Thursday, July 2, 2009

இவ்வுலகம் இனியது... மனிதர் மிகவும் இனியர்...

நாம் தனி மனிதராக இவ்வுலகில் இயங்கவில்லை. இயற்கை அன்னையின் அருள் இல்லாவிட்டால் மனிதன் வாழமுடியுமா? அதே போல் சமூகத்தின் ஒத்துழைப்பு இன்றி மனிதன் தனித்து இயங்கிட முடியுமா?

சமூகம்
"தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு"


நாம் தனியாக வாழ்வதில்லை , சமூகமாக வாழ்கிறோம். நாட்டுக்கு ஒரு காவல், ஊருக்கு ஒரு காவல், உடலுக்கு ஒரு காவல், உணவுக்கு ஒரு காவல் என்று பலரும் நம்மைக் காப்பதால் தான் வாழ்க்கை சக்கரம் நகர்கிறது. இராணுவ வீரர், காவலர், மருத்துவர், செவிலியர், உழவர், கொத்தனார், தபால்காரர் என்று நாம் சார்ந்திருக்கும் சமூகத்தில் தான் எத்தனை உதவி செய்பவர்கள்?

"சல்யூட் - நமது கடமை" என்ற பதிவில் என்று நம் பாதுகாவலர்கள் பற்றி கூறிய இராமுடன் சேர்ந்து நாமும் அடிப்போம் ஒரு சல்யூட். சிறிது நேரமே வலையுலகில் உலாவ கிடைக்கும் என்று இவர் கூறினாலும், "மீசைக்காரி" வலைப்பூவில் தனது பல அனுபவங்களையும் நிகழ்வுகளையும் எழுதி பல பயனுள்ள தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அவருக்கும் ஒரு சல்யூட்.

"பொது சுகாதாரமும் மருத்துவமும்" என்ற வலைப்பூவில் மருத்துவம் பற்றிய தகவல்கள் உள்ளன. கிராமத்தில் வேலை செய்யும் மருத்துவர்கள் என்ன மாதிரியான பிரச்னைகளை சந்திப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? "அரிவாளோடு ஆஸ்பத்திரியில்" என்ற பதிவு, "அட இப்படி எல்லாம் வேற பிரச்னை இருக்கா!!!" என்று சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

"அரிசி எப்படி வருது?" என்று என் பெண் கேட்ட பொழுது, "கிராமத்தில் வயலில்" என்று சொன்னேன். தினம் உண்ணும் அரிசி எப்படி வருகிறது என்று அறிய விழைந்த பொழுது "நெல் - ஆரம்பம் முதல் அறுவடை வரை" பதிவு நெல்லைப் பற்றிய தகவல்களை விரிவாகக் கூறியது. கிராமத்து நினைவுகளைப் பத்திரப்படுத்தி பகிர்ந்த சஞ்சய்க்கு நன்றி.

இயற்கை
"விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
"

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும். ஆனால் மண்ணில் பசுமை இல்லையேல் விண்ணில் மழைத்துளி இல்லை. "கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு" என்பதை நமக்கு உணர்த்த இயற்கை ஒன்று போதுமே!!!
இயற்கையில் தான் கற்றுக்கொள்ள எத்தனை எத்தனை செய்திகள்? விஞ்ஞானிகள் இன்னும் இயற்கையிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டு தானே இருக்கிறார்கள்.

இயற்கை பற்றி பல அரிய விஷயங்களை இங்கு காணலாம்
நாலு கால்ல திரிஞ்ச மனுசன் ஏன் இரண்டு கால்ல திரிய ஆரம்பிச்சான் என்று எண்ணியிருக்கிறீகளா? இதனால் நாம் அதிக சக்தி சேமிக்கிறோம் என்று "இந்த பதிவு" கூறுகிறது. இன்னும் பல இயற்கையின் வினோதங்களை இயற்கையின் வினோதங்கள்" வலைப்பூவில் காணலாம்.

இயற்கையின் அரிய தகவல்கள் மலர்ந்திருக்கும் மற்றொரு வலைப்பூ இயற்கை

நீர் மேலாண்மை, விவசாயம், வீட்டு தோட்டம் என்று இயற்கையைப் பாதுகாக்கும் பல தகவல் மலர்ந்துள்ள வலைப்பூ "மண், மரம், மழை, மனிதன்"


சமூகமாக ஒருவருக்கொருவர் உதவி வாழ்வோம்!!!
இயற்கையோடு ஒன்றி வாழ்வோம்!!!

9 comments:

  1. நான்காம் நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. தலைப்பே இனிமையாக இருக்கு ...

    ReplyDelete
  3. கொஞ்சம் வித்தியாசமான அறிமுகங்கள்.

    வயலும் வாழ்வும் ரேஞ்சுக்கு....

    இதுல மீசைக்காரியோடது மட்டும் படிச்சிருக்கேன்.மீதி புதுசு.

    ReplyDelete
  4. // நட்புடன் ஜமால் said...

    தலைப்பே இனிமையாக இருக்கு .//

    ரிப்பீட்டு!

    ReplyDelete
  5. சமூகமாக ஒருவருக்கொருவர் உதவி வாழ்வோம்!!!
    இயற்கையோடு ஒன்றி வாழ்வோம்!!!//

    அருமை,

    இருங்க முத்துலெட்சுமியை கூப்பிட்டு உங்களுக்கு ஒரு நல்ல பெயரா வைக்கச்சொல்லனும்.

    ReplyDelete
  6. இயற்கையுடனும் சமூகத்துடனும் பின்னிப் பிணைந்துதான் வாழ்க்கை. நல்ல சுட்டிகள்! அருமையான முடிவுரை. வாழ்த்துக்கள் அமுதா!

    ReplyDelete
  7. நல்ல தளங்களின் அறிமுகத்திற்கு நன்றி !!!

    ReplyDelete
  8. ஒரு தளம் கூட இதுவரை தெரியாததாக உள்ளது..............படிப்போம்!

    ReplyDelete
  9. நன்றி ஜமால். செய்யது, முல்லை, புதுகைத் தென்றல், இராமலஷ்மி மேடம், திகழிமிளிர், ஜீவன், thevanmayam

    ReplyDelete