Tuesday, June 30, 2009

காலமென்றே யொருநினைவுங் காட்சியென்றே பல நினைவும்...

நினைப்பூ

பல மனிதர்கள் தொலைந்து போகாமல் இருப்பதே நினைவுகள் தரும் உயிர்ப்பு தான். நினைவுகள் காலத்தைக் கடத்தும் வலிமை உடையவை. சில நினைவுகளை நாம் போற்றி பாதுகாப்போம். அது பின்னால மகிழ்வதற்காகவோ அல்லது திரும்ப கிடைக்காததாகவோ இருக்கலாம். சில நினைவுகளைப் பின்னாளில் தேடி மகிழ்வோம்(அ) வருந்துவோம் என்று அறியாமலேயே மனப்பெட்டகத்தில் பூட்டி வைத்திருப்போம். சில நினைவுகள் மனதில் இனிமையைக் கொண்டுவரும்; சில நினைவுகள் மனதில் வலியைக் கொண்டு வரும்.

நான் சென்னையில் முதலில் வேலைக்கு செல்கையில் மகளிர் விடுதியில் தங்கி இருந்தேன். நல்ல தோழியர், சண்டைக் கோழிகள் ,முறைக்கும் வார்டன், சூடாக மட்டுமே விழுங்க முடிந்த சாப்பாடு என்று எல்லாம் உண்டு. ஒவ்வொரு தோழி செல்லும்பொழுதும் நாம் எப்பொழுது செல்வோம் என்று மனம் ஏங்கும். விலகி வந்த பொழுது கூட மீண்டும் வந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. ஆனால் இப்பொழுது அந்த விடுதியைக் கடந்து சென்றால் சின்ன ஏக்கம் நெஞ்சைத் தொடும்; சண்டைக் கோழிகள் ,முறைக்கும் வார்டன், சூடாக மட்டுமே விழுங்க முடிந்த சாப்பாடு என்று எல்லாமே உதட்டில் புன்னகை கொண்டு வரும். தோழியருடன் இருந்த அழகான நினைவுகள், மீண்டும் உள்ளே சென்று அந்த நொடிகளைக் கொண்டு வந்துவிட மாட்டோமா என ஏங்கச் செய்யும்.

அழகான நினைவுகளைக் கிளர்ந்தெழச் செய்த சில பதிவுகள் இன்று:

"ஒவ்வொரு வாசத்துக்கும் ஒரு நினைவுண்டு!" என்ற மாதவராஜ் அவர்களின் பதிவு வாசனையில் உறங்கிக் கொண்டிருக்கும் நினைவுகளைத் தேட வைக்கிறது.

"மழை" அமிர்தவர்ஷினி அம்மா நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் பொழுதெல்லாம் நாமும் அந்த நினைவுகளுடன் ஒன்றிவிடுவோம். இவரது "பணத்தின் ருசி" என்ற பதிவில் நினைவுகளைப் பற்றி அழகாகக் கூறுகிறார். நமக்குள்ளும் இருக்கின்றன " சின்னதாய் செல்லமாய் சில நினைவுகள்"

"உங்கள் வீட்டு முற்றம், கூடம் - இரவு நேரத்தில் இங்கு அமர்ந்து வானத்தை ரசித்திருக்கிறீர்களா?" என்று தொடங்கும் ஊர்சுற்றியின் "நகரத்தில் நட்சத்திரங்கள் குறைவாகவே மின்னுகின்றன" என்ற பதிவு வானத்து நட்சத்திரங்களை மீண்டும் கண்டு இரசிக்கத் தூண்டுகிறது.


காணாமல் போன கடிதங்களைப் பற்றிய நினைவுகளைத் தட்டி எழுப்புகிறது கார்த்திகைப்பாண்டியனின் கடிதங்கள் என்ற கவிதை.

கையில் மோதிரம், கடிகாரம் மற்றும் பல வடிவங்களில் கேட்டு கையில் வைத்து சப்பிய சவ்வு மிட்டாய் "மிட்டாய்க்காரன்" பதிவில் அழகாக நினைவுபடுத்துகிறார் பூங்குழலி. ஏலக்காய் டீ கேள்விப்பட்டுள்ளோம்... தேங்காய் டீ? இவரது பதிவுகளில் கவிதைகள், மொழியாக்கக் கவிதைகளுடன் ஆலடிப்பட்டி நினைவுகளும் அழகாக மலர்ந்துள்ளன.

ஒத்தையா இரட்டையா என்று புளியமுத்து வைத்து விளையாடிய முத்தான புளியமரத்து நினைவுகளைத் தூண்டியது ஞானசேகரனின் "என்மீது கல்லெறிந்தவர்கள்-புளியமரம்".

விடுபட்ட விளையாட்டுக்களை சற்றே நகைச்சுவையுடன் நினைவுறுத்தும் நானானி அவர்களின் இந்த பதிவு.

மனப்பூ
"வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்க்கு
உள்ளத்தனையது உயர்வு"



மனம் தான் நம்மை செலுத்தும் சக்தி. "நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால், வலிமை படைத்தவன் ஆவாய்" என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

மனம் என்னும் பூவை மகிழ்ச்சியாக மலர வைத்தால் தான் நிம்மதி என்ற வாசம் வீசும். மனிதன் தேடி அலைவது இந்த நிம்மதியைத் தானே? இந்த நிம்மதி ஒவ்வொருவர் மனதுள்ளும் இருக்கின்றது என்று அறிந்து, உள்ளம் தெளிவாக இருந்தால் உலகமே அமைதிப் பூங்காவாக மாறாதா?

அறிவே தெய்வம் என்றார் பாரதியார். "நான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே" என்ற பதிவில் பிரச்னைகளை அணுகச் சொல்லும் புதிய கோணம் பாருங்கள்.

அ.மு.செய்யதுவின் "யார் சொன்னது ந‌ம்மைக் காதலிக்க யாருமில்லையென்று !!!!" என்ற பதிவில்" வாழ்வின் புதையல்களில் சிக்கி கிடக்கும் ஆயிரமாயிரம் அற்புத கணங்களைத் தோண்டியெடுத்து, தொல்பொருள் துறைக்கு ஒரு நகலையும்,தடயவியல் துறைக்கு ஒரு நகலையும் அனுப்பி வைத்தோமேயானால், கிடைக்கும் நம்மை காதலித்தவர்களின் எண்ணிக்கையை கொண்டு ஒரு தேசத்தையே உருவாக்கலாம்" என்று கூறி வாழ்க்கையைக் காதலிக்க வைக்கிறார்.

"உள்ளக் கமலம்" என்ற பதிவில் மணிமேகலை 12 நற்பண்புகள் பற்றி கூறுகிறார். எல்லோர் உள்ளமும் கமலமானால் உலகில் துன்பம் சருகாக உதிர்ந்து விடாதோ?

மீண்டும் சந்திப்போம்

13 comments:

  1. சுட்டிகள் ரொம்ப புதுசா இருக்கு.

    இருங்க படிச்சிட்டு வர்றேன்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சாரதா (அமிர்தவர்ஷினி அம்மா) எழுதும் "மழை" என்ற பதிவினை படித்து இருக்கிறேன். அவர் எனக்கு பதிவின் மூலம் கிடைத்த நல்ல தோழியும் கூட. அதிகம் படிக்க வேண்டும் என்று விரும்புபவர்.

    அவருடைய 'உப்பு' என்ற பதிவும், 'நாலணா' (உரையாடல் -போட்டிக்காக எழுதப்பட்டது) என்ற பதிவையும் படித்து இருக்கிறேன். 'நாலாணா'வில் சென்னை வாசிகளின் மொழியை அசத்தலாக பயன்படுத்தி இருப்பார். அவர் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    மற்றபடி 'அ.மு.செய்யது'வின் சில பதிவினை வாசித்து இருக்கிறேன். ஆனால் அவருடன் எனக்கு தொடர்பு இல்லை. அவரும் சிறக்க வாழ்த்துக்கள்.

    மற்றபடி அனைவரும் புதியவர்களே. அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வலைச்சரத்தில் இன்று தொடுத்திருக்கும் நினைப்பூவும் மனப்பூவும் அருமை. எனக்குத் தெரிந்த சில தளங்களுடன் தெரியாதவையும் உள்ளன. சுட்டிகளுக்கு நன்றி. அவசியம் பார்க்கிறேன். வாழ்த்துக்கள் அமுதா.

    ReplyDelete
  4. நல்ல இடுகை அமுதா..சுட்டிகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  5. இரண்டாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  6. புதிய சுட்டிகளை படித்து விடுகிறேன்

    ReplyDelete
  7. நன்றி அமுதா.

    நீங்கள் கொடுத்த சுட்டிகள் (அ.மு.செய்யது & நானானி தவிர) மீதி அனைத்து புதியவை எனப் படுகிறது.

    பார்த்து தெரி(ளி)கிறேன்.

    ReplyDelete
  8. நன்றி கிருஷ்ணா (பின்னூட்டத்தில் பாராட்டியமைக்கு)

    ReplyDelete
  9. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. பாரதியார் பாட்டோடு தலைப்பு.

    வித்தியாசமான தொகுப்பு.இதில் நிறைய இன்னும் படிக்க வில்லை.

    பை தி வே !!! என்னுடைய பதிவையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி அமுதா.

    ReplyDelete
  11. ந‌ன்றி கிருஷ்ண‌பிர‌பு ப‌திவுக‌ளை வாசித்த‌மைக்கும் ம‌ற‌வாம‌ல் இங்கே குறிப்பிட்ட‌மைக்கும்.

    ReplyDelete
  12. நல்ல தலைப்பு! இதில் அமித்து அம்மா! அ. மு செய்யது தவிர மற்றவைகள் எனக்கு புதிது! நன்றி!!

    ReplyDelete
  13. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி
    புதுகைத்தென்றல், திகழ்மிளிர், கிருஷ்ணப்பிரபு, ராமலஷ்மி மேடம், முல்லை, ஜமால்,அமித்து அம்மா, உழவன், செய்யது, ஜீவன்

    ReplyDelete