வலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-5
வணக்கங்களுடன் ஆ.ஞானசேகரன்
தமிழ் பதிவர்களுடையே கருத்துகளிலும் கொள்கைகளிலும் வேறுப்பட்டாலும் தமிழால் ஒன்றுப்படுகின்றார்கள் என்பது பல பதிவர் சந்திப்புகளில் தெரிகின்றது. அதே போல் சில கருத்து மோதல்கள் ஏற்பட்டாலும் ஆரோக்கியமாக இருப்பது பாராட்டப்பட வேண்டியதும் அதே சமயம் வரவேற்கப் படவேண்டியம் ஒன்று. இப்படி தமிழால் ஒன்றுப்பட்ட பதிவர்களுக்குதான் இந்த ரோஜா...................
1.ஜோதிடம் பற்றிய நம்பிக்கை எனக்கு இல்லை என்றே சொல்லலாம். இதுவரை நான் எந்த ஜோதிடம் பார்த்ததில்லை. ஆனால் நாளையை பற்றி அறிந்துகொள்ள துடிக்கும் ஒரு சாமானியன் நான். இந்த பிளாக்கை பார்த்ததும் நான் இது ஒரு ஜோதிடம் பற்றி பேசும் தளம் என்று படிப்பதில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக படிக்க ஆரம்பித்தேன், அதில் எதார்த்தமான பல விடயங்கள் இருப்பதை பார்த்து மகிழ்ந்தேன். எனக்கு தேவையானவை மட்டும் எடுத்துக்கொள்வேன். அவற்றை உங்களுடனும் பகிர்ந்துக் கொள்ளலாம் என்றே இந்த அறிமுகம். இந்த தளத்தில் நாயகன் ஸ்வாமி ஓம்கார் , இவரின் தளம் சாஸ்திரம் பற்றிய திரட்டு. இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்..
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.மீண்டும் ஜென்..
2.உலக சமாதானமும்- எனக்கு கிடைக்க போகும் நோபல் பரிசும்..
3.உலகம் அழியப்போகிறது-எல்லாம் பூமிக்குள்ள போகபோறீங்க
4.ஜோதிடம் விஞ்ஞானமா? மூடநம்பிக்கையா?
2. இவர் தமிழ் மீதும் தமிழர் மீதும் பற்றுக்கொண்டவர். தமிழக, இந்திய அரசியல் நிலைமைகளை ஆராய்ந்து பதிவுகளில் வெளிப்படுத்துவார். சிங்கபூரில் வேலைசெய்யும் இவரை நான் பல முறை சந்தித்துள்ளேன். இவர் ஒரு இலக்கிய ரசனை கொண்டவர் என்பது அவரது இடுக்கைகளிளேயே தெரியும். அவர் தான் நம்ம ஜோதிபாரதி, இவரின் தளம் அத்திவெட்டி அலசல். இவரின் மற்றொருத் தளம் ஜோதிபாரதியின் கவிதைகள். இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்..
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.தலையில்லா கோழிகள்-தலைவர்களே வாருங்கள்
2.மலேசிய-சிங்கபூருக்கு இடையே நவீன தமிழ் பாலம்
3.காங்கிரசிடம் திருமாவளவன் வருத்தம் தெரிவித்தாரா?
4.இந்தியாவின் முதுகெலும்பு, பரிணாமமும்
3. இவர் ஒரு இலங்கை தமிழர், சிங்கபூரில் படித்துவரும் இளைஞர். இவரை பதிவர் சந்திப்பில் பல முறை சந்தித்தும் பேசியும் இருக்கின்றேன். இவரின் தமிழ் எனக்கு புரிந்துகொள்ள சிரமாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டிவிடுவேன். இவரை பொதுவாக இலங்கை தமிழ் பதிவர்வட்டதிற்கு தெரிந்திருக்கும் . ஆம் அவர்தான் சிவபாதசுந்தரம் தயாளன், இவர் "டொன்" லீ யின் பதுங்குகுழி என்ற தளத்திற்கு சொந்தக்காரர். இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.ஐரோப்பிய திக்விஜயம் II- Transit@ Bangkok
2.தலையை கெ(கொ)த்த கதைகள்
3.கி(ல்)லியூட்டும் இரு கொலைவெறி கனவுகள்
4.JAI_HO - ஒரு நுண்ணரசியலும் ஒரு பகிடியும்
4. இவரை சமீபத்தில் தான் பின்னூட்டங்களில் மட்டுமே தெரியும். கர்ப்பனை கலந்து சுவராசியமாக எழுதுவதில் வல்லவராக இருக்கின்றார். என்னுடைய இடுக்கைகளை பாராட்ட தவறுவதில்லை. இவர்தான் வினோத் கெளதம், இவர் ஜூலை காற்றில் என்ற தளத்தில் எழுதுகின்றார். இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.கனா காணும் காலங்கள்
2.ஏழாம் உணர்வு
3.நகைசுவை நடிகைகளை பற்றி ஒரு சின்ன பார்வை
4.இந்த பிரபலங்கள் எல்லாம் பதிவர்களா இருந்தா
5. இவர் தமிழ் ஆர்வமும் முற்போக்கு சிந்தனையும் கொண்ட நண்பர், சிங்கபூரில் வேலை செய்கின்றார். இவரை சிங்கை பதிவர் சந்திப்பில் பார்த்தும் பேசியும் இருக்கின்றேன். இவரின் எழுத்துகளில் தமிழ்பால் கொண்ட அன்பும் மதிப்பும் தெரிகின்றது. அவர்தான் அப்பாவி முருகேசன், இவரின் தளம் அப்பாவி. இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.புறாடையாளங்கள் !
2.கழுதை, நாய், குரங்கு சேர்ந்தது தான் மனிதன்!!
3.கவிஞர் தாமரைக்கு கடும் கண்டனம்!!
4.பிரபாகரனை கொன்னது சரிதானா?
6. சமீபத்தில் பின்னூட்டங்களில் மட்டுமே பழகியுள்ளேன். இவரின் தளம் கவிதை மற்றும் சமூக சிந்தனைகள் கொண்ட இடுக்கைகள் இருக்கும். இவர்தான் வலசு -வேலணை, இவரின் தளம் சும்மா. இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.மூன்றாம் பால் அல்லது மூன்றாம் பாலினம்
2.இப்படியும் பூக்கலாம் நட்பு(பூ)
3.பேய்களும் பேயர்களும், பேய் காட்டுதல்களும்..
4.புத்தனின் புதிய ஞானம்
இன்னும் வரும் அதுவரை
அன்புடன்
ஆ,ஞானசேகரன்
சோதனை ஓட்டம்
ReplyDelete// ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteசோதனை ஓட்டம்//
இந்த இடுகையே சோதனை ஓட்டமா??
வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் சேகர்... அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஐந்தாம் நாள் வாழ்த்துகள். இன்று அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete/// அப்பாவி முரு said...
ReplyDelete// ஆ.ஞானசேகரன் said...
சோதனை ஓட்டம்//
இந்த இடுகையே சோதனை ஓட்டமா??///
ஓ இப்படியெல்லாம் யோசிக்கலாமா?
வாழ்த்துகள் நண்பரே
// திகழ்மிளிர் said...
ReplyDeleteவாழ்த்துகள்//
நன்றி நண்பா
// தமிழரசி said...
ReplyDeleteவாழ்த்துக்கள் சேகர்... அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்//
நன்றி தமிழ்
// குடந்தை அன்புமணி said...
ReplyDeleteஐந்தாம் நாள் வாழ்த்துகள். இன்று அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.//
மிக்க நன்றி நண்பா
அருமையான அறிமுகங்கள் அனைவருமே நல்ல பதிவர்கள் வாழ்த்துக்கள்
ReplyDelete// Suresh Kumar said...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் அனைவருமே நல்ல பதிவர்கள் வாழ்த்துக்கள்//
நன்றி நண்பா
ஸ்வாமி ஓம்காரின் பதிவினை அறிமுகப் படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி. அவருடைய 'அகோரிகள்' பற்றிய பதிவு மிக முக்கியமான ஒரு பதிவு. சரியான ஆராய்சி இன்றி எடுக்கப் படும் தமிழ் சினிமாவிற்கும், அதை கண்மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ளும் ரசிகர்களுக்கும் ஒரு சவுக்கடி. இவர் எழுதிய அகோரிகள் பற்றிய மூன்று கட்டுரைகளைப் படிக்க இங்கு செல்லவும்:
ReplyDelete1. http://vediceye.blogspot.com/2009/02/blog-post_17.html
2. http://vediceye.blogspot.com/2009/02/blog-post_9628.html
3. http://vediceye.blogspot.com/2009/02/blog-post_19.html
வினோத் கெளதம் - இவருடன் எனக்கு தொடர்பு உண்டு. இவருடைய 'நானும் சிவனும்' பதிவு நான் விருப்பி படித்த பதிவுகளில் ஒன்று. ஏனெனில் எனக்கும் சிவன் விருப்ப தெய்வம்.
http://julykaatril.blogspot.com/2009/06/blog-post_20.html
"டொன்" லீ யின் பதுங்குகுழி - எப்பொழுதாவது சில முறை படிப்பதுண்டு. ஆர்வமுடன் பதிவிடுகிறார். ஐரோப்பிய திக்விஜயம் பற்றி கடைசியாக படித்தேன்.
அப்பாவி - இவர் வலைச்சர ஆசிரியராக இருந்தபோது அவருடைய சில பதிவுகளை படித்திருக்கிறேன்.
//Krishna Prabhu said...
ReplyDeleteஸ்வாமி ஓம்காரின் பதிவினை அறிமுகப் படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி. அவருடைய 'அகோரிகள்' பற்றிய பதிவு மிக முக்கியமான ஒரு பதிவு.>>>>>>..........//
வணக்கம் நண்பா,..
ஸ்வாமி ஓம்காரின் அகொரிகள் பதிவை நானும் படித்துள்ளேன்.. மிக்க மகிழ்ச்சி... உங்களின் அறிமுகங்களுக்கு நன்றி நண்பா..
சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!
ReplyDelete//ஆப்பு said...
ReplyDeleteசொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!//
ரொம்ப நல்லது நண்பரே, கொஞ்சம் புரியும்படி சொல்லலாமே
நன்றி தல..என்னை பற்றிய அப்புறம் மற்ற நண்பர்களை பற்றிய அறிமுகத்திற்கு நன்றி..
ReplyDelete//வினோத்கெளதம் said...
ReplyDeleteநன்றி தல..என்னை பற்றிய அப்புறம் மற்ற நண்பர்களை பற்றிய அறிமுகத்திற்கு நன்றி..//
வணக்கம் நண்பா,.. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிபா
திரு ஞானசேகரன்,
ReplyDeleteஒரு நண்பர் மூலம் நீங்கள் என்னை அறிமுகப்படுத்தியதை அறிந்தேன்.
மிக்க மகிழ்ச்சி.
எனது சரியான இடுக்கைகளை தேர்வு செய்து சுட்டிகாட்டியமைக்கு நன்றிகள்.
திரு கிருஷ்ண பிரபு அவர்களுக்கும் எனது நன்றிகள்.
உங்களால் பல பதிவுகளை காண முடிந்தது. நன்றி.
//ஸ்வாமி ஓம்கார் said...
ReplyDeleteதிரு ஞானசேகரன்,
ஒரு நண்பர் மூலம் நீங்கள் என்னை அறிமுகப்படுத்தியதை அறிந்தேன்.
மிக்க மகிழ்ச்சி.
எனது சரியான இடுக்கைகளை தேர்வு செய்து சுட்டிகாட்டியமைக்கு நன்றிகள்.
திரு கிருஷ்ண பிரபு அவர்களுக்கும் எனது நன்றிகள்.
உங்களால் பல பதிவுகளை காண முடிந்தது. நன்றி.//
மிக்க நன்றிங்க ஸ்வாமி ஓம்கார் ... மதுரையில் நண்பர்களை சந்தித்துவிட்டு வாருங்கள்...
ஞானசேகரன் சுகம்தானே.மிகவும் களைப்போடு ஆனாலும் உற்சாகமாவும் பதிவுகள் தருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.
ReplyDelete//ஹேமா said...
ReplyDeleteஞானசேகரன் சுகம்தானே.மிகவும் களைப்போடு ஆனாலும் உற்சாகமாவும் பதிவுகள் தருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.//
வாங்க ஹேமா... நல்ல சுகமே, நாடலும் அதே! இன்னும் சிறப்பாக செய்ய ஆசைதான். பணியின் அழுத்தம் அதிகமாக இருக்கின்றது..
உங்களை போன்றோரின் ஊக்கமே மருந்தானது. மிக்க நன்றிமா
இந்த வாரப் பணியை அழகாகச் செய்து முடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்
ReplyDelete// ஜெஸ்வந்தி said...
ReplyDeleteஇந்த வாரப் பணியை அழகாகச் செய்து முடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்//
மிக்க நன்றிங்க..
உங்களை போன்றோரின் ஊக்கமே எனக்கு மருந்தானது..
அருமையாகத் தொகுத்துள்ளீர்கள்!
ReplyDelete// ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஅருமையாகத் தொகுத்துள்ளீர்கள்!//
மிக்க நன்றிங்க
என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ஞானம்!
ReplyDeleteவலைச்சரத்தில் உங்கள் தொகுப்புகள்... என்னை வெகுவாகக் கவர்ந்தன...
நிறைவாக செய்திருந்தீர்கள்...
நன்றி!
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
ReplyDeleteஎன்னையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ஞானம்!
வலைச்சரத்தில் உங்கள் தொகுப்புகள்... என்னை வெகுவாகக் கவர்ந்தன...
நிறைவாக செய்திருந்தீர்கள்...
நன்றி!//
மிக்க நன்றிங்க ஜோதிபாரதி