ) சுவாரசியமாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இந்த லின்க் வேலை செய்யலை..http://lathananthpakkam.blogspot.com/2008/10/blog-post_27.html)

    சிவக்குமரன்

    ReplyDelete
  3. சல்லிப்பய சத்தம் அதிகமா இருக்குது (ஜால்ரா சத்தம்)

    ReplyDelete
  4. அட.. நம்ம செல்வாவுக்கு தனி பதிவா? ஜூப்பரு.. :) நல்லா எழுத்தாளார் தான். :))

    செல்வா, அந்த லமு லபி பத்தி இதுவரை என்கிட்ட ஒன்னுமே சொல்லலையே.. :))

    ReplyDelete
  5. செல்வேந்திரன் நல்லவரு
    நீங்க ரொம்ப நல்லவரு!

    ReplyDelete
  6. செல்வேந்திரன்
    வாழ்த்துக்கள்

    சிவக்குமரன்!
    செல்வேந்திரனப் பகைச்சுகீட்டிங்க அவ்ளோதான்! சாக்கிரிதி!

    சஞ்சய் காந்தி!
    ல.மு மற்றும் ல.பி செல்வேந்திரனுக்கும மட்டுமில்ல. நெம்ப அன்பர்களுக்கும் உண்டு. என்ன வித்தியாசம்னா செல்வேந்திரன் வெளிய சொல்றாரு. அவ்வளவுதான்!

    வால்பையன்!
    செல்வேந்திரன் நல்லவரு. ஒத்துக்கறேன்.
    நான் நெம்ப நல்லவன் அதையும் ஒத்துக்கறேன். அப்ப நீங்க?

    ReplyDelete