Wednesday, May 27, 2009

இசையால் வசம் ஆகா இதயமெது?

என்னைப்பொறுத்தவரை நம்மை நாமாகவே அவ்வப்போது உயிர்ப்போடு வைத்திருப்பது மூன்று எழுத்து, இசை, பயணம்.
இதில் எழுத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அதற்கீடான பொறுப்பு இசைக்கும் உண்டு.

பாடல்கள் நம்மை நம் மனநிலைக்கு தக்கவாறு மாற்றிக்கொண்டே இருக்கின்றன. காதல் தோல்வியா இந்தா பிடி ஒரு பாடல்,
கல்யாணமா இந்தா பிடி இன்னொரு பாடல், எல்லாரும் கைவிட்டுவிட்டு தனிமையை நாடுகிறாயா, ஓடி வா என்னிடம் என்று
நம்மை அணைத்து கொள்ளும் சக்தி பாடல்களுக்கு உண்டு. சில சமயம் சில பாடல்களின் வரிகள் நமக்காகத்தான் எழுதப்பட்டனவா
என்று கூட அது நமக்கு சிச்சுவேஷன் சாங்காக அமைந்துவிடும்.

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே, காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே என்ற ஒரு பாடல் ஜூலி கணபதி படத்தில் வரும். காதோரம் அந்தப் பாடலை கேட்டுக்கொண்டே, ஜன்னலோர இருக்கை
மட்டும் கிடைத்துவிட்டதானால் எனக்கு அந்த நாள் தான் இனிய நாள், எனது ராசிபலனில் அன்று மோசமாகவே போட்டிருந்தாலும் இது போன்ற
பாடல்களை கேட்கும் வாய்ப்பு அதுவும் ஜாக்பாட்டாக ஜன்னலோர இருக்கை என்றால், அந்த நாள் தான் எனக்கு சொர்க்கம்.

இது மாதிரியே இன்னும் சில பாடல்களான, அழகிய கண்ணே, உறவுகள் நீயே, கனாக் காணும் கண்கள் மெல்ல என மென்மையான பாடல்களை கேட்டுக்கொண்டு வந்தால் அட, அட அதெல்லாம் சொல்லி மாளாது போங்க. அன்னக்கிளி படப்பாடல்கள், என்னைக்கேட்டால் இளையராஜாவின் தி பெஸ்ட் அந்தப் பாடல்கள் தான் என்று சொல்வேன், அது போன்று துள்ளலோடு ஆரம்பிக்கும் இசையை வேறு எந்தப்படத்திலும் நான் கேட்டதில்லை.
தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் வெறி அந்தப் படத்தின் அத்தனை பாடல்களின் ட்யூனிலும் தெரியும்.

70 - 80 இந்த இடைக்காலத்தில் வந்த பாடல்கள் ஏறக்குறைய நம் மனதை வருடும் பாடல்கள் தான், இளமையெனும் பூங்காற்று, அபூர்வ ராகத்தில் வரும் கேள்வியின் நாயகனே.
ஆழக்கடலில் தோன்றிய முத்து என நிறைய ஃபேவரிட்கள்.

பழைய பாடல்கள் ப்பா, இடையிடையே பாடல் வரிகளையே முழுங்கிவிடும் இன்றைய பாடல்களைக் கேட்கும்போதுதான் பழைய பாடல்களின் அருமை தெரியும்.
தனிமையிலே இனிமை காண முடியுமா, நான் மலரோடு தனியாக ஏனங்கு வந்தேன், பாலும் பழமும் படப் பாடல்கள், கட்டோடு குழலாட ஆட என அதற்கான லிஸ்ட்
இன்னுமின்னும் பெரியது.

சமீபத்திய பாடல்கள் சில பாடல்களை மட்டுமே அடையாளம் காண முடிகிறது. நிறைய வரிகள் அட போட வைக்கிறது. அப்படி போடுமாறு இருந்தால் அது அநேகமாக ந. முத்துக்குமாரினுடையதாக இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தப் பாடலை கேட்க நேர்ந்தது, என்ன புள்ள செஞ்ச நீ என்று ஆரம்பிக்கும் பாடல், அதில் வரும் சில வரிகள் -- திக்க வெச்ச தெணற வெச்ச, தெக்க வெச்ச வள்ளுவனா, என்னை ஒத்தையில நிக்க வெச்ச.
அப்படின்னு. ம்ஹூம். எழுதியது யாரோ?

இது போன்ற நினைவுகளை கிளறும் ஒரு பதிவு: தமிழ்நதியின் பாடல்கள் திறக்கும் பலகணிகள் , அதே போன்று அவரின் உயிரோசையில்
வெளிவந்த பயணம்: அழைத்துக்கொண்டே இருக்கிற்து வெளி. பயணமும் பாடலையும் பற்றி ஒரே நேரத்தில் அறிய வேண்டுமானால் இவரின் இந்தப் பதிவுகளை படித்துவிடுங்கள்.

பயணம் பற்றி நான் படித்த இன்னொரு பதிவு: தீராத பக்கங்கள் திரு. மாதவராஜின் ரெயிலோடு போய், இவரின் சேகுவேரா பற்றிய பக்கங்கள் இன்னும் வாசித்து தீரவில்லை, வா... சித்துக்கொண்டே இருக்கிறேன் நேரம் கிடைக்கும்போதெல்லாம்.

இன்னுமொரு பதிவு: புதுகை அப்துல்லாவின் பயணங்கள், எனக்கு ஒன்னுப் புரியல, இவர் ஏன் இவரோட டைரிக்குறிப்புகள் எழுதாம, தம்பியோட டைரிக் குறிப்புகள் எழுதறாரு :)

மீண்டும் சந்திக்கலாம்
நட்புடன்
அமித்து அம்மா






19 comments:

  1. மூன்றாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் அமித்து அம்மா

    ReplyDelete
  3. எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே, காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே என்ற ஒரு பாடல் ஜூலி கணபதி படத்தில் வரும். காதோரம் அந்தப் பாடலை கேட்டுக்கொண்டே, ஜன்னலோர இருக்கை
    மட்டும் கிடைத்துவிட்டதானால் எனக்கு அந்த நாள் தான் இனிய நாள்,

    எனக்கும் அந்த பாடல் மிக பிடித்தம் அமித்து அம்மா

    ReplyDelete
  4. இது மாதிரியே இன்னும் சில பாடல்களான, அழகிய கண்ணே, உறவுகள் நீயே, கனாக் காணும் கண்கள் மெல்ல என மென்மையான பாடல்களை கேட்டுக்கொண்டு வந்தால் அட, அட அதெல்லாம் சொல்லி மாளாது போங்க.

    its a wonderfull feel na

    ReplyDelete
  5. இளமையெனும் பூங்காற்று, அபூர்வ ராகத்தில் வரும் கேள்வியின் நாயகனே.
    ஆழக்கடலில் தோன்றிய முத்து என நிறைய ஃபேவரிட்கள்.

    for me too

    same blood

    ReplyDelete
  6. வெளிவந்த பயணம்: அழைத்துக்கொண்டே இருக்கிற்து வெளி. பயணமும் பாடலையும் பற்றி ஒரே நேரத்தில் அறிய வேண்டுமானால் இவரின் இந்தப் பதிவுகளை படித்துவிடுங்கள்.


    kandippa amithu amma

    ungal pathivugal vithyasam

    valthukkal

    ReplyDelete
  7. நல்ல சுட்டிகள் தந்திருக்கிறீர்கள்..நன்றி!

    ReplyDelete
  8. ஏன் இவரோட டைரிக்குறிப்புகள் எழுதாம, தம்பியோட டைரிக் குறிப்புகள் எழுதறாரு//

    அப்துல்லா எல்லோரையும் அண்ணன்னு சொல்லித்தான் கூப்பிடுவாரு. அப்ப அப்துல்லா எல்லோருக்கும் என்ன முறை?? தம்பி. அதனால் தம்பியின் டைரிக்குறிப்புக்கள் எழுதறார்.

    சோடா எங்கப்பா!!

    ReplyDelete
  9. மூன்றாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  10. //ஏன் இவரோட டைரிக்குறிப்புகள் எழுதாம, தம்பியோட டைரிக் குறிப்புகள் எழுதறாரு

    //



    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  11. புதுகைத் தென்றல் said...

    சோடா எங்கப்பா!!

    //


    :)))))))

    ReplyDelete
  12. மூன்றாம் நாள்: மேளதாளத்தோடு பயணம் செய்தது நல்லா இருக்கு.

    ReplyDelete
  13. ///ஜன்னலோர இருக்கை
    மட்டும் கிடைத்துவிட்டதானால் எனக்கு அந்த நாள் தான் இனிய நாள், எனது ராசிபலனில் அன்று மோசமாகவே போட்டிருந்தாலும் இது போன்ற
    பாடல்களை கேட்கும் வாய்ப்பு அதுவும் ஜாக்பாட்டாக ஜன்னலோர இருக்கை என்றால், அந்த நாள் தான் எனக்கு சொர்க்கம்.///

    அழகு!!

    கொஞ்ச வருடங்களுக்கு முன்னர் முதன் முறையாக நண்பர்களுடன் குற்றாலம் செல்கிறேன்! அதிகாலை நேரம் மதுரையில் நிற்கிறோம்! ஒரு அழகிய ''புஷ் பேக்''
    பேருந்து வருகிறது! சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்து
    ''திருநெல் வேலி'' ''திருநெல் வேலி '' என கூவி அழைக்கின்றனர். குற்றாலம் செலவது முதல் முறை எனவே வழி தெரியாது ! திருநெல் வேலி போய்தான் குற்றாலம் போகனுமா என அவர்களிடம் கேட்க ஆமா! ன்னு சொல்லி பஸ்சில் ஏற்றி கொண்டார்கள்! பஸ்ஸில் கூட்டமே இல்லை! நாங்கள் எல்லோரும் ஆளுகொரு ஜன்னல் சீட்டில் அமர்ந்து கொண்டோம்! மதுரையில் இருந்து குற்றாலம் செல்ல இது வழி அல்ல ! பொய் சொல்லி ஏற்றி கொண்டனர் .இந்த வழியில் ஒரு 60-70 கிலோ மீட்டர் அதிகம் செல்ல வேண்டும்.அப்போது அவர்கள் மீது கோபம் வந்தது.

    ஆனால்!! சில்லென்ற காற்று ஜன்னல் ஓர சீட்டு!! அதோடு அப்போது அந்த பஸ்சில் போட்ட பாடல்கள் அந்த பயணத்தை வாழ்க்கையில மறக்க முடியாத பயணம் ஆக்கியது !!!

    அப்போது அங்கே ஒலித்த பாடல்கள்

    என் கண்மணி உன்னை பார்த்தும் சிரிகின்றதே ...

    முதன்முதலாக காதல் டுயட் பாட வந்தேனே...

    கோயில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ....

    ஆயிரம் மலர்களே மலருங்கள் ....

    இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ....

    வான் மேகங்களே வாழ்த்துங்கள் ....

    காதல் வைபோகமே ..காணும் நன்னாளிதே...

    ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே ....

    அழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய முத்து ....

    இன்னும் சில காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்!
    மறக்க முடியா பயணம் அது !!

    ReplyDelete
  14. எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே\\


    மிகவும் இரசிக்கும் பாடல்

    ReplyDelete
  15. ஜீவன் அண்ணா கொடுத்த பட்டியலில்

    அதிகம் ஜீவன் உள்ளது

    ReplyDelete
  16. மூன்றாம் நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  17. எனக்கு பிடித்த பாடல் உனக்கும் பிடிக்குமே!!

    அருமையான வரிகள் இந்த வரிகளில் இருவரின் வெளிப்பாடும் தெரிகின்றது.

    ஜன்னலோரத்தில் அமர்ந்து கைகளில் நமக்கு பிடித்த புத்தகம் வைத்துக் கொண்டு படித்தும் படிக்காமலும் நமக்குப் பிடித்தப் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தால்
    உலகத்தையே வென்ற பரவசம் மனதிற்கு எவ்வளவு இதமாக இருக்கும்?

    1.ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...

    2.காவேரி ஓரம் கவி சொன்ன காதல்......

    3.நீ எங்கே என் நினைவுகள் அங்கே....

    4.காதோடுதான் நான் பேசுவேன்......

    5.கண்ணா நலமா கிரிஷ்ணா நலமா.....

    6.மல்லிகை என் மன்னன் மயங்கும்.....

    7.ஏடி பூங்கொடி ஏனிந்தப் பார்வை....

    8.என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்......

    9.பேசுவது கிளியா இல்லை.....

    10.உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்.....

    11.மயக்கமென்ன இந்த மௌனம் என்ன.....

    இன்னும் இருக்கின்றன இவைகளும் உங்களுக்கு பிடிக்குமா அமித்து அம்மா?

    உங்கள் தெரிவுகளும் அருமை அமித்து அம்மா.

    ReplyDelete
  18. //என்ன புள்ள செஞ்ச நீ என்று ஆரம்பிக்கும் பாடல்,//

    இந்த பாடல் என்னையும் சில காலம் கட்டிப்போட்டது.

    கேட்கும் போது ஏனோ மனம் வலிக்கும்.

    ReplyDelete
  19. இசை பற்றிய உங்கள் பகிர்வுகள்(இசைன்னா எனக்குத் தெரிஞ்சது திரைப்பாடல்கள் மட்டுந்தான்),என்னமோ நான் எழுதினா மாதிரியிருக்குது. (அதாவது, நண்பர்களே, என் மனசில இருக்கிற மாதிரியே எழுதியிருக்காங்கன்னு சொல்றேன்.)

    ReplyDelete