தனிமை என்பது எப்போதும் மிக கொடுமையானதொரு விசயம். பெரும் கூட்டத்தோடு இருந்தாலும் நம்மோடு இருப்பது தனிமை மட்டுமே என்று கற்று தெரிந்த ஞானி(ஓ பக்கம் ஞானி இல்லைங்கோ) சொல்லி இருக்காங்க. இங்கே தனிமை பற்றிய ஒரு சிலரின் கவிதைகள்
தனித்திருத்தல்
=============
தனிமை,வெறுமை
வெற்றிடம்,மெளனமென
நாள்பட்ட சொற்களின் துணையோடு
எத்தனை கவிதைகள் எழுதியபோதும்
எந்தக் கவிதையும் நிரப்பிவிடவில்லை
எப்போதுமிருக்கும் தனிமையை...
- காயத்ரி
இவங்க அந்த ஞானிகளில் ஒருவராகத் தான் இருக்க வேண்டும்.
சொற்களோடுதான் வாழ்வென்றாகிவிட்ட பிறகு...
===========================================
தனிமை நிரம்பியிருக்கும்
அறைகளில்
சொற்களைத்தான்
புணர வேண்டியிருக்கிறது
- முபாரக்
கீழ்வரும் சுட்டியை பாருங்க. இவங்க சொல்றது மிக வித்தியாசமான தனிமை.
http://poongulali.blogspot.com/2009/04/blog-post_25.html
மேலும் காந்தியும் மிக அருமையாக சொல்லி இருக்கின்றார்
http://tkbg.wordpress.com/2008/10/31/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/
காமராஜ் கூட இதே தளத்தில்
http://skaamaraj.blogspot.com/2009/04/blog-post_16.html
மேலும் அய்யனர் தன் வலைப்பூவையே தனிமையின் இசை என்றே பெயரிட்டு இருக்கிட்டார்.
இத்தனை பேரும் சொல்லாத தனிமையா இவங்க சொல்லீட்டாங்க
அருமை கவிதை
ReplyDeleteதனிமை ...
மற்ற சுட்டிகளையும் பார்ப்போம் ...
ReplyDeleteமுபாரக்கின் கவிதை அபாரம்
ReplyDeleteவாங்க நட்புடன் ஜமால்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மீண்டும் வாங்க.
வாங்க அமிர்தவர்ஷினி அம்மா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக.
தனிமை,வெறுமை
ReplyDeleteவெற்றிடம்,மெளனமென
நாள்பட்ட சொற்களின் துணையோடு
எத்தனை கவிதைகள் எழுதியபோதும்
எந்தக் கவிதையும் நிரப்பிவிடவில்லை
எப்போதுமிருக்கும் தனிமையை///
நல்ல கவிதைங்க!!
தனிமை நிரம்பியிருக்கும்
ReplyDeleteஅறைகளில்
சொற்களைத்தான்
புணர வேண்டியிருக்கிறது
- முபாரக்
///
இதை நான் படித்ததில்லை!!
தனியாக வந்தோம் நாம்
ReplyDeleteதனியாகவே செல்வோம்.
மெய்யது தனிமையே. இருப்பினும்
வந்தபின் இங்கு,இனிக்குமொரு
கனியாக வாழ்ந்திடில் நமக்கேதும்
தனிமை என்பதுமுண்டோ ?
சுப்பு ரத்தினம்
ஸ்டாம்ஃபோர்டு, கனெக்டிகெட்.யூ.எஸ்.ஏ.
http://vazhvuneri.blogspot.com