Sunday, May 3, 2009

வழியனுப்புவதும் வரவேற்பதும்

அன்பின் பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் முரு ஆசிரியப் பொறுப்பேற்று தனது பணியினைச் சிறப்பாகச் செய்து விடை பெறுகிறார். ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ எழுபதுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்று பெருமையுடன் விடை பெறுகிறார். புதிய பதிவர்கள் பலரினையும் நல்ல முறையில் அறிமுகப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது.

அத்தனை பதிவுகளும் அனைவராலும் படிக்கப்பட வேண்டிய பதிவுகள். அறிமுகப்படுத்திய பதிவர்கள் பலர் புதியவர்கள். ஊக்கப்படுத்தியதற்கு நன்றி முரு.

நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றியினைக் கூறி நண்பர் முருவினிற்கு விடையளித்து வழி அனுப்புகிறோம்.
----------------------------------------------------------------------------
இவ்வாரத்திற்கு ( நாளை 4ம் நாள் துவங்கும் வாரம் ) ஆசிரியப் பொறுப்பேற்க பெருமையுடன் வருகிறார் நமதருமை நண்பர் லதானந்த்.
இவர் பதிவு ஆரம்பித்த தினம் 2008ம் ஆண்டு மே மாதம் நான்காம் நாள். சரியாக முதல் பிறந்த நாளில் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். தமிழ் மண நட்சத்திரப் பதிவராக பணியாற்றி ஜொலித்திருக்கிறார். ஆனந்த விகடன் கல்கி குங்குமம் அமுத சுரபி ஆகிய வார இதழ்களிலும் எழுதி வருகிறார். சுட்டி விகடனில் ரேஞ்சர் மாமா என்ற பெயரில் தொடர்கள், பாக்யாவில் பாலியல் வக்கிரங்கள் தொடர், வனங்களில் வினோதங்கள் - விகடன் பிரசுரம் என நூலாசிரியராகவும் இருக்கிறார்.

வனத்துறையில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். இப்பொழுது கூட வனவிலங்குகள் கணக்கெடுப்பில் ஈடு பட்டிருக்கிறார். வாழ்க்கையினை ரசனையோடு கழிக்க களிக்க விரும்புபவர். 187 இடுகைகள் அவரது பதிவினில் ஓராண்டுக்குள் இட்டிருக்கிறார். பன்முகச் சித்தர். நவீனத்துவத்தினை ஆராய்ந்து துவைத்துக் காயப்போட்டவர். காமக் கதைகள் எழுதியவர். (தட்டச்சுப்பிழை எனில் பொறுத்தருள்க).

அருமை நண்பர் லதானந்தினை வருக வருக என வரவேற்று நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சீனா

6 comments:

  1. ரெஞ்சர் மாமா அவர்களுக்கு அன்பான வரவேற்ப்புகளும், வாழ்த்துகளும்.

    அப்பாவி முரு

    ReplyDelete
  2. லதானந்த் - உங்களுடைய பதிவினை நான் இதுவரைப் பார்த்ததில்லை படித்ததுமில்லை. பல இதழ்களில் எழுதி இருககிறீர்களாமே. உங்களுடைய புத்தகங்கள் ஏதாவது வெளிவந்துள்ளதா? இருந்தால் பரிந்துரை செய்தால் மகிழ்வேன். உங்களுடைய அறிமுக பதிவர்களைக் காண ஆவலுடன் இருக்கிறேன்.

    ReplyDelete
  3. பிரியா விடைப் பெறும் முருவிற்கு வாழ்த்துக்கள்.

    திரு. லதானந்த் அவர்களை நைஜிரியா பதிவர் சங்க சார்பில் வருக வருக என வரவேற்கின்றோம்.

    ReplyDelete
  4. அட அடுத்த வாரம் லதானந்த் அங்கிளா?
    ஓகே!

    ReplyDelete
  5. ரெஞ்சர் மாமா அவர்களுக்கு அன்பான வரவேற்ப்புகளும், வாழ்த்துகளும்.

    மங்களூர் சிவா

    ReplyDelete